அறியாத ரகசியம்
---------------------
குற்றங் குறைகள்கூறி
ஒற்றைப்பிள்ளைக்கு வழியில்லையென
ஓயாது பேசும் வாய்களுக்கு
ஒளிந்திருக்கும்
ரகசியங்கள் அறியுமா?
குறைகளொன்றும்
பனிக்குடதிலில்லையென்று!
விதியின் விளையாட்டு
வாழ்க்கை வலிக்கும் தருணங்களில்
இடிவிழுந்த சோகம்
இதயத்தில்,
தலை நிமிர நினைத்தாலும்
தலையை தட்டுகிறது
விதியென்ற விளையாட்டு!..
-----------------------------------
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
விதியென்ற விளையாட்டு//
பதிலளிநீக்குவிதி யாரைத்தான் விட்டது.
மிக அழகாய் எழுதுறீங்களே குங்குமம் ஆனந்தவிகன் குமுதம் போன்ற புத்தங்களுக்கு அனுப்பமாட்டீர்களா? மலிக்கா
அதில் வெளிவந்தால் இன்னும் நிறையமக்கள் படிப்பாகள்..
விதியென்ற விளையாட்டு//
பதிலளிநீக்குவிதி யாரைத்தான் விட்டது.
மிக அழகாய் எழுதுறீங்களே குங்குமம் ஆனந்தவிகடன் குமுதம் போன்ற புத்தங்களுக்கு அனுப்பமாட்டீர்களா? மலிக்கா
அதில் வெளிவந்தால் இன்னும் நிறையமக்கள் படிப்பாகள்..
வாழ்த்துகளும் பாராட்டுகளும் மலிக்கா
kavithai arumai
பதிலளிநீக்குkaruththum arumai
kaikai viralukku tharavoo
moothiram..
வாய்க்கும் ஒவ்வாத
பதிலளிநீக்குவாய்மொழி பலபேசும்
ஊரிங்கே ஆயிரம்தான்
வாய் உதிர்த்த
வார்த்தைகளால்
மனம் உடைந்த
உள்ளங்கள் இங்கே
எத்தனை கோடியோ ...
விடியா வாழ்வின்
விதியின் விளையாட்டில்
இதுவும் ஒன்றுதான்....
மிக அழகான கவிதை சகோதரி...
it's good one..
பதிலளிநீக்குasusual from you...