நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

தறிகெட்ட[து] சுதந்திரம்




விலைமதிக்கமுடியா
மாணிக்கப்பெண்கள் பலர்
விடுதிகளிலும் மட்டுமல்ல
வீதிகளிலும்

விரலிடை போதைக்கும்
சதையுடல் தேவைக்கும்
விலையா[போ]கும்
மாந்தர் கோலத்தில்!

பாரதிக்கேட்ட
புதுமைப் பெண்கள்
பலர் பரக்கோலத்தில்
பலர் அலங்கோலத்தில்

ஆடையணிந்தும்
ஆடையற்றவர்களாகி
ஆண்களை மிஞ்சும்
அழுத்தங்கள் கூடி

பேதைகளல்ல
போதை அடிமைகளாய்
கோதைகளல்ல
கேவல பெண்மைகளாய்!

மேலை மோகம்
மேம்பட்டு மேம்பட்டு
பாழபட்டுப் போகுதோ
பாவையின் நடத்தைகள்

அச்சம் மடம் நாணம் பயிர்
இவையனைத்தும்
அக்கால பெண்கள் சிறப்பு
அழிந்துபோனதோ
இக்கால நவநாகரீத்தில்!

வெட்கமும் நாணமும்
வெட்கி நாணியது
வெக்கங் கெட்டலையும்
வெக்கைகள் முன்னே!

அச்சமும் மடமும்
அஞ்சிப் போனது
அஞ்சாமல் நடக்கும்
அடங்காப்பிடாரிகளின் பின்னே!

சுதந்திரமெனச் சொல்லி
நாகரீக கொள்ளிக்கட்டையால்
சூடுவைத்துக் கொல்லும்
நாகரீக  நங்கையர்கள்

நாளை
நரக படுகுழியினை நோக்கி
இன்றே பயணத்தை தொடங்கும்
நவீன யுவதிகள்........

--------------------------------------

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய். 

8 கருத்துகள்:

  1. இனமஅறியா இளங்கன்னிகள்-குணம் அறியா குள்ளநரிகள்- <

    பதிலளிநீக்கு
  2. பிளாக் அண்டு ஒயிட்...
    “செந்தமிழ் தேன்மொழியாள்
    நிலாவென சிரிக்கும் மலர்கொடியாள்”
    எனும்
    இந்தியாவின்
    “கலாச்சாரப் பண்பாட்டுச் சின்னம்”...

    கலர்...
    “தீப்பிடிக்க... தீப்பிடிக்க...
    கட்டிப்பிடிடா”
    எனும்
    இந்தியாவின்
    “அவமானச் சின்னம்”....

    அக்கால
    எந்நாட்டுத் தமிழ்ப்பெண்...
    உடலெங்கும் மறைக்கும் ஆடைகளுடன்
    தன் மகளுக்கு
    தண்ணீர் தெளிக்க கற்றுத் தருகிறாள்...

    இக்கால...
    இந்நாட்டுப் பெண்ணோ
    (தலையெழுத்து அப்படித்தான் எழுதியாகணும்)
    அங்கஅவயங்களை
    அயலாருக்கு
    விருந்தளிக்கும் ஆடையுடன்...
    “தண்ணி” அடிக்கிறாள்...
    “தம்முடன்”....

    அது... தமிழ்ப்பெண்...
    இது... ????????????????????????
    (எழுதாத வரியும்... சொல்லாத வரியும்?)

    இந்த மாதிரி
    இந்நாட்டுப் பெண் அலைவதால்தான்...
    அங்கங்கே...
    “பகல்நேர, இரவுநேரக் கற்பழிப்புகளின் அரங்கேற்றங்கள்”...

    சும்மா இருக்குறவன சுண்டியிழுக்கு
    விகல்பமாய் ஆடை அணிந்து...
    வம்ப விலைக்கு வாங்கும்
    இக்காலத்தில் உலவும் சில
    “அவமானச் சின்னங்கள்”...

    பாரதி மட்டும்...
    உயிரோடு இக்காட்சியைக் கண்டிருந்தால்...
    “பெண்ணடிமைத்தனம்” வேண்டுமென்று பாட்டெழுதியிருப்பான்...

    நட்புடன்...
    காஞ்சி முரளி.....

    பதிலளிநீக்கு
  3. நாகரிகமென்ற பெயரில் இன்றைய பெண் பிள்ளைகள் செய்யும் செயல்களை அழகாய் படம்பிடித்து காட்டியுள்ளீர்கள் தோழி !!!

    பதிலளிநீக்கு
  4. பெண்ணுரிமை, பெண் சுதந்திரம் ஆகியவற்றை தவறாக அர்த்தம் செய்து கொண்டு தறிகெட்டுத் திரியும் பெண்களைப் பற்றிய கவிதையின் வரிகள் அனைத்தும் சுளீர் சுளீரெனத் தெறிக்கின்றன! வெகு ஜோர்!

    பதிலளிநீக்கு
  5. கலாசார சீர்கேட்டை தொடங்கியது பெண்கள் என்றாலும் அதில் அதிகம் பங்கு பெற்றோரை சாறும்

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது