நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

இப்படியும் நடக்குமா!



 
 
நினைக்கவேயில்லை
இப்படியும் நடக்குமென்று
என்றோ ஒன்றாகி பிரிந்த
இரண்டு இதயங்கள்
யாரென்று அறியாமலே உறவாடின
இணையத்தின் வாயிலாக
 
எத்தனைநாள்தான்
எழுத்திலேயே தொடர்வதென
தொலைபேசிவழியே தொடர்புகொண்டு
குரலைக்கேட்ட மறுநொடியில்

மூளைக்குள் ஒரு மின்னல்
இக்குரலோசை இதயத்தின் அருகே
இசைபாடியதாயிற்றேயென

எதார்த்தமாய்
நீதானே அவளென்று கேட்க
அவளேதான் நானென்று சொல்ல

மேலிருந்து யாரோ
பூமழை தூவியதுபோல்
பொன்னடல் பூரித்தது
புல்லாங்குழல் வாசித்தபடி உள்ளம்
                                                            புதுராகம் பாடியது    

அலைபேசிவழியே ஆச்சர்யங்கள்
அலைமோத
இணைந்த இதயங்கள் இரண்டும்
மகிழ்ச்சிகடலில் குளித்தது
 

தூரம்போன நட்பு
தோள் தொட்டு தூளியாடியதைக் கண்டு
வான் நோக்கிய
                                                                இரண்டு கைகள்
இறைக்கு நன்றி சொல்லி
இளகி உருகியது
 
இங்கிருந்து அங்கும்
அங்கிருந்து இங்கும்
 இருக்கும் இடங்களை நோக்கி
இதயம் ரெக்கைகட்டிப் பறந்தது...


---------------------------------------------------------------------------
என்னப்பா இது யாருப்பா அது என்றென்றாலாம் கேட்கத்தோணுதா.. சரி சரி சொல்லிடுறேன்.. 1.1/2 வருடமாக இணையத்தின்வாயிலாக எழுதின்மூலமே தொடர்பு கொண்டிருந்த நாங்கள்.  நேற்றுகாலை ஒரு மெயில்கண்டு அதில் அலைபேசிகேட்டுயிருந்ததும் உடனே அனுப்பிவைத்தேன். நேற்று இரவு அலைபேசி அழைக்கும்வேளை ஹாஸ்பிட்டலில் இருந்தேன். [அட நமக்கு ஒன்னுமில்லைபா துணைக்குபோயிருந்தேன்] ஒலித்த அழைபேசியை எடுத்து  பேசியபோதுசலாம் சொல்லி  என்னமேடம் நல்லாயிருக்கீங்களான்னு வந்தது. நல்லாயிருக்கேன்னு சொல்லும்போதே இந்த குரலை எங்கேயோ கேட்டிருக்கோமேன்னு மூளைக்குள் மின்னல்மின்னியதுபோலிருந்து. அப்பாலதானே தெரிந்தது அது எனக்கு மிகவும் பலக்கப்பட்ட குரல் என்று உடனே நீங்க அவுகதானேன்னதும் அடஆமா எப்படிதெரியும் என கேட்க நானும் சொல்ல அடி நீயா உன்னையா நான் மேடம் கீடமெல்லாம் போட்டேன். வாங்க போங்கனெல்லாம் இம்பூட்டுநாளா சொன்னேன் .

அப்பாவி மலிக்காவா இது அடப்பாவி நீதானா இப்படி கவிதையில் கலக்குற.நம்மபேமுடியலடிமா என ஆச்சரியங்கள் அலைமோதியது இருவருக்குள்ளும்.. சந்தோஷம் தாங்கலை எனக்கு எத்தனை வருடங்கள் கழித்து அப்பப்பா சத்தியமாக நான் நினைத்துக்கூடபார்த்ததில்லை இப்படி நாங்கள் மீண்டும் இணைவோமுன்னு..

அதுசரி யாருப்பா அது எப்படிப்பா அவுக பழக்கம்.. அதுவா. அதிரை மதரஸாவில் நான் மாணவி அவுக ஆசான்.. அவுகன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும் கட்டயா சற்றே குட்டையா கலையான கும்முன்ன கன்னங்களோடு அழகா  சூப்பராக இருப்பாங்க. அவுக வெளிய ஹாஸ்டலிலிருந்து போக துணையே நாந்தான்...இவுகளுக்கு ஒரு டியர் ப்ரண்ஸ் இருக்காக அவுகன்னா இவுகளுக்கு ரொம்ப உசிரு அப்படியொரு நட்பு.. இப்படியான எங்கள் பாசம் நான் பாதியிலே மதரஷாவிட்டு நின்னதாலே விட்டுப்போச்சி.. ..1991  [நான் எங்கே நின்னேன் நிப்பாட்டிட்டாக கல்யாணமுன்னு ஹூ ஹூம், அழுறேனாம்] சின்னப்புள்ளவேறு அவுக போன் நம்பரோ அல்லது அட்ரஸோ வாங்கிவச்சுக்க தெரியல அப்போ எனக்கு. அதன்பின்பு இப்போது 2012 ல்  அல்லாஹ் அக்பர்
இணையம் அதில் எழுத்து அது சேர்த்து வைத்தது காணாப்போச்சோன்னு நான் நினைத்திருந்த நட்பை.. அல்ஹம்துல்லில்லாஹ்..

அந்த அக்காவை நீங்களுக்கும் யாருன்னு பார்க்க ஆசையா இருக்கா இங்கே கிளிக் செய்யுங்கள்..

நம் உணர்வோடு ஒன்றிய சிலவற்று நீங்கியதாய் நினைக்கும் எதுவும் நம்மிடமிருந்து நீங்குவதில்லை நம்முடனே இருக்கிறது நாம் அறியாமல் நம்மருகிலேயே..

மனம் நிறைந்த சந்தோஷம் இறைவனுக்கே புகழ் அனைத்தும்..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய். .

28 கருத்துகள்:

  1. மிக்க மகிழ்ச்சி சகோ
    சில சமயம் இப்படியும் நடபதுண்டு சகோ

    பதிலளிநீக்கு
  2. இனிய சந்திப்பை படிக்கும் போது சந்தோசமாக உள்ளது... கவிதையும் அதையே இன்னும் அழுத்தமாக சொல்கிறது... வாழ்த்துக்கள் சகோ...

    பதிலளிநீக்கு
  3. இப்படி இணையக்கூடாதா வலைத்தள உறவுகள் நாமும் ஒரு தாய் தமிழ்த்தாய் பெற்ற பிள்ளைகள்தானே தோழி !...
    உங்கள் நட்பு மேலும் மேலும் மகிழ்வை ஊட்டி வானை வலம் வர வாழ்த்துகின்றேன் இதயம்
    மகிழ்ந்து !..........

    பதிலளிநீக்கு
  4. நம்பமுடியவில்லை... இல்லை..இல்லை...

    அஸ்மாகிட்ட போன் நம்பர் கொடுத்து கொல்ல காலமாச்சு! இன்னும் அம்மணீ எனக்கு போன் போடல... நானும் இதே மாதிரி பதிவு போட்டுட கூடாதான்னு ஏக்கமா இருக்கு.. :-)

    ஆச்சர்யமா தான் இருக்கு இல்லையா? இப்படியாக முன்பு பார்த்தவர்கள் யாரென்றே தெரியாமல் பேசி, பழகி பின்பு உண்மை தெரிய வரும் போது எல்லாமே கற்பனை, சினிமா போல் தோன்றும் :-) மாஷா அல்லாஹ்...

    இருவருக்கும் இறைவனின் பரக்கத் கிடைக்கட்டும்..

    பதிலளிநீக்கு
  5. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  6. இது இத்தனை நாளா எப்படி தெரியாம இருந்ததுன்னு ஆச்சரியம்தான். ரெண்டுபேருக்குமே, அடுத்தவங்க பேரைப் பாத்துகூட சந்தேகம் வரலியாப்பா? (முன்பு நான் ஒருமுறை அஸ்மா, காரைக்கால் என்ற விபரத்தைப் பார்த்து எனக்குத் தெரிந்த அஸ்மாவா அவர் என்று அவரிடம் கேட்டேன். இல்லையாம்.. )

    அங்கங்க ஃபேஸ்புக்கினால அம்மா-புள்ளை சேந்தாங்க, அண்ணந்தம்பி கண்டுபிடிச்சாங்கன்னு நியூஸ் வரும். இதுமாதிரி இருவரும் இப்போது இணையத்தால் இணைந்த இதயங்கள் ... (அட, இ..னாவுக்கு இ..னா!! கவித.. கவித... மலிக்கா ப்ளாக்குக்கு வந்தா தானே எதுகை மோனைல்லாம் வருது!!) :-)))))))

    பதிலளிநீக்கு
  7. அல்ஹம்துலில்லாஹ். மிகவும் சந்தோஷமான செய்தி..! வாழ்த்துகள் சகோஸ்..!
    ///அதிரை மதரஸாவில் நான் மாணவி அவுக ஆசான்..///---என்னாது....?
    நீங்க எல்லாம் அதிராம்பட்டினமா...? அடடே...! நானும் அந்த ஊரில் தானே அப்போதெல்லாம் இருந்தேன்...! :-))

    பதிலளிநீக்கு
  8. சலாம் மை டியர் மல்லி! :)

    வாவ்...! ஒரே நாள்ல இவ்வளவு சூப்பர் கவிதையா..?!! மாஷா அல்லாஹ், மாஷா அல்லாஹ்!

    10 வயசுல குட்டியா பார்த்த என்னோட மலிக்கா இப்படி ஒண்ணுக்கு 3 ப்ளாக் வச்சுட்டு செம போடு போடுவான்னு நான் கற்பனைலகூட நினைத்ததில்லை!! சுப்ஹானல்லாஹ்! சிரிச்ச முகம் மாறாம மல்லிக்கு பேச தெரியும், பாசத்த அள்ளிக்கொட்ட தெரியும், தமிழை தலைகீழா பேசி எங்களைக் குழப்பத் தெரியும் :))) ... இவை மட்டும்தான் உன் திறமைன்னு தப்பால்லோ நினைச்சிட்டிருந்தேன்..!! :-) அல்லாஹ்தஆலா உன் திறமையையும் கல்வியறிவையும் மென்மேலும் அதிகப்படுத்தி, நீண்ட ஆயுளுடன் இம்மை மறுமையின் எல்லா செல்வங்களையும் தருவானாக!

    நேற்று நாமிருவரும் பேசி, பழைய உறவுகள்தான் நாம் என உறுதிபடுத்திக்கொண்ட பிறகிலிருந்து எனக்கு ஒருவித பிரமிப்பு!!!! கனவா... இது நினைவா...ன்னு மலைத்துப் போய் நிற்கிறேம்பா :)) தொலைந்த பொக்கிஷம் திடீர்னு கையில கிடைச்ச மாதிரி இப்போ நான் :)) இத்தனை நாள் புரியாம இணைய தோழியாய் மட்டும் பழகிட்டு...? அல்லாஹு அக்பர்..! எனக்கு சொல்ல வார்த்தையே வரலடா செல்லம்...! நம்மை சேர்த்து வைத்த அந்த வல்ல இறைவனுக்கே மீண்டும் மீண்டும் நன்றி சொல்கிறேன், அல்ஹம்துலில்லாஹ்!

    //அவுகன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும்//

    நெஜம்...ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.........ம்மாவேதானே....? ;))))))))))

    //கட்டயா சற்றே குட்டையா கலையான கும்முன்ன கன்னங்களோடு...//

    அடப் பாவமே...! சாக்கோடு சாக்கா ஹைட்டையும் போட்டுக் கொடுத்துட்டீல்ல? :-) நாங்கள்லாம் அளவா, அடக்கமாதான் வளருவோம்.. ம்..க்கும்..! ;))

    //அவுக வெளிய ஹாஸ்டலிலிருந்து போக துணையே நாந்தான்...//

    ஹா... ஹா.. ஹா...! தெருவுல நம்ம பின்னால வந்த குடிகாரனப் பார்த்து நாம பயந்து ஓடியது மறக்க முடியுமா..?

    //நம் உணர்வோடு ஒன்றிய சிலவற்று நீங்கியதாய் நினைக்கும் எதுவும் நம்மிடமிருந்து நீங்குவதில்லை நம்முடனே இருக்கிறது நாம் அறியாமல் நம்மருகிலேயே..//

    உன்னோட எல்லா பதிவையும்போல் இந்தப் பதிவு முழுவதையும் ரொம்ப ரசித்தேன் :) இந்த வரிகளை ரொம்ப ரொம்ப ரொம்ப ரசித்தேன் :) அந்த ஃபோட்டோவிலும் மல்லியோடு சேர்த்து என் பெயரா..? தேங்ஸ் மல்லி... தேங்ஸ்!

    //இது என்னுடைய சொந்த ஆக்கம் என் அனுமதியின்றி யாரும் என் படைப்புகளை எடுக்கவேண்டாம்//

    எல்லோரும் கேட்டுக்கோங்கபா...! இது சைட் பாரில் உள்ள மலிக்கா மேடத்தோட கண்டிஷன் :-) அவங்களோட உழைப்பை, நினைத்த மாத்திரத்தில் கொட்டும் கவிதை மழையை யாரும் சொல்லாம கொள்ளாம எடுத்துடாதீங்க, ப்ளீஸ்..! :)

    ஆனா நான் மட்டும் இந்தப் பதிவ எடுத்துவிட்டு, அப்புறமாதான் சொல்வேன் ;)))

    பதிலளிநீக்கு
  9. தங்கள் மகிழ்வினை பூரணமாய்
    படிப்பவர்களும் உணரும்படி அருமையாகப்
    பதிவு செய்துள்ளது மனம் கவர்ந்தது
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  10. // அதுசரி யாருப்பா அது எப்படிப்பா அவுக பழக்கம்.. அதுவா. அதிரை மதரஸாவில் நான் மாணவி அவுக ஆசான்.. //

    salam akkaa...

    ha ha haa.... intha idathilaeyae enakku purinthu poy vittathu yaarunnu.... :))

    aashiq sonna athae rendu aadu dialogthaan ninaivukku varuthu :))

    nadathunga mm... :))))

    பதிலளிநீக்கு
  11. //இன்னும் அம்மணீ எனக்கு போன் போடல.//

    இத வாபஸ் வாங்கிக்கிறேன் :-))

    இங்கெ போட்ட போடுல ப்ரான்ஸ்கார அம்மணி போன் போட்டாக :-)தேங்க்ஸ் மலிக்கா :-)

    பதிலளிநீக்கு
  12. செய்தாலி கூறியது...
    மிக்க மகிழ்ச்சி சகோ
    சில சமயம் இப்படியும் நடபதுண்டு சகோ
    // ஆமாம் சகோ.. நடந்ததை நினைத்து மிகவும் மகிழ்கிறேன் மிக்க நன்றி சகோ..

    பதிலளிநீக்கு
  13. திண்டுக்கல் தனபாலன் கூறியது...
    இனிய சந்திப்பை படிக்கும் போது சந்தோசமாக உள்ளது... கவிதையும் அதையே இன்னும் அழுத்தமாக சொல்கிறது... வாழ்த்துக்கள் சகோ...//

    குரல்களின் சந்திப்பு நிகழ்ந்தபோல் குயிகளில் சந்திப்பும் வெகுசீக்கிரம் நிகழ ஆவல்கொள்கிறேன்....

    அன்பின் வாழ்த்துக்களுக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி சகோ

    பதிலளிநீக்கு
  14. அம்பாளடியாள் கூறியது...
    இப்படி இணையக்கூடாதா வலைத்தள உறவுகள் நாமும் ஒரு தாய் தமிழ்த்தாய் பெற்ற பிள்ளைகள்தானே தோழி !...
    உங்கள் நட்பு மேலும் மேலும் மகிழ்வை ஊட்டி வானை வலம் வர வாழ்த்துகின்றேன் இதயம்
    மகிழ்ந்து !..........
    //

    உண்மைதான் தோழி நிச்சயம் நாம் அனைவரும் ஒருநாள் சந்திகவேண்டும் ஆவல்தீர அன்பைப்பொழிந்து பேசித்தீர்க்கவேண்டும்..

    அன்பின் கருத்து மொழிதளுக்கும் ஆத்மார்த்த வாழ்த்துகலூக்கும் மிக்க மகிழ்ச்சி தோழி..

    பதிலளிநீக்கு
  15. ungka santhosam enakum thuthikondathu malikka. veldan..


    // மிக்க நன்றி குணா

    பதிலளிநீக்கு
  16. நம்பமுடியவில்லை... இல்லை..இல்லை...

    அஸ்மாகிட்ட போன் நம்பர் கொடுத்து கொல்ல காலமாச்சு! இன்னும் அம்மணீ எனக்கு போன் போடல... நானும் இதே மாதிரி பதிவு போட்டுட கூடாதான்னு ஏக்கமா இருக்கு.. :-)//

    அப்ப மல்லிக்குதான் யோகமா..ஹி ஹி

    //ஆச்சர்யமா தான் இருக்கு இல்லையா? இப்படியாக முன்பு பார்த்தவர்கள் யாரென்றே தெரியாமல் பேசி, பழகி பின்பு உண்மை தெரிய வரும் போது எல்லாமே கற்பனை, சினிமா போல் தோன்றும் :-) மாஷா அல்லாஹ்...//

    சினிமாவில் பார்த்தபோல்தானிருந்தது..

    எல்லாம் இறைவன் செயல்..

    //இருவருக்கும் இறைவனின் பரக்கத் கிடைக்கட்டும்..//

    ஆமீன் ஆமீன் ஆமீன்..

    பதிலளிநீக்கு
  17. ஹுஸைனம்மா கூறியது...
    இது இத்தனை நாளா எப்படி தெரியாம இருந்ததுன்னு ஆச்சரியம்தான். ரெண்டுபேருக்குமே, அடுத்தவங்க பேரைப் பாத்துகூட சந்தேகம் வரலியாப்பா? (முன்பு நான் ஒருமுறை அஸ்மா, காரைக்கால் என்ற விபரத்தைப் பார்த்து எனக்குத் தெரிந்த அஸ்மாவா அவர் என்று அவரிடம் கேட்டேன். இல்லையாம்.. )/

    யாரிது நம்ம ஹுசைனம்மாவா வாங்க வாங்க


    நான் அஸ்மான்னு பேரைப்பார்த்ததும்.
    அக்கா நினைப்புதான் வந்தது கேட்டதுபோலும் நினைவு இருக்கு ஆரம்பத்தில்..

    ஆனா என்னைதான் அவங்களுக்கு நான்ன்னு தெரிஞ்சிருக்காது மக்கு மலிக்காவா இதெல்லாம் செய்யப்போறான்னு நினைச்சிருப்பாங்க. பாவம் நான் பச்சபுள்ள வேறு் இதுபோய் இதெல்லாம் செய்யுமான்னு நெனச்சிருக்கலாம்.. என்னக்கா..


    //அங்கங்க ஃபேஸ்புக்கினால அம்மா-புள்ளை சேந்தாங்க, அண்ணந்தம்பி கண்டுபிடிச்சாங்கன்னு நியூஸ் வரும். இதுமாதிரி இருவரும் இப்போது இணையத்தால் இணைந்த இதயங்கள் ... (அட, இ..னாவுக்கு இ..னா!! கவித.. கவித... மலிக்கா ப்ளாக்குக்கு வந்தா தானே எதுகை மோனைல்லாம் வருது!!) :-)))))))
    //

    அதேதான் அங்கயிங்கே கேட்ட நம்ம வாழ்வில் நடக்கும்போது பிரம்பிப்பாக இருக்கிறது.

    எதுகை எல்லாம் எதார்த்தமா வந்துடுங்கோ. அதுக்குதேன் அடிக்கடியாவது இல்லென்னாலும் எப்பவாவது ஒருதபாவது வந்துபோகனும் அதேன் நான் துபையிலேருந்து வந்ததும்தான் மறந்துட்டீங்களேம்மா..

    பதிலளிநீக்கு
  18. முஹம்மத் ஆஷிக் citizen of world~கூறியது...
    அல்ஹம்துலில்லாஹ். மிகவும் சந்தோஷமான செய்தி..! வாழ்த்துகள் சகோஸ்..!
    ///அதிரை மதரஸாவில் நான் மாணவி அவுக ஆசான்..///---என்னாது....?
    நீங்க எல்லாம் அதிராம்பட்டினமா...? அடடே...! நானும் அந்த ஊரில் தானே அப்போதெல்லாம் இருந்தேன்...! :-))
    ///

    வாழ்த்துகளுக்கு நன்றி சகோ..

    அதுசரி நீங்களும் அதிரையா. அப்ப கூட்டணி போடுடுவோமா..

    பதிலளிநீக்கு
  19. Aashiq Ahamedகூறியது...
    மாஷா அல்லாஹ்
    //

    வாங்க சகோ மிக்க சந்தோஷம்...

    பதிலளிநீக்கு
  20. சலாம் மை டியர் மல்லி! :)

    வாவ்...! ஒரே நாள்ல இவ்வளவு சூப்பர் கவிதையா..?!! மாஷா அல்லாஹ், மாஷா அல்லாஹ்!//

    எல்லாம் இறைவன் தந்த நிஃமத்..அஸ்மாக்கா..

    //10 வயசுல குட்டியா பார்த்த என்னோட மலிக்கா இப்படி ஒண்ணுக்கு 3 ப்ளாக் வச்சுட்டு செம போடு போடுவான்னு நான் கற்பனைலகூட நினைத்ததில்லை!! சுப்ஹானல்லாஹ்! சிரிச்ச முகம் மாறாம மல்லிக்கு பேச தெரியும், பாசத்த அள்ளிக்கொட்ட தெரியும், தமிழை தலைகீழா பேசி எங்களைக் குழப்பத் தெரியும் :))) ... இவை மட்டும்தான் உன் திறமைன்னு தப்பால்லோ நினைச்சிட்டிருந்தேன்..!! :-) //

    நானே நினைச்சதில்லைக்கா இப்படியெல்லாம் எழுதுவேண்ணு. இந்த எழுத்தையும் தந்து இதனோடு தூரப்பனவைகளையும் தூர இருப்பவர்களையும் கண்காணதவர்களையும் அன்பு நெஞ்சங்கலையும் எனக்கு உறவாக அள்ளித்தருவான் என்று சிறிதும் எதிர்பார்க்கவில்லைக்கா.


    //அல்லாஹ்தஆலா உன் திறமையையும் கல்வியறிவையும் மென்மேலும் அதிகப்படுத்தி, நீண்ட ஆயுளுடன் இம்மை மறுமையின் எல்லா செல்வங்களையும் தருவானாக//

    ஆமீன் ஆமீன் யாரப்பல ஆலமீன் இப்படியான ஒரு வாய்ப்பை தந்த இறைவனுக்கே எல்லாப்புகழும்..

    பதிலளிநீக்கு
  21. நேற்று நாமிருவரும் பேசி, பழைய உறவுகள்தான் நாம் என உறுதிபடுத்திக்கொண்ட பிறகிலிருந்து எனக்கு ஒருவித பிரமிப்பு!!!! கனவா... இது நினைவா...ன்னு மலைத்துப் போய் நிற்கிறேம்பா :)) தொலைந்த பொக்கிஷம் திடீர்னு கையில கிடைச்ச மாதிரி இப்போ நான் :)) இத்தனை நாள் புரியாம இணைய தோழியாய் மட்டும் பழகிட்டு...? அல்லாஹு அக்பர்..! எனக்கு சொல்ல வார்த்தையே வரலடா செல்லம்...! நம்மை சேர்த்து வைத்த அந்த வல்ல இறைவனுக்கே மீண்டும் மீண்டும் நன்றி சொல்கிறேன், அல்ஹம்துலில்லாஹ்!//

    எனக்கும்தாக்கா. புரியலை அதிலும் நான் நின்ன இடம்வேறு ஹாஸ்பிட்டல்.. ஹி ஹி.. என் அஸ்மாக்காவா இதுன்னு இப்பவே எனக்கு உங்களை பார்த்துவிடனுமென்று துடிப்பு அதிகரித்தது.. எப்படியெல்லாம் காலம் சுற்றி மீண்டும் நம்மை இணைத்து வைத்திருக்காக்கா..



    //அவுகன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும்//

    நெஜம்...ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.........ம்மாவேதானே....? ;))))))))))
    ///

    ஏஏஏஏஏஏஏஏஏஏஎன் நான் உங்கமேல் வைத்திருந்த என் பிரியம் உங்களுக்கு தெரியாதா?

    //கட்டயா சற்றே குட்டையா கலையான கும்முன்ன கன்னங்களோடு...//

    அடப் பாவமே...! சாக்கோடு சாக்கா ஹைட்டையும் போட்டுக் கொடுத்துட்டீல்ல? :-) நாங்கள்லாம் அளவா, அடக்கமாதான் வளருவோம்.. ம்..க்கும்..! ;))//

    நான் எந்தளவு உங்கள்மேல் பாசமிருந்தால் இப்படி அப்படியே நியாபகம் வச்சிருப்பேன்.

    ஹா ஹா அப்ப நாந்தான் அளவுக்கு மீறி வளர்ந்துட்டேனோ. ..

    //அவுக வெளிய ஹாஸ்டலிலிருந்து போக துணையே நாந்தான்...//

    ஹா... ஹா.. ஹா...! தெருவுல நம்ம பின்னால வந்த குடிகாரனப் பார்த்து நாம பயந்து ஓடியது மறக்க முடியுமா..?
    //

    அட அத மறக்கமுடியுமாக்கா..பயந்து பயந்து நாமபோன போக்கு இன்னமும் கண்முன்னே நிக்குதேக்கா..

    பதிலளிநீக்கு
  22. அன்பு தோழி மலிக்கா

    இப்படியும் நடக்குமா? நடந்துடுச்சே

    ரொம்ப சந்தோஷம்,.
    படிக்க படிக்க பதிவும், கவிதையும் காதில் தேனாக பாய் கிறது,.

    பதிலளிநீக்கு
  23. பள்ளிப்பருவத்தில்
    நெஞ்சில்
    நிழலாய்
    தொடர்ந்திருந்த...
    தொலைந்துபோன
    தொடர்பு...

    நட்பு...

    யார் எவரென்றியாமலே...
    இன்று
    தொடர்ந்த நட்பு...

    இது..
    அதுதானென
    அறியும்போது...

    மனதின்...
    இலையுதிர்காலம் முடிந்து
    இளவேனிற்காலம்...அதாவது
    வசந்தகாலமாய் இருக்கும்...

    நட்பின் சிறப்பே இதுதான்...

    அது
    ஆளரவமில்லாத
    அண்டங்களைத தாண்டியிருந்தாலும்...

    அது
    ஆர்ட்டிக்காய் இருந்தாலும்...
    அண்டார்டிக்காவாய் இருந்தாலும்...
    அண்டங்களை கடந்து தொடர்வதுதான் நட்பு....

    வாழ்த்துக்கள்...

    இந்த பதிவைப் படித்தவுடன்...

    ''வெயிலோடு உறவாடி
    வெயிலோடு விளையாடி
    வெயிலோடு ஆட்டம் போட்டோமே''... என்கின்ற 'எங்கவூர் கவிஞர்' எழுதிய ''பால்யகால நட்பின்'' பாடல்தான் நினைவுக்கு வருகிறது...

    அதெல்லாம் சரிதான்...

    ஆளும் தெரியாமல்..
    ஊரும் தெரியாமல்...
    கடல்தாண்டியிருந்தபோதும்...
    கண்டம் தாண்டியிருந்தபோதும்...
    பாலினம் மாறுபட்டிருந்தபோதும்...

    ''ஓர் நட்பு''
    கருவாகி...
    உருவாகி....
    குடும்பமே நட்பானது...!

    இதுவும் ஓர் அதிசயமல்லவா...!

    நான் யாரச் சொல்றேன்னு தெரியுன்னு நினைக்கிறேன்...!



    பதிலளிநீக்கு
  24. அதெல்லாம் சரிதான்...

    ஆளும் தெரியாமல்..
    ஊரும் தெரியாமல்...
    கடல்தாண்டியிருந்தபோதும்...
    கண்டம் தாண்டியிருந்தபோதும்...
    பாலினம் மாறுபட்டிருந்தபோதும்...

    ''ஓர் நட்பு''
    கருவாகி...
    உருவாகி....
    குடும்பமே நட்பானது...!

    இதுவும் ஓர் அதிசயமல்லவா...!

    நான் யாரச் சொல்றேன்னு தெரியுன்னு நினைக்கிறேன்...!//

    அதெப்படி தெரியாமபோகும்..

    தூரத்து உறவு இல்லை
    தொப்புள் கொடி பந்தமில்லையென்றபோதும்
    தொண்டு தொட்டு தொடரும் நட்புக்கு நம் ஓர் எடுத்துக்காட்டாக இருக்கவேண்டாமா? இருக்கவேண்டுமென்றுதான் இறைவனிடம் வேண்டும் நேரமெல்லாம் வேண்டுகிறேன்..

    ..சகோ. எல்லோரும் எல்லோரிடத்திலும் சகோதர பாசத்தில் ஒன்றிவிடமாட்டார்கள்.
    நமது குடும்ப நட்பு அதிசயமல்ல அபூர்வம்...


    பதிலளிநீக்கு
  25. நம்உணர்வோடு ஒன்றிய சிலவற்று நீங்கியதாய் நினைக்கும் எதுவும் நம்மிடமிருந்து நீங்குவதில்லை நம்முடனே இருக்கிறது நாம் அறியாமல் நம்மருகிலேயே..//

    உன்னோட எல்லா பதிவையும்போல் இந்தப் பதிவு முழுவதையும் ரொம்ப ரசித்தேன் :) இந்த வரிகளை ரொம்ப ரொம்ப ரொம்ப ரசித்தேன் :) அந்த ஃபோட்டோவிலும் மல்லியோடு சேர்த்து என் பெயரா..? தேங்ஸ் மல்லி... தேங்ஸ்! //

    உணர்வுக்குள் சிலவிசயங்கள் உட்சென்றுவிட்டால் அது உயிர்பிரிந்த பின்பும் ஊசலாடும் என கேள்விப்படிருக்கிறேன். அதுபோல்தான் இதுவும்..

    அஸ்மா சரிஃபா
    அதுபோல்
    அஸ்மா மலிக்கா எப்புடி..

    நாங்க அப்பவுலேர்ந்தே இப்புடிதான். ஹி ஹி.


    //இது என்னுடைய சொந்த ஆக்கம் என் அனுமதியின்றி யாரும் என் படைப்புகளை எடுக்கவேண்டாம்//

    எல்லோரும் கேட்டுக்கோங்கபா...! இது சைட் பாரில் உள்ள மலிக்கா மேடத்தோட கண்டிஷன் :-) அவங்களோட உழைப்பை, நினைத்த மாத்திரத்தில் கொட்டும் கவிதை மழையை யாரும் சொல்லாம கொள்ளாம எடுத்துடாதீங்க, ப்ளீஸ்..! :)

    ஆனா நான் மட்டும் இந்தப் பதிவ எடுத்துவிட்டு, அப்புறமாதான் சொல்வேன் ;)))//

    நம்ம பதிவ அடடா இந்த அக்காமேடம் எடுக்க தடையா நெவர்..

    பயணிக்கும்பாதையில் என்றும் பூக்கள் பூக்கட்டும் அதில்
    வாசனை மாறாப் பூவாக நம் நட்பு பூக்கட்டும்...

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது