நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

தீராத தீவிரவாதம்!


அச்சங்களோடு அனுதினமும் போராடி
அவதிகளின் பிடியில் கண்ணீர் நீராடி
ஆயிரமாயிரம் உயிர்கள் அடியோடு
அழிந்து போகுதே மண்ணோடு!

உள்ளுக்குள்ளே புகைந்து
உலகெங்கும் வெடிக்குதே!
உள்ளுணர்வ கொதிக்கவச்சு
உயிர்களெல்லாம் சிதையுதே!

அச்சமச்சம் கொண்டு
நித்தம் நித்தம் வேகுதே!
அஞ்சாநெஞ்சு கூட்டமெல்லாம்
ஆணவத்தில் அலையுதே!

வாதங்களை பேசியே
வஞ்சனைகள் செய்யுதே!
தீவிர வாதங்களை தூண்டியே
தீவிரவாதிகளா மாத்துதே!

சாதிபேரச் சொல்லி
சாகடிக்குதுங்க ஒரு கூட்டம்!
மதம்பேரச் சொல்லி
மாழுதுங்க மறுகூட்டம்!

தீவிரமா யோசிச்சி
தீர்க்குதுங்க ஒரு கூட்டம்!
திண்டாடி திணறியே
தீயாக்குதுங்க மறுகூட்டம்!

ஆத்தாடி மனிதமெல்லாம்
அடியோட அழியுதே!
பாத்தாலே மனசெல்லாம்
பதறித்தான் துடிக்குதே!

தீராதோ தீராதோ
தினந்தோறும் நடக்கும் தீவிரவாதம்
தீரவேண்டும் தீரவெண்டுமென
தினம் நடக்குதே 
இறையிடம் மன்றாட்டம்...


”ஈகரை”க்காக எழுதியது..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய். 

7 கருத்துகள்:

  1. தீவிரவாதத்தின் தீவிரத்தை தீர்க்கமாக சொன்ன வரிகள்

    மனதில் ஆழ அழுந்த பதிந்தது

    அருமையான பகிர்வு சகோதரி.

    பதிலளிநீக்கு
  2. வாங்கண்ணா ரொம்ப நாளாச்சி இந்தபக்கம் வந்து.

    அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்கும் மிக்க சந்தோஷம்..

    மிக்க நன்றிண்ணா..

    பதிலளிநீக்கு
  3. ஜீவானந்தம்11 ஜூன், 2013 அன்று 4:07 PM

    ஆத்தாடி மனிதமெல்லாம்
    அடியோட அழியுதே!
    பாத்தாலே மனசெல்லாம்
    பதறித்தான் துடிக்குதே!//


    உண்மைதான் மலிக்கா

    மிக ஆழமான கருத்துகள்

    பதிலளிநீக்கு
  4. அழகான கவிதை...

    பகிர்விற்க்கு நன்றி....

    :) :-) :-))

    பதிலளிநீக்கு
  5. தீராதோ தீராதோ
    தினந்தோறும் நடக்கும் தீவிரவாதம்//வருத்தமாகத்தான் உள்ளது

    பதிலளிநீக்கு
  6. கவிஞர் அவர்களே...

    “தீராதது”தான் தீவிரவாதம்...

    “தீர்ந்தது” என்றால்...
    “தீவிரவாத”த்திற்கு
    தீர்வு கண்டுவிட்டால்...

    மனிதம் வளர்ந்து...

    மானுட
    பாதையிலெல்லாம்
    இரத்தசகதி தோய்ந்த
    பிணங்களுக்கு பதிலாக...
    பூக்கள்
    பூத்துக்குலுங்கும்...

    மானுட
    வானத்தின்
    எல்லையெல்லாம்..
    பாஸ்பரசின்
    நாற்றத்திற்கு பதிலாக
    பன்னீர்ரோஜாவின்
    பூவாசம் வீசும்
    பூலோகம் முழுதும்...

    இது...
    கனவுகளில்கூட
    கனவு காணமுடியாத
    கற்பனை நினைவுகள்...

    காரணம்...
    ஓர் உதாரணத்தின் மூலம் விளக்குகிறேன்..

    எனக்கு
    கவிஞர் மலிக்கா ஃபாரூக் வளர்ச்சி பிடிக்கவில்லையென்றால்...

    ஒதுங்கி கொள்வது... அல்லது
    ஒதுங்குவது...
    ஒதுக்குவது...
    மனிதன் செய்யும்
    மனிதமுள்ள செயல்...

    ஆனால்...

    வக்கிர எண்ணம் கொண்ட நான்...
    மிருகத்தின் சுவடுகளை - அடி
    மனத்திலே புதைத்து
    உறங்கிக் கொண்டிருந்த
    மிருக குணத்தை தட்டியெழுப்பு...

    உங்களை வீழ்த்த
    அம்மிருக குணத்தை
    தங்கள்மீது ஏவிவிடுவது..

    எப்படியென்றால்...

    தங்கள்
    சாதியையும்..
    மதத்தையும்...
    இனத்தையும்...
    மொழியையும்..
    இனங்காட்டி
    இவர் இப்படித்தான்..
    என்ற முத்திரையைக் குத்தி
    துவக்குகிறேன்...
    எனது “தீவிரவாதச்” செயலை...

    இப்படித்தான்
    “விதை“ ஊன்றப்படுகிறது..
    “தீவிரவாதம்” எனும்
    கொடிய விருட்சத்திற்கு...

    இது...
    ஒருவர்.. இருவருக்கும்..
    இருவர்.. நால்வருக்கும்...
    நால்வர்.. நாற்பது பேருக்கும்...

    இப்படியே...

    நாலு கோடி மக்களுக்கும்

    தன் வக்கிரத்தை
    மனத் “தீவிரவாதத்தினால்”
    கொடிய நஞ்சை பரப்பிடும் நான்..

    உங்களைப் பழிவாங்குவதாக நினைத்து..

    ஒரு சமுதாயத்தையே..
    ஒரு நாட்டினரையே...
    ஒரு இனத்தையே...

    எனத் துவங்கி...

    அது
    இறுதியில்...
    பூவுலகை
    பூகம்பமாய்
    தாக்கி
    தகர்க்கிறது...

    ஒரு தனிப்பட்ட
    எனது காழ்புணர்வை...
    “தீவிரவாதமாக்கி”
    நஞ்சை..
    நச்சை...
    இப்புவியெங்கும் பரப்பிடும்

    நானும்...
    எனது தீவிரவாதமும்...

    எப்போது “தீரும்”...


    அதனால்தான்
    ஆரம்பத்திலே சொன்னேன்...

    “தீராதது”தான் தீவிரவாதம் என...


    வானுள்ள வரை
    வான்வழியுள்ள வரை...

    நீருள்ள வரை
    நீர்வழியுள்ள வரை...

    நிலமுள்ள வரை
    நிலவழிப் பாதையுள்ள வரை...

    தீராது..
    தீராவது..
    தீரவேத் தீராவது
    “தீவிரவாத”மும்..
    “வன்முறை”யும்..

    நட்புடன்...
    காஞ்சி முரளி...


    பதிலளிநீக்கு
  7. தீவிரவாதம் ஒழியும் நாள்தான் திருநாள் . நல்ல கவிதை

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது