நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

பட்டாம்பூச்சியின் தேடல்..




ட்டுச் சிறகை விரித்து
படபடக்கும் பட்டாம்பூச்சி
பறக்கும் வழியெங்கும்
பதபதைப்போடு தேடுவதை
பார்த்தபடி நின்றேன்

ண்ணெதிரே பறந்த பட்டாம்பூச்சி
களைத்து கிளையில்
என்னெதிரில் அமர்கையில்
கைவிரல் தொட்டு மெல்லவருடி
கண்ஜாடையில் கேட்டேன்
எதை தொலைத்து தேடுகிறாயென!

ளைத்த போதிலும்
சலைக்காமல் சொன்னது
மனிதமுள்ள மனதையும்
மனநோய்யில்லா மனிதரையும்-இம்
மண்ணில் தேடுகிறேனென்று!

ருடிய விரல்
வெடுக்கென வலித்தது
களைப்பு நீங்கிய பட்டாம்பூச்சி
கண்ணடித்து காற்றில் மிதந்தது
கைவிரல்வழியே  இதயமும் கனத்தது..


அமீரக தமிழ்தேர் மாத இதழுக்காக எழுதியது..
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய். .

15 கருத்துகள்:

  1. அருமையான வரிகள் பாராட்டுக்கள் அக்கா

    பதிலளிநீக்கு
  2. அழகான சிந்தனை அலங்கார வார்த்தைகளின் வடிவில் கவிதை அருமை . நன்றி மல்லிகா

    பதிலளிநீக்கு
  3. அருமை அருமை
    ஒரு நல்ல கவிதையைப் படித்த நிறைவு
    படமும் அருமை
    நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. //பட்டுச் சிறகை விரித்து
    படபடக்கும் பட்டாம்பூச்சி
    பறக்கும் வழியெங்கும்
    பதபதைப்போடு தேடுவதை
    பார்த்தபடி நின்றேன்//

    தற்குறிப்பேற்ற அணி... சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறது இந்த வரிகளில்...

    பதிலளிநீக்கு
  5. //கைவிரல் தொட்டு மெல்லவருடி
    கண்ஜாடையில் கேட்டேன்//

    விரல்மொழியில் விழிமொழி ரசிக்க வைக்கிறது... :)

    பதிலளிநீக்கு
  6. //கைவிரல்வழியே இதயமும் கனத்தது..//

    எங்களதும்...

    பதிலளிநீக்கு
  7. எப்பவும்போல நிறைவான வரிகள்.வாழ்த்துகள் தோழி !

    பதிலளிநீக்கு
  8. பட்டாம் பூச்சி கவிதை மிக அருமை,
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  9. கருவுடன் கூடிய கவிதை மிக அழகு..
    அருமை.......

    வாழ்த்துக்கள் மல்லி..

    பதிலளிநீக்கு
  10. சிசு சுட்டிக்காட்டியதுபோல்
    ஒவ்வொரு வரியிலும் மென்மை உன் மனதைபோல்..

    எப்படிதான் இப்படி கவிகுள் புகுந்து எழுதுவாயோ. எனக்கெல்லாம் சுட்டுப்போட்டாலும் வரமாட்டேங்கிறதேமா..

    பதிலளிநீக்கு
  11. கருத்துக்களும் வாழ்த்துக்களும் வழங்கிய அனைத்து உறவுகளுக்கும் அன்பான பாசப் பூங்கொத்துக்கள் நெஞ்சார வழங்குகிறேன்.. மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது