நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

வீட்டுக்கு தூரம்

கோவை: கின்னஸ் சாதனைக்காக, 1001 கவிஞர்கள் பங்கேற்கும், 72 மணி நேர தொடர் கவியரங்கம். கோவை தமிழ்ச்சங்கம், கற்பகம் பல்கலைக்கழகம்,கோவை அரிமா சங்கம் ஆகியவை தமிழ்க் கவிதையை வளர்க்கும் நோக்கத்தோடு கின்னஸ் சாதனை கவியரங்கம் நடத்தியதல்லவா அதற்காக இரு கவிதைகள் அனுப்பிருந்தேன், [என்கவிதை ”தமிழ்குடில்” குரூப்பால வாசிக்கபட்டதாம்] அதில் ஒன்றுதான் இக்கவிதை.

 வீட்டுக்கு தூரம்


கழிவறைக்கும் கையில் இரும்பு
கால்மாட்டில் துடைப்பம்
தலைமாட்டில் உலக்கை
தனி பாத்திரம், தனித்த படுக்கை
தனிமைச்சிறை.

இன்னும்
எதைத் செய்தாலும் குற்றம்- மாதத்தில்
ஏழு [மூன்று] நாள் மட்டும்!

தண்ணீர் ஊற்றாதே!
பூக்கள் கருகிவிடும்.
ஊறுகாயை தொடாதே!
ஊசிப்போய்விடும்.
தீபம் ஏற்றாத்தே!
தெய்வ குற்றம் ஆகிவிடும்.
தனியே செல்லாதே
பேய்கள் பிடித்துவிடும்!

இதென்ன கொடுமை
இயற்கை உபாதைக்கு
இவளுக்கு எதுக்கு தண்டனை ?
மாத விலக்கால்
மடி தரும் வலி -அதோடிந்த
மனித விலக்கால்
மனம்  நிறைந்த வலி
 
தீண்டாமை தொடங்குமிடம் எதுவோ?
தீட்டென்னெச் சொல்லி
தள்ளி வைக்கப்படும்
தன் வீட்டில்தானோ!..
----------------------------------------
 400 த்தாண்டி 402 வது எனது பதிவில் சந்தோஷப்படவேண்டிய இருவிசயங்கள்.
 ஒன்று சகோ செய்தலி கொடுத்த அன்பு விருதும். மற்றொன்று. கணேஷாண்ணா. மற்றும் செய்தலி  தொடர்ந்து என்னை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதும்தான். இரு சகோதரர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

23 கருத்துகள்:

  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. அந்த காலத்தில்
    கிராமங்களில் இருந்துவந்த விலக்கு
    இப்போது குறைவு தான் இருப்பினும்
    பாழ் விஸ்வாசம்(நம்பிக்கை ) உள்ள மனிதர்களால்
    தொடர்கிறது

    வலியில்
    சிறைபடுதலும்
    தீண்டாமை மனவலியும்
    பெரும் கொடுமையே

    மிக ஆழமாக அழகா சொல்லபட்ட கவிதை பாராட்டுக்கள வாழ்த்துக்கள் சகோ

    பதிலளிநீக்கு
  3. சுஜி என்ற சுஜாதா22 மே, 2012 அன்று 6:20 PM

    இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  4. சுஜி என்ற சுஜாதா22 மே, 2012 அன்று 6:21 PM

    இன்னும் பலயிடங்களில் தொடரும் தீண்டாமை. நச்சின்னு சொல்லியிருக்கீங்க

    . நானெல்லாம் கத்திக்கொண்டுபோயே கத்தியிருக்கேன் தெரியுமா.

    பதிலளிநீக்கு
  5. மிக ஆழமாக அழகா சொல்லபட்ட கவிதை பாராட்டுக்கள.

    பதிலளிநீக்கு
  6. தீண்டாமைகளுக்கு நல்ல நச். மிக அருமை தோழி. உங்களின் வலைதளம் இன்றுதான் பார்கிறேன் மிக அருமையாக இருக்கிறது கவிதைகளும் அதன் கருத்துகளும். வாழ்க பல்லாண்டு

    பதிலளிநீக்கு
  7. அருமையான அவசியமான கவிதை
    படைப்பிற்கும் விருது பெற்றமைக்கும்
    மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  8. அசாருதீன்23 மே, 2012 அன்று 6:59 AM

    ”இன்னும் ”
    எதைத் செய்தாலும் குற்றம்- //

    இதற்க்கு மட்டுமா பெண் எதைசெய்தாலும் குற்றம் கற்ப்பிக்கும் உலகமாகிவிட்டது.

    நல்லதொரு படைப்பு அக்கா..

    பதிலளிநீக்கு
  9. விருது பெற்றதற்கு என் அன்பான வாழ்த்துகள்.

    சமீபத்தில் இருமுறை வலைச்சரத்தில் அடையாளம் காட்டப்பட்டுள்ளதும் மகிழ்ச்சியளிக்கிறது.

    கின்னஸ் சாதனைக் கவியரங்கத்தில் வாசிக்கப்பட்ட கவிதையில் நல்ல கருத்துள்ளது.

    //இதென்ன கொடுமை இயற்கை உபாதைக்கு இவளுக்கு எதுக்கு தண்டனை ?

    மாத விலக்கால் மடி தரும் வலி -அதோடிந்த மனித விலக்கால் மனம் நிறைந்த வலி தீண்டாமை தொடங்குமிடம் எதுவோ?

    தீட்டென்னெச் சொல்லி தள்ளி வைக்கப்படும் தன் வீட்டில்தானோ!.//

    மிகச்சிறப்பான வரிகள்.

    சுத்தம் மற்றும் சுகாதாரம் முதலியவற்றை வலியுறுத்தி அந்தக்காலத்தில் இதுபோலெல்லாம் ஏதேதோ கட்டுப்பாடுகள் வைத்திருப்பார்கள் போலிருக்கு.

    இப்போது காலம் மாறிவிட்டது.

    எல்லாவற்றிற்குமே நவீன பாதுகாப்பு வசதிகள் வந்து விட்டன. அதனால் கட்டுப்பாடுகளும் ஆங்காங்கே பெரும்பாலும் தளர்த்தப்பட்டுள்ளன.

    பெண்ணின் உணர்வுகளை அழகாகக் கவிதையாக வடித்துள்ளீர்கள் ;)

    மனமார்ந்த பாராட்டுக்கள்.
    அன்பான வாழ்த்துகள்.
    பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  10. இயற்கை நிகழ்வுக்கு இவளுக்கு எதற்கு தண்டனை? சரியான கேள்வி தங்கச்சி... எனக்கும் இந்த ஆதங்கம் உண்டு. உணர்வுகள் கவிதையில் பொங்கியிருக்கின்றன. நன்று. மிக நன்று.

    பதிலளிநீக்கு
  11. மொதல்ல...!

    நாங்க கருத்துரையில் கேள்வி கேட்டா பதில் சொல்லுங்க...!

    எல்லார் மாதிரியும் face book - twitterலேயே மூழ்கிடாதீங்கோ...!

    அறிவியல் முன்னேற்றத்தின் காரணமாய்...!

    இன்று இது...!

    நாளை... ஒன்று...!

    நாளை மறுநாள் என தாவிக்கொண்டே செல்லாதீர்....!

    மாற்றம் தேவைதான்...!

    அதுக்காக...

    5 வயசுல அம்மான்னு கூப்பிட்டவங்கள...

    50 வயசுல "அண்டி"ன்னா கூபிடமுடியுமா???????????????????????

    பதிலளிநீக்கு
  12. அற்புதமான கவிதை ..

    பெண்கள் மாநாட்டில் முன் வைக்க வேண்டிய கவிதை

    பெண்ணால் மட்டுமே உணர முடியும் வேதனையை

    கவி மூலம் எங்களுக்கும் புரிய வைத்தஉங்களுக்கு நன்றி

    வீட்டுக்கு தூரம் என கூறும் இதனை கட்டுப்பாடு தேவை

    இல்லாதது ..இறை வழிபாடு செய்யாமல் இருக்க காரணம்

    உண்டு பெண்ணின் பலகீன மான நேரம் என்பதால் ..மற்ற படி

    இதனை கட்டுப்பாடு அப்பப்பா தாங்காதுடா சாமி ..,

    பதிலளிநீக்கு
  13. செய்தாலி கூறியது...

    அந்த காலத்தில்
    கிராமங்களில் இருந்துவந்த விலக்கு
    இப்போது குறைவு தான் இருப்பினும்
    பாழ் விஸ்வாசம்(நம்பிக்கை ) உள்ள மனிதர்களால்
    தொடர்கிறது

    வலியில்
    சிறைபடுதலும்
    தீண்டாமை மனவலியும்
    பெரும் கொடுமையே

    மிக ஆழமாக அழகா சொல்லபட்ட கவிதை பாராட்டுக்கள வாழ்த்துக்கள் சகோ.//

    வலியில்
    சிறைபடுதலும்
    தீண்டாமை மனவலியும்
    பெரும் கொடுமையே.//

    உண்மைதான் சகோ. தங்களின் கருத்துகலுக்கு மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  14. சுஜி என்ற சுஜாதா கூறியது...

    இன்னும் பலயிடங்களில் தொடரும் தீண்டாமை. நச்சின்னு சொல்லியிருக்கீங்க//

    ஆமாம்பா நடக்குறதேன் பாக்குறோமுல்ல

    . நானெல்லாம் கத்திக்கொண்டுபோயே கத்தியிருக்கேன் தெரியுமா.//

    கத்தி கத்துச்சா இல்ல நீங்க கத்தி கத்திய பயமுறுத்துனேளா சுஜி. ஹா ஹா

    பதிலளிநீக்கு
  15. சே. குமார் கூறியது...

    மிக ஆழமாக அழகா சொல்லபட்ட கவிதை பாராட்டுக்கள்.தங்களின் கருத்துகளுக்கும் பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி.குமார்.

    பதிலளிநீக்கு
  16. மரகட்டை கூறியது...

    தீண்டாமைகளுக்கு நல்ல நச். மிக அருமை தோழி. உங்களின் வலைதளம் இன்றுதான் பார்கிறேன் மிக அருமையாக இருக்கிறது கவிதைகளும் அதன் கருத்துகளும். வாழ்க பல்லாண்டு.//

    வாங்க தோழி தங்களின் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்..

    அதென்ன மரக்கட்டை தோழி

    பதிலளிநீக்கு
  17. Ramani கூறியது...

    அருமையான அவசியமான கவிதை
    படைப்பிற்கும் விருது பெற்றமைக்கும்
    மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.//

    வாங்க அய்யா தங்களின் கருத்துகளுக்கும் வாழ்த்துகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  18. அசாருதீன் கூறியது...

    ”இன்னும் ”
    எதைத் செய்தாலும் குற்றம்- //

    இதற்க்கு மட்டுமா பெண் எதைசெய்தாலும் குற்றம் கற்ப்பிக்கும் உலகமாகிவிட்டது.

    நல்லதொரு படைப்பு அக்கா..

    வாங்க தம்பி. அடடா ஆண்பிள்ளை சப்போட் பண்ணுதுங்கப்போ ரொம்ப நன்றி உங்களுக்காவது புரியுதே சிலரின் எண்ணங்கள்..

    மிக்க நன்றி தம்பி..

    பதிலளிநீக்கு
  19. சுத்தம் மற்றும் சுகாதாரம் முதலியவற்றை வலியுறுத்தி அந்தக்காலத்தில் இதுபோலெல்லாம் ஏதேதோ கட்டுப்பாடுகள் வைத்திருப்பார்கள் போலிருக்கு.

    இப்போது காலம் மாறிவிட்டது.

    எல்லாவற்றிற்குமே நவீன பாதுகாப்பு வசதிகள் வந்து விட்டன. அதனால் கட்டுப்பாடுகளும் ஆங்காங்கே பெரும்பாலும் தளர்த்தப்பட்டுள்ளன.

    பெண்ணின் உணர்வுகளை அழகாகக் கவிதையாக வடித்துள்ளீர்கள் ;)///

    அக்காலத்தில் ஒரு சிலகாரணத்திற்காக செய்தார்கள் உண்மைதான் ஆனால் அதுவே பல பெண்களின் மனநிலையை பாதிப்பதை யாரும் அறிவதில்லை அறிந்தும் அதை பொருட்படுதுவதுமில்லை. அதனால்தான் இதுபோல் கவிகள் எழுதவேண்டிய சூழ்நிலை..

    மிக்க நன்றி அய்யா தாங்கள் அன்பார்ந்த வாழ்த்துகளுக்கும் கருத்துகளுக்கும் மிகுந்த மகிழ்ச்சி மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  20. கணேஷ் கூறியது...

    இயற்கை நிகழ்வுக்கு இவளுக்கு எதற்கு தண்டனை? சரியான கேள்வி தங்கச்சி... எனக்கும் இந்த ஆதங்கம் உண்டு. உணர்வுகள் கவிதையில் பொங்கியிருக்கின்றன. நன்று. மிக நன்று.//

    தங்கச்சியின் அண்ணனாச்சே ஆதங்கம் இருக்கதான் செய்யும். அதுகாத்தான் எழுதியே கேட்டுவிட்டேன்.. சரிதானே அண்ணா..

    அண்ணா ”சாந்தியண்ணி” நலமாண்ணா! இப்ப என்ன நடக்கபோகுதோ!!!!!:{{{{{{{{{
    மிக்க நன்றிண்ணா..

    பதிலளிநீக்கு
  21. காஞ்சி முரளி கூறியது...

    மொதல்ல...!

    நாங்க கருத்துரையில் கேள்வி கேட்டா பதில் சொல்லுங்க...!

    எல்லார் மாதிரியும் face book - twitterலேயே மூழ்கிடாதீங்கோ...!
    //

    ஆத்தாடியோ கோவம் கோவம் செக்க செவேலுன்னு தெரியுது.. அண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ணீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ

    பதிலளிநீக்கு
  22. அறிவியல் முன்னேற்றத்தின் காரணமாய்...!

    இன்று இது...!

    நாளை... ஒன்று...!

    நாளை மறுநாள் என தாவிக்கொண்டே செல்லாதீர்....!

    மாற்றம் தேவைதான்...!

    அதுக்காக...

    5 வயசுல அம்மான்னு கூப்பிட்டவங்கள...

    50 வயசுல "அண்டி"ன்னா கூபிடமுடியுமா???????//

    ஆமா இதெதுக்குக்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்கூஊஊஊஊஊஊஊஊஊஉ சத்தியமா புரியவேயில்லீங்கோ

    பதிலளிநீக்கு
  23. அதிரை சித்திக் கூறியது...

    அற்புதமான கவிதை ..

    பெண்கள் மாநாட்டில் முன் வைக்க வேண்டிய கவிதை

    பெண்ணால் மட்டுமே உணர முடியும் வேதனையை

    கவி மூலம் எங்களுக்கும் புரிய வைத்தஉங்களுக்கு நன்றி

    வீட்டுக்கு தூரம் என கூறும் இதனை கட்டுப்பாடு தேவை

    இல்லாதது ..இறை வழிபாடு செய்யாமல் இருக்க காரணம்

    உண்டு பெண்ணின் பலகீன மான நேரம் என்பதால் ..மற்ற படி

    இதனை கட்டுப்பாடு அப்பப்பா தாங்காதுடா சாமி //

    வாங்க சகோ உங்களை வரவேற்க தவறியமைக்கு முதலில் மன்னிக்கவும். பலகருத்துகள் தங்களுடையதை நீரோடையில் பார்த்தேன் ஒன்றும் பதிலளிக்க முடியவில்லை அதற்காவே மன்னிகவும்..


    தாங்களின் அனைத்துகருத்துகளுக்கும் வாழ்த்துகளுக்கும் எனது மனப்பூர்வமான நன்றிகள் தொடர்ந்து தங்களின் கருத்துகளை எதிர்பார்க்கிறேன்..

    என்றும் அன்புடன் சகோதரியாய்..

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது