பசுமையாய் படர்ந்த மனக்கிளையை
துரோக நீரூற்றி பட்டுபோகவைத்து மர[ண]த்தடியில் கிடத்திவிட்டு
மார்தட்டி மற்ற கிளைபரப்பி
வான்நோக்கி பறக்கிறாய்.
மெளனங்களை
மொழிபெயர்க்கத் தெரியா என்மனக்கூடு திடமில்லாமல் திண்டாடி
நேசமில்லா உன்மனக்கிடங்கில்
பாசமெதிர்பார்த்து
துடித்தது கதறல்களாய்,
நேசத்தீ நெஞ்சேறியபோதும்
சுவாசிக்கத் தெரியாமல்
சுடும்தீயின் சுவாலையில்
சுருண்டுகிடந்தே சோர்ந்தது மெளனமாய்.
மலக்குழிக்குள் மாட்டிக்கொண்ட
தோரணையாய்
என்
மனம்துரோகங்களில் சாயல்
உன் முகத்தில் தெரியவில்லை
ஆனால் நீதான்
துரோங்களின் மூப்பு என்பதை
நானெப்படி அறியாது போனேன்
சில தாலி வேலியாக
சிலவேலி தாலிக்காக்க
தாலிதந்து வேலியமைத்து வெண்ணை திரண்டு வரும் சமயத்தில்
தாளி உடைவதுபோல்
விட்டுச் சென்றுவிட்டாய்
வீதியில் நிறுத்திவிட்டு
புயலடித்து உடையா கிளையை
மரமே உடைத்து
மண்ணில் வீழ்ந்தியபோது
வேண்டாத சருகுகளோடு ஒரு சருகாய்
விதியை நொந்து
வீசும் காற்றுகளோடு மல்லுக்கு நிற்கிறது
வஞ்சனை செய்யத்தெரியா என்மனது
சிறகு
தந்து பறக்கவைப்பாய் என்றிருந்தேன்
இப்படிஇதயமொடித்து இறக்கவைப்பாய் என்பதையறியாமலே….
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய். .
மலக்குழிக்குள் மாட்டிக்கொண்ட
பதிலளிநீக்குதோரணையாய் என் மனம்
துரோகங்களில் சாயல்
உன் முகத்தில் தெரியவில்லை..//
அப்பட்டமான உண்மை மலிக்கா..துரோகங்களின் சாயல்கள் பிறகுக்கு தெரிந்தால்தான் தப்பித்துக்கொல்ளலாமே கயவர்களிடமிருந்து..
மிக மிக அருமையாக எழுதுகிறாய்..
உணர்வுகளை பிழிந்தெடுகிறாய் வரிகள் மூலமாக.. வாழ்த்துக்கள் தோழியே
கவிதை அருமை...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் அக்கா.
உணர்வுமிகு வரிகள்...
பதிலளிநீக்குunmaikalai urakka solliyirukkiingka palayidangkalil nadakkum kodumaiyithu.
பதிலளிநீக்குmalakviziyil puthaintha manathay
narraththodu narramay irukkirathu pala managkal
///சிறகு தந்து பறக்கவைப்பாய் என்றிருந்தேன்
பதிலளிநீக்குஇப்படி
இதயமொடித்து இறக்கவைப்பாய் என்பதையறியாமலே///
நல்ல கவிதை...
மேற்சொன்ன வரிகள் மிகமிக அருமை...
வாழ்த்துக்கள்...
ஆனால்...
இப்பொதெல்லாம்
நவரசங்கள் உங்கள் கவிதைகளில்...
அதிலும்
சோகம் கலந்த வன்மமும்... ஆத்திரமும்...
வேதனை கலந்த கோபமும்.. சாபமும்...
எதுகைமோனையுடன்...
சுடுசொற்களாய்
சுட்டெரிக்கிறது...
ஆத்தாடி...
என்னமோ நடக்குது....
வாழ்த்துக்கள்...
ஹலோ...
பதிலளிநீக்குநான் போட்ட கமெண்ட்ட
யாரு களவாண்டது...
எனக்கு ஒரு உண்ம தெரிஞ்சாகோணம்...
எங்கே நான் போட்ட கமெண்ட்ட காணல...
பதிலளிநீக்குஎன்னாச்சு...
பதிலளிநீக்குஎன் கமெண்ட்ட காணல...
அதோட...
கமெண்ட் போடுறப்பவ
எவனோ களவாணிப்பய களவாடுறா...
அய்யோ...