நீரோடைக்கு வருகைதரும் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்

பெண்ணே எழு நீ இடியாக!

மனவுணர்வுகளை
மிதித்தே பலக்கப்பட்டு -பிற
மனங்கள் வலிப்பதைப் பற்றி
சிறுதளவேனும்  
சிந்திக்காதோர் மத்தியில்

மர்மங்கள் புதைப்பதைப்போல்
மன ரணங்களை மறைத்து வைத்து
னதை ஊமையாக்கிவிடாமல்
மல்லுக்கு நின்று முன்னேறு!

பெட்டைக்கூவி பொழுது விடியாதென
புலம்புவோர் மத்தியில்
புதைந்துவிடாதே பெண்ணே!
இவர்களெல்லாம் பெண்ணை
பேதையென்றே பேசிப்பேசி
போதை கண்டுவிட்டார்கள்

முடவன் கொம்புத்தேனுக்கு
ஆசைப்படக் கூடாதென்பார்கள்
முடவனாக இருந்தாலும்
முயற்சித்தால் முடியாமல் போகுமோ!
ஒரு சொட்டேனும்
தேன் கிட்டாமல் போகுமோ!

அடிமை நெருப்புக் கங்குகளாய்
ஆழ்மன உணர்வைகூட கருக்கசெய்யும்
அகந்தைகளிடம் அகப்பட்டு
அடைபட்டேக் கிடக்காதே!

அந்தியில் சாயும் வெயில்
அதிகாலையில் சுள்ளென்று எழுவதுபோல்
அதிகாரவர்கங்களின் பிடியில்
அகப்பட்டுகிடக்காமல்
அமைதியாய் வீறு கொண்டெழும்பு

அடுத்தவர் மனவோட்டம் புரிந்தாலும்
அறியாமையாலல்ல
ஆற்றாமையால்
அறியமறுக்கும்  அறிவிலிகள் மத்தியில்

அகம்பாவம் அறுத்தெறிந்து
அன்பெனும் ஆயுதம் அணிந்து
இறைக்கு மட்டுமே அடிபணிந்து
இருளிலும் அச்சம் தவிர்த்து
அவசரமில்லாமல் ஆய்ந்து ஆராய்ந்து
அடியெடுத்து வைத்து நடைபோடு
அஞ்ஞானத்தோடு மெஞ்ஞானமும் சேர்த்து

முன்னேறுவதையே
முயற்சியாக்கொண்டு முன்னேறினால்
பின்சென்ற அனைத்தும்
முன்னுக்கு வரும்
முந்தானைப் பெண்ணுக்கும்!
முயற்சி வெற்றியையே தரும் .........

இதுவும் ஈகரை கவிதைப்போட்டிக்காக எழுதியதுதான்..
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

20 கருத்துகள்:

  1. முன்னேறுவதையே
    முயற்சியாக்கொண்டு முன்னேறினால்
    பின்சென்ற அனைத்தும்
    முன்னுக்கு வரும்
    முந்தானைப் பெண்ணுக்கும்!
    முயற்சி வெற்றியையே தரும்.

    எழுச்சிமிக்க வரிகள். வாழ்துகள்.

    பதிலளிநீக்கு
  2. ஆண்கள் மனதையும் கலங்க வைக்கும் கவிதையாகி கோடையிடியாக தாக்கும் வலிமை வாய்ந்தது . வாழ்த்துகள்.
    ஆனால் காலம் மாறி பெண்கள் செயல்பாட்டினால் ஆண்கள் வாயடைத்து தலையாட்டும் பொம்மையாகி இருகின்றதனையும் பார்க்க முடிகின்றது .அதுவும் பெண்கள் எழுதிய கவிதையில் காணலாம்.
    அவர்களிடத்தில் ஆணாதிக்கம் உருவாகியதற்கும் அதை அழியாமல் பாதுகாத்து வருவதற்கும் முழு பொறுப்பு பெண்கள் தான் என்பதை பற்றிய பதிவு தான் இது
    குட்டி சுவர்க்கம்: ஆணாதிக்கம்- பெண்ணே தான் காரணம்
    http://kuttisuvarkkam.blogspot.com/2012/01/patriarchy-patriarchy.html

    பதிலளிநீக்கு
  3. அற்புதமான கவிதை, மலிக்கா அதிலும் இந்த கடைசி வரிகள் ...

    //முன்னேறுவதையே
    முயற்சியாக்கொண்டு முன்னேறினால்
    பின்சென்ற அனைத்தும்
    முன்னுக்கு வரும்
    முந்தானைப் பெண்ணுக்கும்!
    முயற்சி வெற்றியையே தரும் .//

    அருமை.

    பதிலளிநீக்கு
  4. "மர்மங்கள் புதைப்பதைப்போல்
    மன ரணங்களை மறைத்து வைத்து
    மனதை ஊமையாக்கிவிடாமல்
    மல்லுக்கு நின்று முன்னேறு!..."

    ஊற்சாகம் ஊட்டும் நல்ல வரிகள்.

    பதிலளிநீக்கு
  5. இன்றைய பெண்கள் கொஞ்சம் துணிந்திருக்கிறார்கள் மல்லிக்கா.ஆனால் இன்னும் வேணும்.கவிதை எப்பவும்போல அசத்தல் !

    பதிலளிநீக்கு
  6. அக்கா. கவிதை செம கலக்கல். ரெண்டுநாளா ரொம்ப பிஸி [என்னா சும்மாதானிருந்தேன் நெட் வேலை செய்யலை]

    எக்காலமும் பெண்கள் அப்படியே இருந்துவிடாமல்,இப்படி முன்னேறூகள் என சூப்பராக சொல்லிட்டீங்க.

    கவி கற்பகமே வாழ்க வளர்க..

    பதிலளிநீக்கு
  7. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  8. வரிகளில்
    பெண்ணியம் பேசுகிறது

    பெண்ணிய எழுச்சிக் கவிதை பாராட்டுக்கள் சகோ

    பதிலளிநீக்கு
  9. Lakshmi கூறியது...

    முன்னேறுவதையே
    முயற்சியாக்கொண்டு முன்னேறினால்
    பின்சென்ற அனைத்தும்
    முன்னுக்கு வரும்
    முந்தானைப் பெண்ணுக்கும்!
    முயற்சி வெற்றியையே தரும்.

    எழுச்சிமிக்க வரிகள். வாழ்துகள்.//

    வாங்கம்மா. தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிமா..

    பதிலளிநீக்கு
  10. சிநேகிதி கூறியது...

    ஆவேசமான வரிகள் அக்கா.//

    வாங்க ஃபாயிஜா.
    அப்பப்ப தோன்றும்
    ஆவேசங்களோடு
    அடங்கிபோகிறது பலயிடங்களில் பெண்களில்
    ஆற்றாமை..

    மிக்க நன்றி ஃபாயிஜா..

    பதிலளிநீக்கு
  11. nidurali கூறியது...

    ஆண்கள் மனதையும் கலங்க வைக்கும் கவிதையாகி கோடையிடியாக தாக்கும் வலிமை வாய்ந்தது . வாழ்த்துகள்.//

    வாங்க தந்தையே!
    கோடையிடியாய் தாங்கித்தாங்கி
    கொடுமைகள் பல அனுபவித்து
    வெளியில் சொல்லயியலாச் சுழலில்
    சிக்கித்தவிக்கும் பலர்.


    //ஆனால் காலம் மாறி பெண்கள் செயல்பாட்டினால் ஆண்கள் வாயடைத்து தலையாட்டும் பொம்மையாகி இருகின்றதனையும் பார்க்க முடிகின்றது//

    அதேபோல் நேருக்கு மாறாக
    கொண்டவளே கொண்டவனை
    செயலாலும்
    சொற்களாலும் சூறையாட வெளியில்
    சொல்லயியலா துன்பத்துக்கும்
    ஆளாகி
    செயழிலக்கிறார்கள்
    ஆண்கள்..

    தங்களின்அருமையான கருத்துகளுக்கு மிக்க நன்றி தந்தையே..

    பதிலளிநீக்கு
  12. RAMVI கூறியது...

    அற்புதமான கவிதை, மலிக்கா அதிலும் இந்த கடைசி வரிகள் ...

    //முன்னேறுவதையே
    முயற்சியாக்கொண்டு முன்னேறினால்
    பின்சென்ற அனைத்தும்
    முன்னுக்கு வரும்
    முந்தானைப் பெண்ணுக்கும்!
    முயற்சி வெற்றியையே தரும் .//

    அருமை.//

    வாங்க சகோ. தங்களின் அன்பான கருதுகளுக்கு மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  13. Muruganandan M.K. கூறியது...

    "மர்மங்கள் புதைப்பதைப்போல்
    மன ரணங்களை மறைத்து வைத்து
    மனதை ஊமையாக்கிவிடாமல்
    மல்லுக்கு நின்று முன்னேறு!..."

    ஊற்சாகம் ஊட்டும் நல்ல வரிகள்.//

    வாங்கய்யா. ஊக்கம் தரும் கருத்துக்கு மிக்க மகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு
  14. ஹேமா கூறியது...

    இன்றைய பெண்கள் கொஞ்சம் துணிந்திருக்கிறார்கள் மல்லிக்கா.ஆனால் இன்னும் வேணும்.கவிதை எப்பவும்போல அசத்தல் !//

    வாங்க தோழி..

    துணித்திருக்கிறார்கள்தான்
    துணிய வேண்டியதில் தவறி
    துணிக்கூடாததில் முன்னேறியும் இருக்கிறார்கள்.

    எதில் துணியவேண்டுமோ
    அதில் துணிந்து முன்னேறினால்
    எச்சுவரும் பெண்ணைத் தடுக்காதே! எப்பொழுதும்..

    மிக்க நன்றி தோழி..

    பதிலளிநீக்கு
  15. அனுஜா கூறியது...

    அக்கா. கவிதை செம கலக்கல். ரெண்டுநாளா ரொம்ப பிஸி [என்னா சும்மாதானிருந்தேன் நெட் வேலை செய்யலை]

    எக்காலமும் பெண்கள் அப்படியே இருந்துவிடாமல்,இப்படி முன்னேறூகள் என சூப்பராக சொல்லிட்டீங்க.

    கவி கற்பகமே வாழ்க வளர்க..//

    அதானே பார்த்தேன் என்னடா ஆளையே காணோமே பொண்ணுபார்க்க வந்துட்டாங்களோன்னு..ஹா ஹா..

    வந்தமைக்கும் கருத்தை தந்தமைக்கும் மகிழ்ச்சி.

    அதுசரி யாரந்த கற்பகம். செண்பக மே! மாதரி
    இதுவும் கற்பக மே! வா

    எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்

    பதிலளிநீக்கு
  16. செய்தாலி கூறியது...

    வரிகளில்
    பெண்ணியம் பேசுகிறது

    பெண்ணிய எழுச்சிக் கவிதை பாராட்டுக்கள் சகோ.//

    பெண்ணியம்
    பண்போடு எழுச்சிப்பெற்றால்
    புண்ணியமே!

    பாராட்டுகளுக்கும் அன்பு கருத்துக்கும் மிக்க நன்றி சகோ

    பதிலளிநீக்கு
  17. வணக்கம் மலிக்கா அக்கா, அற்புதமான ஒரு பெண்ணியப் பொருள் பாடும் கவிதை.. வரிகள் ஒவ்வொன்றும் அருமை. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  18. பி.அமல்ராஜ் கூறியது...

    வணக்கம் மலிக்கா அக்கா, அற்புதமான ஒரு பெண்ணியப் பொருள் பாடும் கவிதை.. வரிகள் ஒவ்வொன்றும் அருமை. வாழ்த்துக்கள்.//

    வாங்க ராஜ். தங்களின் அன்பான கருதுகளுக்கும் வாழ்த்துகளுக்கும் அன்புகலந்த நன்றிகள்..

    பதிலளிநீக்கு
  19. தலைப்பே அதிருது

    ஆஹா கவிதை கேற்ற படம் சூப்பர்
    வரிகளும் அருமை

    பதிலளிநீக்கு

என் கவிக்குழந்தைக்கு தாலாட்டு
உங்கள் கருத்துகள்.

என் கவியுற்றுக்கு நீரோட்டம்
உங்கள் கருத்துகள்

என் கவிகிறுக்கல்களுக்கு கைதட்டல்
உங்கள் கருத்துகள்

என் கவிப்பிழைகளுக்கு நறுகென்ற குட்டு
உங்கள் கருத்துகள்.

ஆகவே அனைத்தும் நீங்கள்
அதனுள்ளே ஓரமாய் நான்..

அமெரிக்க தமிழ்பல்கலை கலக்கத்தின் சிறந்த நூலுக்கான விருது