நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

காதல் கோட்டை


அடி வான தேவதையே
என் ஆசைக்காதலியே

உனக்குள் நான்வந்து புகுந்ததை அறிவாயா
உன்மேகமூட்டத்துக்குள் என்மூச்சுக்காற்றை உணர்ந்தாயா

ஆணுக்குள் பெண்வந்தால் அவன்அந்தரத்தில் பறப்பானாம்
அடிஉனக்குள் நான்வந்ததும் ஆகாசத்தில் மிதக்கிறேனடி

உன்வட்டநிலாக் கண்ணத்தை தொட்டுவிடத்துடிக்கிறேன் -அது
முடியாமல் போகவே தினம் தினம் தவிக்கின்றேன்

விமானமானநான் வானமான உன்னுள்வரும்போது
என்னுள் இருப்பவர்களுக்கு நமக்குள் நடக்கும்

காதல் நாடகம் எதுவுமே தெரியாது
நம்மிருவருள்ளும் துடிக்கும்துடிப்பு எவருக்கும்புரியாது


கீழிலிருந்து நம்மை பார்ப்பவர்களெல்லாம் -ஏதோ
நான்உன்னை உரசிச்செல்வதாய் உரக்கப்பேசுகிறார்கள்

அவர்களுக்கு தெரியாதடி நமக்குள் இருக்கும்இடைவெளி
இருந்தபோதும் நமக்குள் என்றும்உண்டு அன்பொளி

பல பல காதல்களை பூலோகம்கண்டிருக்கும் -ஆனால்
இதுபோன்றொரு காதலை இந்தவிண்ணுலகம் கண்டதுண்டா

உலகம் அழியும்வரை உன்னுடன்மட்டும்தான்

என்காதல் வாழ்க்கை
என் வாழ்க்கை உள்ளவரை இந்தவானம்தான்

என்காதல் கோட்டை

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெருவாய்

12 கருத்துகள்:

 1. //உலகம் அழியும்வரை உன்னுடன்மட்டும்தான்
  என்காதல் வாழ்க்கை
  என் வாழ்க்கை உள்ளவரை இந்தவானம்தான்
  என்காதல் கோட்டை//

  அழகான கவிதை...காதலுடன்....

  பதிலளிநீக்கு
 2. காதல் கோட்டையை அழகிய வரிகளால் கட்டி இருக்கிங்க!!

  பதிலளிநீக்கு
 3. //பல பல காதல்களை பூலோகம்கண்டிருக்கும் -ஆனால்
  இதுபோன்றொரு காதலை இந்தவிண்ணுலகம் கண்டதுண்டா//

  எல்லாருக்கும் அவங்க அவங்க காதல்தான் பெரிசா தெரியும்

  உங்க காதல் எப்படி?

  பதிலளிநீக்கு
 4. //அழகான கவிதை...காதலுடன்....//

  ரொம்ப சந்தோஷம் பாலாஜி

  பதிலளிநீக்கு
 5. //அழகான கவிதை...காதலுடன்....//

  ரொம்ப சந்தோஷம் பாலாஜி

  பதிலளிநீக்கு
 6. //காதல் கோட்டையை அழகிய வரிகளால் கட்டி இருக்கிங்க//

  மிக்க மகிழ்ச்சி ஷஃபி

  பதிலளிநீக்கு
 7. //♥ தூயா ♥ Thooya ♥ கூறியது...
  nice template...:)//

  வருக வருக தூயா அடிக்கடி வந்துபோங்க மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
 8. //எல்லாருக்கும் அவங்க அவங்க காதல்தான் பெரிசா தெரியும்

  உங்க காதல் எப்படி//

  என்ன வசந்த் இப்படி கேட்டுபுட்டீக,
  மெய்யாலுமே எங்க காதல்தாங்க ஒசத்தி,
  பிறக்கும் முன்பே தொடங்கியதுங்கோ

  அத கவிதையில படைக்கிறேனுங்க கூடிய விரைவில்

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது