தூறல்போட்டு நெய்தது
சாரல் சாரல் அடித்தது
சரம் சரமாய் தொடுத்தது
சன்னல் வழியே பார்க்கையில்
சாடைகாட்டி அழைத்தது
சற்று எட்டிப் பார்க்கும்போது
சரசம் செய்ய துடித்தது
மெல்ல மெல்ல தேகத்தை
முழுவதுமாய் நனைத்தது
செல்லமான மழைதுளிக்கு
முத்தம் ஒன்று கொடுக்கையில்
ஹச்சென்ற தும்மல் வந்து
எங்கள் இறுக்கத்தையே பிரித்தது
நனைந்த தேகம் குளிரக் குளிர
நாடிநரம்பெல்லாம் நடுங்கியது
கதகதப்பு தேடிய தேகத்திற்க்கு
கையில் போர்வை கிடைத்தது
இழுத்துப்போர்த்தபோகையில்
போர்வை கேள்வி கேட்டது
காய்ச்சல் உனக்கு வேண்டுமா?
காதல் உனக்கு வேண்டுமா?
பட்டென்றென்று பதிலளித்தேன்
காய்ச்சல் தந்தால் போதுமே
வினோதமாய் பார்த்தது
வியப்பாய் ஏனென்று கேட்டது
காய்ச்சல் வந்தால் கூடவே
காதலும் வரும் தன்மையாய்
காதல்வரும்போதிலே அதனுடன்
கவிதையும் வரும் மென்மையாய்
சொல்லி முடிக்கும் முன்னெயே
என்னை மூடிக்கொண்டது போர்வையே......
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்
அருமையான, அடுக்கு வார்த்தை நிறைந்த கவிதை...
பதிலளிநீக்குமல்லிகா... நீங்க கில்லிக்கா...
வாவ்..எவ்ளோ எளிமையான வரிகள், பல முறை படித்துப் பார்த்தேன், வரிகள் கொஞ்சி குலாவுதுங்க. மழை வந்தாலும் வந்துச்சு கவிஞ்ர்களுக்கு கவிதையையும் சேர்த்துல கொண்டு வந்துருக்கு. உடல் நலம் பரவாயில்லையா?
பதிலளிநீக்குமழையைப் பற்றி எழுதினாலே கவிஞர்களுக்கு அத்தனை சந்தோசம்தான். வாசிப்பவர்களையும் இழுத்து நனைய வைத்துவிடுவார்கள், எனபது சரியாகத்தான் இருக்கிறது.
பதிலளிநீக்கு///செல்லமான மழைதுளிக்கு
பதிலளிநீக்குமுத்தம் ஒன்று கொடுக்கையில்///
அன்று பெற்ற
முத்தத்தை
இன்று கால் தொட்டு
கடன் தீர்க்கிறது
கடல் அலையாய்
என்பதுபோல் மென்மையான கவிதை.
நல்லா இருக்கு சகோதரி. தொடர்ந்து கலக்குங்க.
//காய்சல் வந்தால் கூடவே
பதிலளிநீக்குகாதலும் வரும் தன்மையாய்
காதல்வரும்போதிலே அதனுடன்
கவிதையும் வரும் மென்மையாய்//
சரிதான்...அப்படி பிறந்ததுதானோ இதுவும்...காய்ச்சல் தொடர வாழ்த்துக்கள்....
கவிதை அழகு...
மழையால் காய்ச்சலா?காதலா?-எது என்றாலும் உங்கள் கவிதை அருமை தோழி !!!
பதிலளிநீக்குவெகு அருமை .
பதிலளிநீக்குநனைந்தேன் கவிதைமழையில்
குளிர்ந்தது மழைப்போர்வை...
kavingarukku kaichal alakana kavithaiyai thanthathu...
பதிலளிநீக்குtrichy syed
மலிக்காவிற்கு காய்ச்சல் வந்ததோ, காதல் வந்ததோ தெரியாது. கவிதை வந்துடுச்சின்னு கன்ஃபர்மா தெரியுது.. பட்டய கெளப்புங்க
பதிலளிநீக்குமழைபோலவே பட்டுத்தெறிக்கும் வரிகள்.சாரலில் நனைந்தேன் கொஞ்சம்.
பதிலளிநீக்கு//காய்ச்சல் உனக்கு வேண்டுமா?
பதிலளிநீக்குகாதல் உனக்கு வேண்டுமா?
பட்டென்றென்று பதிலளித்தேன்
காய்ச்சல் தந்தால் போதுமே
//
ரசனையா சொல்லியிருக்கீங்க சகோ...
ரொம்ப ரசித்து மழையோடு பேசுவது உரையாடுவது போன்றே இருந்தது..
நல்ல கவிதை. பாராட்டுகள்.
பதிலளிநீக்குMalikkavirku kaichal vanthathu
பதிலளிநீக்குAthu nalla kavithaiyaiyum thanthau
Avarathu varikalil inimai thullum
Padippar nenchai allum
Avarin kavithai padikavendum thinam
Evvaru koorukirathu enkal manam
Kaichal vanthathal thunpam
Kavithai thanthathal enpam
(Eppadi yunka sisyanooda kavithai?)
Valthum...
Shamir
Manasukku pidicha saral malaiyil nanaitha sugam kidathathu...
பதிலளிநீக்குPadam kollai alagu!
Anbudan
Mrs. Sabira Syed
\காய்ச்சல் வந்தால் கூடவே
பதிலளிநீக்குகாதலும் வரும் தன்மையாய்.......//
:-) :-) : -)
கலக்குறீங்க...!
இங்கயும் நல்ல மழை மலிக்கா....
படிச்சதே மழைல நனைஞ்ச ஒரு அனுபவம் போல இருக்கு..!
Mallikai pookakai thoduthu poocharam kattuvathupool menmaiyana varthaikalal miruthuvanan kavithai saikereerkal...
பதிலளிநீக்குSamayal saiyum unkal kaikalil saraswathi kudierukkiral!
Unkal kavithaiyin mikapperiya palam : Unkal kavithai kanniyamai veedil ellarum padikkaramathiri... nalla irrukku...
Kadawul aparithamana thiramaiyai unkalukku koduthu irrukiran...
Unkalai sinakithiyaai pavithu mariyathai koduthu... penmaiyai poodrum unkal anbu kanavarum nichayam paratukkoriyavarthan!
- Trichy Syed
சூப்பர்... ப்ரிண்ட் எடுத்துட்டேன். ஊருக்கு போயி என் மகனுக்கு சொல்லிக்கொடுக்கணும்.
பதிலளிநீக்கு//இழுத்துப்போர்த்தபோகையில்
பதிலளிநீக்குபோர்வை கேள்வி கேட்டது
காய்ச்சல் உனக்கு வேண்டுமா?
காதல் உனக்கு வேண்டுமா?/
நானும் ஒரு மழைக் காதலன்தான்..கவிதையை மழையாய் பொழிந்து விட்டீர்கள் மலிக்கா....
தாளத்துடன் படிக்கிற விதமாக உங்கள் கவிதை இருந்தது. அருமை.
பதிலளிநீக்குஅருமையான வரிகள் ...அநுபவத்திலிருந்து போல ...வாழ்த்துக்கள்....
பதிலளிநீக்குதேர்ந்த வார்த்தை துளிகளை மழையின் நூலெடுத்து கோர்த்த அழகான கவிதை மாலை ... வாழ்த்துக்கள் .... நான் ஒரு மழை கிறுக்கு, உங்க கவிதையை படித்த உடனே நினையனுமுனு கொள்ளை ஆசை வந்துட்டு .... நேற்று என் கண்ணோடு கொட்டி தீர்த்த காதல் மழை இன்றும் வாராதோ ..............
பதிலளிநீக்குகாதல்வரும்போதிலே அதனுடன்
பதிலளிநீக்குகவிதையும் வரும் மென்மையாய்
நல்ல அர்த்தங்கள் தோழியே
காதல்வரும்போதிலே அதனுடன்
பதிலளிநீக்குகவிதையும் வரும் மென்மையாய்
நல்ல அர்த்தங்கள் தோழியே
/கலையரசன் கூறியது...
பதிலளிநீக்குஅருமையான, அடுக்கு வார்த்தை நிறைந்த கவிதை...
மல்லிகா... நீங்க கில்லிக்கா...
/
கருத்துக்களுக்கு மிக்க நன்றி கலை..
அதுசரி யாரந்த? மல்லிக்காவும் கில்லிக்காவும்.
எழுதியது மலிக்காவான நான் ஆனால் பாராட்டு மல்லிக்காவுக்கும் கில்லிக்காவுக்குமா? [ஹா ஹா ஹா]
நானும் மழையில் நனைந்த அனுபவத்தை உணர்ந்தேன் மிக அருமை...
பதிலளிநீக்குமலிக்கா ரொம்ப அழகா மழையை பதிவு செய்து இருக்கிறீர்கள் ,சூப்பர்
பதிலளிநீக்குமிக சரியான வார்த்தைகளால் வடிவமைத்த இந்த கவிதை மழை அசர வைக்கிறது, தோழி!!
பதிலளிநீக்கு//காதல்வரும்போதிலே அதனுடன்
பதிலளிநீக்குகவிதையும் வரும் மென்மையாய்//
அருமை மலிக்கா நல்லா இருக்குங்க
Elakiya Kavingaree!
பதிலளிநீக்குCinema padalukkuriya alakum, santha layamum rasikka vaithathu...
Keep it up!
- Trichy Syed
Bharathirajavin basumaiyana kiramathu padathil varum eniya padal mathiri irrukku....
பதிலளிநீக்கு- Rasikan
SUFFIX கூறியது...
பதிலளிநீக்கு/வாவ்..எவ்ளோ எளிமையான வரிகள், பல முறை படித்துப் பார்த்தேன், வரிகள் கொஞ்சி குலாவுதுங்க. மழை வந்தாலும் வந்துச்சு கவிஞ்ர்களுக்கு கவிதையையும் சேர்த்துல கொண்டு வந்துருக்கு. உடல் நலம் பரவாயில்லையா?/
ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கு ஷஃபியண்ணா.
கவிதையை திரும்ப திரும்ப படிச்சதற்க்கும். என்னை அன்போடு விசாரித்தமைக்கும் மிகுந்த மகிழ்ச்சி
அல்ஹம்துல்லிலாஹ். குணமாகிட்டது.அடம்பிடித்தது கவிதை எழுதாமல் காய்ச்சல் போகமாட்டேன்னு.. எழுதியதும் போயேபோச்சு.. மிக்க நன்றி ஷஃபியண்ணா..
/S.A. நவாஸுதீன் கூறியது...
பதிலளிநீக்குமழையைப் பற்றி எழுதினாலே கவிஞர்களுக்கு அத்தனை சந்தோசம்தான். வாசிப்பவர்களையும் இழுத்து நனைய வைத்துவிடுவார்கள், எனபது சரியாகத்தான் இருக்கிறது./
மழையில் நனைந்தமைக்கு மகிழ்ச்சி
நவாஸண்ணா..
/S.A. நவாஸுதீன் கூறியது...
பதிலளிநீக்கு///செல்லமான மழைதுளிக்கு
முத்தம் ஒன்று கொடுக்கையில்///
அன்று பெற்ற
முத்தத்தை
இன்று கால் தொட்டு
கடன் தீர்க்கிறது
கடல் அலையாய்
என்பதுபோல் மென்மையான கவிதை./
மழையை கண்டதும் மனம்போடும் ஆட்டமிருக்கே சிறுபிள்ளாயாய்மாறி துள்ளீக்குதிக்கச்சொல்கிறது,அண்ணா
அதான் கவியாய் மழைக்குள் குதித்து குளிச்சாச்சி..
/நல்லா இருக்கு சகோதரி. தொடர்ந்து கலக்குங்க./
தொடர்ந்த ஊக்கமும் அன்பும் நெகிழ்ச்சியைதருகிறது நவாஸண்ணா..
/க.பாலாசி கூறியது...
பதிலளிநீக்கு//காய்சல் வந்தால் கூடவே
காதலும் வரும் தன்மையாய்
காதல்வரும்போதிலே அதனுடன்
கவிதையும் வரும் மென்மையாய்//
சரிதான்...அப்படி பிறந்ததுதானோ இதுவும்...காய்ச்சல் தொடர வாழ்த்துக்கள்....
கவிதை அழகு.../
அப்படியே பிறந்ததுதான் பாலாஜி..காய்ச்சல் விட்டுக்கொடுத்து கவிதையை தொடரச்சொல்லி போய்விட்டது ஜி.
மிக்க மகிழ்ச்சி..
/பூங்குன்றன்.வே கூறியது...
பதிலளிநீக்குமழையால் காய்ச்சலா?காதலா?-எது என்றாலும் உங்கள் கவிதை அருமை தோழி !!!/
மழைமேல் கொண்ட காதலால் காய்ச்சல்வந்தது
காய்ச்சல்வந்ததால் கவிதையை தந்தது.
நன்றி தோழனே..
/வாசமுடன் கூறியது...
பதிலளிநீக்குவெகு அருமை .
நனைந்தேன் கவிதைமழையில்
குளிர்ந்தது மழைப்போர்வை...
/
ஓ அப்படியா. மிக்க நன்றி நன்றி வாசமுடன்..
/அண்ணாமலையான் கூறியது...
பதிலளிநீக்குமலிக்காவிற்கு காய்ச்சல் வந்ததோ, காதல் வந்ததோ தெரியாது. கவிதை வந்துடுச்சின்னு கன்ஃபர்மா தெரியுது.. பட்டய கெளப்புங்க/
ஓஹோ, மிகுந்த மகிழ்ச்சி அண்ணாமலையாரே. தொடர்வருகைக்கு மகிழ்ச்சி..
/ ஹேமா கூறியது...
பதிலளிநீக்குமழைபோலவே பட்டுத்தெறிக்கும் வரிகள்.சாரலில் நனைந்தேன் கொஞ்சம்./
சாரலில் நனைந்த தோழிக்கு சந்தமாய்
சரம் சரமாய் நன்றி..
/பிரியமுடன்...வசந்த் கூறியது...
பதிலளிநீக்கு//காய்ச்சல் உனக்கு வேண்டுமா?
காதல் உனக்கு வேண்டுமா?
பட்டென்றென்று பதிலளித்தேன்
காய்ச்சல் தந்தால் போதுமே
//
ரசனையா சொல்லியிருக்கீங்க சகோ...
ரொம்ப ரசித்து மழையோடு பேசுவது உரையாடுவது போன்றே இருந்தது../
ஆமா சகோ, எல்லாத்தோடவும் பேசக்கற்றுக்கொண்டிருக்கிறேன் இப்போதுதான் அ, ஆ வில் நிற்கிறது.
இன்னும் நிறைய கற்று பேசி உரையாடனும் இயற்க்கையோடு..
ரொம்ப சந்தோஷம் சகோ..
/வானம்பாடிகள் கூறியது...
பதிலளிநீக்குநல்ல கவிதை. பாராட்டுகள்./
மிகுந்த சந்தோசம் வானம்பாடிகள்..
/மலர்வனம் கூறியது...
kavingarukku kaichal alakana kavithaiyai thanthathu..//
மிக்க நன்றி மலர்வனம்...
மலர்வனம் கூறியது...
பதிலளிநீக்குMalikkavirku kaichal vanthathu
Athu nalla kavithaiyaiyum thanthau
Avarathu varikalil inimai thullum
Padippar nenchai allum
Avarin kavithai padikavendum thinam
Evvaru koorukirathu enkal manam
Kaichal vanthathal thunpam
Kavithai thanthathal enpam
(Eppadi yunka sisyanooda kavithai?)
Valthum...
Shamir/
அழகாய் ஒரு கவிதை தந்த சமீருக்கு மிக்க நன்றி..
லெமூரியன்... கூறியது...
பதிலளிநீக்கு\காய்ச்சல் வந்தால் கூடவே
காதலும் வரும் தன்மையாய்.......//
:-) :-) : -)
கலக்குறீங்க...!
இங்கயும் நல்ல மழை மலிக்கா....
படிச்சதே மழைல நனைஞ்ச ஒரு அனுபவம் போல இருக்கு..!/
அப்படியா. ரொம்ப சந்தோஷம் லெமூரியன்..
/பீர் | Peer கூறியது...
பதிலளிநீக்குசூப்பர்... ப்ரிண்ட் எடுத்துட்டேன். ஊருக்கு போயி என் மகனுக்கு சொல்லிக்கொடுக்கணும்/
ஹய் அப்படியாரொம்ப சந்தோஷம் . மருமகப்பிள்ளைக்கு மழைப்பாடல் இந்த மாமிதந்ததுன்னும் சேர்த்து சொல்லிடுங்க பீர் அண்ணா...
/புலவன் புலிகேசி கூறியது...
பதிலளிநீக்கு//இழுத்துப்போர்த்தபோகையில்
போர்வை கேள்வி கேட்டது
காய்ச்சல் உனக்கு வேண்டுமா?
காதல் உனக்கு வேண்டுமா?/
நானும் ஒரு மழைக் காதலன்தான்..கவிதையை மழையாய் பொழிந்து விட்டீர்கள் மலிக்கா....
/
மழைக்கு மயங்காத மனமும் உண்டோ
என்பதுபோலிருக்கிறது நந்தான் மழைகிறுக்கு நினைத்தா நிறையபேர் இருக்குக்காங்கன்னு இப்போதுதான் தெரியுது தோழனே. மிக்க மகிழ்ச்சி..
/Chitra கூறியது...
பதிலளிநீக்குதாளத்துடன் படிக்கிற விதமாக உங்கள் கவிதை இருந்தது. அருமை./
மிக்க நன்றி தோழி சித்ரா..
/கருணையூரான் கூறியது...
பதிலளிநீக்குஅருமையான வரிகள் ...அநுபவத்திலிருந்து போல ...வாழ்த்துக்கள்/
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி கருணையூரான்..
சந்தேகமேயில்லை அனுபவமேதான்...