காற்றின் ஸ்பரிசம்!
மழையின் குளிர்ச்சி!
இருட்டின் நிசப்தம்!
மல்லிகையின் உரசல்!
பொங்கும் பாலின் நுரை!
மயிலின் நடனம்!
அலையின் சிணுங்கள்!
மானின் மருட்சி!
இவையனைத்தையும் இடைவிடாது
உணர்வுகளில் உணர்கிறேன்
உன்னை நேசித்த நொடியிலிருந்து,,
நெரும்பின் சுவாலை!
இருளின் அச்சம்!
மலை உருலும் சத்தம்!
ரோஜாவின் முள்குத்தல்!
புளித்த பாலின் வாசனை!
சிங்கத்தின் கர்ஜனை!
புயலின் ஆக்ரோஷம்!
கடலின் கொந்தளிப்பு!
இவையனைத்தையும் மொத்தமாய்
உணர்கிறேன் உணர்வுகளில் வழி[லி]யாக
உன்னை மறக்க நினைத்த நொடியிலிருந்து...
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
எப்படிப்பா இப்படியெல்லாம் கலக்குறீங்க போங்க.. உவமைகள் மிக அருமை..
பதிலளிநீக்குஅதிலும்
பொங்கும் பாலின் நுரை!
புளித்த பாலின் வாசனை!
செம நச் அன் செம பஞ்ச்.
ம்ம்ம் அருமை.......
பதிலளிநீக்குநேசத்தின் உணர்வுகள்
பதிலளிநீக்குஅருமையான வெளிப்பாடு சகோதரி..
மொதோ பெரா லவ் பண்றப்ப...!
பதிலளிநீக்குஅடுத்த பெரா லவ் பண்ணி கல்யாணம் பண்ணதுக்கப்பாலயா....!
நல்லாத்தான் இருக்கு....! இந்த கவிதை...!
காதல் கவிதைகள் ,,
பதிலளிநீக்குகாதல் கனியும் வரைதான் அதற்கு
வீரியம். கனிந்து விட்டால் ..கடைசி நான்கு
வரிகளாகவே இருக்கும் ..வெற்றிபெறா காதல்
காவியம் ..தாஜ் மகால் காதலியின் நினைவாலயம் ..காதல்
வென்றிருந்தால் ..தாஜ்மகால் ஒரு மயானம் ..
இன கவர்சிக்கு மனித இனத்தில் மட்டுமே ஆண்
அலைகிறான் ..மிருக பறவை இனங்கள் பெண் இனமே
ஆணை தேடி அலையும் தன் இன விருதிக்காக ..
நேசித்தலின் அருமை பெருமைகளையும்,
பதிலளிநீக்கும்றத்தலின் கொடுமைகளையும் மிகவும் அழகாகவே சொல்லியுள்ளீர்கள்.
பாராட்டுக்கள்.
அருமை .வாழ்த்துகள். என்னைக் கவர்ந்தவை சகோதரி அன்புடன் மலிக்காஅவர்களின் கற்பனை.இந்த நீர் ஊற்றில் குளிர்ந்த நீர் கிடைத்து குடித்து உடலும் உள்ளமும் உறுதிப்படுகின்றது,மனமும் மகிழ்கின்றது. வாழ்வே ரசிப்பதில்தான் உள்ளது.இறைவன் கொடுத்த அருளை ரசிக்கத் தெரியாதவன் வாழத் தெரியாதவன் . வாழ்வின் மகிழ்வு ரசிப்பதில்தான் இருக்கின்றது, அரை குவளை தண்ணீர் இருந்தாலும் அதனை மன திருப்தியுடன் இறைவனுக்கு நன்றி சொல்லி குடிக்கும் போது முழு குவளை தண்ணீர் குடித்த ஆத்ம திருப்தியும் நிறைவும் உண்டாகின்றது .
பதிலளிநீக்குunarvukalin oosaikal mika arumai malikka
பதிலளிநீக்குமௌனம் உடைக்கும்
பதிலளிநீக்குஉணர்வுகள்
ம்ம்ம் அருமை சகோ
அருமை.
பதிலளிநீக்குநினைத்தலையும், மறத்தலையும் அழகான உவமைகளால் அருமையா சொல்லியிருக்கேம்மா. பிரமாதம்!
பதிலளிநீக்குநேசித்த நொடிகளில் உணர்ந்தவையும் மறக்க நினைத்த நொடியில் உணர்ந்தவையும் படு கச்சிதமாய் உங்கள் கவிதையில் உணர்ந்து எழுதப்பட்டிருக்கின்றது
பதிலளிநீக்குஉணர்வுகலால் உணரப்பட்டு உவமைகளால் வடிக்கப்பட்டு உள்ள[த்]தை உள்ளப்படி எழுத்திக்காட்டியிருக்கும் எதார்த்தம்..
பதிலளிநீக்குமிக அருமைங்க மிக அருமை.. இனி தொடர்ந்து தொடர்வேன் உங்கள் வலைதளம்..
பாராட்டுக்கள்..