நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

தூர்வாரச்சொல்லி.



விழிகள் துயில்கொள்ளும்நேரம்
வான்[நிலா]விளக்கு துயிலெழும்பி
இருளுறக்கத்தைக்  களைத்து
விளையாட அழைக்க

ஆர்ப்பரிக்கும் அலைகடல்
அலைகளற்று அமைதியாயிருந்தபடி
ஆசுவாசப்படுத்திக்கொண்டே
நுரைத்து நுரைத்து கரையைத் தடவ

நிலவும்  இருளும்
கலந்தன
கடலும்  நிலவும்
மிதந்தன

தூங்காமல் தவிக்கும் உணர்வுகளோ 
தூந்துக் கிடக்கும் மனக்கிடங்கை
தூர்வாரியிறைக்கச்சொல்லி
தவித்தன

 

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் .

9 கருத்துகள்:

  1. இயற்கையை வம்புக்கு இழுக்கும்
    அழகிய கவிதை ஹா ஹா

    பதிலளிநீக்கு
  2. கவிதை அருமையாக இருக்கு......

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    பதிலளிநீக்கு
  3. /// நிலவும் இருளும்
    கலந்தன
    கடலும் நிலவும்
    மிதந்தன ///

    மிகவும் ரசித்தேன்...

    பதிலளிநீக்கு
  4. மனதைத் தூர்வாரச்சொல்லிடும்
    அழகான கவிதை. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  5. ஹைதர் அலி கூறியது...
    இயற்கையை வம்புக்கு இழுக்கும்
    அழகிய கவிதை ஹா ஹா
    // வேறுயாரையும் வம்புக்கிழுத்தால் நாம் அவ்ளோதான் அதனால்தான் இயற்கையை இழுத்தாச்சி சகோ. ஹா ஹா மிக்க நன்றி சகோ

    பதிலளிநீக்கு
  6. Easy (EZ) Editorial Calendarகூறியது...
    கவிதை அருமையாக இருக்கு......
    //

    வாருங்கள் தங்களின் வருகைக்கும் அன்பான கருத்துக்கும் மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  7. திண்டுக்கல் தனபாலன் கூறியது...
    /// நிலவும் இருளும்
    கலந்தன
    கடலும் நிலவும்
    மிதந்தன ///

    மிகவும் ரசித்தேன்...
    //

    வாங்க சகோ. ரசித்து அதுவும் மிகவும் ரசித்தமைக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்..

    பதிலளிநீக்கு
  8. வை.கோபாலகிருஷ்ணன் கூறியது...
    மனதைத் தூர்வாரச்சொல்லிடும்
    அழகான கவிதை. பாராட்டுக்கள்.
    //
    வாங்கய்யா. தூந்துகிடக்கும் சில மனங்களை தூர்வாரச்சொல்லியே இக்கவிதை.. மிக்க நன்றி அய்யா தங்களின் கருத்துக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க சந்தோஷம்..

    பதிலளிநீக்கு
  9. அழகான கவிதை. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது