நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

மனதார மனம்கொடு.

வானவில்லின்
வருகைக்காக காத்திருக்கும்
வானம்போல்,,

வாழ்க்கையின்
வசந்தத்திற்காக காத்திருக்கும்
வாலிபம்!

வரன்கள்
வந்துகொண்டுதான் இருக்கிறது
வந்த இடத்தில்
வயிற்றை நிரப்பிக்கொண்டு,

வயது
போய்கொண்டுதான் இருக்கிறது
வரதட்சணை
கொடுக்க வழியில்லையே என்று!

உடல்
உருப்படியாயிருக்கும்
மனிதனுக்கு
உள்ளம் ஊனமோ?

பழமுதிர்
சோலையாகவேண்டிய
பாவையர்களின் நிலை
பாலைவனமாக மாறுமோ?

முதிர்க் கன்னிகளின்
காத்திருப்புக்கு
முடிவேயில்லையா?
முதுகெலும்பில்லாதவருக்கு
கல்யாணம் தேவையா?

கொடுமையான வரதட்சணையைக்
கொன்று போடுங்கள்
கன்னியர்க்கு வாழ்வுதந்து
கண்ணியமாகுங்கள்.

கல்யாணத்தின் கடமையினைக்
கருத்தில் கொள்ளுங்கள்
கணவரென்ற உறவுக்கு
கெளரவம் சேருங்கள்....


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்


21 கருத்துகள்:

 1. உடல்
  உருப்படியாயிருக்கும்
  மனிதனுக்கு
  உள்ளம் ஊனமோ?]]

  சவுக்கடி

  நல்ல சமுதாய கவிதை.

  பதிலளிநீக்கு
 2. மனதார மனம் கொடுக்கச் சொல்லும் கவிதை நன்று மலிக்கா!

  பதிலளிநீக்கு
 3. உடல்
  உருப்படியாயிருக்கும்
  மனிதனுக்கு
  உள்ளம் ஊனமோ?


  .........சரியான கேள்வி!

  பதிலளிநீக்கு
 4. "கொடுமையான வரதட்சணையைக்
  கொன்று போடுங்கள்
  கன்னியர்க்கு வாழ்வுதந்து
  கண்ணியமாகுங்கள்."

  i follow this...

  பதிலளிநீக்கு
 5. "உடல்
  உருப்படியாயிருக்கும்
  மனிதனுக்கு
  உள்ளம் ஊனமோ?"

  ச்சே!
  என்ன வரிகள்.... மலிக்கா.....

  எங்கள் ஊரில்
  சொல்லும்
  சொல்வழக்கில்....
  சொல்வதென்றால்.......
  "மஞ்சள் நிற பைக்குள்
  பழைய .................... போட்டு அடித்தாற்போல"...

  வரதட்சணை
  வாங்கும்
  வரன்களை .........
  வாங்கிவிட்டீர்கள் ...
  வார்த்தைகளால்........

  உண்மையில்...
  இத... இத... இதத்தான்....
  இந்த சமூக அக்கறையைத்தான்
  சமூகக் கொடுமைச் சாடலைத்தான்
  தங்கள் கவிதைகளில்
  என்றும்
  எதிர்பார்க்கிறேன் ......

  "மனதார மனம்கொடு" என்ற
  இக்கவிதையின்
  வரிகளை......
  பாராட்ட
  வார்த்தைகளை.....
  தேடிகொண்டிருகிறேன்..........

  தேடிவிட்டு வாழ்த்துகிறேன்......

  வாழ்த்துக்கள்.....

  வயிற்றை நிற(ர)ப்பிக்கொண்டு
  சிறு தவறு (.....)....!

  நட்புடன்..........
  காஞ்சி முரளி..........

  பதிலளிநீக்கு
 6. இதைவிட வேண்டுமா சாட்டையடி!!!!!!
  சூடு சொரணையிருந்தா கொடுமயின்னு
  தெரிஞ்சே செய்வாங்களா?

  சகோ.. நிச்சியமா நான் வாங்கமாட்டேன்
  சத்தியமா.............

  பதிலளிநீக்கு
 7. என்னத்த கத்துனாலும் செவிடன் காதுலே ஊதுன சங்குதான்..

  பதிலளிநீக்கு
 8. எல்லாம் தெரிஞ்சும் யாரும் இங்கே திருந்துவதில்லை

  பதிலளிநீக்கு
 9. //உடல்
  உருப்படியாயிருக்கும்
  மனிதனுக்கு
  உள்ளம் ஊனமோ?//

  பலர் அப்படித்தான் திரிகிறார்கள்....

  பதிலளிநீக்கு
 10. புத்திக்கெட்ட மானிடா
  பெண்புத்தி சொல்லுது கேளடா..

  நல்ல விழிப்புணர்வு கவிதை..

  பதிலளிநீக்கு
 11. பெண்ணே பெற்றெடுத்த உன் பெற்றோரை குறை சொல்லவா?... இல்லை, என்னை பெற்றெடுத்த என் பெற்றோரை குறை கூறவா?

  வாங்கவில்லை என்றால் ஒருவனின் ஆண் தன்மையே ஏளனம் செய்யும் ஒரு கூட்டம்.

  வாங்கினான் என்றால் கொடுத்துவிட்டு பின் குறை சொல்லும் ஒர் கூட்டம்.

  கேட்டதை கொடுக்க முடியாமல் தவிக்கும் ஒர் கூட்டம்.

  மறுமணம் என்றால் கூட பெண் வீட்டாரின் கையை எதிர்பார்க்கும் ஆண் வர்க்கம் ஒர் கூட்டம்.

  வரதட்சணை வாங்குவதும் கொடுப்பதும் சட்டப்படி குற்றம் என்றாலும் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 12. ஊர் பெருமைகாகவே பல இடங்களில் வாங்குகிறார்கள். மக்கள் திருந்தனும்.

  பதிலளிநீக்கு
 13. //ஜெய்லானி கூறியது...

  ஊர் பெருமைகாகவே பல இடங்களில் வாங்குகிறார்கள். மக்கள் திருந்தனும்.//


  நீங்கள் கூறிய கருத்தை ஆமோதிக்கின்றேன்... ஆனால்
  இதைவிட இப்படியும் கூறலாம்...
  ஊர் பெருமைகாகவே பல இடங்களில் கொடுக்கிறார்கள். மக்கள் திருந்தனும்.

  பதிலளிநீக்கு
 14. கவிதை ரொம்ப நல்லா இருக்கு ,மிலாடிநபி வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 15. "மனம் கொடு" நல்ல விழிப்புணர்வுக் கவிதை.

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது