நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

நல்லவேளை

நல்லவேளை
நகர்ந்து செல்லும்
நாளும் பொழுதும்
நம்மனைவருக்குமே ஒன்றானது
 
இல்லையெனில்!
 
பசித்தவனின்  பொழுது
பரிதவிக்க
புசித்தவனின் பொழுது
ரசித்தபடி போகும்
அவதிகள் ஆயிரமாயிரமடங்கு
அதிகரிக்க
ஆகாதவைகள் ஆராதிக்கப்பட்டு
ஆகுமானவைகள் நிராகரிக்கப்படும்
 
நல்லவேளை நம்மனைவருக்கும்
இறந்தபின்
ஆறடி நிலமே சொந்தமாக்கப்பட்டது
இல்லையெனில்
 
அதுவும் அரையடியாகவும்
அறுவதடியாகவும்
அல்லோல்படுத்தப்பட்டு
அவதிக்குள்ளாகும்
 
நல்லவேளை
நாளும் பொழுதும்
நம்மனைவரும் ஒன்றானது
 
இல்லையெனில்
 
இப்பூமியிலேயே
நாளொருவரின் பொழுது
நரகமேகுமே என்செய்வது..
 
 
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய். .

10 கருத்துகள்:

  1. ஹய்...

    நான்தான் ஃபஸ்ட் போலிருக்கு...

    ரொம்ப நாளாச்சு...

    பதிலளிநீக்கு
  2. ///ஆகவே அனைத்தும் நீங்கள்
    அதனுள்ளே ஓரமாய் நான்..///

    ப்ளாக் நடத்துறவங்க..
    ஓரமாய் நிக்கிறாங்களமா....

    இத நாங்க நம்பணும்...

    நல்ல உலகமய்யா...

    பதிலளிநீக்கு
  3. அடடா ரொம்ப நாளைக்கப்புறம் புலவர் இந்தபக்கம் ஃபஸ்ட்.. இனி களைகட்டும் வலைபக்கம்.. ஹா ஹா

    பதிலளிநீக்கு
  4. ஏனுங்க சாமி உண்மையச்சொன்னாக்கூட நம்மமாட்டேங்குறீங்க..

    பதிலளிநீக்கு
  5. நல்லவேளை
    ஒருவேளை
    ஒரு வழி பிறக்கலாம்
    ஒருவேளை, நல்லவேளை
    இந்த வார்த்தைகளால்
    நம்மை நாம் தேற்றிக் கொள்வோம்

    பதிலளிநீக்கு
  6. ஹைதர் அலி கூறியது...
    நல்லவேளை
    ஒருவேளை
    ஒரு வழி பிறக்கலாம்
    ஒருவேளை, நல்லவேளை
    இந்த வார்த்தைகளால்
    நம்மை நாம் தேற்றிக் கொள்வோம்
    ///

    அடடா சகோகளெல்லாம் ஆஜர்போல் தெரிகிறது..

    வாங்க அண்ணா வாங்க..

    நம்மை நாமே தேற்றிக்கொள்ள அமைக்கப்பட்டதுதானோ இவ்வார்த்தைகள்.. ம்ம்

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு

  7. //சிராஜ் கூறியது...
    கவித...கவித...

    அடடா சகோகளெல்லாம் ஆஜர்போல் தெரிகிறது..


    வாங்க பாஸ் வாங்க..

    என்னது கவிதயாஆஆஅ எதெங்கே..

    வந்தமைக்கும் கவித தந்தமைக்கும் நன்றிகள்..

    பதிலளிநீக்கு
  8. திண்டுக்கல் தனபாலன் கூறியது...
    நல்ல வேளை - நல்ல வேலை
    //

    நல்லவேளை நல்லவேலையானதற்க்கு நன்றி சகோ..

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது