நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

வாழ்க்கையென்னும் நூலில்


துரத்தி ஓடுகிறேன்
நிலாவோடு ”நிழலும்” ஒளிந்து கொள்கிறது

கண்கண்டு ஓடுகிறேன்
காணாமல் ”கானல்”  மறைகிறது

அன்பைத் தேடுகிறேன்
அதுவும் ”அழகிய” வேடமிடுகிறது

வலிதெரியாமல் நடிக்கிறேன்
வழியவந்து ”வருத்தி” வலிக்கவைக்கிறது

நீர்குமிழியாய்
உடைந்துகொண்டே இருக்கிறேன்
உமிழ்நீராய் சோகம்
சுரந்துகொண்டே இருக்கிறது

என் அறையெங்கும் ஆன்மா 
அலறும் சத்தம் கேட்கிறது-அதனை
அமைதிப்படுத்தத் தெரியாமல்
அதனோடு சேர்ந்து 
என் அணுக்களும் அலறுகிறது!


வாழ்க்கை நூலின் பக்கங்கள்
நூலில் இணைப்பட்டதுபோல 
ஆங்காங்கே அறுந்தும்
இணைந்துமே இருக்கின்றது

இணைந்திருக்கும் வழியே
இன்பமும்
அறுந்துகிடக்கும் இடைவெளியின் வழியே
துன்பமும்
விட்டு விட்டு சிரித்தழுகிறது!

டிஸ்கி///
நீண்ட நாட்களாக நான் எவ்வித கருத்துகளுக்கும் பதிலளிப்பதில்லை அனைவரும் என்னை மன்னிக்கவும்.. இனி அதுபோலில்லாமல் தொடர்ந்து கருத்துரைக்களுக்கும் பதிலளிப்பேன்..


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

36 கருத்துகள்:

  1. வரிகளில்
    சித்தரிக்கபட்ட வாழ்கையின் வரிகள்
    அருமை கவிதைக்கு பாராட்டுக்கள் சகோ

    பதிலளிநீக்கு
  2. அழகிய வாழ்வியல் கவிதை.

    பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  3. செய்தாலி கூறியது...

    வரிகளில்
    சித்தரிக்கபட்ட வாழ்கையின் வரிகள்
    அருமை கவிதைக்கு பாராட்டுக்கள் சகோ/

    சிலநேரம் வலிகள் வரிகளாய் வாழ்க்கையை வரைபடம்போட்டு காண்பிக்கிறது.

    மிக்க நன்றி சகோ.
    தாங்களில் தொடர் வருகைக்கும் அன்பான கருத்துகளுக்கும் ரொம்ப சந்தோஷம். சகோ..

    நீண்ட நாட்களாக நான் எவ்வித கருத்துகளுக்கும் பதிளளிப்பதில்லை மன்னிக்கவும்.. இனி அதுபோலில்லாமல் தொடர்ந்து கருதுரைக்களுக்கும் பதிலளிப்பேன்..

    பதிலளிநீக்கு
  4. வை.கோபாலகிருஷ்ணன் கூறியது...

    அழகிய வாழ்வியல் கவிதை.

    பாராட்டுக்கள்.//

    வாங்கய்யா த்

    தாங்களில் தொடர் வருகைக்கும் அன்பான கருத்துகளுக்கும் பாராட்டுகளுக்கும் ரொம்ப சந்தோஷம். மிக்க நன்றி

    நீண்ட நாட்களாக நான் எவ்வித கருத்துகளுக்கும் பதிளளிப்பதில்லை மன்னிக்கவும்.. இனி அதுபோலில்லாமல் தொடர்ந்து கருதுரைக்களுக்கும் பதிலளிப்பேன்..

    பதிலளிநீக்கு
  5. 'வலி'மிகுந்ததுதான்...
    வாழ்க்கை...! - அவ்...
    வழியெங்கும்
    'ரணங்களின்' பாதைதான்...!

    இந்த
    வலியும்..
    ரணமும்...
    மறந்த
    மடையர்களாய்
    நாம்
    நடித்துகொண்டு...!

    நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டிருகிறோம்...!

    இது
    யதார்த்தம்..!
    உண்மை...!
    நிஜம்...!

    கவிதை...!
    வழக்கத்தைவிட அருமை...!

    வாழ்த்துக்கள்...!

    பதிலளிநீக்கு
  6. காஞ்சி முரளி கூறியது...

    'வலி'மிகுந்ததுதான்...
    வாழ்க்கை...! - அவ்...
    வழியெங்கும்
    'ரணங்களின்' பாதைதான்...!

    இந்த
    வலியும்..
    ரணமும்...
    மறந்த
    மடையர்களாய்
    நாம்
    நடித்துகொண்டு...!

    நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டிருகிறோம்...!//

    உண்மைதான் சகோ. நடிப்பில் மனிதனை மிஞ்ச உலகில் எதுவுமில்லை. அதிலும் நம்மை நாமே ஏம்மாற்றுவதிலும் வல்லவர்கள்.

    வாழ்க்கையென்னும் நூலில்
    ஆடும் பொம்மைகளாய். நூலில் பறக்கும் பட்டங்களாய். நூலில் புரட்டும் பக்கங்களாய். இருக்கிறது நூல் அறுபடாதவரை கவலையில்லை. அறுந்துவிட்டாலோ மீண்டும் ”முடிச்சிட்டே” தொடர்கிறது நூலில் வாழ்கையின் பயணங்கள்..

    பதிலளிநீக்கு
  7. //இது
    யதார்த்தம்..!
    உண்மை...!
    நிஜம்...!//


    யதார்த்தம்..!
    உண்மை...!
    நிஜம் இதனை எத்தனை முறை சொன்னாலும். சளைக்காமல் தொடரச்சொல்கிறது வரிகள்..

    //கவிதை...!
    வழக்கத்தைவிட அருமை...!

    வாழ்த்துக்கள்...!//

    அப்படியா! சகோ
    வலிகள் கூட
    வாழ்த்துகளை வாங்கிதருவது
    எழுத்தில் மட்டுமேதான்..

    மிக்க நன்றி சகோ..

    பதிலளிநீக்கு
  8. மன ரணத்தை
    ரணத்தின் வலியை வலிமையை
    மிகச் சரியாக உணர்த்திப் போகும்
    அருமையான பதிவு.வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  9. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  10. //உண்மைதான் சகோ.
    நடிப்பில் மனிதனை மிஞ்ச உலகில் எதுவுமில்லை.
    அதிலும்
    நம்மை நாமே ஏம்மாற்றுவதிலும் வல்லவர்கள்.

    வாழ்க்கையென்னும் நூலில்
    ஆடும் பொம்மைகளாய்...
    நூலில் பறக்கும் பட்டங்களாய்...
    நூலில் புரட்டும் பக்கங்களாய்.. இருக்கிறது...

    நூல் அறுபடாதவரை கவலையில்லை.

    அறுந்துவிட்டாலோ
    மீண்டும்
    ”முடிச்சிட்டே” தொடர்கிறது நூலில்
    வாழ்கையின் பயணங்கள்..///

    கருத்துரையிலேயே கவிதையா...?

    அதுசரி...!

    என்ன
    திடீர்னு
    தத்துவமும்....!
    தத்துவார்த்தமும்...!
    வேதாந்தமும்...!

    தங்கள் வரிகள்
    எதோ ஒன்றை சொல்கிறது...!

    ஆனா...!

    அது என்னன்னுதான் புரியல...!

    I Know...!
    but Why this...!

    பதிலளிநீக்கு
  11. நல்ல கவிதை,வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  12. வரிகள் உண்மையை சொல்லி மனிதருக்குள் இருக்கும் வலிகளை சொல்லாமல் சொல்கிறது நானுந்தான் துரத்துகிறேன் கவலையை ஆனால் அது என்னை விடவேயில்லையே. என்ன செய்ய

    பதிலளிநீக்கு
  13. லேடீஸ் ஸ்பெஷல்ல மலிககாவோட படைப்பு வந்தது, முத்துப்பேட்டை ஸ்கூல்ல கலை இலக்கிய மாணவிகளை தயார் பண்ணினதுன்னு பல படிவுகளைப் படிச்சும் எனக்கிருந்த கோபத்தால கமெண்ட் போடாம சந்தோஷம் மட்டும் பட்டுக்கிட்டு திரும்பப் போயிட்டேன். இப்ப என் பதிவுல உன் கமெண்ட்டை பாத்து மனசு கேக்காம வந்தேன்.

    வலியைச் சொன்ன கவிதை மிக அருமைம்மா. நீண்ட நாளைக்கப்புறம் மலிக்கா ஸ்பெஷல் சொல்லாடலைப் படிச்சதுல ரொம்பத் திருப்தி.

    பதிலளிநீக்கு
  14. valikalaikkuuda eppadibngka ungkalaala ippadi sollamudiyuthu

    thi gireeeeeeeeeeeeeet

    பதிலளிநீக்கு
  15. ஹைதர் அலி கூறியது...

    அருமையான கவிதை
    வாழ்த்துகள்//

    வாங்க சகோ. தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  16. Ramani கூறியது...

    மன ரணத்தை
    ரணத்தின் வலியை வலிமையை
    மிகச் சரியாக உணர்த்திப் போகும்
    அருமையான பதிவு.வாழ்த்துக்கள்//

    வாங்க அய்யா. தங்களின் வருகைக்கும் உணர்வுகளை உணர்ந்த கருத்துக்கும் மனமார்ந்து தந்த வாழ்த்துக்கும் மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  17. அதுசரி...!

    என்ன
    திடீர்னு
    தத்துவமும்....!
    தத்துவார்த்தமும்...!
    வேதாந்தமும்...!

    தங்கள் வரிகள்
    எதோ ஒன்றை சொல்கிறது...!

    ஆனா...!

    அது என்னன்னுதான் புரியல...!

    I Know...!
    but Why this...!//

    திடீர் திடீரென்றுதான் பிறக்குமாம் சிலருக்கு தத்துவம் சிலருக்கு ஞானம் சிலருக்கு . நமக்கு பிடித்ததென்னவோ கிறுக்கு கவிகிறுக்கு.ஹா ஹா

    இன்னதென்று புரிந்து விட்டால் வாழ்க்கையின் வேர்கள் தெரிந்துவிடுமென்றுதானே
    தெரியாமல் நடத்துகிறான்
    இறைவன் வாழ்க்கையென்னும் நாடகத்தை.

    அதானே வை திஸ் கொலவெறி..

    பதிலளிநீக்கு
  18. விமலன் கூறியது...

    நல்ல கவிதை,வாழ்த்துக்கள்.//

    வாங்க சகோ. தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  19. யோகிராஜா.. கூறியது...

    வரிகள் உண்மையை சொல்லி மனிதருக்குள் இருக்கும் வலிகளை சொல்லாமல் சொல்கிறது நானுந்தான் துரத்துகிறேன் கவலையை ஆனால் அது என்னை விடவேயில்லையே. என்ன செய்ய.//

    வாங்க யோகி. தங்களின் வருகைக்கும் மிக்க மகிழ்ச்சி..
    அணுவளவும் அண்டவிடாது துரத்திக்கொண்டேயிருங்கள் இல்லையெனில்
    கவலையே நமக்கு வலைபின்னி வாழ்க்கையை சிறையாக்கிவிடும்..

    மிக்க நன்றி யோகி..

    பதிலளிநீக்கு
  20. கணேஷ் கூறியது...

    லேடீஸ் ஸ்பெஷல்ல மலிககாவோட படைப்பு வந்தது, முத்துப்பேட்டை ஸ்கூல்ல கலை இலக்கிய மாணவிகளை தயார் பண்ணினதுன்னு பல படிவுகளைப் படிச்சும் எனக்கிருந்த கோபத்தால கமெண்ட் போடாம சந்தோஷம் மட்டும் பட்டுக்கிட்டு திரும்பப் போயிட்டேன். இப்ப என் பதிவுல உன் கமெண்ட்டை பாத்து மனசு கேக்காம வந்தேன்.//

    ஏண்ணா என்மீது கோபமா? யின்னா கோபம் வந்துட்டு பதிவ படிச்சிட்டு ஒன்னுமே சொல்லாது போகுமளவுக்கு இந்த தங்கையின்மேல் என்ன கோபம்..

    நான் அண்ணிக்கிட்டகூட எதுவும் உங்களப்பத்தி போட்டுக்கொடுக்கலையே. அச்சோஒ என்னான்னு புரியலையே!


    //வலியைச் சொன்ன கவிதை மிக அருமைம்மா. நீண்ட நாளைக்கப்புறம் மலிக்கா ஸ்பெஷல் சொல்லாடலைப் படிச்சதுல ரொம்பத் திருப்தி.//

    வலிகளைச்சொல்லக்கூட வழியிருக்கே என நினைக்கும்போது வருத்தம்கூட வசந்தமாகிவிடுகிறதண்ணா சிலவேலை..பலர் சொல்லவழியின்றி திண்டாடும்போது அதனை சற்றேனும் இறக்கிவைத்த திருப்தி நமக்கான பணியில் கிடைக்கிறதே. எல்லாம் அறிந்தவன் இறைவன் ஒருவனே!

    மிக்க நன்றிண்ணா. வந்துட்டு பாத்துட்டு போயிடாமா மனசுல உள்ளத கொட்டிட்டு போனத்துக்கு..

    பதிலளிநீக்கு
  21. அதுவா... கார்மெண்ட் பிசினஸ் தோழிகளோட சேர்ந்து பண்றதா நீ போட்டிருந்த பதிவுல வாழ்த்துச் சொன்னேன். பதிலுக்கு நீ ’சாந்தி மன்னி நலமா’ன்னு கேட்டுட்டே. ’போனாப் போகுதுன்னு மனைவிய கேரக்டரா வெச்சு எழுத பர்மிஷன் கொடுத்தா... இப்ப யாரோ சாந்தி மன்னின்னு உங்க சிஸ்டர் சொல்றா... இது எவ்வளவு நாளா எனக்குத தெரியாம நடக்குது’ன்னு கேட்டு சரிதா ஒரே சண்டை. சமாதானம் பண்றதுக்குள்ள முழி பிதுங்கிட்டுது, அதுல வந்த செல்லக் கோபம்தான்மா.

    பதிலளிநீக்கு
  22. இதப் பார்ரா...!

    மலிக்காகூட கருத்துரைக்கு அன்னைக்கே பதில் போடுறாங்க பார்ரா...!


    பாத்து...!
    கையெல்லாம் வலிக்கப் போகுது...!

    நீரோடை பதிவு உங்களுதா இருக்கலாம்...! ஆனா...!

    நாங்கெல்லாம் அங்கே வந்துபோற ஆளுங்க...!

    எங்களுக்கு கேட்குற ரைட்டு இருக்கு...!

    உங்க வசதிக்கு வருவீங்க...! போவீங்களா...!

    இந்தென்ன அநியாயமா இருக்கு...????????

    பதிலளிநீக்கு
  23. வாழ்க்கை நூலை வாசித்தோர் பலரும் வலியுருத்திச் சொன்னாலும் நாம் வாசிகும்போதுதான்(வாழும்போதுதானே) உணரமுடிகிறது
    நல்ல கவிதை

    பதிலளிநீக்கு
  24. அருமையன கவிதை.
    "..உமிழ்நீராய் சோகம்
    சுரந்துகொண்டே இருக்கிறது.." Nice

    பதிலளிநீக்கு
  25. வாழ்க்கை வாழ்வதற்கு வலி இருந்தும்!-வாழ்ந்து காட்டு ஒளி வீசும்!-வழி தவறா வாழ்க்கை பிழையில்லை!-நல்மொழி தவறா வாழ்க்கை எதற்கும் குறைவில்லை!-சுற்றம் பிரிந்து உன் வட்டம் குறைந்தாலும்!-உன் நிலையில் நீ இரு!-பட்டம் தந்து உன்னை உயர்த்தினாலும் நீ நீனாக இரு!- வாழு நீ வாழும் வரை போராடு!

    பதிலளிநீக்கு
  26. காஞ்சி முரளி கூறியது...

    இதப் பார்ரா...!

    மலிக்காகூட கருத்துரைக்கு அன்னைக்கே பதில் போடுறாங்க பார்ரா...!


    பாத்து...!
    கையெல்லாம் வலிக்கப் போகுது...//


    அடேன்போல 2நாளா கூகுள் ஆட்டம்காட்டிவிட்டது பிளாக்போஸ்டெல்லாம் எடுக்கவிடாம. நேற்றிலிருந்து ஒரே கவலை இன்றுகாலை நீரோடை திறந்ததும்தான் மூச்சே வந்தது..

    மல்லி இனி ஒழுங்க கருத்துக்கு பதிலச்சொல்லு இல்லாங்காட்டி இப்படித்தான் ஆகுமுன்னு எச்சரிக்கிறாங்களாம்மாக்கும்..


    //
    நீரோடை பதிவு உங்களுதா இருக்கலாம்...! ஆனா...!

    நாங்கெல்லாம் அங்கே வந்துபோற ஆளுங்க...!

    எங்களுக்கு கேட்குற ரைட்டு இருக்கு...!

    உங்க வசதிக்கு வருவீங்க...! போவீங்களா...!

    இந்தென்ன அநியாயமா இருக்கு...????????//

    கேளுக்கோ நல்லாகேளுங்கோ கேக்காட்டியும்தேன் வருத்தம் கேட்டா சண்ட்க்ஹோஷம்தான் அய்யா சாமி சாரே. ஜீ . அண்ணாத்தே சகோ முரளி அவர்களே! இனி கரகீட்டா வந்து ஆஜர் ஆயிடுவோமுல்ல என்ன கொஞ்சம் அப்பப்ப பிரேக் விழுது இதென்ன துபாயா. இஸ்டத்துக்கு ஆட. சொந்த ஊருங்கோ சும்மாயிருந்தாலும் பேசிக்கிடேயிருக்கோம். இப்படிவந்து கம்பிபிட்டர் முன்னாடியெல்லாம் வந்துக்கின்னு போயிகின்னு அப்படின்னு டபாயிக்கிறாங்கப்பு....

    இனி டெய்லி ஆஜர் ஆகப்பாக்குறோமுங்க சாமியோஓஓஓஓஓஓஓஒவ்வ்..

    பதிலளிநீக்கு
  27. Rathnavel Natarajan கூறியது...

    அருமை.
    வாழ்த்துகள்.//

    வாங்கய்யா தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  28. T.N.MURALIDHARAN கூறியது...

    வாழ்க்கை நூலை வாசித்தோர் பலரும் வலியுருத்திச் சொன்னாலும் நாம் வாசிகும்போதுதான்(வாழும்போதுதானே) உணரமுடிகிறது
    நல்ல கவிதை..//

    வாங்க வாங்க தங்களின் முதல் வருகைக்கும் அன்பான கருத்துகளுக்கும் மிக்க மகிழ்ச்சி..

    உண்மைதான். எதையும் உணரும்போதுதான் அதன் உள்ளர்த்தம் நமக்கே உரைக்கிறது உணர்த்தப்படுகிறது..

    மிக்க நன்றி சகோ..

    பதிலளிநீக்கு
  29. Muruganandan M.K. கூறியது...

    அருமையன கவிதை.
    "..உமிழ்நீராய் சோகம்
    சுரந்துகொண்டே இருக்கிறது.." Nice//

    வாங்கய்யா. தங்களின் அன்பான கருத்துக்கு மிக்க மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  30. கணேஷ் கூறியது...

    தங்களின் பதிவை இன்று வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். நேரமிருப்பின் வந்து பார்த்துக் கருத்துச் சொல்லும்படி வேண்டுகிறேன்.

    http://blogintamil.blogspot.in/2012/05/blog-post.html//

    ஆகா அப்படியே இதோ வந்துட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டேன்..

    மிகுந்த மிகுழ்ச்சின்னா.. ”பார்வைகளின் பதியலை” காதல் கவிதையாய் அங்கீகரித்து தங்களில் பதிவில் பதித்தமைக்கு.மிக்க நன்றிண்ணா..

    பதிலளிநீக்கு
  31. கணேஷ் கூறியது...

    அதுவா... கார்மெண்ட் பிசினஸ் தோழிகளோட சேர்ந்து பண்றதா நீ போட்டிருந்த பதிவுல வாழ்த்துச் சொன்னேன். பதிலுக்கு நீ ’சாந்தி மன்னி நலமா’ன்னு கேட்டுட்டே. ’போனாப் போகுதுன்னு மனைவிய கேரக்டரா வெச்சு எழுத பர்மிஷன் கொடுத்தா... இப்ப யாரோ சாந்தி மன்னின்னு உங்க சிஸ்டர் சொல்றா... இது எவ்வளவு நாளா எனக்குத தெரியாம நடக்குது’ன்னு கேட்டு சரிதா ஒரே சண்டை. சமாதானம் பண்றதுக்குள்ள முழி பிதுங்கிட்டுது, அதுல வந்த செல்லக் கோபம்தான்மா.//


    சரிதா அண்ணிகிட்டசொல்லுங்க சாந்தி என்றால் சரிதா தான்னு.. அதாவது சாந்தின்னா நிம்மதி அது நீதான் செல்லம் அதைதான் தங்கை சாந்தமா சொல்லியிருக்கான்னு சொல்லி சமாளிக்கத்தெரியாமா முக்கி முனங்கி முழி பிதுங்கி இப்படியா மட்டிக்கொள்வது. மலிக்காவோட அண்ணா இனி அப்படியெல்லாம் முழி பிதுங்காம எஸ்கேப் ஆக அகத்துக்கோனும் ஓகே.

    செல்லக்கோபம்தானே அப்பாடாஆஆஆஆஅ..

    பதிலளிநீக்கு
  32. jafarali கூறியது...

    வாழ்க்கை வாழ்வதற்கு வலி இருந்தும்!-வாழ்ந்து காட்டு ஒளி வீசும்!-வழி தவறா வாழ்க்கை பிழையில்லை!-நல்மொழி தவறா வாழ்க்கை எதற்கும் குறைவில்லை!-சுற்றம் பிரிந்து உன் வட்டம் குறைந்தாலும்!-உன் நிலையில் நீ இரு!-பட்டம் தந்து உன்னை உயர்த்தினாலும் நீ நீனாக இரு!- வாழு நீ வாழும் வரை போராடு!//

    வாங்க சகோ..

    நிச்சயமாக
    எதுவந்தபோதும் தளராது நெஞ்சம்
    எதுவென்றபோதும் இறைவனிடமே தஞ்சம்..

    தங்களின் அன்பான கருத்துரைகளுக்கு மிகுந்த சந்தோஷம் மிக்க நன்றி சகோ..

    பதிலளிநீக்கு
  33. //இணைந்திருக்கும் வழியே
    இன்பமும்
    அறுந்துகிடக்கும் இடைவெளியின் வழியே
    துன்பமும்
    விட்டு விட்டு சிரித்தழுகிறது!//

    வாழ்வியலின் நிதர்சனத்தை அப்படியே அப்பட்டமாய் சொல்லி உள்ளீர்கள்.வாழ்த்துக்கள் சகோதரி.

    பதிலளிநீக்கு
  34. நீர்குமிழியாய்
    உடைந்துகொண்டே இருக்கிறேன்
    உமிழ்நீராய் சோகம்
    சுரந்துகொண்டே இருக்கிறது//

    எக்கோவ் எப்டிக்கா இப்டியெல்லாம் உங்களுக்கு செம மூளை அதில் கொஞ்சூண்டு கொடுங்களேன் எனக்கும் கவித சுரக்குதான்னு பாப்போம்..

    கவிதை ரொம்ப அருமைக்கா வாழ்க்கையின் வலையை வரிகளில் உணர்ந்து எழுதியிருக்கீங்க.. எத்தனை பாராட்டினாலும் தகும்..

    பதிலளிநீக்கு
  35. நீர்குமிழியாய்
    உடைந்துகொண்டே இருக்கிறேன்
    உமிழ்நீராய் சோகம்
    சுரந்துகொண்டே இருக்கிறது//

    எக்கோவ் எப்டிக்கா இப்டியெல்லாம் உங்களுக்கு செம மூளை அதில் கொஞ்சூண்டு கொடுங்களேன் எனக்கும் கவித சுரக்குதான்னு பாப்போம்..

    கவிதை ரொம்ப அருமைக்கா வாழ்க்கையின் வலியை வரிகளில் உணர்ந்து எழுதியிருக்கீங்க.. எத்தனை பாராட்டினாலும் தகும்..

    மேலே சின்ன மிஸ்டேக் அதான் டிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டு

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது