பொய்யாகிப்போன..
இரவு சத்தியம்
இனிதாய் முடிய
காலைப் பொழுது
கனிவாய் விடிய
இருந்த கஞ்சியை
இளம்
புன்னகையோடு தந்து
வாசல்வரை வந்து
வழியனுப்பி
வைத்த மனைவியை
காணாது கண்டு
கதிரறுக்க
களத்துமேடு போய்
வயல் வெளியில்
வரப்பு
வேலை முடித்து
கால் கடுக்க
மலையேறி
கல்லுடைத்து கொடுத்து
மாலைச் சூரியன்
மங்கும்
வேளையில்
விழியசையாது
வாசல் பார்த்தபடி
வஞ்சியவள் காத்திருக்க
கை நிறைந்த
கூலி
கண் குளிரசெய்ய
இரவு செய்த
சத்தியம்
இன்னல்
செய்தபோதும்
மதியிருந்து
மனிதன்
மதிகெட்டுப் போனான்
மனைவியென்ற
ஒன்றிருந்தும்
மக்கட்ச்செல்வம்
கூடயிருந்தும்
கணவனென்ற
கடமையை மறந்து
தந்தையென்ற
பொறுப்பை துறந்து
மதுபோதை மயக்கம்
மற்றவையை
மறக்கடிக்க
மானம் போனாலென்ன
மனைவி மக்கள்
எப்படியானாலென்ன
மானங்கெடுத்தும்
உடல்கெடுக்கும் மதுவை
மனங்கேட்டுத் துடிக்க
மனஞ்சொன்ன
சொல்லை
மறுக்காமல் தரவே
மதுக்கடையை
நோக்கி
மார்த்தட்டிச் சென்றான்..
[குறிப்பு. இந்த கவிதை சர்ஜா சீமான் 12 ஆம் ஆண்டுமலரில் வெளியாகியுள்ள என் கவிதை.
சீமானைப்பற்றிய ஒரு பதிவு விரைவில்]
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
:)))
பதிலளிநீக்குநான்தான் முதலாவதா?
பதிலளிநீக்குஅருமையான கவிதை மலிக்கா அக்கா.., வாழ்த்துக்கள் மலிக்கா அக்கா
பதிலளிநீக்கு/ mythees கூறியது...
பதிலளிநீக்குநான்தான் முதலாவதா//
பதிவுபோட்டு திரும்புவதற்க்குள் வந்த
மைதீஸ். [சாரி அதானே பேரு..]
தாங்களுக்கு நன்றிங்கோஓஓஓ
நீங்களே நீங்கதான் முதல்
கலக்குங்க கலக்குங்க
பதிலளிநீக்கு//இருந்த கஞ்சியை
பதிலளிநீக்குஇளம்
புன்னகையோடு தந்து
வாசல்வரை வந்து
வழியனுப்பி
வைத்த மனைவியை
காணாது கண்டு
கதிரறுக்க
களத்துமேடு போய் ///
அருமையான வரிகள் மலிக்கா..
கவிதையில் பாசமும் அன்பும் கலந்த உணர்வு தாலாட்டுகிறது.
வாழ்த்துகள் மலிக்கா..
குடி குடியை கெடுக்கும் என்பதை
பதிலளிநீக்குகவிதையா சொல்லிட்டீங்க,
நன்று.
ம்,ம், நடக்கட்டும் நடக்கட்டும்....
பதிலளிநீக்குமிக அருமையா சொன்னீங்க
பதிலளிநீக்குசீமான் பக்கம் போய் ரொம்ப நாள் ஆனதால் பார்க்க முடியல. வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஎவ்வளவுபெரிய விசயத்தை ஒரு சின்ன கவிதைவரிகளில் அடக்கிய விதம் அருமை
பதிலளிநீக்கு///மானம் ......... எப்படியானாலென்ன///
பதிலளிநீக்கு///மானங்கெடுத்தும்........ மனங்கேட்டுத் துடிக்க////
///மனஞ்சொன்ன........மறுக்காமல் தரவே////
////மதுக்கடையை ......மார்த்தட்டிச் சென்றான்..///
'ம' என்ற எழுத்தில் மேற்சொன்ன வரிகள் போல எதுகைமோனையுடன் நிறைய வரிகள்....
