நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

உணர்ந்துபார்!



உனக்குள் இருப்பதென்ன!
உன்னையே கேள்விகேட்க
உனக்கே தயக்கமென்ன!

உணர்ந்துபார்!
சந்தோஷங்களை
சந்தேகங்களுக்கு இறையாக்குவதை!

உணர்ந்துபார்!
உயிர்க் காதலை
உடல்காமத்திற்க்கு பலியாக்குவதை!

உணர்ந்துபார்!
உயர்ந்த நட்பை
உப்புசப்புக்காக ஒதுக்குவதை!

உணர்ந்துபார்
உன்னத உறவை
உதாசீனப்படுத்தி உதறுவதை!

உணர்ந்துபார்!
ஒப்பற்ற உதவிகளை
உணராது இருப்பவைகளை!

உணர்ந்துபார்!
ஒன்றுமில்லாதவைகளுக்கெல்லாம்
ஒரேடியாக அலட்டிகொள்வதை!


உணர்ந்துபார்!
வறட்டு கெளரவத்திற்கு
வாழ்வை தொலைப்பதை!

உணர்ந்துபார்!
பிறரை வசைபாடியே
பொழுதுக்கும் வம்பளப்பதை!

உணர்ந்துபார்!
விட்டுகொடுக்க முடியாமல்
வெட்டிக்கொண்டேபோவதை!

உணர்ந்துபார்!
கேவலம் பாராது
கேலிக்கூத்து ஆடுவதை!

உணர்ந்துபார்!
தனது அகத்தை உணராது
பிறர் முகத்தை பழிப்பதை!

உணர்ந்துபார்!
இன்னெதென்றே அறியாது
எப்படியோ வாழ்வதை!

உணர்ந்துபார்!
ஒழுக்கமில்லாது
புழுக்கையாய் அலைக்கழிவதை!


உணர்ந்துபார்!
ஒவ்வொரு நொடியும்
ஓய்வின்றி நகர்வதை!

உணர்ந்து சரிபார்!
உன்னைத் திருத்திக்கொள்ள
உன்னுள்ளத்தில் தயக்கமென்ன!


அன்புடன் மலிக்கா 
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

16 கருத்துகள்:

  1. /* உணர்ந்துபார்!
    வறட்டு கெளரவத்திற்கு
    வாழ்வை தொலைப்பதை!
    */ ரொம்ப சரியா சொன்னீங்க..கொள்ளை பேரு இருக்காங்க இந்த லிஸ்டில்... வீம்புக்காக பல சந்தோஷங்களை இழந்து, பலரையும் துன்பபடுத்தி.....ம்ம்...கவிதை நன்று...

    பதிலளிநீக்கு
  2. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

    //உணர்ந்துபார்!
    விட்டுகொடுக்க முடியாமல்
    வெட்டிக்கொண்டேபோவதை!

    //

    உண்மை தான்... விட்டுகொடுக்க முடியாமல் போவதால் தான் பல உறவுகள் வெட்டப்படுகிறது!

    உணர்ந்து பார்த்தால் நிச்சயம் புதைகுழியில் விழாமல் இருக்க முடியும்.

    அழகான விழிப்புணர்வு கவிதை மலிக்கா

    வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  3. உனக்குள் இருப்பதென்ன!
    உன்னையே கேள்விகேட்க
    உனக்கே தயக்கமென்ன!//

    அப்படி கேட்க தயக்கமாயிருக்கேக்கா.
    சிலநேரம் நம்மில் தவறுயிருந்தாலும் ஒப்புக்கொள்ள மனம் விடுவதில்லை..

    இனி அப்படி இருக்காமல் தங்கள் சொல்லியதுபோல் கேட்க முயற்சிக்கிறேன். அதாவது என்மனதை கேளிமேல கேள்வி கேட்க முயற்சிக்கிறேன்..

    மிக்க நன்றிக்கா..

    பதிலளிநீக்கு
  4. அஸ்ஸலாமு அலைக்கும்
    காலத்திற்கேற்ற கவிதை! ஒவ்வொரு வரிகளும் அற்புதமான வரிகள்.

    பதிலளிநீக்கு
  5. கண்டிப்பா
    உணரவேண்டிய கவிதை சகோ

    பதிலளிநீக்கு
  6. உணர்ந்துபார்!
    வறட்டு கெளரவத்திற்கு
    வாழ்வை தொலைப்பதை!

    உணர்ந்துபார்!
    விட்டுகொடுக்க முடியாமல்
    வெட்டிக்கொண்டேபோவதை!

    உண்மையை உணர்த்தும் வரிகள்... மாஷா அல்லாஹ் அருமை சகோதரி... உங்கள் வளர்ச்சிக்கு பாராட்டுக்கள்...

    பதிலளிநீக்கு
  7. படித்தேன்...!
    வியந்தேன்...!
    மலைத்தேன்...!
    புகழ்ந்தேன்....!
    வாழ்த்தேன்....!

    ஹி...ஹி...!
    கண்ணதாசன் வரியிலிருந்து சுட்டது...!

    பதிலளிநீக்கு
  8. உணர்ந்து பார்...
    எனறு நீங்கள் கவியாக்கிய ஒவ்வொன்றும் உணர்ந்து பார்க்க வேண்டியவைதான்...
    அருமை அக்கா.

    பதிலளிநீக்கு
  9. "உணர்வு" என்ற வார்த்தைக்கும்
    மலிக்காவுக்கும்...
    எதோ ஓர் தொடர்பு இருக்குன்னு நினைக்கிறேன்...!

    இல்லன்னா...!

    "உணர்வுகளின் ஓசை" முதல்
    "உணர்ந்துபார்" வரை...!

    உறக்கத்திலிருக்கும்
    உணர்வுகளை
    உசுப்பிவிடும்
    உன்னதக் கவிதைகளை தரும்
    உணர்வுக் கவிஞருக்கு...!

    வாழ்த்துக்கள்...!


    ரொம்ப புளங்காகிதம் அடையாதீங்க...!

    பதிலளிநீக்கு
  10. மீண்டும் மீண்டும் கவிதையில் உணர்ந்துபார்
    என்கிற சொற்றொடரை பயன்படுத்தியுள்ள்ளதை
    மிகவும் ரசித்தேன்
    படித்து முடித்ததும் என்னைச் சிறிது நேர
    உனர்ந்து பார்க்கும்படிச் செய்து போனது அது
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  11. உணர்ந்துபார்!
    தனது அகத்தை உணராது
    பிறர் முகத்தை பழிப்பதை!//

    unmaithaan paqlar ippadiyirukiraarkal

    arumaiyaana unarvu.
    unarnthupaarkavaiththuviddirkal.

    பதிலளிநீக்கு
  12. ஆண்டவன் சற்றே அருகினில் வந்து அனுபவம் என்பதே நான்தான் என்றான் -என்று கண்ணதாசன் எழுதியது நினைவுக்கு வருது. உணர்ந்து பார் என்று சொல்லிய வரிகள் ஒவ்வொன்றும் முத்துக்கள். சூப்பர்.

    பதிலளிநீக்கு
  13. என் உணர்வுகளுக்கு உரமிடும் வகைகளில் கருத்துகளிடும் அன்பின் உள்ளங்களுக்கு. ஆதமார்த்தமான நன்றிகள்..

    ஒவ்வொரு முறையும் எனது பதிவுகளுக்கு ஊக்கம் தரும் கருத்துகள் தருவதே எனது உணர்வுகளுக்கு ஊக்கமளிக்கிறது அதே வேளை எனது உணர்வுகளும் உறங்காமல் ஓசை எழுப்புகிறது..

    பதிலளிநீக்கு
  14. அழுக்கான துணிகளை துவைத்து அணிகின்றோம் .நல்ல கருத்துகளை கேட்டு அறிந்து மனதை தூய்மை படுத்துகின்றோம். கவிதையின் மகிமை அழகுபட தந்து மனதில் பதிய வைப்பது. அது உங்களுக்கு கை வந்த கலை

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது