பட்டுச் சிறகை விரித்து
படபடக்கும் பட்டாம்பூச்சி
பறக்கும் வழியெங்கும்
பதபதைப்போடு தேடுவதை
பார்த்தபடி நின்றேன்
கண்ணெதிரே பறந்த பட்டாம்பூச்சி
களைத்து கிளையில்
என்னெதிரில் அமர்கையில்
கைவிரல் தொட்டு மெல்லவருடி
கண்ஜாடையில் கேட்டேன்
எதை தொலைத்து தேடுகிறாயென!
களைத்த போதிலும்
சலைக்காமல் சொன்னது
மனிதமுள்ள மனதையும்
மனநோய்யில்லா மனிதரையும்-இம்
மண்ணில் தேடுகிறேனென்று!
வருடிய விரல்
வெடுக்கென வலித்தது
களைப்பு நீங்கிய பட்டாம்பூச்சி
கண்ணடித்து காற்றில் மிதந்தது
கைவிரல்வழியே இதயமும் கனத்தது..
அமீரக தமிழ்தேர் மாத இதழுக்காக எழுதியது..
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய். .
அருமையான வரிகள் பாராட்டுக்கள் அக்கா
பதிலளிநீக்குஅழகான சிந்தனை அலங்கார வார்த்தைகளின் வடிவில் கவிதை அருமை . நன்றி மல்லிகா
பதிலளிநீக்குஅருமை அருமை
பதிலளிநீக்குஒரு நல்ல கவிதையைப் படித்த நிறைவு
படமும் அருமை
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்
//பட்டுச் சிறகை விரித்து
பதிலளிநீக்குபடபடக்கும் பட்டாம்பூச்சி
பறக்கும் வழியெங்கும்
பதபதைப்போடு தேடுவதை
பார்த்தபடி நின்றேன்//
தற்குறிப்பேற்ற அணி... சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறது இந்த வரிகளில்...
//கைவிரல் தொட்டு மெல்லவருடி
பதிலளிநீக்குகண்ஜாடையில் கேட்டேன்//
விரல்மொழியில் விழிமொழி ரசிக்க வைக்கிறது... :)
//கைவிரல்வழியே இதயமும் கனத்தது..//
பதிலளிநீக்குஎங்களதும்...
அசத்தலான கவிதை..
பதிலளிநீக்குஎன் வாழ்த்துக்கள்..
நல்ல கவிதை
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
எப்பவும்போல நிறைவான வரிகள்.வாழ்த்துகள் தோழி !
பதிலளிநீக்குit's good
பதிலளிநீக்குபட்டாம் பூச்சி கவிதை மிக அருமை,
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்
கருவுடன் கூடிய கவிதை மிக அழகு..
பதிலளிநீக்குஅருமை.......
வாழ்த்துக்கள் மல்லி..
சிசு சுட்டிக்காட்டியதுபோல்
பதிலளிநீக்குஒவ்வொரு வரியிலும் மென்மை உன் மனதைபோல்..
எப்படிதான் இப்படி கவிகுள் புகுந்து எழுதுவாயோ. எனக்கெல்லாம் சுட்டுப்போட்டாலும் வரமாட்டேங்கிறதேமா..
கவிதை நல்லாத்தான் இருக்கு...!
பதிலளிநீக்குகருத்துக்களும் வாழ்த்துக்களும் வழங்கிய அனைத்து உறவுகளுக்கும் அன்பான பாசப் பூங்கொத்துக்கள் நெஞ்சார வழங்குகிறேன்.. மிக்க நன்றி..
பதிலளிநீக்கு