ஓய்வு கேட்க்கும் கனவு.




கனவுக்கும் உணர்வுண்டு
கண்களைவிட்டுச் செல்லாதே!

காண்பதெல்லாம் கனவென்று
கண்களும் சொல்லாதே!

விழிகள் விழித்திருக்க
வெருங்கனவு காணாதே!

வெளிச்சத்தை விட்டு விட்டு
வேறொரு இருளுக்குள் போகாதே!

கனவுகள் மெய்படும்வரை
காட்சிகளும் நகராதே!

கனவுகள் தேயும்வரை
கருவிழியும் சடைக்காதே!

காலங்கள் தீரும்வரை
கனவுகள் ஓயாதே!

கனவுகளும் ஓயாதே
கல்லறைக்கு போகும்வரை.........

இக்கவிதை முதுகுளத்தூர்.காமில் வெளிவந்துள்ளது..
நன்றி முதுகுளத்தூர்.காம்

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

12 நீராடியவங்க சொன்னது.:

மகேந்திரன் சொன்னது…

வார்த்தையில்லை சகோதரி
அப்படி ஒரு சொல்லாற்றல் கவிதையில்.
கனவிலும் நினைத்திராத
அழகிய கனவுக் கவிதை.
கவின்மிகு வரிகள்.

Muruganandan M.K. சொன்னது…

ஓயாத கனவுகள்
சாயாத நினைவுகளில்
சோராமல் கிளர்ந்தெழும்
எழுச்சிகள்.
அருமையான படைப்பு.

நந்தலாலா சொன்னது…

arumaiyaana sinthanai malikka.
superrrrrrrrrrrrrrrrr

ஹேமா சொன்னது…

கனவுகள் தேவை மல்லிக்கா.அப்போதான் வாழ்வில் பிடிப்பும் சுவாரஸ்யமும் !

Rathnavel சொன்னது…

அருமை.

VANJOOR சொன்னது…

சுட்டியை சொடுக்கி படியுங்கள்

*******
ஈழத்தமிழ் முஸ்லீம் இன‌ஒழிப்பு. மன்னித்து மறந்துவிடுங்கள். பகுதி 1 மறக்கமுடியாத பதிவுகள்:ஈழத்தமிழர்= (இந்துக்கள்+கிறிஸ்தவர்கள்) - (முஸ்லிம்கள்). திருகோணமலை முழுவதும் நடந்தது இனவழிப்பே ஒழிய யுத்தமல்ல. சமுதாய துரோக வரலாறு. காத்தான்குடி படுகொலைகளும், படிப்பினைகளும் . புலி பயங்கரவாதம்.
********


.

அரசன் சொன்னது…

வரிகளில் விளையாடி மேன்மையான படைப்பை வழங்கிய உங்களுக்கு வாழ்த்துக்கள் சகோ ...

R. ராபின் சொன்னது…

ஹேமா கனவல்லவா ஓய்வு கேட்பதாக சொல்லப்பட்டிருக்கு கவிதையில். மலிக்கா கனவுக்கு ஓய்வுகொடுக்கசொல்லவில்லையென நினைக்கிறேன் சரியா மலிக்கா

ஆனால் கவிதை வெகு அருமை

காஞ்சி முரளி சொன்னது…

///காலங்கள் தீரும்வரை
கனவுகள் ஓயாதே!
கனவுகளும் ஓயாதே
கல்லரைக்கு (கல்லறைக்கு) போகும்வரை.........////

நல்ல வரிகள்....!
கவிதையும் அருமை...!

"எனது
கனவுகளில்
கல்லெறிந்துவிட்டு...
காணாமற் போனவளே...!" என்று ஓர் கவிதையிலும்

"கனவுகளுக்கு
கல்லறை எழுப்பிவிட்டு
நனவுலகில்
நடக்க ஆரம்பித்தேன்...!
விடவில்லை
விதி..
மீண்டும்
கனவுகளைக்
காட்டி தடை செய்கிறது...!" என இன்னோர் கவிதையிலும்

"கனவுகள்" பற்றி ஒருத்தர் எழுதியுள்ளார்....!

ஹி... ஹி... ஹி...!

காஞ்சி முரளி சொன்னது…

எல்லோரும்...
எல்லாமும்
இவ்வாண்டு அளவோடு பெற்று...!
நலமோடும்...!
வளமோடும்....! வாழ்க...! என்ற
வாழ்த்துக்களுடன்....

தங்களுக்கும்
தங்கள் குடும்பத்தினருக்கும்...!

"என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்"....!

கணேஷ் சொன்னது…

காலங்கள் தீரும்வரை கனவுகள் தீராது. கனவுகளைக் கைவிட்டால் எமக்கு உயர்வேது--? அருமை தங்கச்சி. உனக்கும் குடும்பத்தினருக்கும் என் இதயம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்தப் புது ஆண்டு உங்களுக்கு எல்லா நலங்களையும் வளங்களையும் வழங்க மனம் நிறைய வாழ்த்துகிறேன்.

அன்புடன் மலிக்கா சொன்னது…

எனது தளம் வந்து
எனது எண்ணங்களை உணர்ந்து
எனது உணர்வை புரிந்த
ஆருயிர் நெஞ்சங்களின் அன்பான கருத்துகள் அத்தனைக்கும் ஆழ்மன உணர்விலிருந்து ஆத்மார்த்தான நன்றிகள்..

அனைவரும் தொடர்ந்துவந்து ஊக்கமெனும் அன்புகருத்துகளை பகிருமாறு அன்போடு வேண்டுகிறேன்..

நீரோடையில் வந்து நனைந்தமைக்கு மிகுந்த மகிழ்ச்சி மிக்க நன்றி

Template by:

Free Blog Templates