ருசிகளை சுவைபார்த்த
நாவிற்கு
பசிகளின் நிலையறிய!
பாவங்களை சுமந்திருக்கும்
மனதிற்க்கு
பாவச்சுமைகளை களைந்தெறிய!
உள்ளத்தையும்
உடலையும் சுத்துப்படுத்த
வருடத்தில் ஒருமாதம்
ஓடிவந்திருக்கு
நம்மை நாடி வந்திருக்கு!
நன்மையை அள்ளித்தர
நாயன் கட்டளையிட்ட
நல்லதொருகாலம்
அதுதான்
நோன்பென்னும்
மாண்பை சுமந்திருக்கும்
ரமலான் மாதம்!
கத்தை கத்தையாகவும்
கடுகளவேனும் தருமங்கள் செய்திடவும்
கருணை மனுக்களை
கண்கலங்கி கொடுத்திடவும்
கல்பென்னும் உள்ளத்தை
கலங்காமல் பாதுகாத்திடவும்
காத்தருளும் நாயனிடம்
கையேந்திக் கேட்டிடவும்
நம்மருகில் வந்திருக்கு
நன்மைகளை
சேகரிக்க வழி கிடச்சிருக்கு!
கடுஞ்சிரமங்களும் போக்கிடவே
கண்டும் காணாமலும் செய்த
பாவகாரியங்களையும் நீக்கிடவே
படைத்தவனிடம் மன்றாடிட
பலனும் நலனும் கொண்டுவந்திருக்கும்
மகத்துவமிக்க மருந்து -அதை
முப்பது நாட்களும் அருந்து
பாங்கான நோன்பினை
பேணிப் பேணி பிடித்திட
பிணியும் போக்க வேண்டிட
கைவிட்டுவிடாமல் கைப்பற்றிடவே
கருணை இறைவனை நாடிடு!
அறணும் நலனும் சேர்த்து சேர்த்து
அண்டை அயலாரை அன்பில் அணைத்து
அல்லும் பகலும் இறையை நினைத்து
அனைத்து பாவங்களையும் கடத்து கடத்து
கண்ணும் கருத்தும் ஒன்றிணைந்து
கழிவுகள் மொத்தம் கழுவித்துடைத்து
கவனம் கவனம் எண்ணத்தில் கொண்டு
கவளம் விழுங்கு சுபுகுக்கு முன்பெழுந்து
பகல் முழுவதும் சிரமம் தவிர்ந்து
படைத்தவனை புகழ்ந்து புகழ்ந்து
தொழுது படித்து துதித்து வணங்கு
தூயவனை நினைத்து நினைத்து
இவ்வுலக இச்சை மறந்து துறந்து
இரவுமுழுதும் அழுது தொழுகு
இறையச்சம் இதயத்தில் பூண்டு
ஜகன்னமென்னும் நரகை விலக்கு
ஐந்து கடமைகளில் ஒன்றை அடைந்து
ஜக்காத்துகளை அள்ளி வழங்கு
ஐய்யத்தோடு இறையை உணர்ந்து
ஜன்னத்தென்னும் சுவர்க்கதை நோக்கு.
======================================
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
சிறப்புகளுக்கு பாராட்டுக்கள்...
பதிலளிநீக்குஇனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்...
இனிய ரமலான் வாழ்த்துக்கள் . அப்புறம் அந்த கஞ்சி எனக்கு பார்சல் அனுப்பிடுங்க.
பதிலளிநீக்குகவிதை அருமையா வந்திருக்கு...
பதிலளிநீக்குஇனிய ரமலான் வாழ்த்துக்கள் அக்கா...
இனிய ரமலான் வாழ்த்துக்கள் .
பதிலளிநீக்குarumai..
பதிலளிநீக்குஇனிய ரமலான் வாழ்த்துக்கள் .
பதிலளிநீக்குஅருமையான கவிதை
இனிய ரமலான் வாழ்த்துக்கள் .
பதிலளிநீக்குஅல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக