நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

உறவில்லா ஒரு உறவு!


உனக்கும் எனக்குமான உறவு
தொப்புள்கொடி வழி வந்தல்ல
நட்புக் கிளையில் வளர்ந்தது
உறவில்லாமல் உருவான
ஒரு உன்னத உறவு

அக்கொடி வெட்டியபின்பே
வளர்கிறது அளவுகடந்த பாசம்
இக்கொடி வளர்வதிலேதான்
உயிர் உருகித்தொடர்கிறது  நேசம் 

பள்ளியில் உருவானாலும்
பாதையில் உருவானாலும்
தொண்டு தொட்டு நீளவே
நீயும் நானும் விரும்புகிறோம்

இடையில் இடைவெளியோ
எப்போதாவது இடைவெளியோ
அதை விரும்புவதில்லை
ஒருபோதும் நீயும் நானும்!

காற்றடிக்கும் திசைகளில்
மண்மணக்கபெய்யும் மழைகளில்
உனக்கும் எனக்குமான நட்பினை
ஒரு நொடியாவது நினைவில்
வந்துபோகமலிருப்பதில்லை!

காலசூழலில் காணமல்போகும் சில 
கனவுகளைப்போல்
கண்காணா தூரங்களில்
மறைந்துவாழ்கிறோம் அதுதானே தவிர 
மறந்து வாழ்வதில்லை!

வாழை !
வாழையடி வாழையாக
வாழாமல் வீழ்வதில்லை..
அன்புடன் மலிக்கா 
இறைவனை நேசி இன்பம் பெறுவாய். 

3 கருத்துகள்:

 1. “உறவில்லா... ஒரு
  உறவு”

  நல்ல தலைப்புதான்...

  கவிதாயினிக்கு
  கவிதை தலைப்பு வைத்திட
  கற்றுக் கொடுக்க வேண்டுமா என்ன?

  சரி...

  இதென்ன...
  புதுப்பழக்கம்....

  ”போட்டோ”வ சுடறது...

  அவ்வ்வ்வ்வ்வ்வ்

  பதிலளிநீக்கு
 2. ஹலோ...

  கவிஞர் மலிக்காவுக்குப் போட்டியா...
  நானும் கிறுக்கியிருக்கும் கிறுக்கலைப் பாருஙகப்பா...

  “கான மயிலாட - அதைக்
  கண்டிருந்த வான்கோழி..
  தானும் ஆடியது...
  தன் பொல்லாச் சிறகை விரித்து” என்பது முதுமொழி...

  இதோ...
  இந்த ‘வான்கோழி’யின் ஆட்டம்...

  பச்சை வயலிடையே
  கரிசல் மண் பாதையிலே...
  வெண்முத்து மழைச்சாரலிடையே..

  வாழைச் சருகை
  குடையாய்ப் பிடித்து
  கும்மாளமடித்து வந்த நாட்கள்தான்
  வருமோ... நண்பனே...

  அன்று
  உறவு என்பதே
  நீயும் நானும் மட்டுமே...
  உனக்கும் எனக்கும்
  இருப்பது மட்டுமே
  உறவு...

  அன்று..
  நமக்கு
  ‘ஆசை’ அதிகமுமில்லை...
  ‘தேவை’ அதிகமுமில்லை...
  ‘தேடல்’ தேவையுமில்லை...

  நாம் வளரத் தொடங்கியதும்..
  நமக்குள்
  ‘ஆசை’யும்..
  ‘தேவை’யும்..
  ‘தேட’லும்.. துவங்கி...

  தொலைதூரத்தில்...
  தொலைத்துவிட்டோம்... நம் நட்பை...
  தொலைந்துவிட்டோம்... நம் நட்பின் நாட்களை..

  அன்று...
  தொலைதூரத்தில் நாமிருந்தாலும்.. நம்
  நினைவுகள் அருகருகேதான்...
  இன்றோ...
  பக்கத்தில் நீயிருந்தாலும்... நம்
  நினைவுகள் தொலைதூரத்தில்தான்...

  காரணம்...

  வாழ்க்கையில்...
  ‘தேடல்’...
  ‘தேடல்.. என
  உடல்வலிவு வரை ‘தேடல்’...
  உள்ள வலிவு உள்ளவரை ‘தேடல்’...
  தேடித் தேடியே
  தேய்ந்போனது...
  தேகமும்... உள்ளமும்...

  இதில்...
  ‘அன்றைய நம் நாட்கள்’ மட்டுமே..
  அவ்வப்போது வரும்...
  மகிழ்ச்சியின் கீற்றாய்
  மின்னும் மின்னல்....

  நட்புடன்...
  காஞ்சி முரளி...


  எப்புடி?

  பதிலளிநீக்கு
 3. இனிமையான சில நினைவுகளை மறக்கவே முடிவதில்லை... அழகிய கவிதைக்கு வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது