நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

சேமிப்பு!

சேர்த்துகொள் சேர்த்துக்கொள்
சம்பாரிப்பதில் சேர்த்துக்கொள்
சேர்க்கத் தவறி விடும்போது
சோர்வு தனதாகிவிடும்!

சேர்த்துகொள் சேர்த்துக்கொள்
சிலவு செய்வதிலும் சேர்த்துகொள்
சேர்க்கத் தவறி விடும்போது
சிக்கல் உனதாகிவிடும்!

கடுங்சிக்கனம் கஞ்சத்தனம்
கடைந்தெடுத்த கருமித்தனம்
கடுகளவேனும் இருந்தாலும்கூட
கடுகும் கொடுக்கவிடாத மனமாகிவிடும்!

கண்டபடி சிலவு செய்தால் -பின்பு
கஷ்டம் இல்லத்தில் புகுந்துகொள்ளும்
கவலை மனதில் குடியேறி
கண்ணீர்விட்டு அழ வேண்டிவரும்!

நல்ல உடம்பின் நலமும் கெடும்போது
கட்டு கட்டாய் பணமும் வேண்டும்
நாலு காசு கையில் இல்லையெனில்
காலம் போகப்போக தலைக்கிறுக்கு அதிகரிக்கும்!

சேமிப்பு கொஞ்சம் இல்லையென்றால்
உடலிருந்தும் உயிரற்ற நடைபிணமாயக்கூடும்
முதுமை சிறந்து பலனுமடைய
சேமிப்பின் பலத்தைக் சற்று கூட்டவேண்டும்!

சேமிப்பு இல்லா இடங்களிலே
சோதனைகள் சூழ வாய்ப்பிருக்கும்
நிகழ்கால உழைப்பினிலே
எதிர்கால சேமிப்பின் நன்மையிருக்கும்!

பணம் சேர்க்கும் போதினிலே-நல்ல
குணமும் சேர்த்[ந்]து சேர்க்கவேண்டும்
இரண்டும் சேர்ந்துயிருந்தால்தான்
இல்லம் இதயம் இரண்டின் சுகமும் தொடரும்..

-----------------------------------------------------
டிஸ்கி// அதுக்காக, கண்டதிலும் நின்னடதிலும் போய் பணத்தை சேர்த்துவைக்கிறேனும், வட்டி வானுயரதரோமுன்னு சொல்வதை நம்பியும் உள்ளதையெல்லாம் மொத்தமா கொடுத்துவிட்டு அம்போன்னு நின்னுடாதீங்க. எத்தனையோ நல் வழிகளிருக்கு அதனை பயன்படுத்தி சேர்த்துவைங்க,சிரமப்படுவோருக்கு வட்டியில்லாமல்  கொடுத்துதவியும் சேர்த்துவைக்கலாம், இரட்டி நன்மையும் உண்டாகும்..

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய். 

7 கருத்துகள்:

 1. கவிதையும். டிஸ்கியும் மிக அருமை மலிக்கா..

  எப்படிச்சொன்னாலும் ஏமாந்துகிட்டேதான் இருப்பாங்க நம்ம சனங்க.

  பதிலளிநீக்கு
 2. கவிதையும். டிஸ்கியும் மிக அருமை மலிக்கா..

  எப்படிச்சொன்னாலும் ஏமாந்துகிட்டேதான் இருப்பாங்க நம்ம சனங்க.

  பதிலளிநீக்கு
 3. மிகவும் அருமையான பயனுள்ள படைப்பு.

  டிஸ்கியில் சொல்லப்பட்டவைகளும் நல்ல விஷயங்கள் தான்.

  பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 4. சேமிக்கணும்னு சொல்லிட்டு வந்த கவிதையில முத்தாய்ப்பா பணம் சேக்கறதோட நல்ல குணத்தையும் சேமிச்சு வைச்சுக்கணும்னு சொன்னது அருமைம்மா! உடல் நலமின்றிப் போனால் அவசரத்துக்கு கை கொடுக்க மற்றவர்களை எதிர்பார்ப்பதைவிட சேமிப்பை நம்பலாம் என்பது அனுபவ தங்க மொழி!

  பதிலளிநீக்கு
 5. நல்ல கருத்துக் கவிதை...

  அதுசரி...

  மலிக்கா மேடம் போல சேர்த்து வைக்க முடியுமா என்ன?

  அந்த மாதிரி டேலண்ட்டெல்லாம் நமக்கு வராதுங்க...

  பதிலளிநீக்கு
 6. சேமிப்பு அனுபவம் வழியே வந்து மற்றவர்களுக்கும் வழி காட்டுகிறது . நல்லதை பகிர்ந்து கொள்வதில் ஒரு மகிழ்வுதான். பெண்களுக்கு மறுபெயர் சேமிப்புதான் .அது சிறு வயதிலேயே தொடரவேண்டும் .குழந்தையாக இருக்கும் போது உண்டியல் வாங்கிக் கொடுத்து தாய் உற்சாகம் கொடுக்கும் மாண்பு வளர, வளர அது வாழ்வோடு ஒன்றி சிறப்பிக்கிறது.வளமான வாழ்விற்கு அடித்தளம் போடுகிறது . குடும்பம் உயர்வடைய குடும்பத் தலைவியிடத்தில் இது அவசியம் இருக்க வேண்டும் .கணவன் பொருள் ஈட்டி மனைவியிடத்தில் குடும்பச் செலவுக்கு கொடுக்க அதில் ஒரு பகுதியை மனைவி சேமித்து தங்க மனதுடன் தங்க நகை சேர்த்து வைக்க் அவசர காலத்தில் (அல்லது ஒரு சொத்து வாங்க குறைவான இடத்தை அது நிரப்பி )அது உதவக் கூ டியதாக அமைந்து விடுவதனை அறிவோம்.அனுபவத்தில் கண்ட உண்மை
  'டிஸ்கி '
  'டிஸ்கி 'இதன் பொருள் தெரியவில்லை .இதற்கும் ஒரு விளக்கம் கவிதையில் தாருங்கள்

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது