நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

புரிந்துணர்தலற்று!



மலரினம் நீயடி என்கிறான்
மாலையிலேயே மடிவது அறியாமலா?

வானவில் நீதானடி  என்கிறான்
வந்து சிலநொடியில் மறைவது புரியாமலா?

நிலவினம் நீயடி என்கிறான்
காற்றற்று கிடப்பது தெரியாமலா?

ஓவிய தேவதை நீதானடி என்கிறான்
உணர்வற்று இருப்பது விளங்காமலா?

அத்தனையும் உன்னினம் என்கிறான்
அட பெண்ணினம் மென்மையினமென்கிறான்

அத்தனை ஏமாற்றுமா?
ஆணினம்!

அல்லது ஏமாற்றத்தில் இன்பம் காணுமா?
பெண்ணினம்!

காதல் செய்யும் பொழுதிலே
காதல் வார்த்தைகள் மெய்திடுமோ !

தொலைதூர கானல் நீராய் தெரிவதுபோல்
கல்யாணமனதும் பொய்திடுமோ!

புரிந்துணரதா மனங்களுக்கு
கானலும் காதலும் ஒன்றாகிடுமோ!

புரியாத புதிராகி இருவரின்
திருமண வாழ்க்கையும் திண்டாடிடுமோ!



அன்புடன் மலிக்கா 
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

2 கருத்துகள்:

  1. காதல் செய்யும் பொழுதிலே
    காதல் வார்த்தைகள் மெய்திடுமோ !
    //

    காதலிக்கும்போது தெரிவதில்லை மலிக்கா இருவருக்குள் இருக்கும் சில கெட்டகுணங்களும் புரிந்துக்கொள்ளத்தெரியா நிலைகளும் அதனாலேயே பல காதல் திருமணங்கள் தோற்றுக்கொண்டுவருகிறது

    யார் சொல்லியும் கேட்காது காதல் அதுபோல் தான்சொல்லியும் கேட்காது கலயாணம்..

    பதிலளிநீக்கு
  2. நல்ல கவிதை...

    வாழ்த்துக்கள் அக்கா.

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது