நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

தமிழா! நெஞ்சை நிமிர்த்தி நில்லடா!



தமிழன் என்று சொல்லடா
தலைநிமிர்ந்து நில்லடா
தமிழ்நாட்டு மண்ணடா
தமிழனின் உணர்வடா!

நம்நாட்டில்லா பொருளாடா
நாமெக்கெதுக்கு பீட்டாடா
நம்மளோட நாட்டடா
நமக்கு நாமே காப்போம்டா!

உரிமையை விட்டுவிட்டு
ஊமையாகிப் போவதா?
உணர்வுகளை சிதைத்துவிட்டு
உயிர் ஜடமாக வாழ்வதா?

சந்திலிருந்து சிந்துபாடி
சதிசெய்து பிரித்தாலும்
சாதிமத பேதமின்றி
சமத்துவமாய் வாழ்வோம்டா

மதம்கடந்த மனிதத்தை
தமிழ்நாட்டில் பாரடா
மதம்பிடித்த மனிதரெல்லாம்
தமிழ்நாட்டுக்குள்ள வேனாண்டா

வாடி வாசல் திறக்கவே
விவசாயம் உழவும் செழிக்கவே
தமிழ்நாட்டுப் பாரம்பரியம்
தழைத்து ஓங்கச்செய்யவே!

தன்மானமுள்ள தமிழனாய்
தன்னெழுச்சி கொள்ளடா
தாய் தமக்கை தங்கையக்காவாய்
தானாய் உம்முடன் வருவாள் துணையடா!

அவசரமில்லாமல் ஆராய்ந்து முடிவைகொள்ளடா
அவசரம் நிரந்தரமல்ல என்பதை உணரடா
நிரந்தர தீர்ப்புகேட்டு நெஞ்சை நிமிர்த்தி நில்லடா
நீதி கிடைக்குவரை அநீதி எதிர்த்து போராடடா...







https://www.facebook.com/malikka.farook
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

4 கருத்துகள்:

  1. தமிழச்சியே
    சாதிப்போம் வெற்றி நமதே..

    அருமை சகோதரியே..

    பதிலளிநீக்கு
  2. நீண்ட நாளைக்குபின் மல்லியின் வருகை
    தமிழ்மணத்தோடு தமிழ் வீரத்தோடு...

    பதிலளிநீக்கு
  3. நம்நாட்டில்லா பொருளாடா
    நாமெக்கெதுக்கு பீட்டாடா
    நம்மளோட நாட்டடா
    நமக்கு நாமே காப்போம்டா!

    மதம்கடந்த மனிதத்தை
    தமிழ்நாட்டில் பாரடா
    மதம்பிடித்த மனிதரெல்லாம்
    தமிழ்நாட்டுக்குள்ள வேனாண்டா

    பதிலளிநீக்கு
  4. அருமையான பாடல்.. வெற்றி கிடைக்க வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது