நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

வா! வாழ்க்கையை வலையாக்கலாம்!


வாழ்க்கைக் கடலில்
எதிர்கொள்ளும் பிரச்சனைகளெல்லாம்
எதிர்த்திடும் சில மன அலைகள்
எதிர்த்திட முடியாமல்
தவித்திடும் பல நிலைகள்

எண்ண அலைகளில் சிக்கி
எண்ணிலடங்கா நினைவுகள்
நீராடுகின்றன -சில சமயம்
நீச்சல் தெரிந்தும்
தெரியாமலும் போராடுகின்றன!

நீராடுவது நீராடட்டும்!
போராடுவது போராடட்டும்!

அலைகளோடு அலையாடவும்
கரைதொட்டு கூத்தாடவும்
சிலவேளை
ஆர்ப்பரித்து அடங்கிகிடக்கவும்
அடங்கிடமுடியாமல் பொங்கியெழவும்
கற்றுக்கொள்ளப் பழகிவிட்டால்

வாழ்க்கை கடலில்
வகைவகை அலைகளால் நாம்
வதைபடும்போதும் வேதனைப்படும்போதும்
வருத்தப்படாது  வா
வாழ்ந்ததிட துணியலாம்!

வலைக்குள் சிக்காத அலையென்னும்போதும்
வாழ்வையே வலையாக்கி
வளைத்திடத் துணியலாம்
அலைகடல் வாழ்க்கையை
அனுபவித்து வாழலாம்...

இக்கவிதை தமிழ்த்தேர் மாதஇதழில் மிக்கநன்றி வானலை வளர்தமிழ்.

நன்றிக்குறிப்பு/
மீண்டும் வலைச்சர அறிமுகம் மட்டற்ற சந்தோஷம்.
என்னை வலைச்சரத்தில்அறிமுகப்படுத்திய சகோதரர் ரியாஸ் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்..

6 கருத்துகள்:

 1. வலையாக்கா கற்றுக்கொள்ளவது ஒரு கலை அது கைதேர்ந்தவர்களுக்கே முடியும்.

  உங்களால் முடி எங்களால் யோசிக்கனுமுங்கோ.
  ஆனாலும் முயற்சிகிறேன் விடாமல்

  கவிதை இல்லையில்லை கலை அருமை வாழ்த்துக்கள் மலிக்கா

  பதிலளிநீக்கு
 2. //அலைகடல் வாழ்க்கையை
  அனுபவித்து வாழலாம்...//

  அருமை.. சிறப்பான கவிதை.வாழ்த்துக்கள்.மலிக்கா

  பதிலளிநீக்கு
 3. நீராடுவது நீராடட்டும்!
  போராடுவது போராடட்டும்!//

  thunissalthaan ungkalukku.. mika arumaiyaana sollaadalkaL. vaazthukal medam

  பதிலளிநீக்கு
 4. //நீராடுவது நீராடட்டும்!
  போராடுவது போராடட்டும்!//

  வா நாம் வாழ்க்கையை வலையாக்கலாம் என அருமையாக சொல்லியிருக்கிறீர்கள்.

  வாழ்த்துக்கள் அக்கா.

  பதிலளிநீக்கு
 5. யக்கோவ் விஸ்வரூபம் வெளியாகிருச்சே தெரியாதா? அதுசரி நீங்க எதிர்ப்பு தெரிவிக்கலையா, ஒரு கவிதைகூட கிறுகலையேக்கா அச்சோஒ நான் நக்கல் பண்ணலீங்கோ.உங்க கவிதையைகளை ஒன்றுவிடாம படிக்கிறேன் முகநூலில் ஆனா கருத்துகள் போடுவதிலைங்கோக்கா, இனிமே தொடர்ந்து வருவேனுங்கக்கா..

  இதாங்க காலம் சினிமாக்காரர்களின் காலம் அதபுரியாம உங்க ஆளுங்க போராடுறாங்களே அச்சோ அச்சோ, சொத்த படத்துக்கு சோக்கா கிடைக்கபோகுது கரண்சி..

  கிரண் என்னும் கிரகம்

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது