ஈழத்தில்
ஈரக்குலைகளெல்லாம்
இரத்தமற்று இறுகிக்கிடக்க
இரக்கமற்ற அரக்கர்களெல்லாம்
இறந்தவர்களின்மேல் ஆட்டம்போட!
இப்படியான கொடுமைகள்
எப்போதுதான் தீருமென
எங்கோயிருக்கும்
ஈரல்களில்
ஈரம் ஊற்றெடுக்க!
அரசியலாகும் ஈழம்
அரசியலாக்கும் ஈனம்
அழுகுரல்களின் ஆலோழம்
அந்தி சாய்ந்தாலும் தீராதாம்
விடியலை எதிர்பார்த்து
விடிய விடிய
விழித்திருக்கும் விழிகளுக்கும்
விழித்திரையிடும் கண்ணீர்களுக்கும்
விடிந்திடும் ஒரு நாள் கிழக்கு
முடிந்திடும் அன்றே
கொடுமையின் வழக்கு
ஈசப்படைகள் நாசமித்துபோகும்
ஈழக்குழந்தைகள்
தன் தேசமெங்கும் வாழும்
எப்போர் நடத்தினாலும்
அப்போரையும் வெல்லும்
ஏவுகனைகொண்டு
காரிருளை வீசினாலும்
ஈழமா இருளும்?
இருளையகற்றி தீப ஒளியேற்றத் தெரியும்
இயன்றளவு ஈழம் காக்க முடியும்
ஈழத்தில் இனி எந்நேரமும்
இருளுக்கில்லை வேலை
இரவு நேரத்தில் மட்டும் வந்து
ஈழக்குழந்தைகளை உறங்கவைத்து
இனிமையாக்கிடுமே நாளை!...
---------------------------------------------------------------------------------------------------------------
இக்கவிதை ஈகரையின் கவிதைப்போட்டிக்காக எழுதியது.கவிதைப் போட்டியில் வெல்லமுடியாவிட்டாலும் கலந்துகொண்டமைக்கான மகிழ்ச்சியடைகிறேன். வித்தியாசமான 8 +8 தலைப்புகள் தந்தார்கள். அதில் 8 தலைப்புகள் நாமாக தேர்ந்தெடுத்து எழுதவேண்டும். அப்படி நான் தேர்ந்தெடுத்த தலைப்புகளில் ஒன்றுதான் இது.[மற்றவைகள் தொடரும்] போட்டியில் வென்றவர்களுக்கு எனது வாழ்த்துகள்..
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய். .








5 நீராடியவங்க சொன்னது.:
பலரது உணர்வை பிரதிபலித்த வரிகள்...
நன்றி..
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
தோட்டப்பயிரைக் காக்கும் இலகு கருவி (உள்ளூர் கண்டுபிடிப்பு)
ஈசப்படைகள் நாசமித்துபோகும்
ஈழக்குழந்தைகள்
தன் தேசமெங்கும் வாழும்
எப்போர் நடத்தினாலும்
அப்போரையும் வெல்லும்
ஏவுகனைகொண்டு
காரிருளை வீசினாலும்
ஈழமா இருளும்?//
எங்கள் வாழ்வு என்றுமே இருளாதென்று எங்கிருந்தோ எழுதும் உங்களுக்கு எங்கள் நன்றியம்மா.
விடிந்திடுமென்றுதான் காத்திருக்கிறோம்.
கண்ணீரோடு பூத்திருக்கிறோம்.
நன்றி மல்லிக்கா.எங்கள் உணர்வை அப்படியே பிரதியெடுத்திருக்கிறீர்கள்.
இதுதான் இனஉணர்வு.என்றும் இருளாது நம்மீழம்.
நம்புவோம் இன்னும் !
சகோ
இறைவன் உங்களுக்களித்த
மிகப் பெரிய வெகுமதி
உங்கள் கவித் திறமை
கவிதை
அதில் ஈழத்தின் உண்மைகள்
சுட்டியை சொடுக்கி படியுங்கள்
1.
காணத்தவறாதீர்கள். உலகிலேயே மிக பெரிய, மிக சிறிய திருகுரான் பிரதிகளின் அரிய சிறுகண்காட்சி விடியோக்கள் .
மழலைகள், சிறார்கள் குரான் ஓதும் விடியோக்கள்.
.
சுட்டியை சொடுக்கி படியுங்கள்
2. ---- >
புலிகளின் தமிழ்முஸ்லிம் இனஒழிப்பின் ஈரநினைவுகள். பகுதி 3.
ஈழத்தில் புலிகளால் வதைக்கப்பட்ட இன அழிப்பு செய்யப்பட்ட இஸ்லாமியர்கள் குறித்தப் பேச மறுப்பவனும் பேசுவதைத் தடைசெய்பவனும் தான் விரும்பிய குரலில் இஸ்லாமியர்களைப் பேச நிர்ப்பந்திப்பவனும் இஸ்லாமியர்களின் தோழனா அல்லது மூத்த நரேந்திர மோடியா எனத் தோழர்கள் சிந்திக்க வேண்டும்.
இலங்கையில் முஸ்லிம்களுக்கு நடந்திருப்பது என்ன? நடப்பது என்ன? என்பது பற்றி தெளிவாக இந்திய மக்களுக்கு கூற வேண்டியுள்ளது. உண்மை அறியாத மக்கள் கொடூரப் புலிகளுக்கு ஆதரவுக் கொடி தூக்குகின்றனர் < ----
கருத்துரையிடுக