நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

இருளின் வெளிச்சத்தில்.

 

ஆழ்ந்த உறக்கத்தினூடே
இமைகள் இறுக்க
மூடியிருக்கும் வேளையில்
இரு இமைக்குமிடையே
சிறு வெளிச்சத்தின் ஊடுருவல்!
 
அர்த்த ஜாமத்தில்
அடர்ந்த காடுகளின் நடுவே
வான் நோக்கிய
கிளைகளை நீக்கிக்கொண்டு
சிறு வெளிச்சத்தின் ஊடுருவல்!
 
இருள் சூழ்ந்த
பூட்டிய அறையினுள்
சாவித் துவாரத்தின் வழியே
சிறு வெளிச்சத்தின் ஊடுருவல்!
 
உள்ளக்கூட்டில் விஷமேற்றப்பட்டு
மனமுடைந்த நிலையில்
விம்மி விம்மி கரைந்து
இதயத்தில் இருள் கவ்விய வேளையில்
இருளைக்கிழித்து - எங்கிருந்தோ
சிறு வெளிச்சத்தின் ஊடுருவல்!
 
இருளை இறுக்கியணைத்திருக்கும்
வெளிச்சம் இருளைவிட்டு அகழ்வதில்லை
வெளிச்சத்தின் வாசத்தை நுகராது
இருளுக்கு இருக்கவும்  விருப்பமில்லை!
 
இருளின் சாம்ராஜ்யதில்
வெளிச்சத்திற்கான அழைப்புகள்
எப்போதும் வரவேற்க்கும்
 
வெளிச்சத்தின் வெட்டவெளியில்
இருளுக்கான இருக்கைகள்
எப்போதும் போடப்பட்டிருக்கும்!
 
ஆகமொத்ததில்”
 
வெளிச்சம் இருள்
இருள் வெளிச்சம்
வெளிச்சத்தை தொடரும் இருள்
இருளில் அடங்கும் வெளிச்சம் ..

 

 

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய். .

3 கருத்துகள்:

  1. இருள் என்று ஒதுங்கவும் கூடாது . ஒளி என்று குதிக்கவும் கூடாது .இரண்டும் என்றும் உண்டு அதை வரவேற்கும் பண்பும் மக்கு வேண்டும் என்பதை சொல்லாமல் சொல்லும் கவிதை அருமை . மலிக்கா வாழ்த்துகள்.
    http://kowsy2010.blogspot.de/2012/10/1.html

    பதிலளிநீக்கு
  2. இருளை இறுக்கியணைத்திருக்கும்
    வெளிச்சம் இருளைவிட்டு அகழ்வதில்லை
    வெளிச்சத்தின் வாசத்தை நுகராது
    இருளுக்கு இருக்கவும் விருப்பமில்லை//

    mikavum arputhamana varikal malikka.
    alamana sinthanaikal ungkalukkul irukku.. innum pala velivarum kaaththirukkireen..

    anpin kumar

    பதிலளிநீக்கு
  3. இரவும் பகலும் - இரண்டும் இருப்பது தானே வாழ்க்கை என உணர்த்தும் வரிகள்...

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது