நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

ஏனென்ற கேள்வி எனக்குள் பிறக்குது!

எத்தனை எத்தனையோ
மாதர் சங்கங்கள்
மகளிர் மன்றங்கள்
தணிக்கை குழுக்கள்
இன்னும்
எத்தனை எத்தனையோ
இருந்தும் என்ன பயன்-பல
மாந்தர்களின் நிலை?
மலிந்தல்லவா கிடக்கிறது

படித்தவர்முதல் பாமரர்கள் வரை
பார்க்கும் கண்கள் அத்தனைக்கும்
போதைதரும் போகப்பொருளாய்
வில்லியாய் வேடதாரியாய்
பணத்தாசை பிடித்தவர்களாய்
பலவிதங்களில் பந்தாடப்படும்
மாந்தர்கள்

கட்டில் முதல் தொட்டில் வரை
ஊர்தொட்டு உலகம்வரை
ஒவ்வொன்றிலும் ஊன்றுகோலாய்
இருக்கும் பெண்மையை
ஒட்டு துணியுடன் ஆட விடும்
பெரிய திரை

ஆதிக்கம் செய்பவர்களாக
அடுத்தவர்கள் கணவர்களுக்கும்
ஆசைபடுபவர்களாக
ஊறுவிளைவிப்பவர்களாக
சித்தரிக்கும் சின்னத்திரை

சோப்பிலிருந்து சீப்புவரை
ஆணியிலிருந்து அந்தரங்கம்வரை
அனைத்திலும்
அரைகுறை அங்கங்களுடன்
அலையவிடும் மீடியாக்கள்

”இப்படி”

எல்லா வட்டாரத்திலும்
துரத்தித் துரத்தி
துவேசம் செய்யப்படும்
பெண்கள்
இதை சில பல நேரங்களில்
பெண்மணிகளே செய்வதும்
செய்யத்தூண்டுவதும் தான்
விந்தையிலும் விந்தை-இதை
பார்க்கும்போது
நெஞ்சம் பதைக்குது
மனதும் வலிக்குது

மேலைநாட்டு மோகமிங்கே
மேம்பட்டுக்கிடக்குது
எதை சொன்னாலும்
பழைய காலமென
பரணியில் போடுது
மனித மனங்களிங்கே
மதிப்பை இழக்குது
காகிதப் பணத்தின்
பதவி உயருது
கடவுளின்
பயங்கூட விட்டுப்போகுது

எந்திரமாக்கப்பட்டு
எல்லைகள் மீறுது
எந்த நேரத்திலும்
எதுவும் நடக்குது
தனிமனித ஒழுக்கம்
தவறிப்போவதால்
தன்னை
பிறர் ஆளும் நிலையில்
மனிதமிருக்குது
தன்னைக் காத்துக்கொள்ளவே
தவறிப்போகுது....

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

30 கருத்துகள்:

  1. //தனிமனித ஒழுக்கம்
    தவறிப்போவதால்
    தன்னை
    பிறர் ஆளும் நிலையில்
    மனிதமிருக்குது//

    உண்மையான அழகான வரிகள், மனதை படிக்கிறது.

    பதிலளிநீக்கு
  2. அடேங்கப்பா!!!
    எத்தனை கேள்விகள்,
    சரியாதான் கேட்டு இருக்கீங்க.

    பதிலளிநீக்கு
  3. //ஆதிக்கம் செய்பவர்களாக
    அடுத்தவர்கள் கணவர்களுக்கும்
    ஆசைபடுபவர்களாக
    ஊறுவிளைவிப்பவர்களாக
    சித்தரிக்கும் சின்னத்திரை.//

    தலவிதி டீவியதொரந்தா அடுத்தவா புருசனையே அபக்கரிக்குரதாதான் போடுறாங்க.

    இதுக்கு முடிவே இல்லாம்ப்போச்சு யாருகேட்குரது..

    பதிலளிநீக்கு
  4. நல்லா இருக்குங்க ..

    கடைசி வரிகள் அருமை!!

    பதிலளிநீக்கு
  5. மேலைநாட்டு மோகமிங்கே
    மேம்பட்டுக்கிடக்குது]]

    முக்கிய காரணி ...

    பதிலளிநீக்கு
  6. //சில பல நேரங்களில்
    பெண்மணிகளே செய்வதும்
    செய்யத்தூண்டுவதும் தான்
    விந்தையிலும் விந்தை//

    பிள்ளை வளர்ப்பு அப்படி.....

    பதிலளிநீக்கு
  7. அஹமது இர்ஷாத் கூறியது...
    //தனிமனித ஒழுக்கம்
    தவறிப்போவதால்
    தன்னை
    பிறர் ஆளும் நிலையில்
    மனிதமிருக்குது//

    உண்மையான அழகான வரிகள், மனதை படிக்கிறது.//

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி இர்ஷாத்

    பதிலளிநீக்கு
  8. /சைவகொத்துப்பரோட்டா கூறியது...
    அடேங்கப்பா!!!
    எத்தனை கேள்விகள்,
    சரியாதான் கேட்டு இருக்கீங்க
    //

    என்னத்தக்கேட்டு என்ன பண்ண, நீங்கக்கூட பதில்சொல்லலையே பரோட்டா...

    பதிலளிநீக்கு
  9. /அக்பர் கூறியது...
    good one/

    நன்றி அக்பர்.


    சுப்பு கூறியது...
    //ஆதிக்கம் செய்பவர்களாக
    அடுத்தவர்கள் கணவர்களுக்கும்
    ஆசைபடுபவர்களாக
    ஊறுவிளைவிப்பவர்களாக
    சித்தரிக்கும் சின்னத்திரை.//

    தலவிதி டீவியதொரந்தா அடுத்தவா புருசனையே அபக்கரிக்குரதாதான் போடுறாங்க

    இதுக்கு முடிவே இல்லாம்ப்போச்சு யாருகேட்குரது//


    என்ன செய்ய சுப்பு எங்குபாத்தாலும் இதேகதிதான், யாரு கேட்கனும் எல்லாரும்தான் கேட்கனும்.

    கேட்டா ஊரு உலகத்தில் நடப்பதைத்தான் நாங்களூம் சொல்லுறோம்பாங்க.

    தனிமனித ஒழுக்கம் இருந்தால் எல்லாம் சரியாக இருக்கும் என்பது என்கருத்து.

    பதிலளிநீக்கு
  10. /【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ கூறியது...
    நல்லா இருக்குங்க ..

    கடைசி வரிகள் அருமை.//

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சங்கர்

    பதிலளிநீக்கு
  11. /நட்புடன் ஜமால் கூறியது...
    மேலைநாட்டு மோகமிங்கே
    மேம்பட்டுக்கிடக்குது]]

    முக்கிய காரணி ...
    /

    சத்தியமான உன்மை ஜமால்காக்கா.
    அடுத்தவர்களைப்பார்த்து தன்னைத் தானே சூடுபோட்டுக்கொள்ளும் காலமாகிவிட்டுது

    பதிலளிநீக்கு
  12. /ஜெய்லானி கூறியது...
    //சில பல நேரங்களில்
    பெண்மணிகளே செய்வதும்
    செய்யத்தூண்டுவதும் தான்
    விந்தையிலும் விந்தை//

    பிள்ளை வளர்ப்பு அப்படி.....//

    நல்லா வளர்க்கிறாங்க போங்க நாகரீக லொல் லொள் லாட்டம்

    பதிலளிநீக்கு
  13. //மாதர் சங்கங்கள்
    மகளிர் மன்றங்கள்
    தணிக்கை குழுக்கள்
    இன்னும்
    எத்தனை எத்தனையோ
    இருந்தும் என்ன பயன்-பல
    மாந்தர்களின் நிலை?
    மலிந்தல்லவா கிடக்கிறது//

    என்ன செய்ய மலிக்கா பல மாதர் சங்கங்களும் தங்கள் படோபடோபத்தைக் காட்டுவதற்கும் மேடையில் பெண்ணீயம் முழங்குவதற்கும் மட்டுமே செயல் படும்போது இப்படித்தான் இருக்கும்.

    பதிலளிநீக்கு
  14. மேலைநாட்டு மோகமிங்கே
    மேம்பட்டுக்கிடக்குது
    எதை சொன்னாலும்
    பழைய காலமென
    பரணியில் போடுது

    ..... எவ்வளவு தெளிவாக உண்மையை சொல்லி விளாசி விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  15. மாதர் சங்கம்,
    பெண்கள்,
    விளம்பரங்கள்,
    பெரியதிரை,
    சின்னத்திரை
    எல்லாவற்றையும்
    உலுக்கி,கசக்கிப்
    பிழிஞ்சிட்டீங்க!

    பதிலளிநீக்கு
  16. மலிக்கா அக்கா, நான் புதிதாக வலைப்பூ ஆரம்பித்துள்ளேன். உங்கள் மேலான ஆதரவும் ஆலோசனைகளும் தேவை.

    பதிலளிநீக்கு
  17. kavisiva கூறியது...
    //மாதர் சங்கங்கள்
    மகளிர் மன்றங்கள்
    தணிக்கை குழுக்கள்
    இன்னும்
    எத்தனை எத்தனையோ
    இருந்தும் என்ன பயன்-பல
    மாந்தர்களின் நிலை?
    மலிந்தல்லவா கிடக்கிறது//

    /என்ன செய்ய மலிக்கா பல மாதர் சங்கங்களும் தங்கள் படோபடோபத்தைக் காட்டுவதற்கும் மேடையில் பெண்ணீயம் முழங்குவதற்கும் மட்டுமே செயல் படும்போது இப்படித்தான் இருக்கும்.
    //

    ஆமாம் கவி எல்லாரும் அவங்கவுங்க சுயநலத்தைமட்டுமே விரும்புறாங்க.
    மற்றவர்களைப்பற்றிய கவலையில்லை.

    பதிலளிநீக்கு
  18. Chitra கூறியது...
    மேலைநாட்டு மோகமிங்கே
    மேம்பட்டுக்கிடக்குது
    எதை சொன்னாலும்
    பழைய காலமென
    பரணியில் போடுது

    ..... எவ்வளவு தெளிவாக உண்மையை சொல்லி விளாசி விட்டீர்கள்//

    என்னத்தப்போங்க சித்ராமேடம்.
    என்னத்த விளாசினாலும் எடுபடப்போவதில்லை. எழுதினால் மன ஆதங்கம் கொஞ்சமேனும் தீருமேன்னுதான் எழுதுறோம்.

    பதிலளிநீக்கு
  19. /NIZAMUDEEN கூறியது...
    மாதர் சங்கம்,
    பெண்கள்,
    விளம்பரங்கள்,
    பெரியதிரை,
    சின்னத்திரை
    எல்லாவற்றையும்
    உலுக்கி,கசக்கிப்
    பிழிஞ்சிட்டீங்க!/

    எல்லாரும் ஒன்னுகூடி என்னப்பிழியாமவிட்டா சரி.
    இல்லையா நிஜாமுதின் அண்ணா, ஹா ஹா

    பதிலளிநீக்கு
  20. மின்மினி கூறியது...
    மலிக்கா அக்கா, நான் புதிதாக வலைப்பூ ஆரம்பித்துள்ளேன். உங்கள் மேலான ஆதரவும் ஆலோசனைகளும் தேவை.//

    வந்தாச்சி பார்த்தாச்சி இனி அடிக்கடி வருகிறேன் நல்ல சிந்தனைகளை எடுத்துவையுங்கள் நீங்களூம் உங்கபங்குக்கு.. வாழ்த்துக்கள் மின்மினி..

    பதிலளிநீக்கு
  21. ஜெய்லானி கூறியது...
    #####
    உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளுங்கள்..
    http://kjailani.blogspot.com/2010/

    இதெப்படியிருக்கு அப்பால கொடுத்து இப்பால வாங்கிட்டோமுல்ல..

    மிக்க நன்றி ஜெய்லானி. இதுக்கு தனிபதிவே போடுவோமுல்ல..

    பதிலளிநீக்கு
  22. *****கட்டில் முதல் தொட்டில் வரை ஊர்தொட்டு உலகம்வரை
    ஒவ்வொன்றிலும் ஊன்றுகோலாய் இருக்கும் பெண்மையை
    ஒட்டு துணியுடன் ஆட விடும் பெரிய திரை********

    இந்த வரிகளும்....

    *****ஆதிக்கம் செய்பவர்களாக அடுத்தவர்கள் கணவர்களுக்கும்
    ஆசைபடுபவர்களாக ஊறுவிளைவிப்பவர்களாக சித்தரிக்கும் சின்னத்திரை***
    இதில் "*****அடுத்தவர்கள் கணவர்களுக்கும் ஆசைபடுபவர்களாக....****"

    என்ற இந்த வரிகளும்

    நிதர்சனமான இன்றைய உண்மை நிலையின் வரிகள்....

    ****சோப்பிலிருந்து சீப்புவரை ஆணியிலிருந்து அந்தரங்கம்வரை
    அனைத்திலும் அரைகுறை அங்கங்களுடன் அலையவிடும் மீடியாக்கள்*****

    எனக்கு ரொம்ப நாளா ஒரு டவுட் இருந்தது.... நீங்களும் மீடியா ஆதரவாளர்தானோ என்று.... இல்லையென்று ஆணித்தரமாய் மறுத்ததுடன், மீடியாவுக்கு சரியான சவுக்கடி வேறு...

    இந்நேரத்தில் ஒன்றை தெளிவாக்க விரும்புகிறேன்.... இச்சமுதாய சீரழிவிற்கு - சீர்கேட்டிற்க்கு முழுமுழுக் காரணமே மீடியாக்களின் ஆதிக்கம்தான்... மீடியா ஒன்று வருவதற்குமுன் இச்சமுதாயம் இந்தளவிற்கு சீர்கெடவில்லை...
    என்றைக்கு மீடியா கால்பதித்ததோ அன்று பிடித்த 'ஏழரைச்சனி' யனால்தான் இச்சமுதாயம் முற்றிலும் சீரழிந்து,
    இன்று அழிவின் விளிம்பில்.....

    அடுத்து.....

    **** இதை சில பல நேரங்களில் பெண்மணிகளே செய்வதும்
    செய்யத்தூண்டுவதும் தான் விந்தையிலும் விந்தை-இதை
    பார்க்கும்போது நெஞ்சம் பதைக்குது மனதும் வலிக்குது*****

    இது முற்றிலும் உண்மை...

    சமுதாய அக்கறையால் ஏற்பட்ட இந்த வலியினை நானும் உணர்கிறேன்....

    ****மேலைநாட்டு மோகமிங்கே மேம்பட்டுக்கிடக்குது
    எதை சொன்னாலும் பழைய காலமென
    பரணியில் போடுது மனித மனங்களிங்கே
    மதிப்பை இழக்குது
    காகிதப் பணத்தின் பதவி உயருது
    கடவுளின் பயங்கூட விட்டுப்போகுது
    எந்திரமாக்கப்பட்டு எல்லைகள் மீறுது
    எந்த நேரத்திலும் எதுவும் நடக்குது
    தனிமனித ஒழுக்கம் தவறிப்போவதால்
    தன்னை பிறர் ஆளும் நிலையில் மனிதமிருக்குது
    தன்னைக் காத்துக்கொள்ளவே தவறிப்போகுது..**********..

    மலிக்கா....! தங்கள் கவிதையின் Hightlightடே இந்த paraதான்...

    தாங்கள் இச்சமூகத்தின் - சமுதாயத்தின் மீது கொண்டுள்ள அக்கறையை
    எப்படிப் பாராட்டுவதென்று தெரியவில்லை.... மலிக்கா....!

    மனிதமும்...
    மனிதநேயமும்
    மனிதாபிமானமும்
    மரித்துப் போகாமல்
    உயிருடன் - அனைத்து
    உள்ளங்களில்
    உலவிட....

    சமுதாயச் சீர்கேட்டினை...
    சமூகக் கொடுமையினை...
    கலாச்சாரச் சீரழிவினை... - இக்
    கவிதையென்ற
    சவுக்கால்
    சாடிய "மலிக்கா"வுக்கு
    பாராட்டுக்கள்...
    வாழ்த்துக்கள்.....

    நட்புடன்...
    காஞ்சி முரளி.........

    பதிலளிநீக்கு
  23. நம்மிலிருந்துதான் (பெண்கள்) மாற்றம் வரவேண்டும்.

    பதிலளிநீக்கு
  24. நல்லா சமுதாய கோபம் ,
    அதை அருமையா சொல்லிருக்கிங்க

    பதிலளிநீக்கு
  25. எனக்கு ரொம்ப நாளா ஒரு டவுட் இருந்தது.... நீங்களும் மீடியா ஆதரவாளர்தானோ என்று.... இல்லையென்று ஆணித்தரமாய் மறுத்ததுடன், மீடியாவுக்கு சரியான சவுக்கடி வேறு...

    இந்நேரத்தில் ஒன்றை தெளிவாக்க விரும்புகிறேன்.... இச்சமுதாய சீரழிவிற்கு - சீர்கேட்டிற்க்கு முழுமுழுக் காரணமே மீடியாக்களின் ஆதிக்கம்தான்... மீடியா ஒன்று வருவதற்குமுன் இச்சமுதாயம் இந்தளவிற்கு சீர்கெடவில்லை...
    என்றைக்கு மீடியா கால்பதித்ததோ அன்று பிடித்த 'ஏழரைச்சனி' யனால்தான் இச்சமுதாயம் முற்றிலும் சீரழிந்து,
    இன்று அழிவின் விளிம்பில்//

    நல்லச்சொன்னீங்க போங்க. இனி நாந்தான் மீடியா ஒன்று ஆரம்பிக்கனும் நம்மாளும் சீரழிக்கமுடியுமான்னு பார்க்க ஹா ஹா ஹா..
    அடுத்து
    உள்ளதை உள்ளபடி சொன்னதுக்கு பலத்த கைதட்டல் முரளி.

    //மலிக்கா....! தங்கள் கவிதையின் Hightlightடே இந்த paraதான்...

    தாங்கள் இச்சமூகத்தின் - சமுதாயத்தின் மீது கொண்டுள்ள அக்கறையை
    எப்படிப் பாராட்டுவதென்று தெரியவில்லை.... மலிக்கா....! //

    பாராட்டுக்கு மகிழ்ச்சிகலந்த நன்றி.

    //மனிதமும்...
    மனிதநேயமும்
    மனிதாபிமானமும்
    மரித்துப் போகாமல்
    உயிருடன் - அனைத்து
    உள்ளங்களில்
    உலவிட....

    சமுதாயச் சீர்கேட்டினை...
    சமூகக் கொடுமையினை...
    கலாச்சாரச் சீரழிவினை...//

    நேர்த்தியான வரிகளைத்தொடுத்து
    கவிஞரென்று சொல்லாமல் சொல்லிவீட்டீர்கள். மிக அருமை

    //- இக்
    கவிதையென்ற
    சவுக்கால்
    சாடிய "மலிக்கா"வுக்கு
    பாராட்டுக்கள்...
    வாழ்த்துக்கள்.....

    நட்புடன்...
    காஞ்சி முரளி.........//

    நன்றி நன்றி நன்றி பாராட்டிய நட்புக்கு மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  26. //ஹுஸைனம்மா கூறியது...
    நம்மிலிருந்துதான் (பெண்கள்) மாற்றம் வரவேண்டும்//

    நிச்சியமாக நிச்சியமாக நிச்சியமாக!

    பதிலளிநீக்கு
  27. //மங்குனி அமைச்சர் கூறியது...
    நல்லா சமுதாய கோபம் ,
    அதை அருமையா சொல்லிருக்கிங்க//

    ஆதங்கமும் கோபமும் சிலநேரம் நம்மையே ஆட்டி படைக்கிறது இதுபோன்ற சம்பவங்களால்.

    மிக்க நன்றி அமைச்சரே!

    பதிலளிநீக்கு
  28. //தனிமனித ஒழுக்கம்
    தவறிப்போவதால்
    தன்னை
    பிறர் ஆளும் நிலையில்
    மனிதமிருக்குது//

    நல்லா இருக்கு

    பதிலளிநீக்கு
  29. "எல்லா வட்டாரத்திலும்
    துரத்தித் துரத்தி
    துவேசம் செய்யப்படும்
    பெண்கள்
    இதை சில பல நேரங்களில்
    பெண்மணிகளே செய்வதும்
    செய்யத்தூண்டுவதும் தான்
    விந்தையிலும் விந்தை-இதை
    பார்க்கும்போது
    நெஞ்சம் பதைக்குது
    மனதும் வலிக்குது"

    நல்ல ஆழமான உண்மையான கருத்து

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது