நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

முகமூடி

அன்பென்ற அருமருந்து
அகிலமெங்கும்
அள்ளித் தெளிக்கப்பட்டிருந்தும்
அதையள்ளி
அருந்த மறந்து

உள்ளொன்று வைத்து
புறமொன்று பேசுமினம்
பணக்காரனென்றால்
ஒருமுகம்
பாமரனென்றால்
ஒருமுகமென
பிரித்துப் பார்க்கும்


முகமூடி
மனிதகுலத்தையெண்ணி
மனத்துக்குள்
மிரள்கிறேன்
மனிதமிதுவோவென
மலைக்கிறேன்


தேடித் தேடிப்பார்க்கிறேன்
தெளிவான முகங்களையும்
தெளிவான மனங்களையும்
அதிலெது
தெளிவென்றுதான்
இன்றுவரை புரியவில்லை
சிலநேரம்
என்னையும் விளங்கவில்லை

அத்தனை
முகங்களுக்குள்ளும்
மனங்களுக்குள்ளும்

"அன்பும் உண்டு.
ஆணவமும் உண்டு.

"ஆதங்கமும் உண்டு
ஆன்மீகமும் உண்டு.

"ஆற்றாமையும் உண்டு
ஆளுமையும் உண்டு.

"அதிகாரமும் உண்டு
அனுசரணையும் உண்டு.

’ஆதலால்’

எந்த மனிதருக்குள்
எது இருந்தபோதிலும்
பொய்முகங்கள் புணையாமல்
பெயருக்காக பழகாமல்
இருதயத்தின் கூட்டுக்குள்
எள்ளளவும்
பிறருக்கின்னல்தராமல்

மனம் பொருந்திய அன்போடு
மாசில்லா நற்குணத்தோடு
மனிதகுலத்தோடு
முகமூடியணியாத
மனிதர்களாய்
வாழ்ந்திருப்போம்..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

22 கருத்துகள்:

  1. ...........உங்கள் ஆதங்கம் கவிதையில் புரிகிறது.

    பதிலளிநீக்கு
  2. தங்கள் பதிவுக்கு நன்றிகள்..

    East Or West Sachin is the Best. It was an amazing performance by Sachin. Congrats to Sachin Dear Little Master.

    Have a look at here too..

    Sachin Tendulkar's Rare Photos, Sachin's Kids pictures, Videos

    பதிலளிநீக்கு
  3. முகமூடி
    மனிதகுலத்தையெண்ணி
    மனத்துக்குள்
    மிரழ்கிறேன்
    "மனிதமிதுவோவென****
    மலைக்கிறேன்".///
    இந்த வரிகளில்
    கோடிட்ட (****)
    'வார்த்தை'
    வடித்தமைக்காக
    பாராட்டுக்கள்.........

    அதோடு.....

    "தேடித் தேடிப்பார்க்கிறேன்
    தெளிவான முகங்களையும்
    தெளிவான மனங்களையும்
    அதிலெது
    தெளிவென்றுதான்
    இன்றுவரை புரியவில்லை
    சிலநேரம்
    என்னையும் விளங்கவில்லை..........////"
    என் கேள்விகளும் இதுதான்......!
    'விடையில்லா வினாக்கள்'...?

    "அத்தனை
    முகங்களுக்குள்ளும்
    மனங்களுக்குள்ளும்
    "அன்பும் உண்டு.
    ஆணவமும் உண்டு.
    "ஆதங்கமும் உண்டு
    ஆன்மீகமும் உண்டு.
    "ஆற்றாமையும் உண்டு
    ஆளுமையும் உண்டு.
    "அதிகாரமும் உண்டு
    அனுசரணையும் உண்டு."......///
    மேற்சொன்ன வரிகள்
    உண்மையென்று சொல்லும்....
    அவரவர் மனசாட்சியே...........

    ’ஆதலால்’
    எந்த மனிதருக்குள்
    எது இருந்தபோதிலும்
    பொய்முகங்கள் புணையாமல்
    பெயருக்காக பழகாமல்
    இருதயத்தின் கூட்டுக்குள்
    எள்ளளவும்
    பிறருக்கின்னல்தராமல்
    மனம் பொருந்திய அன்போடு
    மாசில்லா நற்குணத்தோடு
    மனிதகுலத்தோடு
    முகமூடியணியாத
    மனிதர்களாய்
    வாழ்ந்திருப்போம்..//

    மனிதம்" ஓங்க....!
    "மனிதம்" "வளர்ந்திட....!
    தங்கள்
    இக்கவி
    உதவும்.......

    பாராட்டுக்களில்
    எப்பாராட்டு
    உயர்ந்ததோ.......

    அத்தகு பாராட்டுக்களுடன்
    வாழ்த்துக்கள்..........

    நட்புடன்.....
    காஞ்சி முரளி.........

    பதிலளிநீக்கு
  4. புலம்பி “நாதன்”28 பிப்ரவரி, 2010 அன்று AM 10:11

    முகமூடியணிந்தால் தானே வாழமுடிகிறது.

    இல்லையென்றால் முகமூடியனிந்தவர்களோடு வாழ்க்கையாகிரது.

    வாழ்வே மாயம்தான்

    பதிலளிநீக்கு
  5. அன்புடன் மலிக்காவிற்கு,

    பெண் மனது ஆழம் என்றார்கள் சும்மா சொன்னார்கள்... ஆழ்கடலில் தானே முத்திற்கும்...

    அதுபோல் உங்கள் மனதில் உள்ள நல்ல கருத்துக்கள் இங்கே கவிதையாய்...

    பெண்ணின் மனதை புரிந்துகொள்ள முடியாது என்பது அந்த காலம்...புரிந்து கொள்ள தெரியாததுதான் அதன் காரணம்.

    வரிகள் நீண்டு கொண்டே... மனிதனின் மனதிற்குள் புதைந்திருக்கும் எண்ணங்களை போல...

    பதிலளிநீக்கு
  6. "அத்தனை
    முகங்களுக்குள்ளும்
    மனங்களுக்குள்ளும்

    "அன்பும் உண்டு.
    ஆணவமும் உண்டு.

    "ஆதங்கமும் உண்டு
    ஆன்மீகமும் உண்டு.

    "ஆற்றாமையும் உண்டு
    ஆளுமையும் உண்டு.

    "அதிகாரமும் உண்டு
    அனுசரணையும் உண்டு.

    ’ஆதலால்’

    எந்த மனிதருக்குள்
    எது இருந்தபோதிலும்
    பொய்முகங்கள் புணையாமல்
    பெயருக்காக பழகாமல்
    இருதயத்தின் கூட்டுக்குள்
    எள்ளளவும்
    பிறருக்கின்னல்தராமல்"


    அற்புதமான வரிகள்
    வாழ்த்துக்கள்


    அற்புதமான வரிகள்
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  7. கவிதையிலேயே ஒரு கோவம்.. நல்லாயிருக்கு

    பதிலளிநீக்கு
  8. மிக மிக அருமை. அழகான கருத்துள்ள கவிதை

    பதிலளிநீக்கு
  9. கவிதைல வெளிப்பட்டு இருக்கிற கருத்துகளும் கவிதை முழுவதும் மெலிதாக ஓடும் ரைமிங்கும் மிக அழகாக இருக்கிறது சகோதரி...வாழ்த்துக்கள் தொடருங்கள்.....

    பதிலளிநீக்கு
  10. அழுத்தமாக சொல்லி இருக்கீங்க . அற்புதமான சிந்தனை .

    பதிலளிநீக்கு
  11. //மனம் பொருந்திய அன்போடு
    மாசில்லா நற்குணத்தோடு
    மனிதகுலத்தோடு
    முகமூடியணியாத
    மனிதர்களாய்
    வாழ்ந்திருப்போம்..//

    ம்ம்...இருப்போம் :)

    அருமையான கவிதையில் ஆதங்கம் வெளிப்பட்டிருக்கிறது.

    பதிலளிநீக்கு
  12. திருச்சி சையது28 பிப்ரவரி, 2010 அன்று PM 3:47

    பொய்முகங்கள் புனையாமல்
    பெயருக்காக பழகாமல்
    இருதயத்தின் கூட்டுக்குள்
    எள்ளளவும்
    பிறருக்கின்னல்தராமல்
    மனம் பொருந்திய அன்போடு
    மாசில்லா நற்குணத்தோடு
    மனிதகுலத்தோடு
    முகமூடியணியாத
    மனிதர்களாய்
    வாழ்ந்திருப்போம்..

    - மனசோடு பேசும் கவிதை தங்கச்சி!

    திருச்சி சையது.

    பதிலளிநீக்கு
  13. எப்பவும் போலவே கவிதையில் ஆதங்கம் இயலாமை எல்லாம் கலந்து கட்டிக் கிடக்கு.மல்லிக்கா அசத்துங்கோ!

    பதிலளிநீக்கு
  14. அனைவருக்கும் எப்போதும் ஏதாவதொரு முகமூடி தேவைபடத்தான் செய்கிறது.

    நல்ல பதிவு

    பதிலளிநீக்கு
  15. முகமுடி அருமை. நன்றாக வ்ந்துள்ளது. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  16. மனம் பொருந்திய அன்போடு
    மாசில்லா நற்குணத்தோடு
    மனிதகுலத்தோடு
    முகமூடியணியாத
    மனிதர்களாய்
    வாழ்ந்திருப்போம்..
    \///


    நல்லாயிருக்கு

    பதிலளிநீக்கு
  17. அட்டகாசம், நல்ல கருத்து, வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  18. சரியா சொல்லியிருக்கிறீங்க.....
    பிரமாதமுங்க........
    ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு.

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது