உள்ளத்தின் ஆழத்தில்
ஓராயிரம் சொற்கள்
ஒளிந்து கிடக்கின்றன
ஒன்றுமறியாத உதடு
ஊமைக்குருவியாகி
மெளனித்துக்கிடந்தும்
முணுமுணுத்துவிடுகிறது
அர்த்த ஜாமத்தில்
அனைத்துமே
அடங்கிக் கிடக்கும்போது
அலறத்துடிக்கிறது மெளனம்
ஆனபோதும்
அர்த்தங்களற்ற செயல்களாகி
அமைதி காத்துகிடக்கிறது
ஆழ்மனதின் அர்த்தமறிந்து
பலநேர மெளனம்
பலனைத் தருமென்றும்
சிலநேர மெளனம்
சிக்கலைத் தருமென்றும்...
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
மெனத்தில் இத்தனை வெளிப்பாடா!
பதிலளிநீக்குமெல்லிய வரியில் நீந்திய கவிதை
வாழ்த்துகள் மலிக்கா.
இன்னும் எழுதுங்கள் வானில் மிளிருங்கள்..
மெளனத்தில் இத்தனை வெளிப்பாடா!
பதிலளிநீக்குமெல்லிய வரியில் நீந்திய கவிதை
வாழ்த்துகள் மலிக்கா.
இன்னும் எழுதுங்கள் வானில் மிளிருங்கள்..
மன்னிக்கவும் முன்னில் சிறு பிழை
//பலநேர மெளனம்
பதிலளிநீக்குபலனைத் தருமென்றும்
சிலநேர மெளனம்
சிக்கலைத் தருமென்றும்...//
அருமை அக்கா. வாழ்த்துக்கள்.
இன்றுதான் நீராட வருகிறேன். நீரோடை சில்லென்றிருக்கிறது..
அக்காவ்வோவ் உங்களுக்காக தூங்கமா இருக்கேன் ஏன் தெரியுமா 3 நாளாச்சே இன்னும் கவிதை வரலையேன்னு.
பதிலளிநீக்குஇந்த கவிதைக்கும் யாராச்சிம் உங்க ஊருக்கு வரும்போது பரிசுகொண்டுவருவாங்கக்கா. இல்லையின்னா நான் நிச்சயம்!!!!!!!!!!! என்ன அத அப்புறம் சொல்கிறேன் இப்போது
கவிதை மிக பிரமாதம். மெளனத்தின் வெளிப்பாடு ரகசியத்தை அம்பலப்படுதியது..
உண்மையிலேயே மிக உணர்ந்து படிச்சேன்க்கா..
ஜாமத்தில் ஒற்றுமை குலைந்து கிடக்கும் ஊர்களுக்கும் இது பொருந்தும் கவிதையாக உலா வரும்
பதிலளிநீக்குநல்ல கவிதை.
பதிலளிநீக்குவாழ்த்துகள்.
உள்ளத்தின் ஆழத்தில்
பதிலளிநீக்குஓராயிரம் சொற்கள்
ஒளிந்து கிடக்கின்றன
ஒன்றுமறியாத உதடு
ஊமைக்குருவியாகி
மெளனித்துக்கிடந்தும்
முணுமுணுத்துவிடுகிறது
ரசிக்கவைத்த வரிகள்.
//பலநேர மெளனம்
பதிலளிநீக்குபலனைத் தருமென்றும்
சிலநேர மெளனம்
சிக்கலைத் தருமென்றும்... ////
கவிஞர் மலிக்காவின் தத்துவம் 995....!
நல்ல கவிதை...!
அதிலும் மேற்சொன்ன வரியும்.... வார்த்தையும்.. உண்மை...!
மொளனத்தின் வெளிபாடு அருமை.
பதிலளிநீக்கு//பலநேர மெளனம்
பலனைத் தருமென்றும்
சிலநேர மெளனம்
சிக்கலைத் தருமென்றும்..//
சிறப்பான வரிகள்.
//பி.அமல்ராஜ் கூறியது...இன்றுதான் நீராட வருகிறேன். நீரோடை சில்லென்றிருக்கிறது..//
பதிலளிநீக்குவந்துட்டீங்கள்ல ராஜ் இனி தொடர்ந்து வருவீங்க. நீரோடையின் குளுமை விடாது உங்களை எங்களைபோல்..
உள்ளத்தின் ஆழத்தில்
பதிலளிநீக்குஓராயிரம் சொற்கள்
ஒளிந்து கிடக்கின்றன
ஒன்றுமறியாத உதடு
ஊமைக்குருவியாகி
மெளனித்துக்கிடந்தும்
முணுமுணுத்துவிடுகிறது//
அடுக்கு மொழிகளில்
அடுக்கும் உணர்வுகள்
அழகோ அழகோ கவிதை எழுதத் தெரியாதவரும் கவிதையெழுதத்தூண்டும் உங்கள் கருத்துகளும் எழுத்துக்களும்.
அருமையோ அருமை
வாழ்க வளமுடன்.
நிலாக்கண்ணன் கூறியது...
பதிலளிநீக்குமெளனத்தில் இத்தனை வெளிப்பாடா!
மெல்லிய வரியில் நீந்திய கவிதை
வாழ்த்துகள் மலிக்கா.
இன்னும் எழுதுங்கள் வானில் மிளிருங்கள்..
மன்னிக்கவும் முன்னில் சிறு பிழை//
வாருங்கள் கண்ணன். தங்களின் வருகைக்கும் அன்பான கருதிற்க்கும் மிக்க நன்றி..
பி.அமல்ராஜ் கூறியது...
பதிலளிநீக்கு//பலநேர மெளனம்
பலனைத் தருமென்றும்
சிலநேர மெளனம்
சிக்கலைத் தருமென்றும்...//
அருமை அக்கா. வாழ்த்துக்கள்.
இன்றுதான் நீராட வருகிறேன். நீரோடை சில்லென்றிருக்கிறது..//
வாருங்கள் அமல்ராஜ். தங்களின் முதல் வருகைக்கும் அன்பான வாழ்த்திற்க்கும்.கருதிற்க்கும் மிக்க நன்றி.தொடர்ந்துவாருங்கள்...
அனுஜா கூறியது...
பதிலளிநீக்குஅக்காவ்வோவ் உங்களுக்காக தூங்கமா இருக்கேன் ஏன் தெரியுமா 3 நாளாச்சே இன்னும் கவிதை வரலையேன்னு.
இந்த கவிதைக்கும் யாராச்சிம் உங்க ஊருக்கு வரும்போது பரிசுகொண்டுவருவாங்கக்கா. இல்லையின்னா நான் நிச்சயம்!!!!!!!!!!! என்ன அத அப்புறம் சொல்கிறேன் இப்போது
கவிதை மிக பிரமாதம். மெளனத்தின் வெளிப்பாடு ரகசியத்தை அம்பலப்படுதியது..
உண்மையிலேயே மிக உணர்ந்து படிச்சேன்க்கா..//
அடடா தூங்காமயா. பொய் சொல்லக்கூடாது நீங்க எப்போதும் 11 மணிக்கு தூங்குவதாக கேள்விப்பட்டேனே..
ஆகா பரிசு நீங்க தரபோறதில்லை..
உணர்ந்து படித்தமைக்கு மிக்க சந்தோஷம் அனுஜா..
சிறப்பான கவிதை
பதிலளிநீக்குவார்த்தைகளின் தொடுப்பு மிக அருமை
பாராட்டுக்கள் சகோ
மௌனமும் பல நேரங்களில் ஆயுதம் தான். வலிமையான மொழி தானே அது. அருமை!
பதிலளிநீக்குமௌனமும் பல நேரங்களில் ஆயுதம் தான். வலிமையான மொழி தானே அது. அருமை!
பதிலளிநீக்கு