விரல்கள் விதைக்கும் விதைகள் [தொடரோ தொடர்]
மின்மினி அன்போடு அழைத்த தொடர் இடுகை.. நீண்ட நாட்களுக்கப்புறம் ஊருக்கு சென்றுவிட்டதால்]இத்தொடரை எழுதுகிறேன்.எழுத அழைத்த மின்மினிக்கு என் நன்றிகள்.
1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?.
அன்புடன் மலிக்கா
2) அந்தப்பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?.
நிச்சியமாக அதுதான் என் உண்மையான பெயர்.முதலில் இனிய குடும்பம் என்று வைத்திருந்த பெயரை எடுத்துவிட்டு. என் சொந்தப்பெயரையே வைத்துவிட்டேன்.ஏனெனில் என்றும் எல்லோர் மீதும் அன்புடன் இருக்க விரும்புவதால், அன்புடன் மலிக்கா என்று வைத்துள்ளேன்.
3 ) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி...
காலடி எடுத்துவைக்கவில்லை விரலடிதான் எடுத்துவைத்தேன். [ஐய்யோடா]கவிதைகளின்மீது அதீத காதல் இருந்ததால் அதனுடன் நான் என்றும் தொடர்போடு இருக்க விரும்பியதால். என் எண்ணங்களை எழுத்துவடிவில் காணவிரும்பியதால். என் விருப்பத்தை பிறரும் விரும்புகிறார்களா என அறிய நினைத்தால்.
விழிகளின் வழியே இந்த வலையில் விழுந்தேன். விரல்கள் வழியே விதைகளை விதைக்கிறேன்.[ஒரு விதையாவாவது மரமாகுமுன்னுதான்].
4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?
வலை திறந்து முதல் 3. 4. மாதம் எப்படி இதை பிறருக்கு தெரியப்படுதுவதென தெரியாது. பின்புதான் தமிழ்மணம். தமிழிஸ். தற்போது [இன்ட்லியில்] உலவு. தமிழ்வெளி திரட்டிகளிலும்.
தினமணியிலும் இணைத்துள்ளேன். திரட்டிகளுக்கும். தினமணிக்கும் என் நன்றிகள்.பேஷ்புக்கிலும் என் தளத்தினை இணைத்துள்ளேன்.
இதெல்லாம்விட முக்கியமாக பிற தளங்களுக்குச்சென்று அவரவர்களின் திறமைகளை ஊக்குவிப்பதாலும் அவர்களின் ஆக்கங்களுக்கு கருத்திடுவதாலும் அவர்களுக்கும் மகிழ்ச்சி.அதைகாணும் எனக்கும் திருப்தி.அதுவும் என் தளம் பிரபலமடையச்செய்ய ஒரு வழி.[எல்லா ரகசியமும் சொல்லியாச்சி இனி என்ன ஆகுமோ ஹி ஹி ஹி]
5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்துகொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?
நம் சொந்த அனுபவங்கள் சிலவற்றை பகிர்ந்து கொள்ளும்போது மனதுக்கு மகிழ்ச்சி கிடைக்கிறது. அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும்போது
மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது. துக்கம் துண்டிக்கப்படுகிறது.
இதன் மூலம் எத்தனை மனங்களுக்கு சந்தோஷம் உண்டாகிறது [அட அதாரு அங்கே சொல்லுறது. சிலருக்கு சிலரின் மகிழ்ச்சி சோகத்தை உருவாகுமுன்னு. சிலரின் சோகம் சிலருக்கு மகிழ்ச்சியை தருமுன்னு] ஆக மொத்தத்தில் பகிர்தலால் பலன் உண்டு. அது யாருக்காக இருந்தாலும் மகிழ்ச்சிதான் இல்லையா.
6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?..
சம்பாத்தியம் அடைத்திருக்கிறேன் பெருமளவில் மிகப்பெருமளவில்.உங்கள் அனைவரின் அன்பை இதைவிட ஒரு சம்பாத்தியம் வேண்டுமா?பணம் சம்பாத்தித்திருந்தால் அது சிலகாலத்திற்குதான். ஆனால் பிறரின் பாசத்தை சம்பாரித்துவிட்டால் அது கடைசிவரையில் நிலைத்திருக்கும் [நிலைத்து வைத்திருக்கவும் கற்றுக்கொள்ளவேண்டும்] அந்த வகையில் நான் மிகவும் அதிஷ்டசாலி.
எத்தனை நல்லுள்ளங்களின் அன்பும். பாசமும்.சகோதரத்துவமும் கிடைத்திருக்கிறது.அதுமட்டுமல்லாது இந்த பதிவுகளின் மூலம் எனக்கு ஆத்ம திருப்தி அதிகரிக்கிறது.எனக்கான என் என்ணங்களை வெளிப்படுத்தும் தளமாகவுமிருக்கிறது.
நாளை நான் சாதிக்கிறேனோ இல்லையோ! ஆனால் இன்றுவரை சந்தோஷத்தில் திழைக்கிறேன். என் கிறுக்களென்னும் கவிதையின் வாயிலாக உங்கள் ஆதரவென்னும் அன்பைப்பெற்று அதுபோதாதா?இன்றைய சந்தோஷம் நாளைய சாதனை..[சாதனையாக்கிடுவோமுல்ல அப்படின்னு கோரசா சொல்வதுபோல் கேட்குது. என்னா ஒரு ஆசையப்பாரு இந்த மல்லிக்கு]
7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?
மூன்று வலைகளுக்கு சொந்தக்காரி.மூன்றுமே தமிழ்தான் தமிழைத் தவிர வேறெதுவுமில்லை..[ஆமா இவுகளுக்கு வேறு மொழி தெரிஞ்சிட்டாலும் முணு முணுப்பது கேட்குதுங்கோ]
என் எண்ணங்களை கவிதையாக்கும் இந்த நீரோடை. என் எண்ணங்களை கலைகளாக்கும் கலைச்சாரல். அதையெல்லாம்தாண்டி இவ்வுலகத்திலிருக்கும் இருளை அகற்றி சிறு ஒளியைத்தேடும் என் ஆன்மாவிற்காக என் பயணமாக. இனிய பாதையில்.
இதை தவிர வெகுவிரைவில் வேகிவா மொழியில் ஒரு வலை திறக்கவுள்ளேன். அதுவும் கவிதை நடையில்தான். அந்த மொழியை டிரான்ஸ்லேஷன் செய்யத்தெரிந்தவர்கள் எந்தமொழியிலும் வேணுமுன்னாலும் மொழிபெயர்ப்பு செய்துகொள்ளலாம்.நோ அப்ஜக்ஷன். பர்மிஷன் கிராண்டட்..[ஓடு மல்லி அந்த மொழியின் ரகசியம் கேட்டு படைதிரண்டு வாராக]
8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?..
சில வலைப்பதிவர்கள் மீது வருத்தமுண்டு. ஏனெனில் மற்றவர்களின் மனதை ரணமாக்கி அவர்கள் சுகங்காணும்போது.
மற்றபடி யார்மீதும் பொறாமை கிடையாது அவரவரின் திறமைகளில் அவரவர் திறமைசாலிகளே! ஆனால் அனைவரின்மீதும் போட்டி உண்டு. போட்டி ஏனெனில் இக்கால வலைபதிவர்களுக்கு மத்தியில் போட்டி வேண்டும். அதுவும் ஆரோக்கியமான போட்டி அப்போதுதான் தன்னாலும் தன் திறமைகளை வெளிப்படுத்தி நிலைத்து நிற்க வேண்டுமல்லவா சகலகலா திறமைசாலியாக! [ஹி ஹி ஹி இது கொஞ்சம் ஓவர்தான்.ஹூம் ஓவரோ ஓவர்தான்]
9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..
இந்த வலைதிறக்க ஊக்கப்படுத்தி உதவிய என் அண்ணன் ஆரீஃப்.மற்றும் என் அன்பு மச்சான்.அதற்கு துணையாக என் அன்பு மகள். இவர்களின் ஊக்கத்தோடு தொடங்கியதுதான் இந்த வலை
நான் வலைதிறந்து முதன்முதலில் பதிவிட்டு திரும்பி வருவதற்குள் முதல் பின்தொடர்பவராக ஒரு Greece நாட்டைச்சேர்ந்தவர்தான்//kulturosupa// Gender: Male Location: θσσαλονικη : Greece Wishlist என்பவர்தான்.[வாழ்க அந்த மனிதர்]
அதன் மறுநாள் கோலங்கள் சாரூக்காதான். எனக்கு முதல் கருத்திட்டவர்கள். அதன்பின்,முதல் விருதும் தந்து என்னை ஊக்கப்படுத்தினார்கள்
நீராடியவங்க சொன்னது.:
sarusriraj சொன்னது…
மலிக்கா நீங்க பிளாக் ஆரம்பிச்சதில் மிகவும் சந்தோசம், மென்மேலும் வளர வாழ்துக்கள்
25 ஆகஸ்ட், 2009 11:44 am
அப்புறம் ஆசான். அன்புடன் புகாரி அவர்கள்
அன்புடன் புகாரி சொன்னது…
வாழ்த்துக்கள்மலிக்கா
அழகியவடிவமைப்பு!
///கோடையின்மனைவிவாடை
வாடையின்கணவன்கோடை
இருவரும் தனித்தனியே வந்தால்
நமக்குஎதிரணி///
நன்றாக இருக்கிறது
அன்புடன் புகாரி
மற்றும் ஃபாயிஜா. என் பாலோவர் காணாதுபோக அதை கண்டுபிடித்து ஊக்கமும் தந்தவர் சுமஜ்லாக்கா.அவர்களுக்கு நன்றி சொல்வதோடு, இங்கு வந்து செல்லும் தாங்கள் அனைவரின் பாராட்டையும்.ஊக்கத்தையும். நினைத்து பெருமையடைகிறேன்.
10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்.
என்னைப்பற்றி என்னசொல்ல. இறைவனை நேசிப்பவளாக.அன்பான இனிமையான குடும்பம் அமைந்தவளாக. அயல்நாட்டில் வசித்தபோதும் தாய்நாட்டின்மீதும் தமிழின்மீதும் பற்று கொண்டவளாக. என்எழுத்துக்களின் மூலம் பலபல நல்லுள்ளங்களின் அன்பைப்பெற்றவளாக இருக்கும் நான்.
என் எழுத்துக்களால். பல பெரியவர்களின். அன்பையும். பாராட்டுக்களையும். வாழ்த்துக்களையும். பரிசுகளையும். விருதையும். பெற்றுள்ளேன் என நினைக்கும்போது, நானா? என எனக்குள்ளே கேள்விகள் கேட்டுக்கொள்வேன்.இதெல்லாம் எனக்கு இறைவன் வழங்கியது புகழ் அனைத்தும் அவனுக்கே உரியது.
பல மாபெரும்கவி ஜாம்பவான்கள் உலாவரும் இவ்வலையுலகில் என் கிறுக்கள்களை கவிதைகளென்று சொல்லிக்கொண்டு கிறுக்குகிறேன் அவ்வளவுதான். ஆனால் உங்கள் அனைவருக்கும் மத்தியில்
இன்னும் கத்துக்குட்டியாகவேயிருக்கும் நான். சாதிக்கவேண்டும்.
என் எழுத்துக்கள் மூலம் சிறுதுளியாவது சாதிக்கவேண்டும்.
என் எழுத்துக்கள் எப்போது முழு வடிவம் பெற்று ஏட்டில் வருகிறதோ! அப்போது நான் மீண்டும் என் தாய்வயிற்றிலிருந்து பிறக்கும் உணர்வு கிடைக்கும் அந்த உணர்வுக்காக காத்திருக்கிறேன். அதற்கு இறைவனின் உதவியும்.தாங்கள் அனைவரின் அன்பும். ஆதரவென்னும் ஊக்கமும் நிச்சயம் வேண்டும். அதை கிடைக்குமென்ற நம்பிக்கையில். எல்லாம் வல்ல இறைவனிடம் இருகரம் ஏந்திவளாய். உங்களிடமிருந்து விடைபெறுவது
உங்கள் அன்புடன் மலிக்கா..
டிஸ்கி//அதுசரி இத்தொடர் யாரும் எழுதாமல் இருக்கீகளா. அப்படியிருந்தா உடனே தொடருங்க. அட உங்களைபற்றியும் நாங்களும் தெரிஞ்சிக்கோனுமில்லையா..
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால் இந்த
நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
உங்களுக்கே உரிய கவிதை நடையில் அருமையான பதில்கள் ....
பதிலளிநீக்குவெகுவிரைவில் வேகிவா மொழியில் ஒரு வலை திறக்கவுள்ளேன்.
பதிலளிநீக்கு//
இது எந்த (நாட்டு) மொழி...
arumai. nalla iruku ungal pathilgal. nankooda antha vegiva mozhila aramikkap poren
பதிலளிநீக்குarumai akka super
பதிலளிநீக்குஅருமையான பதில்களை, தன்னடக்கத்துடன் தந்து இருக்கிறீர்கள். :-)
பதிலளிநீக்குஅருமையா எழுதி ரகசியத்தையும் சொல்லிடீங்க ஹிஹி
பதிலளிநீக்குபயோ டேட்டா அழகாய் வந்திருக்கிறது!!
பதிலளிநீக்குஆகா அசத்தலான பதிலா இருக்கு மல்லி. உங்க ஸ்டைலே தனிதான் கவிக்குயிலே.
பதிலளிநீக்குஅதுசரி அந்த வேகிவா மொழியை எனக்கும் கத்துகொடுங்களேன். ஆனா ஃபீஸ் தரமாட்டேன் சரியா..
நட்புடன்
சொர்ணலதா.
உங்களின் திறமை இந்த பதிவிலும் தெரிகிறது வாழ்த்துக்கள் சகோ.. :)
பதிலளிநீக்குதன்ன்டக்கமுடன் அருமையான் பதில் கள். மேலும்பல் பதிவுகளையும் ,காண ஆவலுடன்.
பதிலளிநீக்குகவியரசி சூப்பர் பதில்கள் சொல்லிட்டீங்க. அருமையாக இருக்கு.
பதிலளிநீக்குஅப்படியே வேகிவா மொழியிலும் ஒரு பதில் சொல்லீருந்தா கலக்கலோ கலக்கலாயிருந்திருக்கும்.
ஸ்ஸ்ஸ்ஸ் மெதுவா கேட்கிறேன் எனக்குமட்டும் சொல்லுங்க அது எந்த நாட்டு மொழி சொல்லுங்க தோழி
ஆறாவது கேள்விக்கான பதில் ரொம்ப ரொம்ப பிடிட்சிருக்குங்க....
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்....
பயணங்களை தொடருங்கள்...
வெறும்பய கூறியது...
பதிலளிநீக்குஉங்களுக்கே உரிய கவிதை நடையில் அருமையான பதில்கள் ....//
மிக்க நன்றிங்க வெறும் பய.
வெறும்பய கூறியது...
வெகுவிரைவில் வேகிவா மொழியில் ஒரு வலை திறக்கவுள்ளேன்.
//
இது எந்த (நாட்டு) மொழி.//
அதுவா என்ன வெறும்பய இதுகூட தெரியாதா அச்சோ அச்சோ.சரி சரி சொல்லிடுறேன் ஆனா இப்போயில்ல கொஞ்சம் லேட்டா ஓகே..
LK கூறியது...
பதிலளிநீக்குarumai. nalla iruku ungal pathilgal. nankooda antha vegiva mozhila aramikkap poren
//
மிக்க நன்றி கார்த்திக்.
ஆகா வேகிவா வில் டவுட் இருந்தா கார்த்திக்கிடம் கேட்டுக்கலாம்.
சசிகுமார் கூறியது...
arumai akka super.//
மிக்க நன்றி சசி..
நல்ல பதில்கள்...யதார்த்தத்துடன் அன்பையும் சேர்த்து பதிலாக சொல்லி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் ..
பதிலளிநீக்குவிதை நடையில் அருமையான பதில்கள்
பதிலளிநீக்குநீங்க மூணு வலைக்கு சொந்தக் காரவுகனு இதைப் படிச்சப் பிறகுதான் தெரியுது.பரவா இல்லை,நீங்கள் பதிவுலகில் ஒரு பம்பரமாகத்தான் சுற்றி வருகிறீர்கள் இருக்கட்டும், ஊருக்குப் போயிட்டு வந்துட்டு அந்தப் பதிவுலக சார்ட்டை எல்லோரும் சிரிக்கிற மாதிரியா மாத்திப் புட்றேன்.
பதிலளிநீக்குஅதானே ..நாம எப்போ காலடி எடுத்து வச்சோம் ? கைய்யி தானே எல்லாம் செய்யுது.அதுக்கு நக்கலான பதில் அருமை.இன்ஷா அல்லாஹ் வருகிற வியாழன் ஊருக்குப் போறேன்க்கா,அடுத்த மாதம் பதினாறு திரும்பி வருவேன் அப்போது கருத்துரைகளை பகிர்ந்து கொள்ளலாம்,ஊருலே சுத்துரதுக்கே டைம் போதாது, அதுனாலே கம்ப்யுட்டர் பக்கத்தில் போவதற்கு சான்ஸ் குறைவுதான் அப்போப்ப வந்து போயிக்கிறேன் .நான் ஏதாவது தவறுதலாக எதுவும் உங்களைப், பற்றியோ மச்சானைப் பற்றியோ எழுதி இருந்தால் பொருந்தவும்.
அஸ்ஸலாமு அலைக்கும்.
விரல்கள் விதைக்கும் விதைகள்....
பதிலளிநீக்குதலைப்பே ஓர் கவிதையா...!
பேஷ்... பேஷ்.. நன்னா இருக்கு...!
//விழிகளின் வழியே இந்த வலையில் விழுந்தேன். விரல்கள் வழியே விதைகளை விதைக்கிறேன்///
அருமையான கவிதை வரிகள்...!
///என் கிறுக்களென்னும் கவிதையின் வாயிலாக உங்கள் ஆதரவென்னும் அன்பைப்பெற்று அதுபோதாதா? இன்றைய சந்தோஷம் நாளைய சாதனை////
யக்கா ...!
இங்க எங்கள்கு... ஜல்ப் புட்சிகிச்சி...!
இது... ஓவர் ஐஸு யக்கோவ்...!
///இதை தவிர வெகுவிரைவில் வேகிவா மொழியில் ஒரு வலை திறக்கவுள்ளேன்///
போச்சுடா.......! தாங்க முடியலைப்பா...!
உங்க ஹிஸ்டரி நல்லா இருக்குதுங்கோ...!
நல்ல பதிவு... மலிக்கா...!
அது சரி...!
உங்க profileல புதுசா போட்டிருக்கீங்களே....... அந்த போட்டோவுல.....
மரூப்போட யாருங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்க.... அது...!
நட்புடன்..
காஞ்சி முரளி....
மலிக்கா மிக அருமையாக சொல்லியிருக்கீங்க. உங்கள் நல்ல எண்ணம் நிச்சயம் ஈடேரும்.
பதிலளிநீக்குஅதுசரி அதெனெப்பா வேகிவா மொழி நிஜமா அப்படி ஒரு மொழியிருக்கா இல்ல இது உட்டாலக்கடியா:}
உங்கள் வளர்ச்சி எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி மல்லிக்கா.உங்க கவிதைகள் மிகவும் அழகு எங்கள்வீட்டில் அனைவருக்கும் விரும்பிப்படிப்போம் தினமும் வந்து நீரோடையை ஒரு விசிட் செய்யாமல் போவதில்லை. இன்னும் முன்னேற வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குநட்புடன் சிவா..
Chitra கூறியது...
பதிலளிநீக்குஅருமையான பதில்களை, தன்னடக்கத்துடன் தந்து இருக்கிறீர்கள். :-)/
மிக்க நன்றி சித்ரா.
தன்னடகுமுன்னா என்னாங்க சிரிப்புக்கரசி [கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அங்கென்னா சவுண்ட்]
Jaleela Kamal கூறியது...
அருமையா எழுதி ரகசியத்தையும் சொல்லிடீங்க ஹிஹி
//
உள்ளது உள்ளபடி சொல்லிப்புட்டேன்க்கா.என்னாகுமோ..
நன்றிக்கா
சைவகொத்துப்பரோட்டா கூறியது...
பதிலளிநீக்குபயோ டேட்டா அழகாய் வந்திருக்கிறது!!//
கொத்துப்பரோட்டா போலவா[சும்மா]
மிக்க நன்றி சை கொ பா.
சொர்ணா கூறியது...
ஆகா அசத்தலான பதிலா இருக்கு மல்லி. உங்க ஸ்டைலே தனிதான் கவிக்குயிலே.//
அதென்ன ஸ்டைல் சொர்ணா..எங்கே நடந்துகாட்டுங்கோ..
//அதுசரி அந்த வேகிவா மொழியை எனக்கும் கத்துகொடுங்களேன். ஆனா ஃபீஸ் தரமாட்டேன் சரியா..//
பீஸெல்லாம் வேணா கொஞ்சம் சொர்ணம் மட்டும் தந்தாபோதும் சரியா..
//நட்புடன்
சொர்ணலதா.
//
அன்புடன் நான்.
நாடோடி கூறியது...
பதிலளிநீக்குஉங்களின் திறமை இந்த பதிவிலும் தெரிகிறது வாழ்த்துக்கள் சகோ.. :)//
மிகுந்த மகிழ்ச்சி ஸ்டீபன். மிக்க நன்றி
//நிலாமதி கூறியது...
தன்ன்டக்கமுடன் அருமையான் பதில் கள். மேலும்பல் பதிவுகளையும் ,காண ஆவலுடன்.//
நிலா தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி.ஆவலை நிறைவேற்ற காத்திருக்கிறேன்.
நெல்லையிலிருந்து சரவணன் கூறியது...
பதிலளிநீக்குகவியரசி சூப்பர் பதில்கள் சொல்லிட்டீங்க. அருமையாக இருக்கு.
அப்படியே வேகிவா மொழியிலும் ஒரு பதில் சொல்லீருந்தா கலக்கலோ கலக்கலாயிருந்திருக்கும்.//
அட ஆமாயில்ல சொல்லியிருந்திருக்கலாமே. ஓகே சரவணா நான் நெல்லைக்கு காலபண்ணும்போது வேகிவா மொழியில் பேசுவேன் ஓகேவா..
/ஸ்ஸ்ஸ்ஸ் மெதுவா கேட்கிறேன் எனக்குமட்டும் சொல்லுங்க அது எந்த நாட்டு மொழி சொல்லுங்க தோழி//
ஓ அப்படியா சரி சரவணா. பூரணியிடம் சொல்லியிருக்கேன் கேளுங்கோ யாருக்கும் கேட்காதமாதரி சொல்லுவாங்க புரிஞ்சிக்கோங்க சரியா..[ஆத்தாடி என்ன ஒரு எஸ்கேஃப்]
கமலேஷ் கூறியது...
பதிலளிநீக்குஆறாவது கேள்விக்கான பதில் ரொம்ப ரொம்ப பிடிட்சிருக்குங்க....
வாழ்த்துக்கள்....
பயணங்களை தொடருங்கள்
//
மிக்க மகிழ்ச்சி தோழரே! வாழ்த்துக்குமிக்க நன்றி.
Kousalya கூறியது...
பதிலளிநீக்குநல்ல பதில்கள்...யதார்த்தத்துடன் அன்பையும் சேர்த்து பதிலாக சொல்லி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் ..//
வாங்க கெளசல்யா. தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி..
அப்துல்மாலிக் கூறியது...
பதிலளிநீக்குவிதை நடையில் அருமையான பதில்கள்
//
அதென்ன மாலிக் விதை நடையில்.
விதை நடையில் அருமையான பதில்கள்
பதிலளிநீக்கு13 செப்டெம்ப்ர், 2010 5:53 pm
Mohamed Ayoub K கூறியது...
நீங்க மூணு வலைக்கு சொந்தக் காரவுகனு இதைப் படிச்சப் பிறகுதான் தெரியுது.பரவா இல்லை,நீங்கள் பதிவுலகில் ஒரு பம்பரமாகத்தான் சுற்றி வருகிறீர்கள் இருக்கட்டும், ஊருக்குப் போயிட்டு வந்துட்டு அந்தப் பதிவுலக சார்ட்டை எல்லோரும் சிரிக்கிற மாதிரியா மாத்திப் புட்றேன்.
அதானே ..நாம எப்போ காலடி எடுத்து வச்சோம் ? கைய்யி தானே எல்லாம் செய்யுது.அதுக்கு நக்கலான பதில் அருமை.இன்ஷா அல்லாஹ் வருகிற வியாழன் ஊருக்குப் போறேன்க்கா,அடுத்த மாதம் பதினாறு திரும்பி வருவேன் அப்போது கருத்துரைகளை பகிர்ந்து கொள்ளலாம்,ஊருலே சுத்துரதுக்கே டைம் போதாது, அதுனாலே கம்ப்யுட்டர் பக்கத்தில் போவதற்கு சான்ஸ் குறைவுதான் அப்போப்ப வந்து போயிக்கிறேன் .நான் ஏதாவது தவறுதலாக எதுவும் உங்களைப், பற்றியோ மச்சானைப் பற்றியோ எழுதி இருந்தால் பொருந்தவும்.
அஸ்ஸலாமு அலைக்கும்.
//
மூன்று வலை உள்ளதை தற்போது தெரிந்துகொண்டாச்சா இனி ஊருக்குபோய்விட்டுவந்து பொருமையாகப்பாருங்கள்.
நக்கல் இல்லையின்னா சுவாரஸ்யம் குறைவாகிவிடுமேன்னுதான். ஹி ஹி
நல்லபடியா ஊருக்கு சென்று வரவும் அனைவரையும் கேட்டதாக சொல்லவும்.
எதுவும் தவறாக சொல்லவேயில்லையே பின்பு ஏன் வருத்தம் கவலைப்படாமல் போய்வாங்க சகோ..
வ அலைக்குமுஸ்ஸலாம்..
காஞ்சி முரளி கூறியது...
பதிலளிநீக்குவிரல்கள் விதைக்கும் விதைகள்....
தலைப்பே ஓர் கவிதையா...!
பேஷ்... பேஷ்.. நன்னா இருக்கு...!
//விழிகளின் வழியே இந்த வலையில் விழுந்தேன். விரல்கள் வழியே விதைகளை விதைக்கிறேன்///
அருமையான கவிதை வரிகள்...!
///என் கிறுக்களென்னும் கவிதையின் வாயிலாக உங்கள் ஆதரவென்னும் அன்பைப்பெற்று அதுபோதாதா? இன்றைய சந்தோஷம் நாளைய சாதனை////
யக்கா ...!
இங்க எங்கள்கு... ஜல்ப் புட்சிகிச்சி...!
இது... ஓவர் ஐஸு யக்கோவ்...!
///இதை தவிர வெகுவிரைவில் வேகிவா மொழியில் ஒரு வலை திறக்கவுள்ளேன்///
போச்சுடா.......! தாங்க முடியலைப்பா...!
உங்க ஹிஸ்டரி நல்லா இருக்குதுங்கோ...!
நல்ல பதிவு... மலிக்கா...!
அது சரி...!
உங்க profileல புதுசா போட்டிருக்கீங்களே....... அந்த போட்டோவுல.....
மரூப்போட யாருங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்க.... அது...!
நட்புடன்..
காஞ்சி முரளி....//
ரொம்ப ரொம்ப சந்தோஷமுங்க சகோ.
ஜல்பு பிடிச்சிரிச்சா அண்ணிகிட்ட சொல்லி ஆவிபிடிங்க.ஆவியின்னதும் அப்பால ஓடிடாதீக! வெந்நீர் ஆவிதான் ஹோ ஹோ ஹோ..
ஏங்கோ நாங்க வேகிவா மொழியில் வலை ஆரம்பிச்சா என்ன குத்தமுங்கிறேன்.
பாவம் அவர்களுக்கும் ஒரு பொழுதுபோக்கு வேணாமா அதுக்காகத்தான் ஆரப்பிக்கப்போறோம்.
யாரூஊஊஊஊஊஊஊ அந்த ஃபுரொஃபைலிலிலான்னா கேட்டீக.
இப்படி கேட்டுபுட்டீகளே சகோ. அச்சோ நான் என்னான்னு சொல்லுவேன் இந்த கொடுமைய எப்படிச்சொல்லுவேன்.
பார்த்துமா தெரியல இன்னொரு மொற பாருங்கோஓஓஓஓஓஓ..
நேர்மையான பதில்கள்
பதிலளிநீக்குஏங்க.... எங்களுக்குத் தெரியும்...!
பதிலளிநீக்குஅத... உங்க வாயல சொல்லுவீங்கன்னு பார்த்தா...!
மூச்சுக்கு முன்னூறு தடவ "என் மச்சான்....என் மச்சான்"ன்னு சொல்லிட்டு வலைத்தளம் ஆரம்பிச்சு ஒரு வருஷம் கடந்து... அவர் போட்டோவ கண்ல காட்றீங்க....!
ஏன்னா.... ஒரு.........?
கலக்கல் பதில்கள்... இன்று முதல் உங்களுடன் உங்கள் வலைப்பதிவில் நானும் பயணம்...
பதிலளிநீக்குஉங்க டேலண்டுக்கு நீங்க ஏலியன் பாஷயில கூட கவிதை எழுத முடியும் ஆனா ... அதுக்கு விளக்கம் தமிழில நீங்கதான் சொல்லனும் ..ஹி..ஹி..
பதிலளிநீக்குகவிதை போல் மல்லிக்காவின் (தன்னக்கடத்துடன்)பதிலகளும் அருமை.(வேகிகா மொழியை பற்றி கூகுளில் தேடி பார்க்கனும்)
பதிலளிநீக்குநேர்மையான பதில்கள்
பதிலளிநீக்கு14 செப்டெம்ப்ர், 2010 9:50 am
காஞ்சி முரளி கூறியது...
ஏங்க.... எங்களுக்குத் தெரியும்...!
அத... உங்க வாயல சொல்லுவீங்கன்னு பார்த்தா...!//
அதெப்படி எங்க வாயால சொல்லமுடியும் அதுவும் விராலலதானே சொல்லமுடியும் [எப்புடி நம்ம மடக்கு]
//மூச்சுக்கு முன்னூறு தடவ "என் மச்சான்....என் மச்சான்"ன்னு சொல்லிட்டு வலைத்தளம் ஆரம்பிச்சு ஒரு வருஷம் கடந்து... அவர் போட்டோவ கண்ல காட்றீங்க....!//
மூச்சு மூவாயிரம் தடவயின்னு மாற்றிக்கொள்ளனும் ஓகேவா.
அப்புறம் எப்போதும் கூடவேயிருக்கோனுமுன்னுதானே! விருது வாங்கும்போதுகூடவே அழைத்து அதைபெறும்போது படம் [கிளிக்]எடுத்து அதையும் நம்ம வலையில் போட்டிருக்குமில்ல. எப்போது வலை திறந்தாலும் நம்ம கண்முன்னே தெரியோனுமுன்னுதானே! அதப்பாக்கலையா சகோ..
//ஏன்னா.... ஒரு//
போடு போட்டோம் பாத்தேளா..
/மங்குனி அமைசர் கூறியது...
பதிலளிநீக்குநேர்மையான பதில்கள்/
நேர்மைகொண்ட அமைச்சரே வருக
மொக்கையெல்லாம் படு சூபராக போடுதீங்க வாழ்க..
அதுசரிஒரு சந்தேகம்
நீங்க மங்குனி அமைச்சரா? அல்லது மங்குனி அமைசரா?
மிக்க நன்றி மங்குனியாரே!
தீத்துருங்கோ[ஆகா என்னையல்ல]சந்தேகத்த........
//வினோ கூறியது...
பதிலளிநீக்குகலக்கல் பதில்கள்... இன்று முதல் உங்களுடன் உங்கள் வலைப்பதிவில் நானும் பயணம்.//
வாங்க வினோ வாங்க.
என்னோடு வலைப்பதிவில்
பயணிக்க வந்த தாங்களை அன்போடு அழைக்கிறேன்.
தங்கள் முதல் வருகைக்கும்
தொடர் பயணத்திற்க்கும் மிக்க மகிழ்ச்சி.
நன்றி வினோ..
ஜெய்லானி கூறியது...
பதிலளிநீக்குஉங்க டேலண்டுக்கு நீங்க ஏலியன் பாஷயில கூட கவிதை எழுத முடியும் ஆனா ...//
என்னது எலியின் மொழியிலா!
அண்ணாத்தே! ஏஏஏஏஏஏஏஏஏன்..
//அதுக்கு விளக்கம் தமிழில நீங்கதான் சொல்லனும் ..ஹி..ஹி//
எவ்வளவோ சொல்லிப்புட்டோம் இதுகூட சொல்லமாட்டோமா!
அதன் மொழிபெயர்ப்பை நீங்க ஏற்றுக்கொண்டதால்தானே வேகிவா மொழியில் வலைதிறக்கவே ஒப்புக்கொண்டேன்.
L k// கார்த்திக்வேறு இந்தமொழியில் ஆரம்பிக்கபோகிறாகளாம் கொஞ்சம் அவர்களிடமும் கடன் வாங்கி[அட மொழியைச்சொன்னேன்] தமிழில் விளக்கத்தச்சொல்லிடுங்க. துணைக்கு வேணூமுன்னா
அமைச்சர் மங்குனியையும்.
புலவர் முரளியையும்.
ஆலினார் ஜலீலாக்காவையும். சேர்த்துகோங்க.
அம்மாடியோ முடியல இதுக்குமேல எழுத..அப்புறம் வாறேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்.
mkr கூறியது...
பதிலளிநீக்குகவிதை போல் மல்லிக்காவின் (தன்னக்கடத்துடன்)பதிலகளும் அருமை.(வேகிகா மொழியை பற்றி கூகுளில் தேடி பார்க்கனும்.//
ரொம்ப சந்தோஷம் சகோ. சின்ன திருத்தம் மல்லிக்கா அல்ல மலிக்கா
அர்த்தம் மாறிவிடுமல்லவா அதான்.
அப்புறம் கூகுளில் தேடி கிடைத்ததும் நம்ம ஜெய்லானி அண்ணாத்தேக்கு மட்டும் தெரியப்படுதிடாதீங்க [ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ரகசியம்]
எல்லாக் கேள்விகளுக்கும் சரியான பதிலகள்!
பதிலளிநீக்குநூற்றுக்கு நூறு!
அத்தனை பதில்களையும் ரசித்தேன்.
பதிலளிநீக்கு////துணைக்கு வேணூமுன்னா
பதிலளிநீக்கு...........................
புலவர் முரளியையும்////
நாங்க புலவர்னு எப்பங்க சொன்னோம்....!
நாங்க என்ன மூன்று வலைதளத்தை நடத்தும் கவிதாயினியா?
இல்ல... கவிதை ஊற்றா...?
என்னா ஒரு நக்கலு...!
அருமையான் பதில்கள்..!
பதிலளிநீக்குஒவ்வொரு கேள்விக்கும் நச் பதில்கள்..
பதிலளிநீக்கு