நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

தோல்வி!..
தோல்வியின் கைகளில்
வெற்றியின் மாலை
தோல்வியை கைகுலுக்கியே
வெற்றிமாலை தோளைத்தொடும்

தோல்வியின் இலையை
மென்றபின்பே
வெற்றி”லை”யின் சார்
உள்ளிறங்கும்

முயற்சியின் முனையில்
வெற்றிக்கனி அதனிடையே
தோல்வியின் தழுவல்கள்

தழுவலின் பிடியில்
நழுவி நழுவி
வெற்றியின் முனையை
கைப்பற்றும் கைகள்

தோல்வியென
துவண்டு கிடந்தால்
துளிர்விடுவது எப்போது?
துணிந்தபின்
தோல்விகள் தவிடாகும்
தவிடே
வெற்றியின் உணவாகும்

பல வெற்றிகளுக்கு முன்பே
பலபல தோல்விகள்
தொட்டும் தழுவியுமிருக்கும்
தோல்விகண்ட வெற்றியே
தெளிவையும் துணிவையும் தரும்

வெற்றியை வென்றிட
தோல்வியிடம் தோற்றுபோ
இல்லையேல்
தோல்வியை தோற்கடி!....

கவிதை வயலுக்காக விளைந்த கவிதையிது
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

4 கருத்துகள்:

 1. நல்ல கவிதை.
  வாழ்த்துக்கள் அக்கா.

  பதிலளிநீக்கு
 2. அன்புடன் மலிக்கா, உங்கள் விருப்பப்படி பெண் எழுத்து தொடர் பதிவில் எழுதினேன். இப்போது உங்கள் கணினி அனுபவம் குறித்து தொடர் பதிவுகள் வலையில் ஓடிக்கொண்டிருக்கின்றன. நீங்களும் சங்கிலியில் இணைய வேண்டுகிறேன். நன்றி.

  பதிலளிநீக்கு
 3. பிறை கண்டு..
  நோன்பை முடிக்கும்..
  “புனித ரமலான் பெருநாள் திருநாள் வாழ்த்துக்கள்...

  நட்புடன்...
  காஞ்சி முரளி.

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது