நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

வாலிபவயது


உன்வயதை வீணானவைகளைக்கொண்டு
பாழாக்கிவிடாதே!

உன் பருவம் போனால் திரும்பாது-அது
போகும்முன் புடம்போட்டு வைத்துக்கொள்.

நீ வாலிபத்தில் செய்யும் ஒவ்வொன்றும்
உன் வயோதிகத்தில் உனக்கே திருப்பிவரும்
திரும்பவரும்

வாலிபத்தை வேண்டாத சகவாசத்தினாலும்
வசதியான வாழ்வின் திமிரினாலும்
வீணடித்துவிடாதே!

வாலிபம் உனக்கு கொடுக்கப்பட்டதே
உன்னை சோதித்துப்பார்க்கத்தான்

அதில் நீ எடுத்துவைக்கும் ஒவ்வொருஅடியும்
உன் ஈரூலக வாழ்வையும்
தீர்மானிக்கப்படக்கூடியவைகள்

”ஆதலால் வாலிபமே”

வாலிபவயதின் வாழ்வை
முறையாக்கிக்கொள் அதுவே உன்னை
நெறிப்படுத்தும் நல்வழிப்படுத்தும்..

அன்புடன் மலிக்கா

இறைவனை நேசி இன்பம் பெருவாய்

12 கருத்துகள்:

 1. வாலிபம் என்பதை விட டீன் ஏஜ் என்ற சொல் பொருத்தமாக இருக்கும்..... அந்த காலகட்டத்தில்தான் அதிகப்படியான கவனம் தேவை

  நிதர்சன வரிகள்

  பதிலளிநீக்கு
 2. அடடா அசத்தல்.. சில வரிகள் எனக்கும் பொருந்தும்.. :))

  லேபிள் செம நக்கல்.. :)


  எழுத்துப் பிழைகள் இருக்கு..

  ”பாழாய்”
  “ஆதலால்”

  for good templates : http://allblogtools.com
  http://btemplates.com

  பதிலளிநீக்கு
 3. //வாலிபம் என்பதை விட டீன் ஏஜ் என்ற சொல் பொருத்தமாக இருக்கும்..... அந்த காலகட்டத்தில்தான் அதிகப்படியான கவனம் தேவை

  நிதர்சன வரிகள்//

  டீன் ஏஜையும் தாண்டி வாலிப்பத்திலும் நிறைய தவறுகள் நடகிறது அதற்காகத்தான் இந்த வாலிபச்சொல்[டீன் ஏஜ் இங்கிலீஸில்] சரிதானே அஃப்ஷர்

  பதிலளிநீக்கு
 4. //அடடா அசத்தல்.. சில வரிகள் எனக்கும் பொருந்தும்.. :))
  பொருந்துகிறதா அப்ப சரிதான்

  லேபிள் செம நக்கல்.. :)//
  அப்படியா

  பதிலளிநீக்கு
 5. எழுத்துப்பிழைகளை திருத்திவிட்டேன் சஞ்சய் மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
 6. //கிளியனூர் இஸ்மத் கூறியது...
  நல்ல வாலிபமான வரிகள்............//

  மிக்க நன்றி இஸ்மத்

  பதிலளிநீக்கு
 7. //S.A. நவாஸுதீன் கூறியது...
  நல்ல பதிவு

  லேபில் - குசும்பை ரசித்தேன்//

  ரசித்தமைக்கு மகிழ்ச்சி

  பதிலளிநீக்கு
 8. //sheik mukthar கூறியது...
  well and great reminder to all.//

  வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சேக்

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது