நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

எல்லாம் வல்ல இறைவன்.[ஈத் முபாரக்]

உலகில் உள்ள அனைத்து நெஞ்சங்களுக்கு என் அன்புகலந்த
ஈத் முபாரக்.  நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள்

இறையே இறையே அருள் இறையே!
உன் புகழ் பாடுது திருமறையே!
மறையே மறையே அருள் மறையே!
மாநபி கொண்டுவந்த திருமறையே!

ஆகுக என்னும் ஒரு சொல்லால்
அகிலத்தை படைத்த அருள் நீயே!
ஆதியும் அந்தமும் உண்டாக்கி
அதிலுன் கருணையைத் தேக்கி

பார்த்துக்கொள்ளும் பண்பாளனும் நீயே!
பாதங்கஞ் செய்வோர்களின் பாவங்களை
மன்னிதருள்பவனும் நீயே!-அதேசமயம்
பாவத்தின் நிலைபொறுத்து
தண்டிப்பவனும் நீயே!

மாநபிகள் பலரையுமே
மண்ணில் படைத்தவனும் நீயே!
மாபெரும் அருள்களும்
மனமுவந்து கொடுத்தவனும் நீயே!

மகத்தான பலசெயல்கள்
செய்ய வைத்தவனும் நீயே!
மன்னிப்பு தருவதையே
மாண்பாக்கித் தந்தவனும் நீயே!

ஒருதுளி நீரில் மனிதயினம்
உருவாக்கிய உன்னத அருள் நீயே!
உயிர்களின் தேவைகள் தான்அறிந்து -இந்த
உலகையே தந்த உயர் நீயே!

கடல்தாண்டி மலைதாண்டி
கானத்தின் நிலம்தாண்டி
காக்கும் காவலனும் நீயே
கவலையைத் தீர்க்கும்
மருந்தும் தருவாயே!

வானத்தில் சுற்றி வரும்
சூரியனும் சந்திரனும்-அதில்
வலம்வரும் நட்சத்திரமும்கூட - உன்னை
வணங்காமல் இருந்ததேயில்லை -நீயிடும்
கட்டளையை கேட்காமல் விட்டதுமில்லை

பிறப்பையும் இறப்பையும் வைத்து-இப்
பூமியை புனிதமாக்கியவனும் நீயே!
படைப்பினங்களை சிறப்பாக்க -இந்த
பூலோகத்தை
பூரிப்படைய வைத்தவனும் நீயே!

அகிலத்தை ஆட்சி செய்பவனும் நீயே
அண்ட சராசரத்தின் அதிபதியும் நீயே!
உலகிலுள்ள அனைத்தின் மீதும்
அதீதசக்தி பெற்றவனும் நீயே!

உனதருள் வேண்டியே!
மரணம்வரும் வேளைவரை
மண்டியிட்டுக் கிடக்கவேண்டுமே
மனிதயினம்

நித்தம் நித்தம் தொழுதபடி
நோன்புகள் முப்பதும் பிடித்தபடி
ஜக்காத் நிறைய கொடுத்தபடி-முடிந்தால்
ஹஜ்ஜின் கடமையும் முடித்தபடி

உன்னை நினைக்க வேண்டுமே
இவ்வுலகம்
உன்நினைவிலேயே கரையவேண்டுமே
நொடியும் பொழுதும்
இம்மானிடம் முழுவதுவும்

ஈகை பெருநாளை இனிதாக
இன்பமாய்  மகிழ்வோடு கொண்டாட
எல்லாம் வல்ல அருள்கொடையே
எங்களுக்கு நீ அருள்புரிவாய்

பாவங்கள் அனைத்தையும்
மன்னித்து
புனித சொர்க்கத்தை
எங்களுக்குத் தந்திடுவாய்..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால்
இந்த நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

38 கருத்துகள்:

 1. இஸ்லாத்தின் இலக்கணத்தை அருமையாக கூறி ஈகைத் திருநாளின் வாழ்த்தை வடித்துள்ளீர்கள்! மாஷா அல்லாஹ்!

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய பெருநாள் நல்வாழ்த்துக்கள்!
  முடிந்தால் இங்கு வந்து போங்க மலிக்கா!

  பதிலளிநீக்கு
 2. இனிய ரமழான் பெருநாள் வாழ்த்துக்கள் தங்களீன் குடும்தார்க்கும் தெரிவிக்கவும்..

  பதிலளிநீக்கு
 3. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய பெருநாள் நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 4. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய பெருநாள் வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
 5. அஸ்ஸலாமு அலைக்கும்,

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் நெஞ்சம் நிறைந்த ஈத் முபாரக்!!

  வ ஸலாம்
  அன்னு

  பதிலளிநீக்கு
 6. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும், இனிய ரமலான் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 7. சகோதர சகோதரிகள் அனைவருக்கும் ஈத் முபாரக்

  புனித ரமலான் வாழ்த்துக்கள்

  விஜய்

  பதிலளிநீக்கு
 8. அனைவருக்கும் ஈத் பெருநாள் - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 9. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவர்களுக்கும் இனிய ஈத் அல் ஃபித்ர் நல் வாழ்த்துகள்!!அக்கா...

  பதிலளிநீக்கு
 10. தங்களுக்கும்...
  தங்கள் மச்சான்... குழந்தைகள்... மற்றும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்....

  ***************************************************************
  "இனிய ரமலான் பெருநாள் வாழ்த்துக்கள்"....!
  ***************************************************************

  அதோடு...

  ஜெய்லானி மற்றும் அவர்தம் குடும்பத்தார்...

  மற்றும்

  அனைத்து இசுலாமிய நண்பர்கள் அனைவருக்கும்
  இந்த "நட்புடன் காஞ்சி முரளி"யின்...
  "இனிய ரமலான் பெருநாள் வாழ்த்துக்கள்"....!

  இந்நாளில்...
  உலகெலாம்....
  அண்ணல் நபிகள் தெரிவித்த
  ஈகைமிக்க... சகோதரத்துவ... சமதர்ம... சமுதாயம் மலர்ந்து...

  அங்கெங்குமிலாதபடி எங்கும்..
  நலமும்... வளமும் பெற்று...
  அனைவரும் மகிழ்வுடான் வாழ...
  இறைவன் பேரருள் புரிய
  இந்நன்னாளில் வேண்டுகிறேன்...

  அனைவருக்கும்
  என் இனிய நல்வாழ்த்துக்கள்...
  வாழ்த்துக்கள்...
  வாழ்த்துக்கள்...!

  நட்புடன்...
  காஞ்சி முரளி....

  பதிலளிநீக்கு
 11. அன்பு சகோதரி மலிக்கா,

  முதலில் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும்,
  நண்பர்கள், உறவினர்கள், சகோதர சகோதரிகள் மற்றும் உலக மக்கள் அனைவருக்கும் இனிய நோன்பு பெருநாள் நல் வாழ்த்துக்கள்..

  அன்பு சகோதரன்

  தாஜுதீன்

  பதிலளிநீக்கு
 12. உங்களுக்கும்,உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
  என் இனிய " ஈகைப் பெருநாள் வாழ்த்துக்கள் "

  பதிலளிநீக்கு
 13. தங்களுக்கும்...
  தங்கள் மச்சான்... குழந்தைகள்... மற்றும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்....

  ***************************************************************
  "இனிய ரமலான் பெருநாள் வாழ்த்துக்கள்"....!
  ***************************************************************

  அதோடு...
  ஜெய்லானி மற்றும் அவர்தம் குடும்பத்தார்...
  மற்றும்
  அனைத்து இசுலாமிய நண்பர்கள் அனைவருக்கும்
  இந்த "நட்புடன் காஞ்சி முரளி"யின்...
  "இனிய ரமலான் பெருநாள் வாழ்த்துக்கள்"....!

  இந்நாளில்...
  உலகெலாம்....
  அண்ணல் நபிகள் தெரிவித்த
  ஈகைமிக்க...
  சகோதரத்துவ...
  சமதர்ம...
  சமுதாயம் மலர்ந்து...

  அங்கெங்குமிலாதபடி .
  எங்கும்..
  நலமும்... வளமும் பெற்று...
  அனைவரும் மகிழ்வுடன் வாழ...
  இறைவன் பேரருள் புரிய
  இந்நன்னாளில் வேண்டுகிறேன்...

  அனைவருக்கும்
  என் இனிய நல்வாழ்த்துக்கள்...
  வாழ்த்துக்கள்...
  வாழ்த்துக்கள்...!

  நட்புடன்...
  காஞ்சி முரளி....

  பதிலளிநீக்கு
 14. ஈகை பெருநாள் நல் வாழ்த்துகள்!

  [[பாவங்கள் அனைத்தையும்
  மன்னித்து
  புனித சொர்க்கத்தை
  எங்களுக்குத் தந்திடுவாய்..]]

  இன்ஷா அல்லாஹ்

  பதிலளிநீக்கு
 15. அனைவருக்கும் இனிய பெருநாள் நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 16. பெருநாள் வாழ்த்துக்கள் மலிக்கா.
  அருமையான வாழ்தாகவும் அதேசமயம் இறைவனின் பெருமையையும் விளக்கிதங்களுக்கு பாராட்டுக்கள்..

  உங்கள் குடும்பத்திர்க்கும் வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு
 17. பெருநாள் வாழ்த்துக்கள் மலிக்கா.
  அருமையான வாழ்தாகவும் அதேசமயம் இறைவனின் பெருமையையும் விளக்கிதங்களுக்கு பாராட்டுக்கள்..

  உங்கள் குடும்பத்திர்க்கும் வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு
 18. இனிய பெருநாள் வாழ்த்துகள் சகோதரி உங்களுக்கும் உங்களைச் சூழ்ந்தவர்களுக்கும்.உங்க வீட்டு இன்றைய ஸ்பெஷல் சாப்பாட்டு வாசனை சுவிஸ் வரைக்கும்
  வருது தோழி.

  பதிலளிநீக்கு
 19. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய பெருநாள் நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 20. காஞ்சி அண்ணாத்தேஏஏஏஏஏஏஏ.. ரொம்ப நன்றிங்கோஓஓஓஓஓஓஓஓ..(

  அப்படியே ஒரு கப் பாயாசம் , வட்டலாப்பம் சாப்பிட்டுட்டு போங்கோ.. ஸ்பெஷல் பிரியாணி மலிக்காக்கா தருவாங்க ஹி..ஹி..

  பதிலளிநீக்கு
 21. eid mubarack to me dear sister.
  May the lord inshah Allahh will fullfill all desires. wish to your family also.

  enga briyaniyum antha udaikka mudiyatha kolukkattaiyum. ready ya irukkungala??

  பதிலளிநீக்கு
 22. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த ரமலான் பெருநாள் வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 23. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவர்களுக்கும் ஈத் அல் ஃபித்ர் நல வாழ்த்துகள்!!

  பதிலளிநீக்கு
 24. ஜெய்லானி....

  ////ஸ்பெஷல் பிரியாணி மலிக்காக்கா தருவாங்க ஹி..ஹி.. ////

  அதெல்லாம்... ஸ்பெஷல் பிரியாணியே சாப்பிட்டாச்சி.....!
  அதுவும் மலிக்கா வீட்டு ஸ்பெஷல் பிரியாணியே...!

  அதுவும்... சூப்பர் பிரியாணி சாப்பிட்டாச்சி.....!..!

  அவ்... வவ்.... வ்வ்வ்....!

  you are toooooooooooooooo late...!

  பதிலளிநீக்கு
 25. பெருநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த அத்தனை நெஞ்சங்களுக்கும். மனமார்ந்த மனமார்ந்த நன்றிகள்
  பல பல.
  மிகுந்த மகிழ்ச்சியும் மிக்க நன்றியும்..

  அன்புடன் மலிக்கா

  பதிலளிநீக்கு
 26. கொஞ்சம் பிஸி ஆகையால் லேட்டா ஈத் முபாரக்,

  பதிலளிநீக்கு
 27. லேட்டா ஈத் முபாரக், ஜலிலா நம்பமுடியவில்லை.

  பதிலளிநீக்கு
 28. வளையில் விளுந்த மல்லிகை தொடர் பார்க்க கிடைக்கவில்லை.

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது