வாழ்க்கைப்பயணம்
உணவு உடை அன்பு
இவர்களுக்குள்
விடிய விடிய போராட்டம்
இறுதி வெற்றி ?
கதைகள் பேசிய
கண்களின் வழியே
வழிந்தது கண்ணீர்
அதை
கண்டும் காணாததுபோல்
கட்டிய பெட்டிகளை
சரிசெய்தபடி
தன் கண்ணங்களிலில்
வழிந்தோடும் கண்ணீரைக்
கட்டுப்படுத்தினான்
கதவோரம்
காதல்மனைவி
கனத்த மனதுடன்
கலங்கி நிற்ப்பதை
பார்க்கயிலாமல்
அங்குமிங்கும்
நடந்தான்
காரின் ஹாரன்ஒலி
வெளியில் கேட்க
கட கடவென
ஆடிய கால்களை
அழுத்தி நிறுத்தினாள்
கதவோரம் நின்ற
காதல்கிளி
தொட்டுபேசும்
தூரத்தில் இருந்தும்
சுற்றி நின்ற
சொந்தங்களின் மத்தியில்
முடியாமல்போகவே
சொந்தங்கள்
கைகளை அசைக்க
இவனும்
கைகள் அசைத்தபடி
கண்களால் பேசினான்
அனைவரிடமும்
போய்விட்டு வருகிறேன்
என்று சொல்லும்போது
போய்விட்டு
என்பது தொண்டைக்குள்
புதைய
வருகிறேன்
என்பது மட்டும்
வேகமாய் வந்தது
விறு விறுவென
நடந்து காரில் ஏறி
கண்களை மூடினான்
மனதிற்குள்
மீண்டும் போராட்டம்
வெற்றி பெற்றதாய்
உணவும் உடையும்
சொல்ல
இல்லவே இல்லை
உங்களிருவருக்கும்
விட்டுக்கொடுத்து
அன்புதான் ஜெயித்ததென
அவன் மனஞ்சொல்ல
ஏனென்றால்
ஒரு நாளில்
மூன்றுமுறையே
உனை உண்பேன்
ஒருநாளில்
ஓரிருமுறையே
உனை உடுத்துவேன்
ஆனால்
அனுதினமும் சிறுநொடியும்
அவளின்
அன்பை மட்டுமே
நினைத்திருப்பேன்
எனச்
சொல்லிதன்னையே
சமாதானப்படுத்திக்கொண்டபடி
மனம் கனக்க
வாழ்க்கைபயணத்தைத்
தொடர
வானத்தில் பறந்தான்..
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
//அனுதினமும் சிறுநொடியும்
பதிலளிநீக்குஅவளின்
அன்பை மட்டுமே
நினைத்திருப்பேன்//
அழகான வரிகள்..மிகவும் ரசித்தேன்..
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்..
//ஒரு நாளில்
பதிலளிநீக்குமூன்றுமுறையே
உனை உண்பேன்//
நானெல்லாம் ஆறு தடவை.. ஆனாலும் பத்தமாட்டேங்கு!!
:-)
நல்லாயிருக்குங்க மல்லிகா மேடம்!
என்ன சொல்றதுன்னு தெரியலை. ஊருக்கு போற சந்தோசத்தைவிட திரும்ப வரனுமேங்கிற கவலைதான் இப்போ. இதன் தொடர்ச்சியா நான் ஒன்னு எழுதி போடுறேன் ஓரிரு தினங்களில்.
பதிலளிநீக்குகவிதை ரொம்ப நல்லா இருக்குதுமா.
நல்லாருக்கு...
பதிலளிநீக்குவரிகள் அனைத்தும் நல்லா இருக்கு சகோதரி.
பதிலளிநீக்குவீட்டை விட்டு வெகு தூரம் சென்று வேலை செய்வோரின் மனதை அழகாக
பதிலளிநீக்குபாடம் பிடித்து உள்ளீர்கள் வார்த்தைகளால்.
எனச்
பதிலளிநீக்குசொல்லிதன்னையே
சமாதானப்படுத்திக்கொண்டபடி
மனம் கனக்க
வாழ்க்கைபயணத்தைத்
தொடர
வானத்தில் பறந்தான்.. ............. நல்லா இருக்குங்க.
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
ஒரு நாளில்
பதிலளிநீக்குமூன்றுமுறையே
உனை உண்பேன்
ஒருநாளில்
ஓரிருமுறையே
உனை உடுத்துவேன்
ஆனால்
அனுதினமும் சிறுநொடியும்
அவளின்
அன்பை மட்டுமே
நினைத்திருப்பேன்
... Entha varikalai padikkumpoothu en anbu maniviyin ninaivu vanthu en kankal eramanathu...
Trichy Syed
தொட்டுபேசும்
பதிலளிநீக்குதூரத்தில் இருந்தும்
சுற்றி நின்ற
சொந்தங்களின் மத்தியில்
முடியாமல்போகவே
சொந்தங்கள்
கைகளை அசைக்க
இவனும்
கைகள் அசைத்தபடி
கண்களால் பேசினான்
.... Wunarwupoorvamana Kavithai!
/கதைகள் பேசிய
பதிலளிநீக்குகண்களின் வழியே
வழிந்தது கண்ணீர்/
எத்தனை முறை அழுதிருப்பேன்
அப்படியே மனக்கண்முன் கொண்டுவந்துட்டீங்களே சபாஷ் மலிக்கா.
//அனுதினமும் சிறுநொடியும்
பதிலளிநீக்குஅவளின்
அன்பை மட்டுமே
நினைத்திருப்பேன்//
இன்றும் நினைத்தபடி அதே நினைவிலடி அகா எனக்கும் கவிதை வந்திருச்சி என்னவளை நினைத்து அருமைங்க.
எப்படி பிளாக் திறக்கனும் நானும் எழுதுவேனுல்ல ப்லீஸ் சொல்லுங்க
இப்படியே பல வருடங்கள் வாழ்ந்தாயிற்று.
பதிலளிநீக்குஇன்னமும் ஊருக்கு போகனும் என்றாலே இப்படி ஒரு நிலையை சந்திக்க வேண்டுமென்று பயந்தே ஒத்தி போட வேண்டியிருக்கு ...
வெளிநாட்டில் வாழும் (கிட்டதட்ட) எல்லோருக்குமே இது உணர்வு பூர்வமானது.
நட்புடன் ஜமால் கூறியது...
பதிலளிநீக்குஇப்படியே பல வருடங்கள் வாழ்ந்தாயிற்று.
இன்னமும் ஊருக்கு போகனும் என்றாலே இப்படி ஒரு நிலையை சந்திக்க வேண்டுமென்று பயந்தே ஒத்தி போட வேண்டியிருக்கு ...
வெளிநாட்டில் வாழும் (கிட்டதட்ட) எல்லோருக்குமே இது உணர்வு பூர்வமானது.
It is true opinion for us.
இன்ஸா அல்லாஹ் நாளை தாயகப்பயணம் இந்தநேரத்தில் இப்படி ஒரு பதிவு
பதிலளிநீக்குஎங்களின் வலிகலை வரிகலாக
இறைவனிடம் ஒவ்வொறுமுறையும் நான் வேண்டுவது
இறைவா இனைந்து இருக்கவேண்டிய எஙகளை இனைத்தே வைய்
http://nizamroja01.blogspot.com/2009/10/blog-post_23.html
இது ”வாழ்கை பயணம்” இல்லை,துயர பயணம்.விதியின் சதி
பதிலளிநீக்கு!!நட்புடன் ஜமால்!!உங்கள் பதில்தான் எனது பதிலும்..
உணர்ச்சிகரமான கவிதை
மிக அருமை.. :)
பதிலளிநீக்குவெற்றி கூறியது...
பதிலளிநீக்கு//அனுதினமும் சிறுநொடியும்
அவளின்
அன்பை மட்டுமே
நினைத்திருப்பேன்//
அழகான வரிகள்..மிகவும் ரசித்தேன்..
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
/
ரசித்த வெற்றிக்கு என் இனியநன்றி
கலையரசன் கூறியது...
பதிலளிநீக்கு//ஒரு நாளில்
மூன்றுமுறையே
உனை உண்பேன்//
நானெல்லாம் ஆறு தடவை.. ஆனாலும் பத்தமாட்டேங்கு!!
:-)/
அதுசரி
//நல்லாயிருக்குங்க மல்லிகா மேடம்!//
மிக்க நன்றி கலை சார்..
சின்ன திருத்தம் மலிக்கா. மல்லிகா அல்ல. ஓகே
/S.A. நவாஸுதீன் கூறியது...
பதிலளிநீக்குஎன்ன சொல்றதுன்னு தெரியலை. ஊருக்கு போற சந்தோசத்தைவிட திரும்ப வரனுமேங்கிற கவலைதான் இப்போ. இதன் தொடர்ச்சியா நான் ஒன்னு எழுதி போடுறேன் ஓரிரு தினங்களில்./
என்ன செய்றதுண்ணா நம்ம பொழப்பே இப்படியாகிவிட்டது எல்லாதுக்கும் இறைவன் துணையிருப்பான்..
நீங்க எழுதியிருக்கும் கவிதை சூப்பரண்ணா
/கவிதை ரொம்ப நல்லா இருக்குதுமா./
ரொம்ப சந்தோஷமண்ணா
/அண்ணாமலையான் கூறியது...
பதிலளிநீக்குநல்லாருக்கு.../
நன்றி அண்ணாமலையாரே
/SUFFIX கூறியது...
வரிகள் அனைத்தும் நல்லா இருக்கு சகோதரி/
மிக்க மகிழ்ச்சி ஷஃபியண்ணா
/சைவகொத்துப்பரோட்டா கூறியது...
பதிலளிநீக்குவீட்டை விட்டு வெகு தூரம் சென்று வேலை செய்வோரின் மனதை அழகாக
பாடம் பிடித்து உள்ளீர்கள் வார்த்தைகளால்/
மிக்க நன்றி சைவக்கொத்துப்பரோட்டா
Chitra கூறியது...
பதிலளிநீக்குஎனச்
சொல்லிதன்னையே
சமாதானப்படுத்திக்கொண்டபடி
மனம் கனக்க
வாழ்க்கைபயணத்தைத்
தொடர
வானத்தில் பறந்தான்.. ............. நல்லா இருக்குங்க. /
நன்றி தோழி
/இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்/
மிக்க நன்றி
மலர்வனம் கூறியது...
பதிலளிநீக்குஒரு நாளில்
மூன்றுமுறையே
உனை உண்பேன்
ஒருநாளில்
ஓரிருமுறையே
உனை உடுத்துவேன்
ஆனால்
அனுதினமும் சிறுநொடியும்
அவளின்
அன்பை மட்டுமே
நினைத்திருப்பேன்
... Entha varikalai padikkumpoothu en anbu maniviyin ninaivu vanthu en kankal eramanathu...
Trichy Syed
/
நியாபங்கள் நெஞ்சுக்குள் மழைத்தூறலாய் தூறிக்கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும். அதன் வெளிப்பாடுதான் இது.
மிக்க மகிழ்ச்சி சையதண்ணா
Mrs. Sabira Syed கூறியது...
பதிலளிநீக்குதொட்டுபேசும்
தூரத்தில் இருந்தும்
சுற்றி நின்ற
சொந்தங்களின் மத்தியில்
முடியாமல்போகவே
சொந்தங்கள்
கைகளை அசைக்க
இவனும்
கைகள் அசைத்தபடி
கண்களால் பேசினான்
.... Wunarwupoorvamana Kavithai!
மிக்க நன்றி சாபீராசையத்
புவனாராஜ் கூறியது...
பதிலளிநீக்கு/கதைகள் பேசிய
கண்களின் வழியே
வழிந்தது கண்ணீர்/
எத்தனை முறை அழுதிருப்பேன்
அப்படியே மனக்கண்முன் கொண்டுவந்துட்டீங்களே சபாஷ் மலிக்கா./
ரொம்ப சந்தோஷமாக இருக்குங்க புவனா. நானும் எத்தனை முறை அழுதிருப்பேன் அதை அப்படியே கொண்டுவந்தேன் கவியில் மிக்க நன்றிபா..
தாயுமானவன் கூறியது...
//அனுதினமும் சிறுநொடியும்
அவளின்
அன்பை மட்டுமே
நினைத்திருப்பேன்//
இன்றும் நினைத்தபடி அதே நினைவிலடி அகா எனக்கும் கவிதை வந்திருச்சி என்னவளை நினைத்து அருமைங்க./
ஆகா கொட்டுது கவித கவித
/எப்படி பிளாக் திறக்கனும் நானும் எழுதுவேனுல்ல ப்லீஸ் சொல்லுங்க/
மெயில் பண்ணுங்க சொல்லித்தரேன் தெரிந்ததை. மிக்க நன்றிங்க
நட்புடன் ஜமால் கூறியது...
பதிலளிநீக்குஇப்படியே பல வருடங்கள் வாழ்ந்தாயிற்று.
இன்னமும் ஊருக்கு போகனும் என்றாலே இப்படி ஒரு நிலையை சந்திக்க வேண்டுமென்று பயந்தே ஒத்தி போட வேண்டியிருக்கு .../
இதுதான் நிலை என்றாகிவிட்டது பயப்படாமா போயிட்டுவாங்க ஜமால்காக்கா எல்லாத்துக்கும் அல்லாஹ் இருக்கிறான்.
வெளிநாட்டில் வாழும் (கிட்டதட்ட) எல்லோருக்குமே இது உணர்வு பூர்வமானது./
அதேதான் காக்கா..
/syed கூறியது...
நட்புடன் ஜமால் கூறியது...
இப்படியே பல வருடங்கள் வாழ்ந்தாயிற்று.
இன்னமும் ஊருக்கு போகனும் என்றாலே இப்படி ஒரு நிலையை சந்திக்க வேண்டுமென்று பயந்தே ஒத்தி போட வேண்டியிருக்கு ...
வெளிநாட்டில் வாழும் (கிட்டதட்ட) எல்லோருக்குமே இது உணர்வு பூர்வமானது.
It is true opinion for us.//
அதேதான் வேறவழி வரும்வரை..
ராஜவம்சம் கூறியது...
பதிலளிநீக்குஇன்ஸா அல்லாஹ் நாளை தாயகப்பயணம் இந்தநேரத்தில் இப்படி ஒரு பதிவு/
நல்லபடியாக சென்றுவாருங்கள்
/எங்களின் வலிகலை வரிகலாக/
மிக்க நன்றி
/இறைவனிடம் ஒவ்வொறுமுறையும் நான் வேண்டுவது
இறைவா இனைந்து இருக்கவேண்டிய எஙகளை இனைத்தே வைய்//
இறைவன் நிச்சயம் நம் அனைவருக்கும் அந்த பாக்கியத்தை தந்தருளவேண்டும்.
jailani கூறியது...
பதிலளிநீக்குஇது ”வாழ்கை பயணம்” இல்லை,துயர பயணம்.விதியின் சதி/
எல்லாம் இறைவன் விதித்த விதிப்படியேதான் நடக்கும்..
/!!நட்புடன் ஜமால்!!உங்கள் பதில்தான் எனது பதிலும்..
உணர்ச்சிகரமான கவிதை/
மிகுந்த மகிழ்ச்சி ஜெய்லானி
/ஆறுமுகம் முருகேசன் கூறியது...
மிக அருமை.. :)/
மிக்க நன்றி ஆறுமுகம்..