நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

எல்லோருக்கும் வாய்ப்பதில்லை!


இப்பூமியில் பிறக்கும்  ஒவ்வொரு மனிதனுக்கும் பிறப்பு +--------- + இறப்பு இவ்விரண்டுக்குமிடையில் இருக்கும் வாழ்க்கை  என்னும் வாழ்வியலில்  ஒவ்வொருக்கும் ஒவ்வொருவிதமான அனுபவங்கள், பிறந்த அனைவருக்குமே  வாழ்க்கை சிறப்பாக அமைவதில்லை, அப்படி அமைந்த வாழ்க்கையிலும் சிலருக்கு நிம்மதியில்லை. அனைவருக்குமே வாழ்க்கையில் ஏதோ ஒருவகையில் ஏதோ ஒரு ஏக்கம், எதிர்பார்ப்பு , என தனது தள்ளாத வயதுவரையிலும் ஏதோ ஒன்று தடைபடும், ஏதோ ஒன்று விடுபடும்.

அதில் மிகசிலரே வாழ்க்கையில், வருத்தங்கள், சங்கடங்கள்,வேதனைகள், துன்பங்கள், என அனைத்திலும் கொஞ்சம் கொஞ்சம் சுவாசித்தபோதிலும், கஷ்டங்கள் வந்தபோதிலும், அதனை இவ்வுலகதிற்கான பரிச்சையென்னும் பயிற்ச்சி மறு உலகிற்கான வெற்றிபாதைக்காட்டும் நல்வழியென்ற வாழ்வின் மொத்த பாகங்களையும், வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் சிலர். அதன் வழியிலிலேயே தன் சிறிய வயதுக்குள் வாழ்ந்து நிறைவு காணுவார்கள். அப்படி நிறைவு காண்பவர்கள் பட்டியலில் நானும் ஒருத்தி என்பதில் மிகுந்த மகிழ்ச்சியே.

திருமணதிற்க்குபிறகே பெண்ணின் வாழ்க்கையில் பூர்த்திக்கள் ஏற்படுகிறது, அன்பான கணவன், அவர்மூலம் பெற்றெடுக்கும் குழந்தைகள், அவர்களுக்கு திருமணம், அவர்களின் குழந்தைகள், என்ற அழகிய வாழ்க்கைக்கூட்டிற்க்கும் அர்த்தங்களும் ஆனந்தங்களும் கொட்டிக்கிடக்கிடகின்றன, தனது குழந்தைகளுக்கும் அமையும் வாழ்க்கையும் மனதிருப்தியை தந்துவிட்டுவிட்டால் இப்பூமியில் நிறைந்த மனதோடு இருப்பார்கள்,பெற்றோர்களின் சந்தோஷமும் நிம்மதியும் தான்பெற்றுடுத்த பிள்ளைகள் வாழும் வாழ்கையிலிலேயே இருக்கிறது. அப்படியான வாழ்க்கையை எனது மக்களும் பெற்றிடவேண்டும்.  ஈருலகிலும் எங்களின் வாழ்க்கையும் சிறப்பாக இருக்கவேண்டும்.

இதோ அப்படியான ஒரு மனநிறைவோடு உங்கள் முன் நான், எனது 34 வது வயதில், எனது மகளின் குழந்தையை கையில் ஏந்தியவன்னம் அல்ஹம்துலில்லாஹ், மிகுந்த சந்தோஷத்திலும் ஆனந்தத்திலும் மனது ரெக்கைகட்டிப்பறக்கிறது. அடுத்து எனது மகனுக்கானது, தற்போதைக்கு படிப்பு [அட இப்பதானே 9 ஆம் வகுப்பு] அது முடிந்ததும் அற்புத வாழ்வு அனைத்தையும் அவனுக்கும் சிறப்பானதாக அமைத்துத்தர வல்ல இறைவன் போதுமானவன்.

சிறுவயதிலிருந்து இறைவன்மீதுமட்டும் எனக்கு அசைக்கமுடியா நம்பிக்கையும், நேசமும். நான் நினைத்தவைகளை நிறைவேற்றித்தரும் வல்லமையுடையவனும் அவன்மட்டுமே. எல்லாப்புகழும் அவன் ஒருவனுக்கே! அவனே வானம் பூமியாவையும் படைத்து அதில் இயற்கைகளையும் அமைத்து, அதனை அனைத்தையும் அனுபவிக்க நம்மையும் படைத்த இறைவனை நேசிப்பதோடு, இப்பூமியில் நமக்கு நடப்பதெல்லாம் நன்மைக்கே என எண்ணங்கொள்வதுடன், அளவோடு எதையும் எதிர்ப்பார்த்து வாழும்போது உங்கள் வாழ்க்கை உங்கள் கட்டுக்குள் வசந்தமாய் தவழும் இன்ஷாஅல்லாஹ்.

எல்லோருக்கும் வாய்ப்பதில்லை
வாழ்க்கை வாழ்க்கையாய்!
எல்லோரும் வாழ்ந்து விடுவதுமில்லை,
வாழ்க்கையை  நிறைவாய்
ஆனபோதும் வாழ்கிறார்கள்
வாழ்க்கையை
வாழ்க்கையாய்! நிறைவாய்!
அன்புடன் என்னைப் போலவும்..


தற்போது பஃஹ்ரைனிலிருந்து உங்கள்
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய். 

17 கருத்துகள்:

  1. அன்பு மல்லி... அஸ்ஸலாமு அலைக்கும்!

    //இதோ அப்படியான ஒரு மனநிறைவோடு உங்கள் முன் நான், எனது 34 வது வயதில், எனது மகளின் குழந்தையை கையில் ஏந்தியவன்னம்//

    அல்ஹம்துலில்லாஹ்..! மல்லி பாட்டிக்கு வெற்றிலை, பாக்கு பார்சல் அனுப்பியிருக்கேன்.. பேத்தியை இடித்து கொடுக்க சொல்லு :))

    //அனைவருக்குமே வாழ்க்கையில் ஏதோ ஒருவகையில் ஏதோ ஒரு ஏக்கம், எதிர்பார்ப்பு , என தனது தள்ளாத வயதுவரையிலும் ஏதோ ஒன்று தடைபடும், ஏதோ ஒன்று விடுபடும்//

    அவை ஒவ்வொன்றும் மறுமைக்கான பயிற்சி என பொறுமை செய்வதில் கிடைக்கும் சுகமே தனிதான் மலிக்கா! :)

    //இப்பூமியில் நமக்கு நடப்பதெல்லாம் நன்மைக்கே என எண்ணங்கொள்வதுடன், அளவோடு எதையும் எதிர்ப்பார்த்து வாழும்போது உங்கள் வாழ்க்கை உங்கள் கட்டுக்குள் வசந்தமாய் தவழும் இன்ஷாஅல்லாஹ்//

    இன்ஷா அல்லாஹ், நிச்சயமா! செல்லக்குட்டி ஷெஸா ஃபாத்திமா, பாட்டி மாதிரியே துருதுருப்பா வருவான்னு நினைக்கிறேன். மாஷா அல்லாஹ்.. அதன் பார்வையும், கன்னங்களும் எவ்ளோ அழகு!! இந்த பாட்டியின் அன்பு முத்தங்களைக் கொடுத்துவிடு மல்லி :) அல்லாஹ்தஆலா அவளுக்கு நீடித்த ஆயுளையும், நோயற்ற‌ வாழ்வினையும், உறுதியான ஈமானையும் தந்தருள்வானாக!

    பதிலளிநீக்கு
  2. அடி மல்லி இதெல்லம் ரொம்ப ஓவர்டி, இன்னும் நாங்க பிள்ளையையே ஆளாக்கல அதுக்குள்ள நீ பேத்தி எடுத்துட்டே. மாசா அல்லாஹ்.

    ரொம்ப சந்தோஷமாக இருக்கு மலிக்கா, நீ எப்போதும் போதுமென்ற எண்ணமுடையவள் அதனாலேயே உனக்கு அனைத்தும் சிறப்பாக அமையுது.

    உன்னைபோலவருவா செல்லகுட்டின்னு நெனக்கிறேன்

    அக்கா அஸ்மாக்கா. மல்லிக்கு வெத்திலைபாக்குபதிலா நல்ல கனமான மைசூர்பாகு பார்சல் அனுப்புங்க, அவ்வளவு ஸ்டார்ங்கனவாள் இவள்..

    என்ன யாருன்னு தெரியுதா

    நாந்தாண்டி பானு.. நஸிமா பானு[குடந்தை]

    பதிலளிநீக்கு
  3. மாஷா அல்லாஹ் அக்கா... பிறந்த குழந்தைகள் இப்படி நேருக்கு நேர் பார்ப்பது மிகவும் அரிது.... (அப்ப ஷெஷா குட்டியை முதன் முதலில் கையில் ஏந்தத்தான் பஹ்ரைனிற்கு பயணமா???) நல்லா சுத்திப் போடுங்க குட்டியின் குட்டிப் பாட்டி :)

    ஈருலகிலும் நல்வாழ்வு இறைவன் அளிப்பானாக!

    பதிலளிநீக்கு
  4. அல்ஹம்துலில்லாஹ்!! எதிர்பார்த்துக் கொண்டேயிருந்தேன் இந்த நற்செய்தியை!! (பஹ்ரைனுக்குப் போயிருக்கேன்னு சொல்லும்போதே தெரிஞ்சுகிட்டோமே) :-))

    சின்ன வயசிலேயே, முழு ஆரோக்கியத்தோட இருக்கும்போதே பேரக்குழந்தைகளைக் கொஞ்சக் கிடைக்கிறது பெரிய பாக்கியம்தான். உங்களுக்கு இறைவன் தந்திருக்கிறான். கொண்டாடுங்க!! ஆமா, தாய்மாமன் என்ன சொல்றாராம்? :-))))

    பதிலளிநீக்கு
  5. மலிக்கா மஷா அல்லா வாழ்த்துக்கள்.வாழ்த்துக்கள்
    அட குட்டி பாட்டிமாவா

    இறைவன் அனைவருக்கும் நல் கிருபை புரிவானாக
    சமீராவ விசாரித்ததாகவும் , துஆ செய்ததாகவும் சொல்லுங்கள்

    பதிலளிநீக்கு
  6. சிறுவயதிலிருந்து இறைவன்மீதுமட்டும் எனக்கு அசைக்கமுடியா நம்பிக்கையும், நேசமும். நான் நினைத்தவைகளை நிறைவேற்றித்தரும் வல்லமையுடையவனும் அவன்மட்டுமே. எல்லாப்புகழும் அவன் ஒருவனுக்கே//

    இவைதான் மலிக்கா உங்களை இந்தளவுக்கு உயர்த்தியிருக்கு..

    இன்னும் மென்மேலும் தாங்கள் சிறப்பாக வாழ எங்களின் பிராத்தனைகள் எப்போதும்..

    பதிலளிநீக்கு
  7. முதலில்...

    மலிக்கா “பாட்டி”க்கு வாழ்த்துக்கள்...

    சமீராவுக்கும் வாழ்த்துக்கள்...


    சொல்லவேயில்ல....

    இருந்தாலும்...
    என் இதயங்கனிந்த வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  8. வாழ்க்கையை வாழ்க்கையில் இருக்கும்போது அவ்வப்போது அலசிக்கொண்டே இருக்க வேண்டும் மலிக்கா. அப்படி அலசாமல் நாம் சந்தோசமாய் நாட்களைக் கழித்தால் வாழ்க்கை உங்களை இழுத்து வந்து அலசு என்று ஆணையிடும். என்ன சொல்றீங்க? நான் அவ்வப்போது வாழ்க்கை பற்றி கவிதைகள் எழுதி இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  9. வாழ்த்துக்கள் மலிக்கா.பேத்தியும் பெயரும் அழகு.மாஷா அல்லாஹ்!

    பதிலளிநீக்கு
  10. வாழ்த்துக்கள் மலிக்கா.யாம் பெற்ற இன்பம் இம்மல்லியும் பெறுக!

    பதிலளிநீக்கு
  11. சின்ன வயசிலேயே, முழு ஆரோக்கியத்தோட இருக்கும்போதே பேரக்குழந்தைகளைக் கொஞ்சக் கிடைக்கிறது பெரிய பாக்கியம்தான். உங்களுக்கு இறைவன் தந்திருக்கிறான். கொண்டாடுங்க!! ஆமா, தாய்மாமன் என்ன சொல்றாராம்? :-))))

    //

    ஹுசைனம்மா சொல்வது சரிதான் சிறுவயதில் தெம்பு உடம்பிலிருக்கும்போதே அனைத்தும் நடந்துவிட்டால் நாம் பாக்கியசாலிதான். அந்தவகையில் கொடுத்துவைத்தவர்மலிக்கா நீங்கள் கடவுள் ஆசிர்வதிக்கட்டும் தங்களையும் தங்கள் தலைமுறையையும்..

    அன்பையாளும் கவிக்கு
    அழகிய பேத்தி அருமை.

    உங்கள் முகம் பார்த்ததில்லை ஆனால் அகம் நல்லதாய் திகழ்கிறது அவை எழுத்துக்களில் மிளிர்கிறது.

    தாய்மாமனுக்குதானே முதலிடம் குட்டிதாய்மாமனுகும் எனது வாழ்த்துகள்

    கவிதைப்பித்தன்
    காளிதாசன்..

    பதிலளிநீக்கு
  12. அன்பு அஸ்மாக்கா. தங்கள் அனுப்பிய வெத்திலைபாக்கில் பாக்குமட்டும் வந்து சேர்ந்தது, வெற்றிலை இங்கு தடையாம் ஆகவே பாக்கைமட்டும் இடிக்காமலே மெல்லுகிறேன் பேத்தி சிரித்து இடித்ததில். ஹா ஹா.

    அக்கா. உங்களவிட நான் ரொம்ப பெரியாளாயிட்டேன் தெரியுமா, அப்ப நீங்க என்ன அக்கான்னு கூப்பிடனுமோ ஹி ஹிஹி..

    அல்லாஹ் தங்கள் துஆவினை ஏற்று கபூல்செய்வானாக ஆமீன்..

    பதிலளிநீக்கு
  13. அட பானுவா எப்படிங்க இருக்கீங்க நலம்தானே நியாபகமெல்லாமிருக்கா எங்களை, ரொம்ப ஓவரல்ல ரொம்ப ரொம்ப ஓவருதான் நீங்களெல்லாம் அப்படியே இருக்கும்போது நான்மட்டும் வளர்கிறேனே மம்மின்னு வளர்கிறேன் ஹா ஹா.

    நதா என்ன செய்கிறாள் படிப்பு முடிந்ததா? எனது ஐடி இதில் இருக்கும் அதுக்கு மெயில்பண்ணுங்கப்பா.

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  14. nrenrum16 கூறியது...
    மாஷா அல்லாஹ் அக்கா... பிறந்த குழந்தைகள் இப்படி நேருக்கு நேர் பார்ப்பது மிகவும் அரிது.... (அப்ப ஷெஷா குட்டியை முதன் முதலில் கையில் ஏந்தத்தான் பஹ்ரைனிற்கு பயணமா???) நல்லா சுத்திப் போடுங்க குட்டியின் குட்டிப் பாட்டி :)
    //

    அதேதான் அதுக்குதான் பஹ்ரைன் பயணம்பா,

    யாரை சுத்திப்போடலாமுன்னு ஒரு சொன்னால் நல்லாயிருக்குமே என்றும் 16 ராகயிருக்கும் 16ரே ஹா ஹா

    //ஈருலகிலும் நல்வாழ்வு இறைவன் அளிப்பானாக!///

    ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்

    பதிலளிநீக்கு
  15. ஆச்சர்யமாக இருக்கு மேடம் இல்லை இல்ல மலிக்கா, எங்க பக்கத்துல உள்ள பெண்ணுங்களுக்கு 35 வயதில் இன்னும் கலயாணம்கூட முடிக்காம இருக்காங்க வேலைக்குபோகிற சாக்கிலும். வரதட்சணைகொடுக்கமுடியா நிலையிலும்..

    சிலருக்கே இறைவன் இப்படியெல்லாம் செய்வார் என்று கேள்விபட்டிருக்கேன், இதோ பார்கிறேன்..

    இறைவன் அருளால் என்று நீடுழி வாழ்க.

    பதிலளிநீக்கு
  16. மலிக்கா அக்கா இன்றை வலைச்சர அறிமுகப்படுத்தலில் உங்கள பற்றியும் சொல்லியிருக்கிறேன்..

    முடிந்தால் வருகை தாருங்கள் நன்றி.

    http://blogintamil.blogspot.com/2013/01/blog-post_25.html

    பதிலளிநீக்கு
  17. மாஷா அல்லாஹ்! குழந்தை மிக அழகு! அவள் வாழ்க்கையும் மிக அழகாக அமைய அல்லாஹ் போதுமானவன்!

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது