நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

மனம் ஒரு குரங்கு


நிலையில்லா உலகில்
கிளையில்லா மரத்தைத்தேடி
இளைப்பாற நினைக்கும் மனம்
தட்டுத் தடுமாறி
தன்நிலை திசைமாறி-சிலநேரம்
தற்கொலையிலும் போய் நிற்கும்

நினைவுகளை சுமந்தபடி
நீரோடையில் நீச்சலடிக்கும்-
நினைவிழக்கும் வேளை வந்தால்
நீச்சல் தெரிந்திருந்தும்
நீருக்குள் மூழ்கியிறக்கும்

எவரும் தொடா எல்லயைத் தொட
எத்தனித்து -
எட்டுத்திக்கும் தான் பறக்கும்
எதுவும் முடியாது போக
ஏறிய இடத்திலேயே வீழ்ந்திருக்கும்

திசைகள் பல
தேடித் தேடி திரிந்து வரும்
தேடியது கிடைக்க வில்லையெனில்
திகைத்துபோய் சோர்ந்துவிடும்

தன்னாசையைப் போக்க
தாவித் தாவி தான் குதிக்கும்
தடுமாற்றம் கண்டு விட்டால்
தடம்மாறிப் போய்விடும்

குரங்கைவிட படுவேகம்
மனித மனம் - குரங்கோடு
மனிதனைச் இணைத்துச் சொன்னால்
கடுஞ்சினம் கொள்ளும்
குரங்கின் இனம்....டிஸ்கி// இது சிங்கபூர்ல நடக்கும் கவியரங்கத்திற்காக எழுதியதுங்கோ. என்ன ஒன்னு இத நாம அங்கேபோய் படிக்கனுமாம்.[அடியாத்தி நமக்கு அங்கெல்லாம் எப்புடி இப்ப போகமுடியும்] இநத தலைப்ப குடுத்து எழுதச்சொல்லியிருந்தாங்கோ ஒருதளத்தில்.. அதபார்ததும் நம்ம மூளை சும்மா இருக்குமா! அதான், மூளையை முடுகிவிட ஏதோ வந்தது கவிதையின்னு. இது எப்புடிக்கீதுன்னு நீங்க சொன்னாத்தானே தெரியும்.


அதுசரி ஏன் எதுகெடுத்தாலும் குரங்கு. நாய். என பாவம் அதுகளையேன் மனிதர்களோடு ஒப்பிடுறாங்க அதுகும் நமக்கும் நிறைய கனெக்ஷன்கீதோ..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால்
இந்த நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

28 கருத்துகள்:

 1. தலைப்புக்கு மிகப் பொருத்தமாய் அழகான கவிதை மலிக்கா. முடித்த விதமும் அருமை:)!

  பதிலளிநீக்கு
 2. / குரங்கைவிட படுவேகம்
  மனித மனம் - குரங்கோடு
  மனிதனைச் இணைத்துச் சொன்னால்
  கடுஞ்சினம் கொள்ளும்
  குரங்கின் இனம்.... /

  உண்மையிலும் உண்மை சகோ... இப்போ நடக்கிற பல விசயங்கள் பார்த்தால், குரங்கினமே மேல்...

  பதிலளிநீக்கு
 3. //குரங்கோடு
  மனிதனைச் இணைத்துச் சொன்னால்
  கடுஞ்சினம் கொள்ளும்
  குரங்கின் இனம்....//

  ஏதோ ஒரு குரங்கு அக்காகிட்ட சண்டைக்கு வந்திருக்கு அதான் இப்படி ...!!!!! ஹா..ஹா...

  பதிலளிநீக்கு
 4. க‌விதை ந‌ல்லா இருக்கு ச‌கோ.

  அப்ப‌டியே ஒரு எட்டு போய் ப‌டிச்சிட்டு வாங்க‌.. :)

  பதிலளிநீக்கு
 5. //குரங்கைவிட படுவேகம்
  மனித மனம் - குரங்கோடு
  மனிதனைச் இணைத்துச் சொன்னால்
  கடுஞ்சினம் கொள்ளும்
  குரங்கின் இனம்....//

  அசத்தல் வரிகள்... அருமை. வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 6. கடுஞ்சினம் கொள்ளும்
  குரங்கின் இனம்..//

  சரியாதானுங்க சொல்யிறுக்கீங்க
  அழகாவும் சொலியிருக்கீங்க
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 7. இம்மாதம் உனது கவிதைகள் யாவும் “ஞான ஊற்றுக்களாய்” பீறிப் பாய்கின்றன;தத்துவத் தேனை மேய்கின்றன. ரமளான் தந்த “தக்வா” என்னும் பயபக்தியின் பயிற்சியால் விளையும் முயற்சியா? வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 8. கவிதை சூப்பர்ங்க.

  அதுங்களோட நம்மை ஒப்பிடறது தெரிஞ்சா அதுங்க என்ன சொல்லுமோ :-))

  பதிலளிநீக்கு
 9. திசைகள் பல
  தேடித் தேடி திரிந்து வரும்
  தேடியது கிடைக்க வில்லையெனில்
  திகைத்துபோய் சோர்ந்துவிடும்

  ...குரங்கு மனதை கூட நல்லா புரிஞ்சு வச்சுருக்கீங்க!

  பதிலளிநீக்கு
 10. சம்பந்தி! கவிதை எளிமையாவும், கருத்துக்கள் ஆழமாகவும் இருக்கு! என்னுடைய பாராட்டுக்கள்!

  பதிலளிநீக்கு
 11. //தன்னாசையைப் போக்க
  தாவித் தாவி தான் குதிக்கும்
  தடுமாற்றம் கண்டு விட்டால்
  தடம்மாறிப் போய்விடும்//

  உண்மை ! உண்மை !

  பதிலளிநீக்கு
 12. FROM INDLY HOME PAGE
  ********************
  malikka
  Joined : September 02, 2009
  Submitted (300)
  Populared (271)

  *******************************
  "CONGRADULATE KAVIGNAR MALIKKA"
  *******************************

  ******************************
  இதயங்கனிந்த வாழ்த்துக்கள்...!
  ******************************

  மலிக்கா.... கடந்த ஒரு வருடத்திற்குள் ... (2009 September 02 லிருந்து 2010 September 15க்குள்)

  கவிதை... சமுதாயக் கட்டுரை... பயணக்கட்டுரை... நட்புகளின் சந்திப்புக்கள்... சமையல்... வீட்டலங்காரம்... மகனின் கைவண்ணங்கள்... ஆன்மீக கட்டுரை... ஆன்மீக அறிவுரைகள்... ஆன்மீகத்தில் சொல்லப்பட்ட சமூககொடுமைச் சாடல்... இப்படி தன் மூன்று வலைதளத்திலும் 300 படைப்புக்கள்... பதிவுகள்...

  இம் 300 பதிவுகள்.....
  3000மாகவும்....
  30,000 பதிவுகளாக வளர்ந்திட....

  வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...! வாழ்த்துக்கள்...!

  வாழ்த்துக்களுடன்...
  நட்புடன்...
  காஞ்சி முரளி....

  பதிலளிநீக்கு
 13. //குரங்கைவிட படுவேகம்
  மனித மனம் - குரங்கோடு
  மனிதனைச் இணைத்துச் சொன்னால்
  கடுஞ்சினம் கொள்ளும்
  குரங்கின் இனம்....
  //

  Super.
  Singai Pogalaam.

  பதிலளிநீக்கு
 14. யதார்தமானா வரிகள்...!
  நிஜமான நிஜங்கள்...!
  உண்மைகள் உள்ளடக்கிய எதுகைமோனையுடன் கூடிய..

  அருமையான கவிதை...!

  நட்புடன்..
  காஞ்சி முரளி....

  பதிலளிநீக்கு
 15. வாழ்த்துக்கள்! இப்புடி சொல்லியே வாய் வலிச்சுப்போச்சு

  பதிலளிநீக்கு
 16. மனம் ஒரு குரங்கு தான்... ஓரே நிலையில் என்றுமே இருக்காது. அழகான வரிகளில் சொல்லியிருக்கிங்க.. வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 17. கவிதை எப்பவும்போல அசத்தலா இருக்கு மல்லிக்கா.மனிதனைவிட மிருகங்கள் சொல்பேச்சுக் கேட்கும்,நன்றியுணர்வோடயும் இருக்கிறதால மனிதர்களோட ஒப்பிட்டுப் பார்க்கிறாங்களோ என்னமோ !

  பதிலளிநீக்கு
 18. கவிதை எப்பவும்போல அசத்தலா இருக்கு மல்லிக்கா.மனிதனைவிட மிருகங்கள் சொல்பேச்சுக் கேட்கும்,நன்றியுணர்வோடயும் இருக்கிறதால மனிதர்களோட ஒப்பிட்டுப் பார்க்கிறாங்களோ என்னமோ !

  பதிலளிநீக்கு
 19. சூப்பர் மலிக்கா....அருமையான வரிகள்..குரங்கு செய்யும் ( சில மனிதர்களும் தான் ) அப்படியே மனதில் கொண்டு வந்தது உங்கள் கவிதை..கடைசி வரி “நச்”...வாழ்த்துக்கள் வலைப்பூ கவியரசியே

  பதிலளிநீக்கு
 20. குட் கொஸ்டீன். ஆனா குரங்குகளைத்தேன் கேட்கணும்...அவிங்களுக்கு நம்மோட கம்பேர் பண்ரப்ப எப்படியிருக்குன்னு!!

  பதிலளிநீக்கு
 21. ”கவியரசி” என்பது என் தங்கை மலிக்காவுக்கு நான் இட்ட பட்டம் எப்படி யாசிர் அவர்கட்ட்கும் தெரிந்தது?
  “மலிக்கா” என்ற அரபிப் பதத்திற்கு= “அரசி” என்றே பொருள்

  பதிலளிநீக்கு
 22. ”கவியரசி” என்பது என் தங்கை மலிக்காவுக்கு நான் இட்ட பட்டம் எப்படி யாசிர் அவர்கட்ட்கும் தெரிந்தது?
  “மலிக்கா” என்ற அரபிப் பதத்திற்கு= “அரசி” என்றே பொருள்

  பதிலளிநீக்கு
 23. குரங்கை மனிதனின் மனத்துடன் ஒப்பிட்டு தந்த கவிதைக்கு பாரட்டுகள்.கலாம் காக்கா அதிரை சொன்னது போல் ஞன ஊற்றுகளாய் இருக்கின்றன மல்லிக்கா

  அது சரி குரங்கின் மனதை எவ்வளவு அழகாக தெரிந்து வைத்து இருக்கிறிகள்

  பதிலளிநீக்கு
 24. ///குரங்கைவிட படுவேகம் மனித மனம் - குரங்கோடு
  மனிதனைச் இணைத்துச் சொன்னால் கடுஞ்சினம் கொள்ளும் குரங்கின் இனம்.////

  ஏனுங்கோ..!
  எனக்கு ஒரு உண்ம தெரிஞ்சாகோணம்...!

  நீங்களும்.... குரங்கப்பத்தி...
  ஜெய்லானியும் ... குரங்கப்பத்தி....!
  ஏன்..?

  இதென்ன....!
  "குரங்கு வார"மா..?

  நட்புடன்...
  காஞ்சி முரளி...

  பதிலளிநீக்கு
 25. நல்ல கவிதை அரங்குகளில் வாசிக்கும் போதுதான் சூப்பரா இருக்கும்

  பதிலளிநீக்கு
 26. இக்ககவிதைக்கு கருத்துக்கள் தந்த அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சிகலந்த நன்றி நன்றி நன்றி.
  தனிதனியே கருதிடமுடியாமைக்கு வருந்துகிறேன் நேரமின்மைகாரமாக..

  என்றும் உங்கள்
  அன்புடன் மலிக்கா

  பதிலளிநீக்கு
 27. குரங்களின் வாரம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
  அப்படின்னு ஜெய்லானி அண்ணாத்தே கத்துரது கேட்குதா முரளி..

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது