நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

ஆண்பிள்ளைங்களே! உசாரு! உசாரூ!




1-கெட்டிமேளம் கெட்டிமேளம் டும் டும்டும் டும். நிறுத்துங்கடா, சத்தம் வந்த திசையை நோக்கினால்!!!!!!!! எதிரே நம்ம ஹீரோ.உடனே நம்ம ஹீரோயினி மாலையை கழட்டி வீசிட்டு ஸ்லோமோசனில் பறந்து வருவா.
வெளியில் பைக்கோ காரோ நிற்கும் ஏறி பறந்து போயிடுவாங்க

பாவம்! அந்த நிமிசம்வர தன்னோட மனைவியாகப்போகிறவ அவதானென்ற கனவோடு அங்கே காத்திருந்த, உப்புக்கு சப்பானியான மாப்பிள்ளை.
[ என்னங்கடா இது, கொஞ்சங்கூட பேசல, லேசாக்கூட தொடல, பழககூட விடல, இப்படி ஓட்டிட்டாளே என்ன செய்யிறதுன்னு. சாலமன் பாப்பையா போல மனசுக்குளேயே பேசிக்கிட்டு] பேஏஏஏஏஏஏ என்று முழித்துக்கொண்டிருப்பான்.

பேக்ரவுண்ட் பாடல்

”போறாளே பொட்டபுள்ள
என்னக்கூட பார்க்கவில்ல
மாலய கலட்டி இங்க வீசிவிட்டு
கண்ணீரும் கம்பலையுமா
என்னவிட்டு
நானிங்கே நிக்கிறேனே
வெக்கங்கெட்டு”

2-கெட்டிமேளம் கெட்டிமேளம் டும் டும் டும். நிறுத்துங்கப்பா.
சத்தம் வந்த திசையை நோக்கினால் எதிரே நம்ம ஹீரோவின் நண்பனோ, நண்பியோ நிற்பாங்க. அப்படியே அண்ணாந்து பாப்பாங்க ஃபிளாஷ்பேக் ஓடும்.
நம்ம ஹீரோயினி மாலையைக்கூட கிளட்டாமல் கதறி ஓடிவருவாள்.
அங்கே வந்தவங்ககூட அழுதுகொண்டே கிளம்பிடுவாள் திரும்பிக்கூட பாக்காம.

பாவம்! அதே இடத்தில் சமஞ்சபொண்ணுபோல திரு திரு முழிச்சிக்கிட்டு [தலையில் கைவைத்தபடி என்ன கொடுமைங்க ஐய்யரே! இப்படி நாவொருத்தன் குத்துக்கல்லாட்டம் இருக்கேன் என்ன கண்டுக்காம அவபாட்டுக்கு போறாளே என சந்தரமுகி பிரவுபோல், ஐய்யரிடம்கேட்பதுபோல் நினைத்து.] பேக்கோவாட்டம் பேஏஏஏஏஏஏஎ என அமர்ந்திருப்பான் மாப்பிள்ளை.

பேக்ரவுண்ட் பாடல்

”போடிப் போடி புண்ணாக்கு
நீ
போயிட்டா தள்ளிரும்
என்நாக்கு
கிருக்கு எனக்கு புடிக்கும்
நீ இல்லாடித்
தல வெடிக்கும்

போடிப் போடி புண்ணாக்கு
நீ போனாக்க தொடருவேன்
வழக்கு”...

3-கெட்டிமேளம் கெட்டிமேளம் டும் டும் டும். இப்போது சத்தமே இல்லாமல் ஹீரோ வருவார் அவரைக்கண்டதும் பெண்ணின் தந்தை கைகட்டி வாய்பொத்தி ஒதுங்கிடுவார். ஊர்காரங்களே எழுந்து மரியாதை தருவாங்க.

ஹீரோ மணமேடைக்கு எதிரே நின்றதும் ஐயர் தாலியெடுத்து உதவாக்கரை மாப்பிள்ளையிடம் தராமல் எதிரே நிற்கும் ஹீரோவிடம் கொடுப்பார். அம்மணியும் இறங்கி வந்து அழகாய் தாலியை கழுத்தில்வாங்கிட இப்போது மீண்டும் கெட்டிமேளம் கெட்டிமேளம் டும் டும் டும்.

அங்கேயும் அப்பாவி மாப்பிள்ளை அய்யனாருக்கு நேந்துவிட்ட அப்புரானி ஆடுபோல்.[ஸ்சொய்யின் இந்த ரையிங் அயம் ஸ்சொய்யிங் இந்த ரையின் என வடிவேலு பாணியில் மனசுக்குள் சொல்லிக்கொண்டு ]நிற்பான்

பேக்ரவுண்ட் பாடல்

”போகுதே போகுதே
என் பச்சகிளி பறந்துதான்
நானும் இங்கே இருப்பதே
அதுக்குதெரியலையே
என்னப் பாக்கவில்லையே

மறந்துபோகுதே
என்னைய
உதறிப்போகுதே

இன்னும் நெறய சீன் இருக்குதுங்கோ அதெல்லாம் உங்களுக்கே தெரியும் சாம்பிளுக்கு ஒன்னு ரெண்டு சொல்லிருக்கேன் புரிஞ்சதன்னோ?

இதிலிருந்து என்ன தெரியுது, கல்யாணம் ஆனாலும், ஆகலைன்னாலும்,
ஆகமொத்தத்தில் ஆண்பிள்ளைகளா, லட்சணமா, பெயருக்கு மட்டும் மண்டய மண்டய ஆட்டிக்கிட்டு [உப்புக்கு சப்பானியா. அப்புரானியா. அப்பாவியா. பேக்கோவா.இருங்கோன்னு] இருக்காங்கன்னு தெரியுது.

எத்தன படத்தில பாத்திருப்போம் இப்படியெல்லாம் நடக்குறத்த,
மணமேடை வருகிற வரைக்கும் எதுவும் சொல்லமாட்டாக. அதேபோல கல்யாண காலைல வரைக்கும் காதல சொல்லமாட்டாக. மணமேடையிலத்தேன் சொல்லுவாக, இல்லையின்னா நடுசாமத்துல ஓடிடுவாக.[இதயே இப்போ ஃஃபாலோ பண்ணுறாங்களாம் ஃபாலோவர்ஸ்கன்னு கேள்வி] [அச்சோ நீரோடை ஃபாலோவர்ஸ்கள் அல்லங்கோஅவங்களெல்லாம் ரொம்ப நல்லவங்கோ]

இதுல பாவம் இதபோல அப்பாவி மாப்பிள்ளைகளும், பெத்தவங்களும். இதமாதரி எங்கதான் இருப்பாங்களோ. தலையில துண்டமட்டுந்தேன் போடல, சிலதுகளில் அதுவும் போட்டதா நினைவு.

படமாலூஊஊஉம். நிஜமானாலூஊஊஊம். சாண்பிள்ளையானாலும் ஆண்பிள்ளைதானே? இதல்லாம் ஆருங்க கேட்குறது,,,,,,,,
என்ன நான் சொல்லுரது புரியுதா!!!!!!!!!!!!!!!!!!!!! .

ஏதோ நம்மாளா முடிஞ்சது [பத்தவெச்சிட்டோம்] என்னயிருந்தாலும் மனசு கேக்கல அதேன் இப்படி. சொல்லுரத சொல்லியாச்சி. திருவிழாவுல காணாப்போன புள்ளைகளாட்டம். தர்க்கு புர்க்குன்னு முழிச்சிக்கிட்டு நிக்காமா சட்டுபுட்டுன்னு யோசிங்க.

//இளிச்சவாய்களாக இருந்தா எலிகூட எட்டி ஒதைக்குமாம்...

”எலே அங்கவை”
“என்னங்கம்மணி.
எல்லாத்தையும் அங்கவச்சிட்டியா”
தோ முடிஞ்சிட்டேங்கம்மணி”
”நீங்க”
நான் இங்க பொங்கவச்சிட்டேன் தோ வாரேன்ன்ன்..

[டிஸ்கி.. கவித கதயின்னு போய்கிட்டேயிருக்குதேன்னு நெனச்சி, அதேன் இப்புடி தமாஸ்ல இறங்கிட்டோம். ”அட இது தமாஸா? என்ன கர்மம்டா கடவுளேன்னு! கூட்டத்துல சல சலக்குது..


நம்புங்கோ தமாஸுக்குத்தேன்.
தமாஸா சொன்னாவாச்சிம்??????????????.]
 [ஹா ஹா வில்லங்கத்த சொல்லிபுட்ட வெவரமான ஆளுபுள்ள]

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

30 கருத்துகள்:

  1. சகோதரி.http://penaamunai.blogspot.com/2010/02/blog-post_21.html

    தங்களைப்பற்றி பேனாமுனையில் அறிந்து மகிழ்ந்தேன் மிக்க மகிழ்ச்சி
    தொடருங்கள் உங்களின் தூயபணியை..

    அத்தோடு இந்த பதிவு செமசூப்பர் சரியான நெத்தியடி எனக்கும் சேத்துதான்.ஹி ஹி ஹி..

    பதிலளிநீக்கு
  2. சகோ...என்ன ஆச்சு... நீங்களுமா???? நீங்களுமா??? நல்லாத்தானே போய்ட்டு இருந்துச்சு...
    ஏங்க என்னை மாதிரி ஆளுங்களுக்கு வயித்துல புளியைக்கரைக்கீறீங்க...

    ஆனா ரசிக்கும்டி இருந்துச்சு... இதை அப்படியே மெயின்ட்டெய்ன் பண்ணுங்க...கவிதைல்லாம் நிறைய எழுதிட்டீங்க....

    பதிலளிநீக்கு
  3. ஏன் இப்படி பெண்பிள்ளைங்க மேல காண்டு :)

    பதிலளிநீக்கு
  4. சிரித்து சிரித்து வயிறு வலிவந்துவிட்டது.பேக்ரவுண்ட் பாட்டுதான். நடுநடுவில் இதுபோல நிறைய போடுங்க....

    பதிலளிநீக்கு
  5. எங்கிருந்து பிடிச்சிங்க
    இந்த புதிய வார்த்தைகள..........

    ஸ்ஸ்ஸ்....!
    இப்பவே கண்ண கட்டுதே.......!

    நல்லாருக்கு....

    நட்புடன்...
    காஞ்சி முரளி.........

    பதிலளிநீக்கு
  6. ஆஹா.... பேஷ்...பேஷ்... கவிதை, ரொம்ப நன்னா இருக்கு :))

    பதிலளிநீக்கு
  7. இதுதானா மேட்டரு, நானும் பயந்துப்போய்ட்டேன்

    //எலே அங்கவை”
    “என்னங்கம்மணி.
    எல்லாத்தையும் அங்கவச்சிட்டியா”
    தோ முடிஞ்சிட்டேங்கம்மணி”
    ”நீங்க”
    நான் இங்க பொங்கவச்சிட்டேன் தோ வாரேன்ன்ன்../

    நடக்குறதுதானே வெளியே வரும், ஹேங்...

    நல்ல நகைச்சுவையான எழுத்துநடை

    பதிலளிநீக்கு
  8. ”எலே அங்கவை”
    “என்னங்கம்மணி.
    எல்லாத்தையும் அங்கவச்சிட்டியா”
    தோ முடிஞ்சிட்டேங்கம்மணி”
    ”நீங்க”
    நான் இங்க பொங்கவச்சிட்டேன் தோ வாரேன்ன்ன்..

    ............உங்களுக்குள் தூங்கி கொண்டிருந்த நகைச்சுவை மிருகத்தை தட்டி எழுப்பிட்டீங்க போல. .........very good.

    பதிலளிநீக்கு
  9. //கல்யாண காலைல வரைக்கும் காதல சொல்லமாட்டாக மணமேடையிலத்தேன் சொல்லுவாக, இல்லையின்னா நடுசாமத்துல ஓடிடுவாக.//

    ஆமா, அதுவரைக்கும் குனிஞ்ச தலை நிமிராம இருந்து.. அந்த மாப்பிள்ளையைவிட, பெத்த்வங்க நிலைமைதான் ரொம்ப மோசம்..

    நல்லாருக்கு மலிக்கா.

    பதிலளிநீக்கு
  10. தமிழும் அழகாக வந்து விளையாடுகிறது
    பதிவு அருமை

    பதிலளிநீக்கு
  11. எலே அங்க-வை

    இல்லீங்ண்ணா

    நான் இங்கே வைக்கிறேன்

    கமெண்ட்டை

    --------------

    நல்லாயிருக்குங்கோ ...

    பதிலளிநீக்கு
  12. அச்சோ அசோ சிரிப்புத்தாங்கலைமா.
    நிஜத்தை அப்படியே சிரிப்பாசொல்லிப்புட்ட வலிக்குது வயிறு ஆனாலும் கனக்குது மனது.
    இதபோல எத்தை பார்திருப்போம் என்ன செய்ய பிள்ளைகள் புரிந்துக்கொள்வது அவ்வளவுதாம்மா.

    காமெடி உனக்கு சூப்பரா வருது கலக்குறடிமா

    பதிலளிநீக்கு
  13. மனம் விட்டு சிரித்தேன் சகோதரி, ஆனாலும் ஒரு ஓரத்தில் அந்த மாப்பிள்ளைகளுக்காக வலிக்கத்தான் செய்கிறது.

    கலக்குறீங்க :-))

    பதிலளிநீக்கு
  14. தமாசா தாங்க இருக்கு. உங்களுக்கு இதுல சந்தேகமே வேணாம்.

    பதிலளிநீக்கு
  15. எல்லாத்தையும் சொல்லிபுட்டு தமாஸாம்....நம்பாதீங்க...

    பதிலளிநீக்கு
  16. வித்தியாசமாய் இருக்கு. நன்றி.

    பதிலளிநீக்கு
  17. என்னா ஒரு நக்கலு அம்மாடியோ தாங்கதுடோய், ஆணுங்களே உசாரா ஈந்துக்கோங்க அங்ஹாய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்..

    பதிலளிநீக்கு
  18. உக்காந்து யோசிபிய்யலோ இப்படியெல்லாம். நாங்களும் ஒரு பிளாக்க தொறந்து இதவிடவிடுவோம் ரீலு.

    அம்மணி பொங்கவச்சிட்டீங்கள்ள
    பொங்கிறிச்சி.

    பொம்பளபுள்ளைகளுக்கும்.
    பொங்கவைங்க ஹி ஹி அப்பதானே ஈக்கோளாகும் எங்களுக்கும் அவுகளுக்கும்..

    பதிலளிநீக்கு
  19. மலிக்கா என்ன ஆச்சு திடிருன்னு இப்படி காமடிய அள்ளி தெளிச்சிட்டீங்க.

    ஹ‌ ஹா ஹா புவாவாஹா.

    ரொம்ப சிரிச்சி சிரிச்சி வயிறு குலுங்குது.

    பதிலளிநீக்கு
  20. தங்களிடமிருந்து வித்யாசமான ஒரு பகிர்வு. ஹி..ஹி, நல்ல டமாசு -:) அடிக்கடி இப்படி ஏதாச்சும் போடுங்க.

    பதிலளிநீக்கு
  21. சகோதரி,

    ஆண்கள் பாவம்... ஆண்பாவம் பொல்லாதது... நல்லா எடுத்து சொல்லுங்க

    பதிலளிநீக்கு
  22. தியாவின் பேனா கூறியது...
    super//

    மிக்க நன்றி தியா..

    /saravanan கூறியது...
    malikka kalakkuRiingka super./

    தேங்ஸ் சரவணா.



    /முகில் கூறியது...
    சகோதரி.http://penaamunai.blogspot.com/2010/02/blog-post_21.html

    தங்களைப்பற்றி பேனாமுனையில் அறிந்து மகிழ்ந்தேன் மிக்க மகிழ்ச்சி
    தொடருங்கள் உங்களின் தூயபணியை...//

    நிச்சயம் முகில். தாங்களில் ஆசிர்வாதங்களும் வேண்டும்..


    /அத்தோடு இந்த பதிவு செமசூப்பர் சரியான நெத்தியடி எனக்கும் சேத்துதான்.ஹி ஹி ஹி..//

    அடிச்சிரிச்சா ஹி ஹி ஹி..
    மிக்க நன்றி முகில்

    பதிலளிநீக்கு
  23. நாஞ்சில் பிரதாப் கூறியது...
    சகோ...என்ன ஆச்சு... நீங்களுமா???? நீங்களுமா??? நல்லாத்தானே போய்ட்டு இருந்துச்சு...
    ஏங்க என்னை மாதிரி ஆளுங்களுக்கு வயித்துல புளியைக்கரைக்கீறீங்க...//

    நிறைய கரைச்சா குழம்புக்கு தேவைப்படும் எடுத்துவைங்க
    வருகிறவக உபயோகிக்கட்டும்.
    ஹ ஹா ஹா

    //ஆனா ரசிக்கும்டி இருந்துச்சு... இதை அப்படியே மெயின்ட்டெய்ன் பண்ணுங்க...கவிதைல்லாம் நிறைய எழுதிட்டீங்க//

    அதுவேறயா முயற்ச்சி பண்ணுறேன்.
    மிகுந்த நன்றி..

    [பிகு] அதான் கவிதையை கண்டுக்கிற வரதேயில்லையா?..

    பதிலளிநீக்கு
  24. சின்ன அம்மிணி கூறியது...
    ஏன் இப்படி பெண்பிள்ளைங்க மேல காண்டு :)//

    வாங்க சின்ன அம்மணி. காண்டு என்றால் என்ன சத்தியமா எனக்கு அப்படின்னா என்னான்னு தெரியாதுமா?

    கோபமான வார்த்தையா?

    ஆனாலும் நன்றிங்கோ

    பதிலளிநீக்கு
  25. /ஜெய்லானி கூறியது...
    சிரித்து சிரித்து வயிறு வலிவந்துவிட்டது.பேக்ரவுண்ட் பாட்டுதான். நடுநடுவில் இதுபோல நிறைய போடுங்க..../

    நிச்சியம் போடுறேன் ஜெய்லானி. ரொம்ப வலிக்குதோ. 10 ஸ்பூன் அமிர்தாஞ்சன் குடிச்சா சரியாடும்..

    பதிலளிநீக்கு
  26. / Kanchi Murali கூறியது...
    எங்கிருந்து பிடிச்சிங்க
    இந்த புதிய வார்த்தைகள........../

    அங்கங்கே பேசுகிறாங்கல முரளி அதையெல்லாம் காதுல போட்டுகீனு இதப்போல எயிதுறேன், ஸ்ஸ்ஸ்ஸ்,

    திரும்பவும் அதேபோல் வந்திடுச்சி..



    /ஸ்ஸ்ஸ்....!
    இப்பவே கண்ண கட்டுதே.......!/

    கண்ணகடினாலும் வெளிச்சம் வேகமாக தெரியும்..

    நல்லாருக்கு....

    நட்புடன்...
    காஞ்சி முரளி/

    மிக்க நன்றி நட்புடன் காஞ்சிமுரளி..

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது