ஒருவரது வாழ்வில்
சந்தேகம் உள்நுழையப் பார்க்கும்போதே
ஒரு நொடியும் தாமதிக்காமல்
சந்தோஷம் வெளியேறிவிடுகிறது
சந்தோஷமாய்
தன் இறகுகளை
விறித்து பறக்கும் பறவையை
வேடனின்
வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு
அதன் சிறகுகளை
பதம்பார்த்துவிடும்போது :அந்த:
பறவையின் நிலை என்னாகுமோ
அதே நிலைதான்-
நிம்மதியாய்
வாழ்ந்துகொண்டிருக்கும் வாழ்வை
சந்தேகம் புகுந்தபோது
நிலைகுழையச்செய்துவிடுகிறது.
சந்தோஷங்கள் சருகாய்
சட சடத்துக்கொண்டிருக்கும்வேளையில்
சந்தேக”தீ” சருகை
சாம்பலாய் பொசுக்கிவிடுகிறது.
நட்புடன் உண்டான சந்தேகம்
நல்லநட்பை இழக்கச்செய்கிறது
காதலிலன்போது எழும் சந்தேகம்
காதலையே கத்தரித்துவிடுகிறது
குடும்பத்தில் ஏற்படும் சந்தேகம்
சொந்தங்களை தூரமாக்கிவிடுகிறது
தாம்பத்தியத்தில் ஏற்படுபம் சந்தேகம்
தன் வாழ்க்கையையே பாழாக்கிவிடுகிறது
சந்தேகத்தின் குறிக்கோளே
மனித /தேகம்/தான்
என்ன
புரியவில்லையா மானிடா!
மனிதமனம் எங்குள்ளது
தேகத்திற்குள்தானே
தேகத்தை வேகவைப்பதே
இந்த சந்தேகத்தின் வேலை
சந்தேகமென்னும்
சாக்கடையில் விழுந்துவிடாதே
உன் சங்கதிகளை நாரடித்துவிடாதே
சந்தேகமென்னும்
மெழுகுவர்த்தியை கொளுத்தி
அதில் உன்னையும் உருக்கி
அத்தீயைக்கொண்டே
உன்னைச் சார்ந்தவர்களையும்
சாகடித்துவிடாதே
மனித வாழ்க்கையே
நம்பிக்கையில்தான்
மனநம்பிக்கையற்றுப் போனால்
மனிதவாழ்வு என்னாகும்
சிந்தித்துப்பார்
மனிதனாய் வாழமுயன்றுப்பார்
சந்தேகத்தைவிட்டு விட்டு
சந்தோஷமாய் வாழ்ந்துபார்...
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்
சந்தேக”தீ” கவிதை அருமை. இந்த சந்தேகதீ பலருடைய வாழ்க்கையை தீக்கிரையாக்கியிருக்கின்றது.
பதிலளிநீக்குஅருமையான கவிதை. ரசித்தேன்.
சந்தேகம் ஒரு மோசமான தீ நு அன்னிக்கே சொல்லிட்டுப்போய்ட்டாங்க பெரியவங்க
பதிலளிநீக்குநல்லா சொல்லிருக்கீங்க
சந்தேகம் ஒரு தீயே!! அதற்க்கு தீர்வு, எதுவானாலும் மனம் விட்டுப் பேசி தீர்வு கண்டுவிடவேண்டும்.
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்கு