மது எனும் மாச்சர்யம்
மானுடத்தையே மாய்க்க வல்லது என்பதை...
ஓர் சிறுகதையை கவிதையாய்....
நல்ல ஓர் சமூக ஆதங்க,சமூக அக்கறையுள்ள கவிதை....
உணர்ச்சிகளுடன்... உணர்வுடன் கூடிய நல்ல கவிதை....
வாழ்த்துக்கள்....
நட்புடன்...
காஞ்சி முரளி.......
நல்ல கவிதை.
பதிலளிநீக்கு//மின்மினி கூறியது...
பதிலளிநீக்குஅருமையான கவிதை மலிக்கா அக்கா.., வாழ்த்துக்கள் மலிக்கா அக்கா//
வருகைக்கு வாழ்த்துக்கும் நன்றி மின்மினி..
//Jaleela கூறியது...
பதிலளிநீக்குகலக்குங்க கலக்குங்க//
கரண்டியக் கொண்டாங்கக்கா. சும்மாவே கலக்கவா ஹி ஹி ஹி
Starjan ( ஸ்டார்ஜன் ) கூறியது...
பதிலளிநீக்கு//இருந்த கஞ்சியை
இளம்
புன்னகையோடு தந்து
வாசல்வரை வந்து
வழியனுப்பி
வைத்த மனைவியை
காணாது கண்டு
கதிரறுக்க
களத்துமேடு போய் ///
அருமையான வரிகள் மலிக்கா..
கவிதையில் பாசமும் அன்பும் கலந்த உணர்வு தாலாட்டுகிறது.
வாழ்த்துகள் மலிக்கா//
பாசத்தோடும் அன்போடும் சொன்னாலும் சிலருக்கு புரியமாட்டேங்கிறதே ஸ்டார்ஜன். இவர்களைபோலுள்ளவர்களை என்ன செய்ய..
மிக்க மகிழ்ச்சி வருக்கைக்கும் வாழ்த்துக்கும்..
/saivakothuparotta கூறியது...
பதிலளிநீக்குகுடி குடியை கெடுக்கும் என்பதை
கவிதையா சொல்லிட்டீங்க,
நன்று//
சொம்மாபோய் சொன்னா குடிச்சிட்டு அடிக்கவந்துடுவாங்கன்னுதான் பரோட்டா.. நன்றிங்கோ..
//அஹமது இர்ஷாத் கூறியது...
பதிலளிநீக்கும்,ம், நடக்கட்டும் நடக்கட்டும்//
என்ன இர்ஷாத் எது நடக்கட்டும் கவிதையா? குடியா? சும்மாதான் கேட்டேன்
//அண்ணாமலையான் கூறியது...
பதிலளிநீக்குமிக அருமையா சொன்னீங்க//
மகிழ்ச்சி அண்ணாமலையாரே. மிக்க நன்றி..
/ஜெய்லானி கூறியது...
பதிலளிநீக்குசீமான் பக்கம் போய் ரொம்ப நாள் ஆனதால் பார்க்க முடியல. வாழ்த்துக்கள்//
ஓ அப்படியா! இது எனக்கு புதிதுதான். 12ஆண்டுவிழாவுக்கு வெள்ளியன்று வந்தீகளா ஜெய்லானி.
அந்த புக்கில் இன்னும் கவிதைகளும் கதையும் வந்திருக்கு முடிந்தால் பாருங்கள்..
வாழ்த்துக்கு நன்றி..
//அபுஅஃப்ஸர் கூறியது...
பதிலளிநீக்குஎவ்வளவுபெரிய விசயத்தை ஒரு சின்ன கவிதைவரிகளில் அடக்கிய விதம் அருமை//
எங்கே இத்தனைநாள் காணோம் அபுவை.
மகிழ்ச்சிகலந்த நன்றி..
Kanchi Murali கூறியது...
பதிலளிநீக்கு///மானம் ......... எப்படியானாலென்ன///
///மானங்கெடுத்தும்........ மனங்கேட்டுத் துடிக்க////
///மனஞ்சொன்ன........மறுக்காமல் தரவே////
////மதுக்கடையை ......மார்த்தட்டிச் சென்றான்..///
'ம' என்ற எழுத்தில் மேற்சொன்ன வரிகள் போல எதுகைமோனையுடன் நிறைய வரிகள்....
மது எனும் மாச்சர்யம்
மானுடத்தையே மாய்க்க வல்லது என்பதை...
ஓர் சிறுகதையை கவிதையாய்....
நல்ல ஓர் சமூக ஆதங்க,சமூக அக்கறையுள்ள கவிதை....
உணர்ச்சிகளுடன்... உணர்வுடன் கூடிய நல்ல கவிதை....
வாழ்த்துக்கள்....
நட்புடன்...
காஞ்சி முரளி.......//
என்கவிதைகளுக்கு ஒவ்வொருமுறையும் பிரித்து பிரித்து கருத்துக்கள் சொல்லும் விதம் அருமை. இதைபோன்ற ஊக்கம் மனிதர்களுக்கு நிச்சயம் தேவை.
பார்த்தோம் படித்தோம் என்றில்லாமல் அதற்குண்டான நல்லது கெட்டதுகளை பகிரும்போது நம்முடைய குறைநிறைகள் தெரியும். மனமும் சந்தோஷம் அடையும்..
மிகுந்த மகிழ்ச்சி மிக்க நன்றி
காஞ்சி முரளி
/S Maharajan கூறியது...
பதிலளிநீக்குநல்ல கவிதை.
//
மிக்க நன்றி மகராஜன்..
//என்ன இர்ஷாத் எது நடக்கட்டும் கவிதையா? குடியா? சும்மாதான் கேட்டேன்//
பதிலளிநீக்குகவிதையேதான்..........
அழுத்தமாக சொல்லி இருக்கீங்க . அருமையான சிந்தனை !
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் .
கவிதை ரொம்ப நல்லா இருக்கு மலிக்கா
பதிலளிநீக்குவயல் வெளியில்
பதிலளிநீக்குவரப்பு
வேலை முடித்து
கால் கடுக்க
மலையேறி
கல்லுடைத்து கொடுத்து
மாலைச் சூரியன்
மங்கும்
வேளையில்
விழியசையாது
வாசல் பார்த்தபடி
வஞ்சியவள் காத்திருக்க
கை நிறைந்த
கூலி
கண் குளிரசெய்ய
இரவு செய்த
சத்தியம்
இன்னல்
செய்தபோதும்
மதியிருந்து
மனிதன்
மதிகெட்டுப் போனான்
very very nice this poem.....
supper......supper.........
வசனமாய் சொல்வதைவிட கவிதையாய்
பதிலளிநீக்குபாடுவதில் கருத்திற்கு வலிமை கிடைக்கிறது.
குடி கெடுக்கும் குடி!
மதியிருந்து
பதிலளிநீக்குமனிதன்
மதிகெட்டுப் போனான்
உங்கள் ஆதங்கம்
நெஞ்சை நெருடியது.
அருமையான வரிகள் மலிக்கா..
பதிலளிநீக்குகவிதையில் பாசமும் அன்பும் கலந்த உணர்வு தாலாட்டுகிறது.
வாழ்த்துகள் மலிக்கா..
மிக அருமையாக சொல்லியிருக்கிறீர்கள். வலைச்சரத்தில் எழுதுகிறேன். நேரம் கிடைத்தால் பார்க்கவும்.
பதிலளிநீக்கு