நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

பாலையில் கசியும் மெளனம்!



குடும்பம் பசியார
குருதி வேர்வையானது!
இளமை வெறுமையாகி
முதுமையை உடல் சுமந்தது!
பாசங்கள் தூரமாகி
வேசங்கள் நெருக்கமானது!
எல்லையில்லா அன்புகூட
ஏக்கமாகி நெஞ்சில் அடைந்தது!
இல்லம் சோலையாக
இல்லறம் பாலையானது!
இயற்கை இன்பங்கள் செயற்யாக
செயற்கை இன்பங்கள் துன்பமானது!
உறவுகள் ஒட்டிவர
உழைப்பும் கைகொடுத்தது!
உள்ளபடி சொன்னாக்கா
உடலோடு உள்ளமும் புண்ணாகிறது!
விடுமுறை ஒன்றே விடுதலை தருகிறது!
விடுதலை பெரும்வேளை
வியாதிகளும் தொடர்கிறது!
வியாதிகளோடு வயோதிகமும் சேர்கிறது!
வதையும் கூடுகிறது வாழ்க்கையும் கழிகிறது!
இதுதான்  வெளிநாட்டு வாழ்க்கை 
இதற்குதான் எத்தனை விதமான சேட்டை!..

நன்றி தமிழ்குறிஞ்சி..
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

20 கருத்துகள்:

  1. //இல்லம் சோலையாக
    இல்லறம் பாலையானது!//

    மிகவும் உணமையான உணர்வுக் கவிதை.

    ”பாலையில் கசியும் மெளனம்”
    பொருத்தமான தலைப்பு.

    பாராட்டுக்கள்.

    தமிழ்குறிஞ்சி வெளியீட்டுக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. உயிர் கசிந்து உணர்வுகளாய் வார்த்தைகள்.
    நன்று.

    பதிலளிநீக்கு
  3. அமீரக
    வாழ்க்கை
    வார்த்தைகளாய் அருமை சகோ

    பதிலளிநீக்கு
  4. குருமூர்த்தி.29 மே, 2012 அன்று 10:17 AM

    இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  5. குருமூர்த்தி.29 மே, 2012 அன்று 10:17 AM

    எங்களின் வாழ்க்கை படம் பிடித்து காட்டப்பட்டுள்ளது வார்த்தைகளின் வாயிலாக.

    மிகுந்த நன்றி மலிக்கா

    பதிலளிநீக்கு
  6. அருமையான கவிதை.
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  7. தலைப்பு அருமை...
    கவிதை ரொம்ப நல்லாயிருக்கு...

    பதிலளிநீக்கு
  8. வாழ்க்கை வார்தைகளில். நன்றிமா

    பதிலளிநீக்கு
  9. இல்லம் சோலையானது .

    இல்லறம் பாலையானது ...இரண்டு சொல்லிலே

    வலை குடா வாழ்வின் அனைத்துவிளக்கமும் கிடைத்து விட்டது

    கவி ,,வடித்த கவிஞர் ..வளைகுடா வாழ்வினை நன்கு அறிந்து

    உணர்ந்து எழுதியுள்ளார் ..வாழ்த்துக்கள் ..,

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் சகோதரி ஒவ்வொரு வரிகளிலும் உயிரோட்டம் தெரிகிறது இந்தக் கவிதை வரிகள் நாம் கடந்துவந்த பாதைகளை நினைத்துப் பார்க்கவும்
    செய்தன அருமை!..வாழ்த்துக்கள் மிக்க நன்றி பகிர்வுக்கு.

    பதிலளிநீக்கு
  11. வை.கோபாலகிருஷ்ணன் கூறியது...

    //இல்லம் சோலையாக
    இல்லறம் பாலையானது!//

    மிகவும் உணமையான உணர்வுக் கவிதை.

    ”பாலையில் கசியும் மெளனம்”
    பொருத்தமான தலைப்பு.

    பாராட்டுக்கள்.

    தமிழ்குறிஞ்சி வெளியீட்டுக்கும் வாழ்த்துகள்.//

    தாங்களின் அன்புக்கும் வாழ்த்துக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிஅய்யா..

    பதிலளிநீக்கு
  12. NIZAMUDEEN கூறியது...

    உயிர் கசிந்து உணர்வுகளாய் வார்த்தைகள்.
    நன்று.//

    வாங்க நிஜாமண்ணா.. மிக்க மகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு
  13. செய்தாலி கூறியது...

    அமீரக
    வாழ்க்கை
    வார்த்தைகளாய் அருமை சகோ//

    வாங்க சகோ மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  14. குருமூர்த்தி. கூறியது...

    எங்களின் வாழ்க்கை படம் பிடித்து காட்டப்பட்டுள்ளது வார்த்தைகளின் வாயிலாக.

    மிகுந்த நன்றி மலிக்கா.//

    வாங்க குரு
    பாலையின் வாழ்க்கைதான் பாடாப்படுத்தே பலரையும் மிக்க நன்றி வருகைக்கு..

    பதிலளிநீக்கு
  15. Rathnavel Natarajan கூறியது...

    அருமையான கவிதை.
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    வாழ்த்துகள்.//

    வாங்கய்யா வாழ்த்துக்கும் தங்களின் பகிர்ந்தலுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்..

    பதிலளிநீக்கு
  16. சே. குமார் கூறியது...

    தலைப்பு அருமை...
    கவிதை ரொம்ப நல்லாயிருக்கு...

    siraj கூறியது...

    வாழ்க்கை வார்தைகளில். நன்றிமா//

    குமார் சிராஜ் தங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்..

    பதிலளிநீக்கு
  17. அதிரை சித்திக் கூறியது...

    இல்லம் சோலையானது .

    இல்லறம் பாலையானது ...இரண்டு சொல்லிலே

    வலை குடா வாழ்வின் அனைத்துவிளக்கமும் கிடைத்து விட்டது

    கவி ,,வடித்த கவிஞர் ..வளைகுடா வாழ்வினை நன்கு அறிந்து

    உணர்ந்து எழுதியுள்ளார் ..வாழ்த்துக்கள் ..,//

    10, 11 ஆண்டு வளைகுடா வாழ்க்கையின் தாக்கம் இன்னும் எவ்வளவோ இருக்கு சொல்ல.

    மிக்க நன்றி சகோ..

    பதிலளிநீக்கு
  18. அம்பாளடியாள் கூறியது...

    வணக்கம் சகோதரி ஒவ்வொரு வரிகளிலும் உயிரோட்டம் தெரிகிறது இந்தக் கவிதை வரிகள் நாம் கடந்துவந்த பாதைகளை நினைத்துப் பார்க்கவும்
    செய்தன அருமை!..வாழ்த்துக்கள் மிக்க நன்றி பகிர்வுக்கு//

    வாங்க சகோதரி.. தங்களின் வருகைக்கும் உணர்வுகளை புரிந்துக்கொண்டு கருத்துகள் வழங்கியமைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  19. அயலகம் சென்று

    அனுபவித்தவனுக்குத்தான் தெரியும்

    அவர்களின் துன்பம், துயரம், கவலை, கஷ்டம்...!

    அந்தவகையில்

    "அனுபவக் கவிதை".....!

    பதிலளிநீக்கு
  20. அருமை, அழகு, மனதை தொடுகிறது.எளிமை கலந்த உங்கள் படைப்புக்கள், மிகவும் நன்றாக உள்ளன..

    இன்னும் எழுதுங்கள்.

    வணக்கம்.

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது