நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

வெற்றிமாலை



தோல்விகள்கண்டு
கிடைக்கும் வெற்றி
சந்தனமாலை போன்றது
அதுகாயக் காய
சாந்தமான வாசம்
வீசிடும்


தோல்விகளின்
வடுக்களை
தொட்டு பார்த்தால்
மீண்டும் மீண்டும்
வெற்றிமாலை
தோளில்
வாங்கத்தூண்டும்


குறுக்கு வழியில்
சட்டெனக்
கிட்டும் வெற்றி
ரோஜா மாலைப்
போன்றது


அது
வாடிப் போனால்
வாசம்போய்
வனப்பும் உதிர்ந்து
எஞ்சி மிஞ்சுவது
நார் மட்டுமே


திறமை முழுவதும்
தனக்குள்ளே
ஒளித்துக்கொண்டு
வெளியுலகைக் காண
துணிவற்றிருந்தால்
திறமை தேடிவருமா


வெற்றிக்கு வித்திடாமல்
தொட்டாச்
சுறுங்கியைப்போலே
தோல்விகளைக்கண்டு
துவண்டு கிடந்தால்
வெல்லமுடியுமா


தன்னம்பிக்கையென்னும்
துணிவைக்கொண்டு
தோல்விகளை
எதிர்த்துப்பார்


எதிரியாய் வந்த
தோல்விகள்கூட
உன் துணிவு கண்டு
துவண்டுபோய்
தூர ஓடிவிடும்


உன்வாசல்தேடி
வெற்றிமாலை
வந்து சேர்ந்திடும்..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

19 கருத்துகள்:

  1. "எதிரியாய் வந்த
    தோல்விகள்கூட
    உன் துணிவு கண்டு
    துவண்டுபோய்
    தூர ஓடிவிடும்"

    நல்ல கவிதை. மனத்தைரியம் இருந்தால் வாழ்க்கையில் எதையும் வென்றுவிடலாம்.

    பதிலளிநீக்கு
  2. மாலைகளுக்குள் இவ்வளவு விஷயங்கள் தொடுக்க முடியுமா? இதுக்கே உங்களுக்கு ஒரு மாலை போடலாம்.

    பதிலளிநீக்கு
  3. நல்லதொரு த(ந)ன்னம்பிக்கை கவிதை.

    ரொம்ப சரி.

    பதிலளிநீக்கு
  4. வாசல் தேடி வந்தா சந்தோஷம்தான்...

    பதிலளிநீக்கு
  5. சநதன மாலை - ரோஜா மாலை ஒப்பிட்டது உங்கள் கற்பனைவளத்தைக் காட்டுகிறது.

    கருத்துள்ள அழகான கவிதை!!

    பதிலளிநீக்கு
  6. சாரதா விஜயன்11 ஜனவரி, 2010 அன்று 3:14 PM

    வெற்றிக்கு வித்திடாமல்
    தொட்டாச்
    சுறுங்கியைப்போலே
    தோல்விகளைக்கண்டு
    துவண்டு கிடந்தால்
    வெல்லமுடியுமா


    சரியான புத்திமதி என்னைப்போன்றவர்களுக்கு இதுபோன்ர அடைவைஸ் தேவையான தேவையே

    பதிலளிநீக்கு
  7. தன்னம்பிக்கையென்னும்
    துணிவைக்கொண்டு
    தோல்விகளை
    எதிர்த்துப்பார்

    Nalla Varigal....

    "Thannambikkaiye Vazkaiyin Vetri" enpathai unarthum Varigal.....

    Vazthukkal...

    Natpudan Kanchi Murali........

    பதிலளிநீக்கு
  8. மலிக்கா புது வீடு படு ஜோரா இருக்கு

    ரோஜா மாலைக்குள் இவ்வளவு விஷியம் இருக்கா?

    அருமை வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  9. வெற்றி மட்டும் குறிக்கோள் அல்ல, அதன் பாதையும் சிறந்ததாக இருக்க வேண்டும். அருமையா எடுத்து சொல்லியிருக்கிங்க.

    பதிலளிநீக்கு
  10. //மலிக்கா புது வீடு படு ஜோரா இருக்கு//

    ஆமாங்க.. ::))

    பதிலளிநீக்கு
  11. தன்னம்பிக்கையை இப்படியும் கூட சொல்லலாமா

    நல்லாயிருக்கு

    பதிலளிநீக்கு
  12. மிக அழகு தளத்தின் அம்சம்
    அழகிய அறிவுரை மிக்க நன்றி
    தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  13. தோல்விகள்கண்டு
    கிடைக்கும் வெற்றி
    சந்தனமாலை போன்றது
    அதுகாயக் காய
    சாந்தமான வாசம்
    வீசிடும்

    Sabass.... Kavithaina athu Malikka eluthara Kavithaithan... rooppa nanna irrukku....

    பதிலளிநீக்கு
  14. எதைச்சொல்ல எதைவிட, எல்லாமே அருமை அருமை

    என்றென்றும் நட்புடன்
    சோலைராசா

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது