நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

சருகாகும் மனது!



பருவகாலத்தில்
பச்சிலையான காதல்

போகப் போக
இலையுதிர் காலமாகி
கிளையிலிருந்து உதிரும்
சருகாய் விழுகிறது!

காதலின் காத்திருப்பில்

கண்கள் பலவேளை
காய்ந்த சருகுகளாய்மாறி
கவலைகளால் கண்ணீர்வற்றி
கானல் உண்டு கிடக்கிறது!

குருத்தில் ஆரம்பித்து

சருகில் முடிவதைபோல்
பலகாதல்
அன்பில் ஆரம்பித்து

ஆக்ரமிப்பிலும் முடிகிறது!
பலவேளை

மண்ணில் மக்கும் சருகைபோல்
மனங்களும் மக்கி மருண்டுவிடுகிறது!
 
இக்கவிதை தமிழ்த்தோட்டத்தில்  “சருகுகள்” கவிதைப்போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்த கவிதை

காற்றுடன்!
கூடலோடு சேர்ந்த ஊடல்

சட சடக்கிறது சருகு!
----------------

இது ”சருகு” கான ஹைக்கூ போட்டியில் மூன்றாமிடம்..

மிக்க நன்றி தமிழ்த்தோட்டம்.

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்..

6 கருத்துகள்:

  1. வாழ்த்துக்கள் தோழி மேலும் மேலும் தங்கள் கவிதைகள் வெற்றிப் படிகளில் வளையட்டும் சிறந்த முத்தாக !...
    அருமையான இக் கவிதைப் பகிர்வுக்கு மிக்க நன்றி மேலும் தொடரட்டும் .

    பதிலளிநீக்கு
  2. மிக அருமையான கவிதை தந்து இருகிறிர்கள்...மென்மேலும் நிறைய கவிதைகள் படைக்க என் வாழ்த்துக்கள்...

    நன்றி,
    மலர்
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    பதிலளிநீக்கு
  3. அன்பை தேடுபவள்1 அக்டோபர், 2012 அன்று 4:46 PM

    குருத்தில் ஆரம்பித்து
    சருகில் முடிவதைபோல்
    பலகாதல்
    அன்பில் ஆரம்பித்து
    ஆக்ரமிப்பிலும் முடிகிறது!
    //

    உண்மைதான் மலிக்கா. எங்கள் காதலும் அப்படியாகிதான் நிற்கிறது.

    அன்பு அன்பு என்று அடித்துக்கொண்ட உள்ளம் இப்போது அகந்தைகொண்டு அலைகிறது. சொல்லவும் முடியாமல் சொல்லாமல் இருக்கவும் முடியாமல் என்னோடு நான் புலம்பி அழுகிறேன்..

    நல்லா எழுதுறீங்க மலிக்கா பிறர் உணர்வுகளையும்..

    பெயர் சொல்லத்தான் நினைக்கிறேன் ஆனாலும் முடியாமல் முடிக்கிறேன்..

    பதிலளிநீக்கு
  4. இப்போது மனங்கள் இணைவதில்லை...

    இந்த காலத்திற்கேற்ற உண்மை வரிகள்...

    பதிலளிநீக்கு
  5. ஜாபர் அலி/அதிரை1 அக்டோபர், 2012 அன்று 9:55 PM

    காதல் இலையாக்வும்,சருகாகவும் இருப்பதை விட - பூவாகி , கனியாக மாறினால்!- காதாலுக்கு மரியாதை!-இப்படி சருகாகி காற்றில் பறப்பதை விட விதையிலேயே மடிவது மகத்துவம்!!!!

    பதிலளிநீக்கு
  6. அழகான கவிதை. மனமார்ந்த பாராட்டுக்கள்.

    Please visit the following Link & offer your valuable comments, Madam.

    http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_2.html

    அன்புடன் VGK

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது