நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

தமிழரின் பெருமை தழைத்து ஓங்கட்டும்.உழைப்பு
உயர்வைத் தரும்
உழைக்காதோருக்கு
உடலும்
உள்ளமும் சோர்வைத் தரும்

ஒருவர் உண்டு மகிழ
இன்னொருவருரின்
வேர்வைகளை
விதையாக்கி உழுதிட

அது நெல்லாகி
அறுவடையாகி
அரை சாண் வயிற்றை
ஆனந்தப்படுத்த
சோறாகி சுகம்தரும்...

 இது சென்ற வருடம் எழுதியது..

தை திங்கள் வந்தது
தமிழருக்கு மகிழ்வைத் தந்தது

ஏர்பிடித்து உழுதிடும்
உழவரின் உழைப்பின்
ஏற்றங்களை உலகுக்கு உணர்த்திட
 ”வந்தது திங்கள் தந்திடும் பொங்கல்”

உழைப்பவரின் மனதினை
உற்சாகப்படுத்தி
ஊக்கமும் உறுதியும் தந்திட
”வந்தது திங்கள் தந்திடும் பொங்கல்”

கலப்பையின் உழைப்பே
அகப்பையில் சோறு
காட்டையும் பொன்னாய்
ஆக்கிடும் பாரென்று சொல்ல
”வந்தது திங்கள் தந்திடும் பொங்கல்”

விஞ்ஞானங்கள் பல வந்தாலும் -இந்த
விவசாயின் வேர்வைக்குத் தனி
விலைமதிப்புள்ளதென்பதைச் சொல்ல
”வந்தது திங்கள் தந்தது பொங்கல்”

ஐந்தறிவு ஜீவன்களுக்கும் அலங்காரம்
அது விளங்கா போதிலும்
அதற்கும் மதிப்பளிக்க
”வந்தது திங்கள் தந்தது பொங்கல்”

கரும்பும் மஞ்சளும் மங்களமாய் இனித்திட
கன்னிகள் சத்தம் களைக்கட்டிட
கூட்டமாக கூட்டமாய் கூட்டாஞ்சோறு
கூடிப் பொங்கி உண்டிட
”வந்தது திங்கள் தந்தது பொங்கல்”

தமிழரின் பெருமை தளைத்து ஓங்கிட
தன்னிறைவுபெற்று செழித்து வாழ்ந்திட
ஏழைகளற்று ஏற்றம் பெருகிட

ஏழ்மையை அடித்து தூரத்தி விரட்டிட
எல்லாம் வல்ல இறைவனை தொழுது
என்றும் கேட்போமே இனியபொழுது....

உலகில் உள்ள ஒட்டுமொத்த தமிழர்களுக்கும். 
தமிழினத்துக்கும். உழவர்களுக்கும். உழைப்பாளிகளுக்கும்.
உளமார்ந்த வாழ்த்துக்கள்...

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய

10 கருத்துகள்:

 1. //உலகில் உள்ள ஒட்டுமொத்த தமிழர்களுக்கும்.
  தமிழினத்துக்கும். உழவர்களுக்கும். உழைப்பாளிகளுக்கும்.
  உளமார்ந்த வாழ்த்துக்கள்...//

  பகிர்வு அருமை மலிக்கா.

  பதிலளிநீக்கு
 2. ''...தமிழரின் பெருமை தளைத்து ஓங்கிட
  தன்னிறைவுபெற்று செழித்து வாழ்ந்திட
  ஏழைகளற்று ஏற்றம் பெருகிட

  ஏழ்மையை அடித்து தூரத்தி விரட்டிட
  எல்லாம் வல்ல இறைவனை தொழுது
  என்றும் கேட்போமே இனியபொழுது...''
  கவிதைக்கு வாழ்த்துகள். நன்றியுடன் இனிய பொங்கல் வாழ்த்துகள்.
  வேதா. இலங்காதிலகம்.
  http://kovaikkavi.wordpress.com

  பதிலளிநீக்கு
 3. பொங்கல் திரு நாள் சிறப்புக் கவிதை அருமை
  பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  தங்களுக்கும் த்ங்கள் குடும்பத்தாருக்கும்
  இனிய பொங்கல் திரு நாள் நல் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 4. தங்களுக்கும்....
  தங்கள் குடும்பத்தார் மற்றும்
  வலையுலக நண்பர்கள்
  அனைவருக்கும்
  "தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் வாழ்த்துக்கள்....!

  வாழ்த்துக்களுடன்...
  காஞ்சி முரளி....

  பதிலளிநீக்கு
 5. கவிதை அருமை அக்கா.. இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 6. தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள் மலிக்கா!

  பதிலளிநீக்கு
 7. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என்
  அன்பிற்கினிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 8. மிக அருமையான கவிதை

  உலகில் உள்ள அனைத்து தமிழர்களுகும் பொங்கல் நல் வாழ்த்துக்ள்

  பதிலளிநீக்கு
 9. கவிதை நல்லா இருக்கு. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது