பூந்தோட்ட வாசனைகள் பிரபஞ்சத்தை நிறைக்க!
பூங்குருவியொன்று மென்குரலெழுப்பி சங்கீதம் வாசிக்க!
மரவண்டுகள் துளைத்தெடுத்த துவாரத்தின்வழியே
சர்ப்பத்தின் சிரம் படமெடுத்து அசைய!
திணவெடுத்த முகிலின் உரசலில்
அடவெடுத்த கிளைகளில் தென்றல் திணற!
இறுத்தலுக்கு இணையாது இருப்பைக் கலைந்து
தனிமைச்சிறைக்கு சாவிகேட்டு
சிதிலமடைந்த சிட்டுகள் எம்பிக் குதிக்கிறது
துளையில்லா புல்லாங்குழலின் சத்தத்தில்....
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
அருமை அக்கா...
பதிலளிநீக்குஅழகு.. அது புலாங்கிதமா? புளகாங்கிதமா? டவுட்டா இருக்கு எனக்கு..:)
பதிலளிநீக்குYou are right... Athira..
பதிலளிநீக்கு