மனிதா!
எத்தனையோ கேள்விக் கணைக்கள்
உன்முன்னே வைக்கப்படுகிறது
எதற்கேனும் பதிலுண்டா
உன்னிடத்தில்!
இச்சையின்பத்தால்
இரண்டரகலந்ததில்
இவ்வுலகத்தை
இருகண்கொண்டு கண்டவன் நீ
இளக்கர தோரணையோடு
இவ்வுலகில் வலம்வருகிறாய்!
நீ வரும்போது
அழுகையைத் தவிர
ஏதுமில்லை
உன்னிடத்தில்
அதையும்
நீ போகும்போது
பிறரிடம் கொடுத்துசெல்பவன்
இருந்துமேனோ
இருமாப்புடன் வாழ்கிறாய்!
ஆகாசமும் பூமியும்
உனக்காக
படைக்கப்படத்துதான் என்ற
ஆணவத்தில்
அலைபவனாக திரிகிறாய்
ஆகாதென தெரிந்தும்
அமிலத்தை
அறுஞ்சுவையென நினைக்கிறாய்!
ஐபூதங்களின்
ஆதரவில் வாழ்பவன் நீ
ஐந்தில் ஒன்றை இழந்தாலும்
ஆட்டம் கொள்ளும் உனதுடலுயிர்
அப்படியிருந்தும்
அனாச்சாரபிடியில் சிக்கி
அழிவை நோக்கி நகர்கிறாய்!
உனக்கு தரப்பட்டிருக்கும்
காலகெடு முடியும்வரைதான்
உனதாட்டம் இப்பூமியில்
காலக்கெடுக்கு கணக்கு வழக்கில்லை
காலவெதியான உயிர்களுக்கு
இப்பூமியில் இடமில்லை
இவையறிந்துமேனோ
இச்சைகளின் பின்னே
அட்டைகள்போல்
ஒட்டிக்கொண்டலைகிறாய்!
உச்சிமுதல் உள்ளங்கால் வரை
பாவங்களால் நிரம்பியிருப்பவன் நீ
பாவங்களை பெருக்குவதிலிருந்து
உன்னை விலக்குவதில்லையென
விடாபிடியாகயிருக்கிறாய் !
ஒருதுளி நீரால்
உருவாகியவன் நீ
ஒவ்வொரு தீங்குகளையும்
நீர் தெளித்து வளர்கிறாய்
குறிகோள்கள் ஏதுமற்று
குட்டியச் சுவராகவே
வாழ்ந்து கெடுகிறாய்
மரணம்வரும்வரை
மதியிழக்கிறாய்
மரணவேளையில்
மனதால் மடிந்தழுகிறாய்!
மனிதா!
எத்தனையோ கேள்விக்கணைக்கள்
உன்முன்னே வைக்கப்படுகிறது
எதற்கேனும் பதிலுண்டா
உன்னிடத்தில்!
==================================
கவிதை வயலின் 100 வது கவிதையிது. நன்றி றாஃபி.
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
சிந்திக்க வேண்டிய கேள்விகள்... தனக்குள்...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்...
தமிழ்மணம் +1 இணைத்து விட்டேன்... நன்றி...
பதிலளிநீக்கு100 வது கவிதை - மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...
சகோதரரின் அன்புக்கும் கருத்துக்கும் தமிழ்மணத்தில் இணைத்தமைக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்..
பதிலளிநீக்குஎதற்காக பிறந்தோம் என்பதும் கேள்வி?
பதிலளிநீக்குஎதைநோக்கிச் செல்கிறோம் என்பதும் கேள்வி?
என்ன சாதித்தோம் என்பதும் கேள்வி?
செய்த சாதனைகள் சாத்வீகமா என்பதும் கேள்வி?
முடிவில் எங்குபோய் முடிகிறோம் என்பதும் கேள்வி?
இப்படி
கேள்விகளுக்குள்ளேயே
கேள்விக்குறியாய் இருக்கும் நாம்...
மற்றவரை
கேள்வி கேட்பது ஏளனத்திற்குரியதல்லவா?????
நட்புடன்...
காஞ்சி முரளி...
அந்த மற்றவருக்குள் நாமும் ஒருவர்தான் அந்த மற்றவர்களுக்கு. ஆக கேள்விகள் விளைந்துகொண்டேதானிருக்கும் பதில்தான் இல்லை இல்லை இல்லை..
பதிலளிநீக்குஏளனத்திற்குள்ளே வாழும் ஜீவன்களுக்கு இதில் ஏளனப்படுவதற்கு ஒன்றுமில்லை சகோ.
''வாழ்க்கையும் குறிக்கோளும்'
பதிலளிநீக்கு*************************
குறிக்கோளில்லாத வாழ்க்கை...!
கரைகளை
உடைத்து
ஊரையே அழிக்கும்
காட்டாறாக இருந்தால்... அவ்
வாழ்க்கையின் பாதை
ஊர்ப் போய்ச் சேராது.... !
அப்படியே
குறிக்கோளுடன்
வாழ்க்கைப் பயணம் தொடர்ந்தால்...!
அக்குறிக்கோள்
“நல்லவை”களாக அல்லாமல்
“அல்லவை”களாக
அமைந்துவிட்டாலும்
அவ்வாழ்க்கை
அமங்கல வாழ்க்கைதான்...!
“வாழ்க்கை”யில்
வழிவழியாய்...
வழிவந்தவர்கள்
வந்த பாதையின்
வடுக்களிலே... நாம்
கடந்தோமாயின்
கடலில்கூட பாதையமைத்து
கடக்கலாம்...!
பாலைவனப்
பாதையில்கூட...!
கடந்துபோனவர்களின்
சுவடுகளைப் பற்றி
சுவர்க்கத்தை அடையலாம்...!
நாம்தான்
“சுயம்புகளின் புத்திரர்கள்” அல்லவா?
அதனால்தான்
அகந்தைகளின்
ஆளுமைக்கு
ஆட்பட்டு
ஆடிக்கொண்டிருக்கிறோம்...!
அதனால்
விளைந்த காரணிதான்...!
ஓஸோனில் ஓட்டை...!
நம் பாட்டன்கள்
நல் பாட்டையை
நமக்களித்ததால்...!
நமது வாழ்க்கையில்
சுமைகள்கூட
சுகமாய்...!
ஆனால்...!
நாம்..!
நம் சந்ததிக்கு
“நாகரீகம்”...!
“அறிவியல் வளர்ச்சி”...! எனும் பெயரில்
எங்கெங்கும்
வேஷம்...!
வஞ்சகம்..!
அகந்தை...!
அழுக்காறு..!
சூட்சுமம்...!
சூழ்ச்சிகள்...! எனும்
விதைகளை
விதைத்து
சூனிய லோகத்தை
விட்டுச் செல்கிறோம்...!
நாம்
நம் முன்னோரை பழிசொல்கிறோம்...!
‘அர்த்தமற்ற வாழ்க்கை
வாழ்ந்துவிட்டு சென்றவர்கள்’ என...!
ஆனால்...!
உண்மையில்...!
அந்த
''அர்த்தமற்ற வாழ்க்கை''யின்
''எச்சத்தின் உச்சத்தில்''தான்
நாம் வாழ்க்கை கொண்டிருக்கிறோம் என்பதை மறந்து...!
அவர்கள்
வாழ்ந்த
வாழ்க்கை
அர்த்தமற்றதுதான்...!
காரணம்...!
‘ஓஸோனின் ஓட்டை’யையும்...!
‘கரைந்துவரும் துருவ பனிப்பாறை’களும்...!
‘உயரி வரும் கடல் நீரும்’...! அதனால்
‘அரித்து வரும் கடலின் கரை’களும்...!
‘மாசடைந்த காற்று’வெளியும்...!
‘மண்ணை ஆக்கிரமிக்கும் கற்கட்டிடங்’களும்...!
‘மரம் அழிந்து, மழை குறைந்து’ வருவதும்...!
இதுபோன்ற
இன்னல்களை....! - தமது
சந்ததியினருக்கு
சீதனமாய் தந்து செல்லாதவர்கள்... அவர்கள்...!
எனவே...
நம் முன்னோர்கள்
வாழ்ந்த
வாழ்க்கை
அர்த்தமற்றதுதான்...!
இன்றைய நமது
‘வாழ்க்கை குறிக்கோளுடன்’தான்...
அது...
“மனிதத்தை” மறந்து...
பணம்...
டப்பு...
காசு...
பைசா...
Money... Money... Money...தான்...!
நட்புடன்...
காஞ்சி முரளி...
கவிதை அருமை...
பதிலளிநீக்குவயலில் விளைந்த 100வது கவிதைக்கு வாழ்த்துக்கள் அக்கா...
azhakaana kavithai sako..!
பதிலளிநீக்குறாபியின் கிறுக்கல்
பதிலளிநீக்குகவிதை வயல் - 100ல்
இக்கவிதைக்கு
முதல் பரிசு...
வாழ்த்துக்கள்...
வாழ்த்துககள்.....
வாழ்த்துக்கள்......
நட்புடன்...
காஞ்சி முரளி...