வாங்க வந்து தீர்ப்பச்சொல்லுங்க
மாப்புள்ள உடைச்சா அது கைதவறி
பொண்சாதி உடைச்சா அது கொழுப்புளடி!
[அச்சோ பழமொழிகூட வருதே. திகிரேட் டி” மலிக்கா]
அப்படின்னு சொல்லுவாங்க அதேபோல்.
”சரி சரி மேட்டர் என்னான்னு சொல்லு சீக்கிரம் அப்படித்தானே கேக்குறீங்க!
”என்னயிருந்தாலும் எப்படி சொல்லுரரரரரது”.
/ஏன் இந்த இழுவ
”இல்ல இது ஆம்புளைங்களைப்பத்தி இருக்கே அதேன் பயந்து வருது.
அவுகள குத்தம் சொல்லுறமோன்னு ஆளாளுக்கு அனானியா மாறிடுவாங்களோன்னு.
/ச்சேச்சே அப்படியெல்லாம் செய்யமாட்டாங்கா ரொம்பபப நல்லவங்கப்பா”
/சொல்லு சொல்லு மேட்டர் என்ன
”அதுவா? அது இதுதான் படிங்க.’
பையனுக்கு பெண்பார்க்கும்போது. [பணம் நகைக்கு அப்பாற்பட்டு]
நல்லகுடும்பமா?
பெண் நல்லவளா?
நல்ல குணமுடையவளா?
கொஞ்சமாவது அழகுள்ளவளா?
[இப்பவெல்லாம் வெள்ளவெள்ளேர்னுதான் பொண்ணுவேணுமாம்]
அனுசரனையாக நடப்பவளா?
காதல் கீதல் எதிலும் மாட்டாதவளா?
குடும்பத்துக்கு ஏற்றதுபோல் நடப்பாளா?
கட்டுக்கோப்புடன் இருப்பாளா?
எனசகலமும் நோண்டி நொங்கெடுத்து தெரிந்துகொண்டு அதில் சிறுகுறையிருந்துட்டா. [அட இதுதானே. சின்னப்புள்ளையில யார்தான் தப்புபண்ணல இதெல்லாம் ஒரு குத்தமா. அப்படியெல்லாம் எதிர்பார்க்ககூடாது ஓகே] இது நமக்கு சரிவராது சரிவராது வேறுயிடம் பார்ப்போம் என சொல்லிவிடும்போது,,,,,,,,,,
பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கும்போது.
பையன் நல்லவனா?
.குணமுடையவனா?
.நல்லமனமுடையவனா?
.வேலையில் இருக்கிறானா?
சம்பாதிக்ககூடியவனா?
குடும்பத்திற்கு ஏற்றவனா?
கருப்பானாலும் [யார்ப்பா அது கருப்ப பத்திமட்டும் ஸ்ஸ்ஸ் மூச்சிவிடக்கூடாது]
எந்த கெட்டபழக்கவழக்கங்களும் இல்லாமலிருக்கா?
என ஒன்றுவிடாமல் ஆராயோ ஆராயின்னு ஆராயப்படுகிறது, அப்போது சின்னவயதில் சிலபல தவறுகள்தான். அது திருமணத்திற்குபின் எல்லாம் சரியாகிவிடும்[சரியாகலைன்னா அதுவிதிவிட்ட வழி அதெயெல்லாம் பத்திப்பேசக்கூடாது] என சொல்கிறார்களே!
அதையும் ஏற்றுக்கொண்டு திருமணம் முடிக்கிறார்களே!
அது சரியா?
இதே சிறுதவறை பெண் சிறுவயதில் அறியாமல் செய்திருந்தால் ஏற்றுக்கொள்வார்களா?
தவறெனும் பட்சத்தில் அது ஆண்செய்திருந்தாலும் பெண்செய்திருந்தாலும் ஒன்றில்லையா?
இல்லை விதிவிலக்கிருக்கா?
திருமணம் ஆனவரானாலும் நோ பழாபழம். ஆகலைனாலும்
நோ பழாபழம். நியாயத்த சொல்லுங்க. இது சும்மா பேச்சிக்காக மட்டும்சொல்லிட்டு போறதில்லைங்க.அல்லாரோட
வாழ்க்கைக்காவும்தான்.
கொஞ்சம் விபரமாக விளக்குனீங்கன்னா இந்த அறியாத பச்சபுள்ளயும்
அல்லாரோடவும் சேந்து அறிஞ்சிகுவ்வேன். [நாட்டாமேங்களா தீர்ப்ப சொல்லுங்க] அதான் மேட்டரு வேரஒன்னுமில்ல நிஜமா வெளிக்குத்து, உள்குத்தெல்லாம் ஒன்னுமில்லங்கங்கோகோ கோ........
[டிஸ்கி: மலிக்கா வித்தியாசமா யோசிக்கிறாங்களாமா.. ஹி ஹி ஹி. ஏதாவது வித்தியாசம் தெரியுதுங்களா?]
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
எது எப்படியோ நீங்க நல்ல மாமியாராக இருந்து ஒரு நல்ல மருமகளை தேடி எடுத்துடுவீங்கன்னு துவா செய்றேன்.
பதிலளிநீக்குசெல்லாது செல்லாது ஜமால்காக்கா.
பதிலளிநீக்குஇதற்கு தீப்பச்சொல்லுங்க.
ஓகோ இதுதேன் கழுவுறமீனுல நழுவுறமீனோ...
//கொஞ்சம் விபரமாக விளக்குனீங்கன்னா இந்த அறியாத பச்சபுள்ளயும்
பதிலளிநீக்குஅல்லாரோடவும் சேந்து அறிஞ்சிகுவ்வேன். [நாட்டாமேங்களா தீர்ப்ப சொல்லுங்க] //
நானும் அறியாத பச்சபுள்ளதான்.. யாராவது நாட்டாமை சொம்போட வாராங்களான்னு பாப்போம்....
மல்லிக்கா, நீங்க ரொம்ப பாவம். நீங்க 1990களில் இருந்து இன்னமும் வெளிவரவே இல்லை என்று நல்லாத் தெரியுது. முந்திய நாள் வரைக்கும் தீம் பார்க்கு, தியேட்டர் சுத்தற பெண்ணுக கல்யாணத்துக்கு அப்புறம் எனக்கு ஹாண்டுவொர்க், மார்டன் ஆர்ட் இது எல்லாம் தான் பிடிக்கும்.இதுக்குதான் டையம் ஸ்பெண்டு பண்ணுவேன் சொல்லி பீலா விடுற காலம் இது. இதுல போயி எங்க நீங்க சொல்ற எல்லாம் பார்க்குறது.
பதிலளிநீக்குஇப்ப மார்டன் பெண்ணுப் பாக்கிறப்ப பேசிக்கிற வசனம் என்ன தெரியுமா? நானும் ஒன்னும் யோக்கியம் இல்லை, நீயும் ஒன்னும் யோக்கியம் இல்லை, கல்யாணத்திற்க்கு அப்புறமாது ஒழுங்கா இருந்தா அது போதும் என்ற நிலைமை. இதுதான் யதார்த்தம். இது போயி நீங்க இந்தக் கருத்தைச் சொல்ல இவ்வளவு தயக்கம் ஏன்? நன்றி மலிக்கா.
////“இதே சிறுதவறை பெண் சிறுவயதில் அறியாமல் செய்திருந்தால் ஏற்றுக்கொள்வார்களா?
பதிலளிநீக்குதவறெனும் பட்சத்தில் அது ஆண்செய்திருந்தாலும் பெண்செய்திருந்தாலும் ஒன்றில்லையா?
இல்லை விதிவிலக்கிருக்கா?"///
இக்கேள்விக்கு எனது பதில்......
"ஆண் பெண் பிரச்சனைகள்
அனைத்தையும் பொதுவில் வைப்போம்" என்ற
வைர வரிகளை ஏற்றுக் கொள்கிறவன் நான்...
இதை சொல்வது எளிது....
நடைமுறையில் செயல்படுத்துவது கடினம்......
ஆனால்...... நான்
இதனை நடைமுறைபடுத்த முயன்று
வெற்றியும் பெற்றிருக்கிறேன்......
குடும்பம்
பிரச்சனைகளின்றி....
அமைதியுடன்.....
மகிழ்ச்சியுடன்....
செல்ல
இப்பெருங்குணம் இருந்தால்
அக்குடும்பம் 'இனிய குடும்பம்'
என்பது என் எண்ணம்........
சிந்திக்கச் செய்யும்
நல்உரையாடல்........
வாழ்த்துக்கள்....
நட்புடன்....
காஞ்சி முரளி...........
///"திருமணம் ஆனவரானாலும் நோ பழாபழம். ஆகலைனாலும்
பதிலளிநீக்குநோ பழாபழம். நியாயத்த சொல்லுங்க. இது சும்மா பேச்சிக்காக மட்டும்சொல்லிட்டு போறதில்லைங்க.அல்லாரோட
வாழ்க்கைக்காவும்தான்"/////.
இதில்...
நோ பழாபழம்
(என்ன வார்த்தை என்று விளங்கவில்லை)
நோ பிராப்ளமா.......... ( சரியா....!)
விளக்கவும்....
நட்புடன்...
காஞ்சி முரளி.........
அதுதான் பெண்களோட தலைவிதின்னு சொல்லுவாங்களோக்கா
பதிலளிநீக்குஅவங்க தப்புபண்ணலாம் நம தப்பஏபண்ணமா தண்டனை அனுமவிக்கனும்..
அபி..
கண்ணா.. கூறியது...
பதிலளிநீக்கு//கொஞ்சம் விபரமாக விளக்குனீங்கன்னா இந்த அறியாத பச்சபுள்ளயும்
அல்லாரோடவும் சேந்து அறிஞ்சிகுவ்வேன். [நாட்டாமேங்களா தீர்ப்ப சொல்லுங்க] //
நானும் அறியாத பச்சபுள்ளதான்.. யாராவது நாட்டாமை சொம்போட வாராங்களான்னு பாப்போம்/
அப்படியெல்லாம் சொல்லி தப்பிக்கமுடியாதுங்கோ கண்ணா. பக்கத்துல கடன்வாங்கியாவது சொல்லனும் சரியா [பக்கததுலன்னா உங்க அம்மனி நாட்டாமக்கிட்டதான்]
பித்தனின் வாக்கு கூறியது...
பதிலளிநீக்குமல்லிக்கா, நீங்க ரொம்ப பாவம். நீங்க 1990களில் இருந்து இன்னமும் வெளிவரவே இல்லை என்று நல்லாத் தெரியுது. முந்திய நாள் வரைக்கும் தீம் பார்க்கு, தியேட்டர் சுத்தற பெண்ணுக கல்யாணத்துக்கு அப்புறம் எனக்கு ஹாண்டுவொர்க், மார்டன் ஆர்ட் இது எல்லாம் தான் பிடிக்கும்.இதுக்குதான் டையம் ஸ்பெண்டு பண்ணுவேன் சொல்லி பீலா விடுற காலம் இது. இதுல போயி எங்க நீங்க சொல்ற எல்லாம் பார்க்குறது.//
இப்படியெல்லாம் வேற நடக்குதா அம்மாடியோ. நாம கிராமத்துக்குள்ளே
கிடக்கோமா அதேன் விளங்கல..
இப்ப மார்டன் பெண்ணுப் பாக்கிறப்ப பேசிக்கிற வசனம் என்ன தெரியுமா? நானும் ஒன்னும் யோக்கியம் இல்லை, நீயும் ஒன்னும் யோக்கியம் இல்லை, கல்யாணத்திற்க்கு அப்புறமாது ஒழுங்கா இருந்தா அது போதும் என்ற நிலைமை. இதுதான் யதார்த்தம். இது போயி நீங்க இந்தக் கருத்தைச் சொல்ல இவ்வளவு தயக்கம் ஏன்? நன்றி மலிக்கா.//
ஆகா கல்யாணத்துகப்புறம் நல்லபடியாயிருந்தா சரிங்குறீங்க அப்படிதானே பித்தனின்வாக்கு.
[அதுக்குதான் ஐய்யா இன்னும் கலயாணமே கட்டிக்கலையா இப்பபுரிஞ்சிபோச்சி புரிஞ்சிபோசி ஹா ஹா தமாஸ் தமாஸுக்குத்தேன்..]
Kanchi Murali கூறியது...
பதிலளிநீக்கு////“இதே சிறுதவறை பெண் சிறுவயதில் அறியாமல் செய்திருந்தால் ஏற்றுக்கொள்வார்களா?
தவறெனும் பட்சத்தில் அது ஆண்செய்திருந்தாலும் பெண்செய்திருந்தாலும் ஒன்றில்லையா?
இல்லை விதிவிலக்கிருக்கா?"///
இக்கேள்விக்கு எனது பதில்......
"ஆண் பெண் பிரச்சனைகள்
அனைத்தையும் பொதுவில் வைப்போம்" என்ற
வைர வரிகளை ஏற்றுக் கொள்கிறவன் நான்...//
மிக நல்லமனம்.
/இதை சொல்வது எளிது....
நடைமுறையில் செயல்படுத்துவது கடினம்......
ஆனால்...... நான்
இதனை நடைமுறைபடுத்த முயன்று
வெற்றியும் பெற்றிருக்கிறேன்......//
சபாஷ் பலமான கைதட்டல்.
//குடும்பம்
பிரச்சனைகளின்றி....
அமைதியுடன்.....
மகிழ்ச்சியுடன்....
செல்ல
இப்பெருங்குணம் இருந்தால்
அக்குடும்பம் 'இனிய குடும்பம்'
என்பது என் எண்ணம்......../
மிகச்சிறந்த குணம் வாழ்க வாழ்க.
/சிந்திக்கச் செய்யும்
நல்உரையாடல்......../
வாழ்த்துக்கள்....
மிக்க நன்றி மிகுந்த மகிழ்ச்சி
//நட்புடன்....
காஞ்சி முரளி...........//
நட்புடன் மலிக்கா
இதில்...
பதிலளிநீக்குநோ பழாபழம்
(என்ன வார்த்தை என்று விளங்கவில்லை)
நோ பிராப்ளமா.......... ( சரியா....!)
விளக்கவும்....
நட்புடன்...
காஞ்சி முரளி.........//
நோ பிராப்ளம் தான். அதை சும்மா விளையாட்டுக்கு அப்படி எழுதினேன்..
நன்றி முரளி..
[டிஸ்கி: மலிக்கா வித்தியாசமா யோசிக்கிறாங்களாமா.. ஹி ஹி ஹி. ஏதாவது வித்தியாசம் தெரியுதுங்களா?]
பதிலளிநீக்குஅன்புடன் மலிக்கா நல்லா வித்தியாசம் தெரியுது. தொடர்ந்து ippadi வித்தியாசமா யோசிங்க.
திருமணம் என்பது முக்கியமா இரு மணங்கள் சம்பந்தப்பட்டது. ஆண் ,பெண் பெரும்பாலும் ஒத்துக்கொள்வார்கள் . ஆனால் குடும்பத்தவர்கள் ஒத்துக்கொள்ள் மாட்டார்கள். பிரச்சனையயே அவர்கள் தானே. உதா: காதல் திருமணம். இதில் டவுரி , கருப்பா ,சிவப்பா , பணக்காரன் , ஏழை ,படித்தவன் ,படிக்காதவன் , நல்லவன் ,ரவுடி எதுவும் இல்லையே!!( விட்டிங்க நா ஒரு பதிவே போட்டுடுவேன் ).
பதிலளிநீக்குநாட்டாண்மை தீர்ப்பு:::தவறெனும் பட்சத்தில் அது ஆண்செய்திருந்தாலும் பெண்செய்திருந்தாலும் ஒன்றுதான். நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே
// "நீங்க ரொம்ப பாவம். நீங்க 1990களில் இருந்து இன்னமும் வெளிவரவே இல்லை என்று நல்லாத் தெரியுது. முந்திய நாள் வரைக்கும் தீம் பார்க்கு, தியேட்டர் சுத்தற பெண்ணுக கல்யாணத்துக்கு அப்புறம் எனக்கு ஹாண்டுவொர்க், மார்டன் ஆர்ட் இது எல்லாம் தான் பிடிக்கும்.இதுக்குதான் டையம் ஸ்பெண்டு பண்ணுவேன் சொல்லி பீலா விடுற காலம் இது. இதுல போயி எங்க நீங்க சொல்ற எல்லாம் பார்க்குறது.//
பதிலளிநீக்கு//"இப்ப மார்டன் பெண்ணுப் பாக்கிறப்ப பேசிக்கிற வசனம் என்ன தெரியுமா? நானும் ஒன்னும் யோக்கியம் இல்லை, நீயும் ஒன்னும் யோக்கியம் இல்லை, கல்யாணத்திற்க்கு அப்புறமாது ஒழுங்கா இருந்தா அது போதும் என்ற நிலைமை. இதுதான் யதார்த்தம்"//
இந்த பித்தனின் வாக்கு......!
முற்றிலும் உண்மை.......
உண்மை கசக்கத்தான் செய்யும் மலிக்கா..........
கஷ்டமாய் இருந்தாலும்
எதார்த்தத்தை
ஏற்றுகொள்ளத்தான் வேண்டும் மலிக்கா..........
- காஞ்சி முரளி........
இது பெரியவங்க மேட்டர், ரைட்டு வரட்டா......... :))
பதிலளிநீக்குஆனா இப்போ இருக்குற நிலைமை அப்படியா?. இல்லையே.!
பதிலளிநீக்குகல்யாணத்துக்கு முன் எப்படி இருந்தாலும் பரவாயில்லை என்கின்ற மனபக்குவம் ஆண்/ பெண் இருபாலரிடமும் இப்ப நெறையவே இருக்கு.
ஆஹா இங்கன ஒரு பச்ச கொயந்த பாவம் தனியா தவித்தாய பட்டுகிட்டு இருக்கு ,
பதிலளிநீக்குஇதுக்கு தான் தனியா உட்காந்து டிவி பாக்க கூடாதுங்கிறது , சீரியல் பாத்து பாத்து ஏதோ காத்து கருப்பு அடிச்சிருச்சு போல இருக்கு , இதுக்கு வாரா வாராம் வெள்ளி கிழமை நம்ம சத்யம் தியேட்டர் வாசல்ல நின்னு பிட்பாகட் அடிச்சு , நம்ம "அசல்:" படத்த நாலு வாரம் பாத்திகனா எல்லாம் சரியாய் போய்டும்
பெண்களுக்கு இயல்பாகவே ஜாக்கிரதை உணர்வு ஜாஸ்தி; அதனால் இலகுவில் தவறு செய்யமாட்டார்கள் என்று நம்பியதால் வந்த வினையாக இருக்கலாம்.
பதிலளிநீக்குஅல்லது ஆம்பிளை சகதி கண்ட இடம் மிதித்து, ஓடை கண்ட இடம் கழுவிக்கொள்வான் என்ற ஆணாதிக்கப் போக்கினால் வந்திருக்கலாம்.
எதுவாகிலும், நிலைமை சிறிது சிறிதாக மாறி வருகிறது.
வெஏறென்ன சொல்ல? எல்லாம் ஆணாதிக்கம் தான்...
பதிலளிநீக்குஅன்புடன் மலிக்காவிற்கு,
பதிலளிநீக்குநான் எல்லா பெண்களையும் குறை கூறவோ அல்ல எல்லா ஆண்களையும் மிகையாகவோ கூற விரும்பவில்லை.
ஆனால் ஆணுக்கு பெண் நிகரென்று எத்தனையோ தவறான சில செயல்களில் பெண்கள் கால் வைக்கின்றார்கள்.
இது கல்வி வளர்ச்சியின் பாதிப்போ என்றால் இருக்க முடியாது முற்றிலும்.ஆனால் செல்ல செழிப்பின் வளர்ச்சி என்று கூறலாம்.
ஒரு சில பெண்கள் செய்யும் தவறு பல பெண்களின் வாழ்கையை பாதிக்கின்றது.
இப்படியெல்லாம் வாழ்ந்தால் நன்றாக் வாழ்கையை அமைத்துக்கொள்ளலாம் என்ற நிலைமை அகன்று எப்படியும் வாழலாம் என்று ஒரு சிலரும். இப்படி நாமும் வாழ்ந்தால் என்ன சீரழியும் ஒரு சிலராலும் பல பெண்கள் தங்களின் வாழ்கையை இழக்கின்றனர். அதுபோன்றவர்களை உதா(ரணமாய்) எடுத்துக்கொண்டு.
பித்தன் கூறி இருப்பது போல் இன்று சமூக சூழ்நிலை எவ்வளவோ மாறியுள்ளது. ஆனால் நான் உங்களை 1990ல் இருந்து வெளிவரவில்லை கூறமாட்டேன்.
இவன்,
தஞ்சை.வாசன்.
/அபிநயாச்செல்வி
பதிலளிநீக்குஅதுதான் பெண்களோட தலைவிதின்னு சொல்லுவாங்களோக்கா
அவங்க தப்புபண்ணலாம் நம தப்பஏபண்ணமா தண்டனை அனுமவிக்கனும்..
அபி./
என்னம்மா செய்யிரது சிலநேரம் அப்படியும் ஆகிப்போகிறது, விதியின்மேல் பழிபோட்டு வேட்டையாடுவது வாடிக்கையாகிவிட்டது.
தவறு செய்தால் தண்டையுண்டு என்பது தெரிந்தும் தவறுசெய்பவர்களை என்னசெய்வது..
/Chitra கூறியது...
பதிலளிநீக்கு[டிஸ்கி: மலிக்கா வித்தியாசமா யோசிக்கிறாங்களாமா.. ஹி ஹி ஹி. ஏதாவது வித்தியாசம் தெரியுதுங்களா?]
அன்புடன் மலிக்கா நல்லா வித்தியாசம் தெரியுது. தொடர்ந்து ippadi வித்தியாசமா யோசிங்க/
நிஜமாவா சித்ராமேடம், அப்ப ஓகே இனி வித்தியசமா சிந்திச்சிடவேண்டியதுதான் மிக்க நன்றி..
ஜெய்லானி கூறியது...
பதிலளிநீக்குதிருமணம் என்பது முக்கியமா இரு மணங்கள் சம்பந்தப்பட்டது. ஆண் ,பெண் பெரும்பாலும் ஒத்துக்கொள்வார்கள் . ஆனால் குடும்பத்தவர்கள் ஒத்துக்கொள்ள் மாட்டார்கள். பிரச்சனையயே அவர்கள் தானே. உதா: காதல் திருமணம். இதில் டவுரி , கருப்பா ,சிவப்பா , பணக்காரன் , ஏழை ,படித்தவன் ,படிக்காதவன் , நல்லவன் ,ரவுடி எதுவும் இல்லையே!!( விட்டிங்க நா ஒரு பதிவே போட்டுடுவேன் ).//
ஆகா நல்லதொரு விளக்கம் இத இததான் எதிர்பார்கிறேன். ஆனாலும் காதல் பலநேரத்தில் காலைவாரிவிடுவது தெரியாதா ஜெய்லானி.ஒன்னு தெரியுமா காதல் திருமணங்கள் தான் நிறைய டைவர்ஸ்சாகுதாம்..
/நாட்டாண்மை தீர்ப்பு:::தவறெனும் பட்சத்தில் அது ஆண்செய்திருந்தாலும் பெண்செய்திருந்தாலும் ஒன்றுதான். நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே//
நாட்டாமா இது ரொம்ப சரி. நெற்றிக்கண்திறந்து சொல்லிட்டீங்க சூப்பர்..
/இந்த பித்தனின் வாக்கு......!
பதிலளிநீக்குமுற்றிலும் உண்மை.......
உண்மை கசக்கத்தான் செய்யும் மலிக்கா..........
கஷ்டமாய் இருந்தாலும்
எதார்த்தத்தை
ஏற்றுகொள்ளத்தான் வேண்டும் மலிக்கா..........
- காஞ்சி முரளி......../
உண்மை கசந்தாலும் ஏற்றுக்கொள்ளவேண்டியது நம்கடமை. ஆனபோதும்., நாம் எல்லாப்பெண்களையும் அதுபோன்ற பெண்களோடு ஒப்பிடுவது சரியா?
அதுதான் இங்கே உறுத்தல்.
அப்படியா போகிறது இன்றைய உலகம்
அம்மடியோ!!!!!
நாகரீகமோகத்தில் இதுபோன்று அலையும் பெண்களுக்கு நான் சப்போட்டில்லை.
எல்லோரும் சொல்வதை கேளுங்கள் நவநாகரீகப்பெண்களே!
நான் இன்னும் 1991 இருக்க ஆசைப்படுகிறேன் அப்படியே இருந்துவிடுகிறேன்.
/சைவகொத்துப்பரோட்டா கூறியது...
பதிலளிநீக்குஇது பெரியவங்க மேட்டர், ரைட்டு வரட்டா......... :))/
ஹை ஹை உங்களப்போல உள்ளவங்களுக்காத்தான் இந்த பதிவே!
/வரட்டா/ அப்படியெல்லாம் சொல்லி நழுவ முடியாதுங்க பரோட்டா
/S Maharajan கூறியது...
பதிலளிநீக்குஆனா இப்போ இருக்குற நிலைமை அப்படியா?. இல்லையே.!
கல்யாணத்துக்கு முன் எப்படி இருந்தாலும் பரவாயில்லை என்கின்ற மனபக்குவம் ஆண்/ பெண் இருபாலரிடமும் இப்ப நெறையவே இருக்கு/
இப்படியா போகுது நிலமை.நாமதான் ஒன்னும் தெரியாம இருக்குறோம்போல.
ஆக எல்லாரிடமும் மனபக்குவம் வந்துரிச்சிங்கிறீங்க நல்லதுதான்..
மங்குனி அமைச்சர் கூறியது...
பதிலளிநீக்குஆஹா இங்கன ஒரு பச்ச கொயந்த பாவம் தனியா தவித்தாய பட்டுகிட்டு இருக்கு ,
இதுக்கு தான் தனியா உட்காந்து டிவி பாக்க கூடாதுங்கிறது , சீரியல் பாத்து பாத்து ஏதோ காத்து கருப்பு அடிச்சிருச்சு போல இருக்கு , இதுக்கு வாரா வாராம் வெள்ளி கிழமை நம்ம சத்யம் தியேட்டர் வாசல்ல நின்னு பிட்பாகட் அடிச்சு , நம்ம "அசல்:" படத்த நாலு வாரம் பாத்திகனா எல்லாம் சரியாய் போய்டும்/
வாங்க மங்குனி.
நம்பளுக்கு சீரியல் சீக்குகொண்ட கோழியாட்டம் அழறது சீனிமா பார்த்து சீரியஸ்ஸாகிறபழக்கமெல்லாமில்லீங்கோ.
அதுசரி யாரந்த காத்து கருப்பு கொஞ்சம் நம்மபக்கம் வரச்சொல்லுங்க
ரெண்டு கவிதசொல்லி அவுகள நம்மபக்கம் இழுத்துக்குவோம்.
வரமருத்தா வெள்ளீகிழம வடைபயாசதோட விருந்துபோடுவேன்னு சொல்லுங்க சரியா.
அதென்ன அசல்” நகல்”மங்குனி
ஹுஸைனம்மா கூறியது...
பதிலளிநீக்குபெண்களுக்கு இயல்பாகவே ஜாக்கிரதை உணர்வு ஜாஸ்தி; அதனால் இலகுவில் தவறு செய்யமாட்டார்கள் என்று நம்பியதால் வந்த வினையாக இருக்கலாம்.//
எல்லாத்திலும் ரொம்ப சாக்கிரதையா இருப்பாங்க. ஆனா அந்த கா,கவில்தான் கவுந்துடுறாக இல்லையா ஹுசைன்னமா..
அல்லது ஆம்பிளை சகதி கண்ட இடம் மிதித்து, ஓடை கண்ட இடம் கழுவிக்கொள்வான் என்ற ஆணாதிக்கப் போக்கினால் வந்திருக்கலாம். /
அது நிறையத்தான் இருக்கு ஒத்துக்கொள்ளலாம்..
/எதுவாகிலும், நிலைமை சிறிது சிறிதாக மாறி வருகிறது.
அப்பாடா மாறிவருதா பெருமூச்சி விட்டுக்கிடவேண்டியதுதான்..
/புலவன் புலிகேசி கூறியது...
பதிலளிநீக்குவெஏறென்ன சொல்ல? எல்லாம் ஆணாதிக்கம் தான்.../
புலி நெசந்தானே. உண்மையச்சொன்னா எங்க வெளங்கப்போவுதுங்குறீங்களா....
தஞ்சை.ஸ்ரீ.வாசன் கூறியது...
பதிலளிநீக்குஅன்புடன் மலிக்காவிற்கு,
நான் எல்லா பெண்களையும் குறை கூறவோ அல்ல எல்லா ஆண்களையும் மிகையாகவோ கூற விரும்பவில்லை.
ஆனால் ஆணுக்கு பெண் நிகரென்று எத்தனையோ தவறான சில செயல்களில் பெண்கள் கால் வைக்கின்றார்கள்.
இது கல்வி வளர்ச்சியின் பாதிப்போ என்றால் இருக்க முடியாது முற்றிலும்.ஆனால் செல்ல செழிப்பின் வளர்ச்சி என்று கூறலாம்.
ஒரு சில பெண்கள் செய்யும் தவறு பல பெண்களின் வாழ்கையை பாதிக்கின்றது./
படித்தபெண்களும் சிலநேரம் அப்படித்தானுன்னு சொல்லுறாங்களே வாசன். படிச்சிப்போட்டோமுன்னு ஒரு தலைகணம் வந்திருதோ என்னமோ.
ஆனா செல்வத்தின் செழிப்பு தவறை தூண்டுவதற்க்கு ஒருகாரணம் என்பது மறுக்கமுடியாத உண்மை..
//இப்படியெல்லாம் வாழ்ந்தால் நன்றாக் வாழ்கையை அமைத்துக்கொள்ளலாம் என்ற நிலைமை அகன்று எப்படியும் வாழலாம் என்று ஒரு சிலரும். இப்படி நாமும் வாழ்ந்தால் என்ன சீரழியும் ஒரு சிலராலும் பல பெண்கள் தங்களின் வாழ்கையை இழக்கின்றனர். அதுபோன்றவர்களை உதா(ரணமாய்) எடுத்துக்கொண்டு./
இப்படித்தான் வாழனும் என்ற கோட்பாட்டைமீறீ, எப்படியும் வாழலாம் என்ற நிலை எப்போதுவந்ததோ அப்போதே சமூகமாகட்டும் தனிமனித ஒழுக்கமாகட்டும் சீர்கெடுவதில் சந்தேகமில்லை.
பெண்களே சிந்திக்கவேண்டிய கேள்விகளை பலர் இங்கு கேட்டிருப்பது வருத்தத்தையளிக்கிறது.
இதை பெண்கள் உணர்ந்துக்கொள்ளவேண்டும்
//பித்தன் கூறி இருப்பது போல் இன்று சமூக சூழ்நிலை எவ்வளவோ மாறியுள்ளது. ஆனால் நான் உங்களை 1990ல் இருந்து வெளிவரவில்லை கூறமாட்டேன்.//
அப்ப வெளிவந்துவிட்டேனா? அப்பாடா கொஞ்சம் சுறுசுறுப்பு வந்துள்ளது. ஆனாலும் சிலவிசயங்களில் நான் 1991கவே இருக்கவிரும்புகிறேன் வாசன்..
மிக்க நன்றி ..
இவன்,
தஞ்சை.வாசன்.