பொய்வேசங்கள் புனைய!
பாசாங்குகள் காட்ட!
கள்ளத்தனம் புரிய!
கருணைபோல் நடிக்க!
இன்னும்
மண்ணுக்குள் செல்லும்வரை
பலவகை நாடங்கள் நடத்த
மனிதமுகங்களுக்குதேவை
தினம் ஒரு முகமூடி!
தன்னை
தற்காத்து கொள்வதாய் எண்ணி
இயற்கை குணத்தை மறைத்து
செயற்கை மூடிகளை மாற்றுவதால்
தன் இயல்பான குணமும் மனமும்
இருளடைவதை அறிவதற்கு
வாய்ப்பில்லாமல் போவதை
உணர்வதில் தடுமாற்றம்.
எதற்குதான் இப்படியான
தினம் ஒரு மாற்றம்
உண்மையும் பொய்மையும்
ஒருபோதும்ஒற்றுமையாது
உள்ளமறிந்தபோதும்
ஒத்துக்கொள்வதில்லையே
நிலை மாறும் மனது..
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
போடும் வேடம் தன்னையே திருப்பி தாக்கும் போது புரிந்து விடும்...
பதிலளிநீக்குதொடர வாழ்த்துக்கள்...
”முகமில்லா மூகமூடி வாழ்க்கை..”
பதிலளிநீக்குஇன்றைய மனிதன்...!
படுக்கையிலிருந்து…
எழும்போதும்
விழும்போதும்
முகமூடியுடனே….!
ஊருக்காக…!
உறவுகளுக்காக…!
சொந்தங்களுக்காக…!
நட்புகளுக்காக…!
அண்டை அயலாருக்காக மட்டுமல்ல…!
தனக்குத்தானே
உரையாடும்போதும்
முகமூடியுடனே…!
நேரத்திற்கொரு முகமூடியையும்…!
நிமிடத்திற்கொரு முகமூடியையும்…!
நொடிக்கொரு முகமூடியையும்…!
அணிந்து அணிந்து
தன் நிஜ முகத்தையே மறந்துவிட்டவன்…!
தன் முகத்தையே தொலைத்துவிட்டவன்…!
எனவே…!
மனிதர்களில்
இவன்
தொலைந்துபோனவன்…!
நிஜங்களை இழந்த நிழல்கள்…!
நிலையாய் நிலைத்திருக்குமா?
நிஜமே
நிர்மூலமானபின்
நிஜங்கள்
நிலைப்பதேது…?
அதைப்போலத்தான்…!
முகமூடி அணிந்தே… நிஜ
முகத்தையே
மறந்த… இந்த
மனிதனுக்குள்
‘மனிதம்’
மரித்துபோனது உண்மைதானே…!
நட்புடன்…
காஞ்சி முரளி…
எப்புடி....
என்னயிருந்தாலும்...
கவிஞர் மலிக்கா போல வருமா என்ன?
திண்டுக்கல் தனபாலன் கூறியது...
பதிலளிநீக்குபோடும் வேடம் தன்னையே திருப்பி தாக்கும் போது புரிந்து விடும்...
தொடர வாழ்த்துக்கள்.//
உண்மைதான் சகோ..
போடும் வரைதான் வேசம் கலையும்போது தெரியும் மோசம்.
தொடர்ந்து வந்து ஊக்கம்தரும் தங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை சகோ.
திண்டுகல் சகோ
தினம் தினம்
தரும் சொற்கள்
நெஞ்சத்தில்
நிறைந்து நிற்கும்
நேசங்கள்
தங்களுக்கு என்மனம்
நிறைந்த நன்றிகள்..
நிஜமே
பதிலளிநீக்குநிர்மூலமானபின்
நிஜங்கள்
நிலைப்பதேது…?
//
வரிகள் அனைத்திலும் அழுத்தம் புலவரே.. வேண்டாம்பா புலவருன்னா அடிக்கவந்துருவீங்க. உண்மையயும் சொல்லமுடியல.
//எப்புடி....//
செம நச் நெத்தியடி..
//என்னயிருந்தாலும்...
கவிஞர் மலிக்கா போல வருமா என்ன?//
கிண்டல் நக்கல், விக்கல் சுக்கல் எல்லா கல்லும் சேர்த்துல வருது..
வரட்டும் வரட்டும் ரொம்ப நாளைகப்புறம். ஸ்பாமில் போகாமல் நேரடியா வந்தமைக்கு வாழ்த்துகள்..
அருமையான கவிதைக்கு நெஞ்சார்ந்த பாராட்டுகள்.
unmaithaan sako...
பதிலளிநீக்குSeeni கூறியது...
பதிலளிநீக்குunmaithaan sako..//
உண்மைகள் சொன்னால் யாருக்கும் பிடிக்காது சகோ, ஏனெனில் பொய்களின்மேல் வாழ்க்கை நாட்டியம் அரங்கேற்றப்படுவதால், உண்மை சதங்கைகளின் சத்தம் ஊமையாகிபோகின்றன..
மிக்க நன்றி சகோ
மனிதன் இறைவனை நேசிக்க
பதிலளிநீக்குமறந்ததின் தேவை பல முகமூடிகளே.
நேசத்திற்கு ஒரே முகம்.சிறப்பான கருத்துகள்
அழகான சிந்தனைகள் மேம்.
பதிலளிநீக்கு