ஆறடி
ஆறுபோல் வளையும்போது
ஆறுதலுக்கு
ஆள்தேடுது!
அறணுமிழந்து செயலுமிழந்து
அன்பு கொள்ள
தோள்தேடுது!
ஊண்குறைந்து
கூன்விழுந்தபோது
ஊன்றி நடக்க
ஒரு கொம்பை நாடுது!
வாசம் வீசிய
வாலிப வாழ்க்கை
வலுவிழந்து
வெருச்சோடித்தெரியுது
ஊட்டி ஊட்டி
வளர்த்த பிள்ளை
வீட்டிலொரு
மூலைகொடுக்குது
முணுமுணுக்கும் சத்தம் கேட்டால்
முகத்தை சுழிக்குது!
கெஞ்சிக் கெஞ்சி
கொஞ்சிபேச
பேரப்புள்ளையின்
துணையை நாடுது!
பேரன்பேத்திகளின்
பேச்சு குளிருது!
முதிர்ச்சி எட்டி
முதுமை தட்டி
மூச்சிறைக்குது!
முந்தையகாலம் நினைத்து
புலம்பும் நெஞ்சம்
மெளனம் காக்குது!
முதுமையின் தாக்கம் புரியுது...
------------------------------------
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
// கெஞ்சிக் கெஞ்சி
பதிலளிநீக்குகொஞ்சிபேச
பேரப்புள்ளையின்
துணையை நாடுது!
பேரன்பேத்திகளின்
பேச்சு குளிருது!
முதிர்ச்சி எட்டி
முதுமை தட்டி
மூச்சிறைக்குது!
முந்தையகாலம் நினைத்து
புலம்பும் நெஞ்சம்
மெளனம் காக்குது!
முதுமையின் தாக்கம் புரியுது... //
முதுமையின் தாக்கம் அற்புதமாக குறிப்பிட்டு உள்ளீர்கள்...
பதிலளிநீக்குyou have explained one aspect of old age.please read my muthumaiyin parisu written some time back. Also I request you to visit my postings. It is a long time since you last visited my blog. Thanks
முதியோர் இல்லங்கள்
பதிலளிநீக்குமுளைத்து
புற்றீசல்போல்
பெருகிக் கொண்டிருக்கும்
காரணிகளை
விளக்கும் கவிதை...
நன்று...
வாழ்த்துக்கள்...
அருமை...
பதிலளிநீக்குஒவ்வொரு வரியும் உண்மை...
அக்கா...
பதிலளிநீக்குகவிதை அருமை.
வாழ்த்துக்கள்.