புருவ அடர்த்தியில் தொலைந்த இதயம்
விதைத்தது பல கனவுகளை
இருவிழிகள் களவாட்டத்தால்
ஈரம் சுரந்தோடிய உதடுகளை
உற்று நோக்கிய கருவிழிகளால்
உடலெங்கும் மின்சாரத்தை
உற்பத்தி செய்தது
உதிரமெங்கும் உள்ளூர நண்டூர
உணர்வெங்கும் ஊற்றெடுத்து தேனூர
உரக்கப்பேசும் உதடுகள்கூட
ஊமையாகிச் சிரித்தது
பார்வையின் உஷ்ணம் பட்டதும்
புஷ்பாமான உடல் பஷ்பம்மாக
பற்றி எரிந்து குளிர்ந்தது
உதிர்த்த வார்த்தைகளை கோத்தெடுத்து
உள்ளத்து ஏட்டில் பத்திரப்படுத்தி
உறங்கப்போகும் நேரத்தில் ஒவ்வொன்றாய்
உளறிப்பார்த்து ரசித்து
உடல் சிலிர்த்து மகிழ்ந்தது
பார்வைக்குத்தான் எத்தனை வலிமை
படபடக்கும் ரெக்கையோடு
பாரெங்கும் சுற்றிய பைங்கிளியை
பதை பதைக்கும் நிலைக்குத்தள்ளி
பாடாய் படுத்தியது
பறக்கும் திறனையும்
மிதக்கும் திறனையும்
கற்றுத்தரும் வித்தையறிந்த ஒன்று
இமையசைக்காது இருவிழிகளை
நேர்நோக்கி சொக்கவைக்கும்
பார்வைக்குதான் உண்டு!
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
CLEAR PERCEPTION
பதிலளிநீக்குஎன்று சொல்வார்கள்..
அதுபோல.. நேர்கொண்ட பார்வையில் இருக்கும்
சக்திக்கு அளவே இல்லை..
அழகான கவிதை சகோதரி..
அந்தபார்வையில் சிக்கி சீரழிந்தவர்களும் உண்டு
பதிலளிநீக்குசிறப்பாய் வாழ்பவர்களும் உண்டு
உன் கவி நன்றிலும் நன்று,
அது சரி யார் பார்வையில் சிக்கினாய். உண்மை ரகசியம் அதை இங்கே சொல்லாதே ஹா ஹா.. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.ஏள்ளா என்னிடம் மட்டும்.
அருமையான கவிதை சகோ
பதிலளிநீக்குபறக்கும் திறனையும்
பதிலளிநீக்குமிதக்கும் திறனையும்
கற்றுத்தரும் வித்தையறிந்த ஒன்று
இமையசைக்காது இருவிழிகளை
நேர்நோக்கி சொக்கவைக்கும்
பார்வைக்குதான் உண்டு!
உண்மைதானுங்கோ. எப்படியெல்லாம் சுத்தியிருக்கோம் இந்தபார்வையால..
அழகா எழுதுறீங்க உங்க ஆசான் யாருங்க..
பார்வையின் பதியல் உங்கள் எழுதில் எங்கள் மனதில் பசுமரத்தாணீயாய் பதிகிறது. எப்படிங்க இப்படியெல்லாம் எழுதுறீங்க. நீங்க சகலகலா வல்லியா? எங்கோ படித்த நியாபகம். நீங்க 4 வெப் கலை மற்றும் கவிதை கலக்குறீங்க போங்க மேலும் வளர வாழ்த்துகள்..
பதிலளிநீக்குஎன்றும் நட்புடன்
ரஹ்மான்..
nice
பதிலளிநீக்கு