நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

கருப்பையின் கதறல்.

நன்றி கூகிள்
தளிர்க்கும் தளிரை
தழைக்கவேண்டிய உயிரை
தாய்மையின் தரமறியா
தான்தோன்றித் தனத்தால்

உள்ளங்கள் சந்தித்து
உடல்கள் சங்கமித்து
உலகிற்கு ஓர் உன்னத உயிர்
உலாவரத் துடிக்க

உடலுக்குள் இருக்கும்
உறுப்பென்னும் கருப்பையில்
உலவிடும் ஊதாப்பூவை
உருத்தெரியாமல் அழிக்க

கருப்பையைக் கதறக் கதற
கருவறுக்கும் கூட்டமே
காதில் கேட்குதா
கர்பப்பையின் கதறல்

உயிர்வதைச் சட்டம்-உலவும்
உயிர்களுக்கு மட்டும்தானா!
உடல் உறுப்புக்குள்
ஊசலாடும் உயிர்களுக்கில்லையா!

சங்கமிக்கும் முன் சற்றே
சிந்தித்து உடல்கள் சந்தித்தால்
சங்கமம்
சரித்திரம் படைக்கவில்லையென்றாலும்
சாந்தியடையுமே சதையென்னும் உயிர்..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால் இந்த
நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.

42 கருத்துகள்:

  1. கருகலைப்பை கருவாய் வைத்து உருவான கவிதை அழகு....வாழ்த்துகள் மலிக்கா அக்கா..

    பதிலளிநீக்கு
  2. வார்த்திகள் நெருப்பா இருக்குங்க.

    பதிலளிநீக்கு
  3. ஒவ்வொருவரும் சிந்திக்க ஆரம்பித்தல் சீரழிவுக்கு வேலையில்லை.சிந்திப்பார்களா?.

    பதிலளிநீக்கு
  4. /உயிர்வதைச் சட்டம்-உலவும்
    உயிர்களுக்கு மட்டும்தானா!
    உடல் உறுப்புக்குள்
    ஊசலாடும் உயிர்களுக்கில்லையா!///

    அருமையான வரிகள்

    பதிலளிநீக்கு
  5. நல்ல கவிதை..
    சிந்திக்க வேண்டிய விஷயம்..

    பதிலளிநீக்கு
  6. //உயிர்வதைச் சட்டம்-உலவும்
    உயிர்களுக்கு மட்டும்தானா!
    உடல் உறுப்புக்குள்
    ஊசலாடும் உயிர்களுக்கில்லையா!//

    நெத்தியடி! ஜென்மங்கள் திருந்துமா?

    பதிலளிநீக்கு
  7. அருமையான கவிதை மலிக்கா....தொட்டில் குழந்தைகளை பற்றி ஒரு கவிதை எழுதுங்களேன்..

    பதிலளிநீக்கு
  8. அதைவிடக்கொடுமை பிறந்ததும் கள்ளிப்பால்.........
    அந்த உயிர் செய்த பாவம் என்ன ..?

    நினைத்தாலே நடுங்குகிறது .

    மனிதனுக்குள் மிருகம்....

    இதுப்போல கவிதை நிறைய எழுதுங்கள்

    பதிலளிநீக்கு
  9. ///தாய்மையின் தரமறியா
    தான்தோன்றித் தனத்தால்////

    //சங்கமிக்கும் முன் சற்றே
    சிந்தித்து உடல்கள் சந்தித்தால்///

    கண்டனமும்.... அறிவுரையும் கொண்ட சிறந்த வரிகள்....

    மொத்தத்தில்...
    நல்ல சமூகசிந்தனை கொண்ட..... அருமையான கவிதை...

    வாழ்த்துக்கள்...

    நட்புடன்...
    காஞ்சி முரளி....

    பதிலளிநீக்கு
  10. க‌விதை ந‌ல்ல‌ இருக்குங்க‌..

    பதிலளிநீக்கு
  11. கருவரையின் கதறல் கவிதையின் வழியோ காதுகளை தட்டி கருவறையை எட்டும்

    பதிலளிநீக்கு
  12. கதறல் கேட்டும் மனமிரங்காதமக்களே
    என்ன செய்வது பாவங்களின் பக்கமே போவதற்க்கு தயரென சொல்கிறாரது அவங்க மந்து.

    கொலை எப்படிசெய்தாலும் கொலைதானே

    கவிதை மனைத பிசையுது

    பதிலளிநீக்கு
  13. கருப்பை மட்டும் தான் உயிர் வாழும் இடமா?
    சிக்கன் பிரியாணி சாப்பிடும் போது(சாப்பிடுபவர்களுக்கான கேள்வி) சிக்கன் கூட இறந்து போன உயிர் தானே ..

    பதிலளிநீக்கு
  14. யுக கோபிகா கூறியது...
    கருப்பை மட்டும் தான் உயிர் வாழும் இடமா?
    சிக்கன் பிரியாணி சாப்பிடும் போது(சாப்பிடுபவர்களுக்கான கேள்வி) சிக்கன் கூட இறந்து போன உயிர் தானே!..//

    வாங்க சகோதரி கோபிகா.
    தாங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    சிக்கனுக்கும் சிசுவுக்கும் முடிச்சா?

    மனிதர்களின் தேவைகளுக்காக படைக்கப்பட்டவைகளை மனிதன் உட்கொள்வதில் தவறேதுமில்லை
    அவைகள் மனிததேவைகளுக்காவே படைக்கப்பட்டுள்ளன! தன்தேவைக்குயிது என நினைக்கும் மனிதன் அதை உட்கொள்கிறான்.

    145 ”தாமாக செத்தது. ஓடப்பட்ட இரத்தம், அசுத்தமாகிய பன்றியின் இறைச்சி, மற்றும் அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்ட பாவமான[உண]வைத்தவிர. வேறு எதுவும் மனிதர் உண்பதற்குத் தடைசெய்யப்பட்டதாக எனக்கு அறிவிக்கப்பட்ட செய்தில் காணவில்லை என்று [முஹம்மதே]கூறுவீராக!
    யாரேனும் வரம்பு மீறாமலும், வலியச்செல்லாமலும், நிர்பந்திக்கப்பட்டால். உமது இறைவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

    அல்குர்ஆன் 6. அல் அன்ஆம். பாகம்:8


    சிசுவதையென்பது மனிததர்மத்தை மீறியது, இறைவன் இந்த பாதகச்செயலுக்கு அனுமதி வழங்கவில்லை
    தன் தாயே தன்னை [அல்லது பிறரின் நிர்பந்தத்தின் பெயரில்] கொலைசெய்வதை அந்த உருவமில்லா சிசு உணரவில்லையென்பதற்காக உயிரோடு கொல்லுவது நியாயமில்லையல்லவா!

    31.வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீகள்!அவர்களுக்கும் உங்களுக்கு நாமே உணவளிக்கிறோம் அவர்களைக் கொல்வது பெரிய குற்றமாகும்.

    அல்குர் ஆன். 17 பனு இஸ்ராயில். பாகம்15.

    ஆகவே இறைவனின் கட்டளைப்படி எது பாவமான காரியமோ அதை செய்யக்கூடாது என்பது என்கருத்து.

    பதிலளிநீக்கு
  15. யுக கோபிகா கூறியது...
    கருப்பை மட்டும் தான் உயிர் வாழும் இடமா?
    சிக்கன் பிரியாணி சாப்பிடும் போது(சாப்பிடுபவர்களுக்கான கேள்வி) சிக்கன் கூட இறந்து போன உயிர் தானே!..//

    வாங்க சகோதரி கோபிகா.
    தாங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    சிக்கனுக்கும் சிசுவுக்கும் முடிச்சா?

    மனிதர்களின் தேவைகளுக்காக படைக்கப்பட்டவைகளை மனிதன் உட்கொள்வதில் தவறேதுமில்லை
    அவைகள் மனிததேவைகளுக்காவே படைக்கப்பட்டுள்ளன! தன்தேவைக்குயிது என நினைக்கும் மனிதன் அதை உட்கொள்கிறான்.

    145 ”தாமாக செத்தது. ஓடப்பட்ட இரத்தம், அசுத்தமாகிய பன்றியின் இறைச்சி, மற்றும் அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்ட பாவமான[உண]வைத்தவிர. வேறு எதுவும் மனிதர் உண்பதற்குத் தடைசெய்யப்பட்டதாக எனக்கு அறிவிக்கப்பட்ட செய்தில் காணவில்லை என்று [முஹம்மதே]கூறுவீராக!
    யாரேனும் வரம்பு மீறாமலும், வலியச்செல்லாமலும், நிர்பந்திக்கப்பட்டால். உமது இறைவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

    அல்குர்ஆன் 6. அல் அன்ஆம். பாகம்:8


    சிசுவதையென்பது மனிததர்மத்தை மீறியது, இறைவன் இந்த பாதகச்செயலுக்கு அனுமதி வழங்கவில்லை
    தன் தாயே தன்னை [அல்லது பிறரின் நிர்பந்தத்தின் பெயரில்] கொலைசெய்வதை அந்த உருவமில்லா சிசு உணரவில்லையென்பதற்காக உயிரோடு கொல்லுவது நியாயமில்லையல்லவா!

    31.வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீகள்!அவர்களுக்கும் உங்களுக்கு நாமே உணவளிக்கிறோம் அவர்களைக் கொல்வது பெரிய குற்றமாகும்.

    அல்குர் ஆன். 17 பனு இஸ்ராயில். பாகம்15.

    ஆகவே இறைவனின் கட்டளைப்படி எது பாவமான காரியமோ அதை செய்யக்கூடாது என்பது என்கருத்து.

    பதிலளிநீக்கு
  16. கருகலைப்பை கருவாக வைத்து அழகான வரிகளில் நல்ல கருத்தை தந்து உள்ளிர்கள் சகோதரி.

    பதிலளிநீக்கு
  17. சமூகத்தின் மீதான கரிசனையும், இவ் உலகில் விழிப்புணர்வினை உருவாக்க வேண்டும் எனும் நம்பிக்கையிலும் உருவான கவிதை அருமை, தொடருங்கோ! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  18. கருப்பையைக் கதறக் கதற
    கருவறுக்கும் கூட்டமே
    காதில் கேட்குதா
    கர்பப்பையின் கதறல்
    /////



    இனி கதறி பயனில்லை , நீயும் ஒரு ஆயுதம் எடு

    பதிலளிநீக்கு
  19. நச்சென்ற கவிதை பலருக்கு பொட்டில் அறைந்தார்போலிருக்கும் தாய்மை மனமிருந்தால்.

    வாழ்த்துக்கள் மலிக்கா உங்கள் திறமைக்கு ஒரு சல்யூட்..

    பதிலளிநீக்கு
  20. சே.குமார் கூறியது...
    கவிதை நல்லாயிருக்கு.//

    மிக்க நன்றி குமார்..


    seemangani கூறியது...
    me the 1 st
    /

    இல்லையே 2 தான்

    பதிலளிநீக்கு
  21. சந்தோஷி கூறியது...
    கதறல் கேட்டும் மனமிரங்காதமக்களே
    என்ன செய்வது பாவங்களின் பக்கமே போவதற்க்கு தயரென சொல்கிறாரது அவங்க மந்து.

    கொலை எப்படிசெய்தாலும் கொலைதானே

    கவிதை மனைத பிசையுது.//

    அருமையான கருத்து சந்தோஷி.
    மிக்க நன்றி வரவுக்கு..



    seemangani கூறியது...
    கருகலைப்பை கருவாய் வைத்து உருவான கவிதை அழகு....வாழ்த்துகள் மலிக்கா அக்கா..//


    வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி கனி..

    பதிலளிநீக்கு
  22. ஜீவன்பென்னி கூறியது...
    வார்த்திகள் நெருப்பா இருக்குங்க..//

    நெருப்பு சிலருக்கு சுடுவதில்லையே
    ஜீவன்பென்னி.தாங்களீன் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..


    LK கூறியது...
    /உயிர்வதைச் சட்டம்-உலவும்
    உயிர்களுக்கு மட்டும்தானா!
    உடல் உறுப்புக்குள்
    ஊசலாடும் உயிர்களுக்கில்லையா!///

    அருமையான வரிகள்.//

    மிக்க நன்றி கார்த்திக்.

    பதிலளிநீக்கு
  23. இளம் தூயவன் கூறியது...
    ஒவ்வொருவரும் சிந்திக்க ஆரம்பித்தல் சீரழிவுக்கு வேலையில்லை.சிந்திப்பார்களா?//

    சிந்தித்துவிட்டால் போதுமே சீரழிவுக்கு வேலையில்லையே!தூயவா!

    நாடோடி கூறியது...
    க‌விதை ந‌ல்ல‌ இருக்குங்க‌
    //

    மிக்க நன்றி ஸ்டீபன்..

    பதிலளிநீக்கு
  24. /வெறும்பய கூறியது...
    நல்ல கவிதை..
    சிந்திக்க வேண்டிய விஷயம்..

    மிக்க மகிழ்ச்சி வெறும்பய [அச்சோ பெயரைப்படியா வைக்கிறது]மரியாதையான பெயர் ஹி ஹி


    S Maharajan கூறியது...
    //உயிர்வதைச் சட்டம்-உலவும்
    உயிர்களுக்கு மட்டும்தானா!
    உடல் உறுப்புக்குள்
    ஊசலாடும் உயிர்களுக்கில்லையா!//

    நெத்தியடி! ஜென்மங்கள் திருந்துமா
    //

    திருந்தனும் உயிர்கள் வாழனும்..
    மிக்க நன்றி மகராஜன்..

    பதிலளிநீக்கு
  25. Yasir கூறியது...
    அருமையான கவிதை மலிக்கா....தொட்டில் குழந்தைகளை பற்றி ஒரு கவிதை எழுதுங்களேன்..

    மிக்க நன்றிக் காக்கா.

    எற்கனவே ஒரே தவிப்பு ந்னு தலைப்பில் எழுதியிருக்கேன் காக்கா நான்கு வரிக்கவிதைகளென நினைக்கிறேன்..

    /அஹமது இர்ஷாத் கூறியது...
    அருமையான கவிதை.//

    மிக்க நன்றி இர்ஷாத்..

    பதிலளிநீக்கு
  26. ஜெய்லானி கூறியது...
    அதைவிடக்கொடுமை பிறந்ததும் கள்ளிப்பால்.........
    அந்த உயிர் செய்த பாவம் என்ன ..?

    நினைத்தாலே நடுங்குகிறது .

    மனிதனுக்குள் மிருகம்....

    இதுப்போல கவிதை நிறைய எழுதுங்கள்
    //

    மனசாட்சியில்லாத மனித ஜென்மங்கள்தான் கள்ளீப்பால்கொடுத்து குழந்தைகளை கொன்னுதுங்க. மிருகம் தேவலை அதனோடு ஒப்பிட்டு அதுகளை கேவலப்படுத்திடாதீங்க

    நிச்சயம் எழுதுகிறேன் அண்ணாத்தே! மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  27. காஞ்சி முரளி கூறியது...
    ///தாய்மையின் தரமறியா
    தான்தோன்றித் தனத்தால்////

    //சங்கமிக்கும் முன் சற்றே
    சிந்தித்து உடல்கள் சந்தித்தால்///

    கண்டனமும்.... அறிவுரையும் கொண்ட சிறந்த வரிகள்....

    மொத்தத்தில்...
    நல்ல சமூகசிந்தனை கொண்ட..... அருமையான கவிதை...

    வாழ்த்துக்கள்...

    நட்புடன்...
    காஞ்சி முரளி....//

    வாழ்த்துக்களுக்கும் கருத்துக்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சி சகோதரா! மிக்க நன்றி..


    காஞ்சி முரளி கூறியது...
    thanks.

    தேங்ஸ்கு நன்றி.

    8 ஜூலை, 2010 10:17 am

    பதிலளிநீக்கு
  28. shahulhameed கூறியது...
    கருவரையின் கதறல் கவிதையின் வழியோ காதுகளை தட்டி கருவறையை எட்டும்.//

    எட்டினால் நன்மையே!
    மிக்க நன்றி ஷாகுல்காக்கா..

    பதிலளிநீக்கு
  29. mkrpost கூறியது...
    கருகலைப்பை கருவாக வைத்து அழகான வரிகளில் நல்ல கருத்தை தந்து உள்ளிர்கள் சகோதரி.

    மிகுந்த மகிழ்ச்சி தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் சகோதரா..

    பதிலளிநீக்கு
  30. தமிழ் மதுரம் கூறியது...
    சமூகத்தின் மீதான கரிசனையும், இவ் உலகில் விழிப்புணர்வினை உருவாக்க வேண்டும் எனும் நம்பிக்கையிலும் உருவான கவிதை அருமை, தொடருங்கோ! வாழ்த்துக்கள்,..//

    நிச்சயம் தொடர்கிறேங்கோ
    தாங்களீன் வருகைகும் அன்பான கருத்துக்கும் மிக்க நன்றி.
    தமிழ் மதுரம்...
    [தமிழ் அத்தனை இனிப்பானது]

    பதிலளிநீக்கு
  31. மங்குனி அமைச்சர் கூறியது...
    கருப்பையைக் கதறக் கதற
    கருவறுக்கும் கூட்டமே
    காதில் கேட்குதா
    கர்பப்பையின் கதறல்
    /////



    இனி கதறி பயனில்லை , நீயும் ஒரு ஆயுதம் எடு.//

    யாரைக்கொல்ல அமைச்சரே. நீங்க இருக்கும் காட்டில் அச்சோ நாட்டில் இப்படியெல்லாம் கொடுமைநடக்கிறதே கண்டும் காணாமலும் இருப்பது சரியோ???????



    சிவா கூறியது...
    நச்சென்ற கவிதை பலருக்கு பொட்டில் அறைந்தார்போலிருக்கும் தாய்மை மனமிருந்தால்.

    வாழ்த்துக்கள் மலிக்கா உங்கள் திறமைக்கு ஒரு சல்யூட்...//

    ரொம்ப சந்தோஷம் தங்களின் வருகைக்கும் நச்சென்ற கருத்துக்கும்.
    மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  32. கருப்பையைக் கதறக் கதற
    கருவறுக்கும் கூட்டமே
    காதில் கேட்குதா
    கர்பப்பையின் கதறல்//

    நல்ல வரிகள் கவிதை நல்ல இருக்கு அக்கா

    பதிலளிநீக்கு
  33. நல்ல சிந்தனை சமுதாயத்துக்கு தேவையான ஒன்றும் கூட.

    பதிலளிநீக்கு
  34. //சங்கமிக்கும் முன் சற்றே
    சிந்தித்து உடல்கள் சந்தித்தால்
    சங்கமம்
    சரித்திரம் படைக்கவில்லையென்றாலும்
    சாந்தியடையுமே சதையென்னும் உயிர்..//

    அருமையான வரிகள். நல்ல சிந்தனை.

    ஆனால் மக்கள் தொகை நிரம்பிய நம் நாட்டில் கருகலைப்பு அவசியமான ஒன்று என்பதே என் கருத்து.

    பதிலளிநீக்கு
  35. Rajasurian கூறியது...
    //சங்கமிக்கும் முன் சற்றே
    சிந்தித்து உடல்கள் சந்தித்தால்
    சங்கமம்
    சரித்திரம் படைக்கவில்லையென்றாலும்
    சாந்தியடையுமே சதையென்னும் உயிர்..//

    அருமையான வரிகள். நல்ல சிந்தனை.

    ஆனால் மக்கள் தொகை நிரம்பிய நம் நாட்டில் கருகலைப்பு அவசியமான ஒன்று என்பதே என் கருத்து.//

    வாங்க சகோதரா!
    மேலே உள்ளவரிகளை நல்ல சிந்தனையென்றீர்கள். அதுவே கீழே தங்களின் கருத்து முரண்படுகிறதே!

    சிந்தித்து செயல்பட்டால் ஏன் கருக்கலைப்பு என்னும் கொலை செய்யவேண்டும்.

    மக்கள் தொகையின் பெருக்கத்தால் பாதிப்பு என்பது யாருக்கு! அது அவரவரரே சிந்திக்கவேண்டும்.
    தாய்தந்தையின் சிலநொடிகளின் சந்தோஷத்திற்க்காக தண்டணையை ஏன் ஒன்றுமறியா சிசுவுக்குதரவேண்டும். அதை முன்கூட்டியே சிந்தித்து செயல்பட்டால் பாவத்திலிருந்தும் தண்டையிலிருந்தும் தப்பிக்கலாமே!
    முக்கியமாக மனசாட்சிக்கு பயப்படாலாமே!

    கருக்கொலை செய்த எந்த ஒரு ஜீவனும் மனதுக்குள் மருகாமலிருக்கமுடியாது அது அவரவர் மனதிற்க்கு மட்டுமே தெரியும். அது மரிக்கிறவரை மனவேதனையை தந்துகொண்டேயிருக்கும் மனசாட்சியிருந்தால்....


    31.வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீகள்!அவர்களுக்கும் உங்களுக்கு நாமே உணவளிக்கிறோம் அவர்களைக் கொல்வது பெரிய குற்றமாகும்.

    அல்குர் ஆன். 17 பனு இஸ்ராயில். பாகம்15.

    தங்களின் வருகைக்கும் அன்பான கருத்துக்கும் மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  36. சௌந்தர் கூறியது...
    கருப்பையைக் கதறக் கதற
    கருவறுக்கும் கூட்டமே
    காதில் கேட்குதா
    கர்பப்பையின் கதறல்//

    நல்ல வரிகள் கவிதை நல்ல இருக்கு அக்கா.//

    வாங்க சௌந்தர் தங்களின் வருகைக்கும் அன்பான கருத்துக்கும் மிக்க நன்றி. தொடர்ந்து வாருங்கள்..

    பதிலளிநீக்கு
  37. ராஜவம்சம் கூறியது...
    நல்ல சிந்தனை சமுதாயத்துக்கு தேவையான ஒன்றும் கூட.//

    சமுதாயத்தில் சில மனிதர்கள் சிந்திக்கவே மறுக்கிறார்களே!
    மிக்க நன்றி ராஜவம்சம்..


    //soundr கூறியது...
    :(//

    நன்றி soundr

    பதிலளிநீக்கு
  38. உங்கள் வரிகளில் வலியின் வேதனைகள் மலிக்கா

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது